4 October 2015

வாசிப்போம்.. கணிப்போம்... வெல்வோம்.



புதுக்கோட்டையில் நடைபெறவுள்ள நான்காம் ஆண்டு பதிவர் சந்திப்புத் திருவிழாவுக்கான நாள் நெருங்கிக்கொண்டிருக்கும் இவ்வேளையில்... விழாவுக்கான ஏற்பாடுகளில் தம்மை மும்முரமாய்  ஈடுபடுத்திக் கொண்டிருப்பதோடு,  புதுப்புதுப் போட்டிகளையும் அறிவித்து பதிவர்களையும் வாசகர்களையும் விறுவிறுப்பு குறையாமல் சுறுசுறுப்பாக்கிக் கொண்டிருக்கிறது விழாக்குழு அமைப்பு.

இதோ... இன்னொரு போட்டி அறிவிப்பு.

வலைப்பதிவர் திருவிழா - 2015 மற்றும் தமிழ் இணையக் கல்விக்கழகம் இணைந்து நடத்தும் மின்தமிழ் இலக்கியப்போட்டிகள் - 2015 க்காக பதிவு செய்யப்பட்டுள்ள 260 படைப்புகளுக்கான சுட்டிகள் இங்கே

படைப்புகளை வாசித்து அவற்றுள் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்படக்கூடும் என்று நாம் கணிக்கும் படைப்புகளை வகைக்கு மூன்றாக 1,2,3 என்று வரிசைப்படுத்தித் தெரிவிக்கவேண்டும். கணித்த முடிவுகளை bloggersmeet2015@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம் அல்லது இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் படிவத்தின் மூலமும்  தெரிவிக்கலாம். 

நடுவர்கள் எடுத்துள்ள சரியான முடிவுகளுடன் ஒப்பிட்டு அதே முடிவை கணிப்பவர்களுக்கு முதல்பரிசாக ரூ.5000/- அடுத்துப் பெரும்பான்மையான முடிவுகளைக் கணிப்பவர்களுக்கு இரண்டாம் பரிசாக ரூ.3000/-  மற்றும் மூன்றாம் பரிசாக ரூ.2000/-  என்று மொத்தப் பரிசுத்தொகை ரூ.10,000/- விழாவின்போது வழங்கப்படும். ஒன்றுக்கு மேற்பட்டோர் சரியான முடிவுகளை எழுதியிருந்தால், பரிசுத் தொகை பகிர்ந்து வழங்கப்படும்.



 போட்டியென்றால் விதிமுறைகள் இல்லாமலா... இதோ போட்டியின் விதிமுறைகள்...

1. யார் வேண்டுமானாலும் இந்தவிமரிசனக் கருத்துப் போட்டியில் கலந்துகொள்ளலாம். மின்னஞ்சல் (E.Mail), மண்ணஞ்சல் (Postal Address) இரண்டு முகவரிகள் மட்டும் தந்தால் போதும். அதை வெளியிட மாட்டோம். உங்கள் முடிவுகளையும் வெளியிட மாட்டோம். கலந்துகொள்பவர் பெயர்ப் பட்டியல் மட்டும் இதே தளத்தில் தனிப் பெட்டியில் வரிசைப்படுத்தி வெளியிடப்படும். முடிவு அறிவிக்கப்படும் போது கலந்து கொள்வோர் விருப்பப்படி இரண்டில் ஒரு முகவரி மட்டும் வெளியிடப்படும். அதனை முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும்.

2ஒருவர் ஒரு முடிவை மட்டுமே அனுப்பலாம். (ஐந்து போட்டிகளிலும் மூனறு பரிசுக்குரியவர் என்று முடிவுசெய்யப்பட்ட (1) போட்டி வகை, (2) வரிசை எண், (3) பெயர் (4) படைப்புத் தலைப்புகளை இதே வரிசையில் தெரிவித்து பதினைந்து பரிசுக்கும் (5x3=15) தமது முடிவை மின்னஞ்சல் செய்தால் போதுமானது. இதற்கான விளக்கம் விசாரணை எதுவும் தேவையில்லை.

3. ஒருமுறை அனுப்பிய முடிவை மாற்ற இயலாது.

4.  வரும் 9ஆம் தேதி இரவு இந்திய நேரம் 11.59வரை அனுப்பலாம்.

5. மறுநாள் (10-10-2015) காலையே போட்டிகளின் நடுவர் முடிவுகள் அறிவிக்கப்படும். அதனைத் தொடர்ந்து இந்தப் போட்டியின் முடிவுகளும் அறிவிக்கப்படும். செய்தித்தாளிலும் பார்த்துக் கொள்ளலாம்.

6. இரண்டு முடிவுகளுக்குமான ரொக்கப் பரிசுகள் நமது விழாவில் வழங்கப்படும்.

7. விழாவுக்கு வர இயலாதவர்களுக்கு, பரிசுக் கேடயங்களை (15+3) அஞ்சலில் அனுப்ப இயலாது. விழாவுக்கு வரும் யாரிடம் வழங்கலாம் எனும் விவரத்தை முன்னரே தெரிவிக்க வேண்டும்.

8. வெளிநாட்டில் வாழ்வோர் இந்திய நாட்டில் உள்ள தம்உறவினரின் அஞ்சல் முகவரியைத் தருதல் வேண்டும்மின்னஞ்சல் முகவரி மற்றும் மண்ணஞ்சல் முகவரி இரண்டும் இல்லாத அனாமதேயப் பங்கேற்பை ஏற்பதற்கில்லை.

9. மற்ற பொது நடைமுறைகளில் போட்டி அமைப்பாளர் மற்றும் விழாக்குழுவின் முடிவே இறுதியானது.

10.  போட்டியாளர் தவறான முகவரி தந்திருப்பதாகத் தெரியவந்தால், முடிவு திரும்பப் பெறப்படும்.




போட்டிவிதிகளைப் பின்பற்றுங்கள்...
படைப்புகளைப் பொறுமையாய் வாசியுங்கள்..
முடிவுகளைக் கணித்து மின்னஞ்சல் தாருங்கள்..
வெற்றிக்கனியைப் பறிக்க விரைந்துவாருங்கள்.
பங்கேற்கும் அனைவருக்கும் இனிய வாழ்த்துகள்.

&&&&&

12 comments:

  1. நன்றி...

    நம் தளத்தில் இணைத்தாகி விட்டது...

    இணைப்பு : →பதிவர்களின் பார்வையில் "பதிவர் திருவிழா-2015"

    புதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக...
    அன்புடன் திண்டுக்கல் தனபாலன்
    இணைப்பு : →இவர்கள் தான் பரிசு பெறுவார்கள்...!

    ReplyDelete
    Replies
    1. அழைக்குமுன்னரே வந்து பதிவுகளை இணைக்கும் வேகத்தைக் கண்டு மலைக்கிறேன். நன்றி தனபாலன்.

      Delete
  2. புதுசு புதுசா அறிவிச்சி அதை செயல்படுத்தி காட்டுவதிலும் புதுக்கோட்டை காரர்களுக்கு நிகரில்லைதான் போலும்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்... பதிவர்களோடு வாசகர்களையும்... பதிவர்களுக்குள்ளிருக்கும் வாசகர்களையும் ஊக்குவிக்கும் சிறப்பான போட்டி.. நன்றி சுரேஷ்.

      Delete
  3. உங்களுக்கு நல்ல வேட்டைதான் சகோ
    தமிழ் மணம் 2

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் கலந்துகொள்ளவில்லையா? எல்லோருடைய படைப்புகளையும் வாசிக்கும்போது பன்முக எழுத்தாளுமையும் தெரியவருகிறது. பரிசுக்குரியவரை மிகச்சரியாகத் தேர்ந்தெடுப்பது நடுவர்களுக்கே சவாலான விஷயம்... அவர்களுடைய பொறுப்பும் பொறுமையும் போற்றத்தக்கது. வருகைக்கும் தமிழ்மண வாக்குக்கும் நன்றி கில்லர்ஜி.

      Delete
  4. வாசித்துக் கொண்டிருக்கிறேன்
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நல்லது ரமணி சார். யாரைத் தெரிவு செய்வது என்று முடிவுசெய்யமுடியாத வகையில் தேர்ந்த எழுத்துகள். எப்படியாவது விரைவில் படிவத்தை நிரப்பியனுப்புங்கள்.. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

      Delete
  5. ஒரு போட்டி நடத்தி
    அந்த போட்டிக்கே ஒரு போட்டி வைக்கிறார்கள்
    வாழ்த்துவோம் மகிழ்வோம்

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ஐயா... பதிவர்களையும் வாசகர்களையும் அல்லாது இப்போட்டியின் மூலம் பதிவர்களுக்குள்ளிருக்கும் வாசகர்களையும் வெளிக்கொணரும் உத்தி கண்டு வியக்கிறேன். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      Delete
  6. வணக்கம்...

    தாங்களும் விமரிசனப் போட்டியில் கலந்து கொள்ளலாம்...

    இணைப்பு : →இங்கே சொடுக்கவும்

    புதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக...
    அன்புடன் திண்டுக்கல் தனபாலன்

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன். படிவத்தை நிரப்பி அனுப்பிவிட்டேன். நடுவர்களின் திண்டாட்டத்தை என் மனக்கண்ணால் பார்க்கமுடிகிறது. பங்குபெற்ற அனைத்துப் பதிவர்களுக்கும் என் இனிய வாழ்த்துகள்.

      Delete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.