எண்ணப்பறவை
சிறகடித்து
விண்ணில் பறக்கின்றதே..
பண்ணோடதுவும் புதுகையேகும்
பாதை பார்க்கின்றதே…
அழைப்பிதழ்கண்டு அகந்தனிலின்று
ஆர்வம் பிறக்கின்றதே...
பிழைப்பதனாலே போகவியலாமையாலே
மனமது மலைக்கின்றதே...
பதிவர் யாவும்
ஒன்றாய்க்கூடும்
பரவசம் புரிகின்றதே…
உதயமாகும் உற்சாகவெள்ளம்
என்னிதயம் நனைக்கின்றதே…
நிறையவிருக்கும்
அரங்கம்கண்டு
நெகிழ்ந்து மகிழ்கிறதே…
சிறந்ததொரு நிகழ்விதுவென்று
சிந்தையும் நிறைகிறதே…
கண்ணயரா உழைப்பு
காட்சிப்படுத்தும்
கவின்மிகு அழைப்பைப் பாரீர்….
எண்ணமது நிறைக்க
எழுத்துலகு சிறக்க
இனிதே வருகை தாரீர்…
அரும்பெரும் பணிகள் அரங்கேறக்கண்டு
ஆனந்தம் அடைந்திடுவோம்..
கரமதுகூப்பி விழாக்குழுவினர்தம்மை
வணங்கி வாழ்த்திடுவோம்...
பாடல் மூலமாய் வாழ்த்தியும் அழைத்தும் இருக்கும் விதம் அருமை சகோ
ReplyDeleteதமிழ் மணம் 1
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் தமிழ்மண வாக்குக்கும் நன்றி கில்லர்ஜி.
Deleteஆஹா அருமை ....மா நன்றிமா
ReplyDeleteஉங்கள் அனைவரின் உழைப்புக்கு முன் இதெல்லாம் எம்மாத்திரம்? நன்றி கீதா.
Deleteசகோதரியின் அழைப்பிதழுக்கும் கவிதைக்கும் நன்றி!
ReplyDeleteநன்றி ஐயா.. விழாவில் பங்கேற்கவிருக்கும் தங்களுக்கு இனிய வாழ்த்துகள்.
Deleteபோக நினைத்தாலும் போக இயலாத சூழ்நிலையை பற்றி பாடும் பாடல் அருமை.
ReplyDeleteஆமாம்.. மனமெல்லாம் நிகழ்வு குறித்தே எந்நேரமும் சிந்தித்துக் கொண்டிருக்கிறது. அடுத்தமுறையாவது வாய்ப்பு அமைகிறதா என்று பார்ப்போம். நன்றி மதுரைத்தமிழன்.
Deleteநன்றி...
ReplyDeleteநம் தளத்தில் இணைத்தாகி விட்டது...
இணைப்பு : http://bloggersmeet2015.blogspot.com/p/2015.html
புதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக...
அன்புடன் திண்டுக்கல் தனபாலன்
உடனுக்குடன் செயல்படும் உங்கள் வேகம் மலைக்கவைக்கிறது. நன்றி தனபாலன்.
Deleteகவின்மிகு அழைப்பைக் கண்டோம்
ReplyDeleteதங்கள் பதிவின் மூலமும்
மகிழ்வது நிறையக் கொண்டோம்
வாழ்த்துக்கள்
மகிழ்வான வாழ்த்துகளுக்கும் வருகைக்கும் நன்றி ரமணி சார்.
Deleteஆஹா! மகிழ்வையும் போகவியலா ஏக்கத்தையும் சொல்லும் அழகுக்கவி
ReplyDeleteஅருமை கீதமஞ்சரி
நன்றி கிரேஸ். நம்மைப் போல் போக இயலாதவர்கள் எல்லாம் ஏக்கத்தை எழுத்தாய்தானே பதிவு செய்து மனத்தைத் தேற்றிக்கொள்ளவேண்டியிருக்கிறது.
Deleteகவிதையில் அழைப்பு மிக அருமை!
ReplyDeleteவாழ்த்துக்கள்!
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி தோழி.
Deleteஅழகான கவிதை மூலம் அழைப்பு விடுத்தமை மிகவும் நன்று!
ReplyDeleteநன்றி அக்கா.. விழாவில் பங்கேற்கவிருக்கும் தங்களுக்கு இனிய வாழ்த்துகள்.
Delete