Showing posts with label பொம்மை. Show all posts
Showing posts with label பொம்மை. Show all posts

20 February 2016

ஆடும் குதிரை அழகுக்குதிரை..



ஆடும் மரக்குதிரைகளை அறியாதவருண்டா? பணக்கார வீடுகளில் இருக்கும் அல்லது பரம்பரை பரம்பரையாய் சில வீடுகளில் இருக்கும். அதிலாடும் பாக்கியம் பெற்றோர் நம்மில் சிலரே உண்டு. அந்நாளைய திரைப்படங்களிலும் இந்த ஆடும் குதிரைகள் இடம்பெற்றதுண்டு.



சில வருடங்களுக்கு முன் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கு இயந்திரக் குதிரை பொம்மைகளைப் பரிசாக அளித்ததைப் பார்த்தபோது அட, அந்த ஆடும் மரக்குதிரைகள் இப்படி மறு உருவாக்கம் பெற்றுவிட்டதா என்று எண்ணி வியந்தேன். அதன்பிறகு இங்கு ஆஸியிலும் ஷாப்பிங் மால்களில் திடீரென இந்தப் பொம்மைக்கடைகள் முளைத்து குழந்தைகள் மாடு, குதிரைகளில் உற்சாகத்துடன் வலம்வருவதைப் பார்த்தேன். 



புதிய கண்டுபிடிப்பு என்றுதான் நினைத்திருந்தேன் இந்தப் பாடலை சமீபத்தில் பார்க்கும்வரை… 1962-லேயே தென்னிந்திய திரைப்படமொன்றில் இடம்பெற்றிருக்கிறதே ஆடும் மரக்குதிரையும் உந்தியோடும் இயந்திரக்குதிரையும். இரண்டும் போதாதாம் அந்தச் சின்னக்குட்டிக்கு.. மாமன் முதுகில் ஆனை ஊர்வலமும் அழகு.



கம்பீரத்துக்கும் பாய்ச்சலுக்கும் பெயர் போன குதிரைகள், வீரத்திற்கும் சவாலுக்கும் அடையாளமாய் படைகளில் உயிரோடும், அழகுக்கும் ஒய்யாரத்துக்கும் அடையாளமாய் பொய்க்கால் குதிரையாட்டம் என கலைத்துறையில் உணர்வோடும் காலங்காலமாக இடம்பெறுவது சிறப்பென்றால் விளையாட்டுக்கும் ஏதுவாக குழந்தைகளுக்குதான் எவ்வளவு விதவிதமானக் குதிரைப்பொம்மைகள்.. பார்த்து ரசிக்கலாம் வாங்க. 
















(படங்கள் அனைத்தும் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டவையே)