22 June 2014

பத்துக் கேள்விகள் ஒரு கொத்துக் கேள்விகளாய்...
இப்படி ஒரு கேள்வி கேட்டால் உங்கள் பதில் என்னவாக இருக்கும் என்ற தலைப்பில் பத்துக் கேள்விகள் ஒரு கொத்துக் கேள்விகளாய் பதிவர்களை வலம் வந்து கொண்டிருப்பதை அறிவீர்கள். அந்த தொடர் சங்கிலியில் என்னையும் இணைத்துள்ளனர் தோழி மைதிலியும் நண்பர் சொக்கனும்.

அவர்களுடைய நட்பு வட்டாரத்தில் இருப்பதான பெருமையுடன் அவர்களுக்கு நன்றி சொல்லி கேள்விகளுக்கான பதில்களை இங்கு தருகிறேன்.

1.உங்களுடைய 100-வது பிறந்தநாளை எப்படி கொண்டாட விரும்புகிறீர்கள்?

வாழும் தலைமுறையும் வரவிருக்கும் தலைமுறையும் இப்படி ஒருத்தி இருந்தாள் என்பதை நினைவில் வைத்திருந்து, ஒரு நிமிடம் மனத்தால் எண்ணி பெருமிதம் கொண்டால் போதுமானது.

2.என்ன கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள்?

பார்க்கும் ஒவ்வொரு மனிதரும், உயிர்களும் இயற்கையும் அன்றாடம் போதித்துக்கொண்டிருக்கும் ஏராளமான வாழ்வியல் பாடங்களில் இயன்றவற்றையேனும்.

3.கடைசியாக சிரித்தது எப்போது? எதற்காக?

இப்போது அரைமணி நேரத்துக்கு முன்னால். மகளின் கல்லூரி அனுபவமொன்றைக் கேட்டு.

4. 24 மணி  நேரம் பவர்கட். ஆனால் நீங்கள் செய்வது என்ன?

பகல் நேரங்களில் புத்தகம் வாசிப்பேன். மாலை வேளைகளில் என்னுடைய ஐபாடில் இருக்கும் பழைய பாடல்களை சன்னமாக பின்னணியில் ஓடவிட்டபடி குடும்பத்தினர் அனைவரும் கூடி உரையாடிக்கொண்டிருப்போம். இப்போது வளர்ந்துவிட்ட என் பிள்ளைகளுக்கு இது போன்ற தருணங்களில் அவர்களது குழந்தைக்கால அனுபவங்களைக் கேட்பது மிகவும் பிடிக்கும்.
 
5. உங்கள் குழந்தைகளின் திருமண நாளில் அவர்களிடம் சொல்ல விரும்புவது என்ன?

கணவன் மனைவிக்குள் விட்டுக்கொடுப்பதும் மனம்விட்டுப் பேசுவதும் வாழ்க்கையில் உண்டாகும் பல சிக்கல்களைத் தவிர்க்கும் என்னும் சூத்திரத்தை நினைவுபடுத்துவேன்.

6.உலகத்தில் உள்ள பிரச்சனையில் உங்களால் தீர்க்கமுடியும் என்றால் எந்த பிரச்சனையை தீர்க்க விரும்புகிறீர்கள்?

உலகமெங்கும் ஆங்காங்கு அரங்கேறிக்கொண்டிருக்கும் மனம் பதைக்கவைக்கும் நிகழ்வுகளான, பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிரான பாலியல் வன்முறைதான் நான் கையிலெடுக்கும் பிரதானப் பிரச்சனை. விபரீதக் கொடுமையை வித்திலேயே அழிப்பதற்குண்டான வழி என்னவென்று யோசித்து நடைமுறைப்படுத்துவேன்.

7. நீங்கள் யாரிடம் அட்வைஸ் கேட்பீர்கள்?

பிரச்சனையை ஒரு தாளில் எழுதி அதன் சாதக பாதகங்களைப் பட்டியலிட்டாலே போதும், பெரும்பாலான பிரச்சனைகளை முடிவுக்குக் கொண்டுவரும் உபாயம் தென்பட்டுவிடும். அப்படியும் முடிவெடுக்க இயலாத நேரங்களில் என் மாமனாரின் உதவியை நாடுவேன். அனுபவசாலியான அவர் நிச்சயம் உதவுவார்.

8.உங்களை பற்றிய தவறான தகவல் பரப்பினால் என்ன செய்வீர்கள்?

சரியான புரிதலின்மைதான் காரணம் எனில் அதற்கான விளக்கத்தைக் கூறி தெளிவுபடுத்துவேன். தெரிந்தே பரப்பப்படும் தவறான தகவல் எனில் அசட்டை செய்துவிட்டு அடுத்தவேலையைப் பார்க்கப் போய்விடுவேன்.

9. உங்கள் நண்பரின் மனைவி இறந்தால் அவரிடம் என்ன சொல்வீர்கள்?

இந்தியாவில் இருக்கும் என் தோழியின் கணவர் சமீபத்தில் திடீர் மரணம் அடைந்துவிட்டார். இன்னும் அந்த நிகழ்வை என்னால் சீரணிக்க இயலவில்லை. இதுவரை தோழியுடன் பேசவில்லை. வாய் வார்த்தைகளால் எப்படி ஆறுதல் சொல்வது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன். ஆறுதலுக்கு மீறிய அவலம் அல்லவா அது? அருகில் இருக்க நேர்ந்திருந்தால் ஒரு அன்பான அரவணைப்பைத் தந்திருப்பேன்.

10.உங்கள் வீட்டில் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள்?

எழுதவேண்டும் என்று நான் எண்ணிக்கொண்டிருப்பவை எக்கச்சக்கமாய் இருக்கின்றன. வாசிப்பதும் எழுதுவதுமாய் நேரம் பறந்துவிடும். தனியாய் இருக்கிறோம் என்ற உணர்வே தோன்றாது.

ஓடிக்கொண்டே இருக்கும் வாழ்க்கையில் ஒருநிமிடம் நிதானித்து நம்மை சுய அலசல் செய்துகொள்ள உதவும் கேள்விகளை முன்வைத்த தோழமைகளுக்கு நன்றி. 

இந்த தொடர்பதிவைத் தொடர நான் அழைப்பவர்கள்...


  

இவர்களில் சிலர் முன்னரே வேறு நண்பர்களால் அழைக்கப்பட்டிருக்கலாம். இருப்பினும் என்னுடைய இந்த அழைப்பையும் ஏற்றுக்கொள்வதோடு மேலும் பத்து பதிவர்களைத் தொடரக் கேட்குமாறு அன்புடன் வேண்டிகொள்கிறேன். நன்றி.   
63 comments:

 1. சுவாரஸ்ய பதில்கள்.

  ReplyDelete
  Replies
  1. உடனடி வருகைக்கும் பதில்களை ரசித்தமைக்கும் நன்றி ஸ்ரீராம்.

   Delete
 2. பல சிக்கல்களைத் தவிர்க்கும் சூத்திரமும், பிரச்சனைகளை பட்டியலிடுவதும் உட்பட அனைத்து பதில்களும் அருமை...

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் பதில்களை ரசித்தமைக்கும் நன்றி தனபாலன்.

   Delete
 3. அக்கா மிக்க நன்றி !
  பதில்கள் எல்லாம் நான் எதிர்பார்த்ததை போலவே தெளிவாய், நயமாய் இருக்கின்றன, உங்கள் மேதைக்கு சான்று!! அப்புறம் பத்து பேரை மாட்டிவிட்டு பாப்பா ரெண்டும் என்னம்மா சிரிக்கிறது பாருங்கள்:)))

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் பதில்களை ரசித்தமைக்கும் மிகவும் நன்றி மைதிலி. பாப்பாக்களின் சிரிப்பைப் பார்க்கும்போது எனக்கும் அப்படித்தான் தோன்றியது. :)

   Delete
 4. இப்போது பல பதிவர்களின் பதிவினிலும் இதையே மீண்டும் மீண்டும் பார்த்துப்பார்த்து சலித்துப்போன எனக்கு, தங்களின் அழகான, அமைதியான, ஆழமான, அற்புதமான, எதார்த்தமான, ஆழ்ந்து யோசித்து எழுதியுள்ள பதில்கள் மிகவும் பிடித்துள்ளன.

  மனம் நிறைந்த பாராட்டுக்கள். அன்பான இனிய நல்வாழ்த்துகள். பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றிகள்.

  இந்தத்தலைப்பில் எழுதி வருவோரில் இதுவரை தங்களுக்கு மட்டுமே நான் பதில் அளித்துள்ளேன் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். ;)

  அன்புடன் கோபு

  ReplyDelete
  Replies
  1. தங்களுக்கிருக்கும் ஏராளமான பணிச்சுமைகளுக்கிடையில் இந்தப் பதிவை வாசித்து வாழ்த்திக் கருத்திட்ட தங்களுக்கு என் அன்பான நன்றி கோபு சார்.

   Delete
 5. முதல் பதில் மிக பிடித்திருந்தது.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி ஜனா சார்.

   Delete
 6. சிறப்பான பதில்கள்! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சுரேஷ்.

   Delete
 7. அனைத்து பதில்களும் மிக மிக இயல்பாக
  எந்தவித போலித்தனமும் இல்லாது
  மனம் திறந்து உரைத்தவைகளாகக் காண்கிறேன்!

  மிகவே ஆழ்ந்து படித்தேன். கவனித்தேன்!

  பகிர்விற்கு நன்றியும் வாழ்த்துக்களும் தோழி!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் பதில்களை ரசித்தமைக்கும் மிகவும் நன்றி தோழி.

   Delete
 8. பதில் சொல்ல வேண்டுமென்று எனோ தானோ என்று சொல்லாமல் கொஞ்சம் பொறுப்போடு பதில் சொன்ன விதம் பாராட்டுகுரியது....... வாழ்க வளமுடன்

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் பதில்களை ரசித்தமைக்கும் வாழ்த்துக்கும் நன்றி அவர்கள் உண்மைகள். தொடரைத் துவக்கி வைத்த தங்களின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சியளிக்கிறது.

   Delete
 9. பதில்கள் அனைத்திலும் தங்களின் நிதானனத்தை வெளிப்படுத்துகிறது.

  கடைசியில் பத்து பேரை மாட்டி விட்டுட்டு, அழகான இரண்டு பாப்பா படங்களை போட்டிருக்கிறீர்களே, இது நியாயமா?

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சொக்கன். இனியா ஓவியா போல் இரண்டு சுட்டிகள். பார்க்கவே ரசனையாக உள்ளது அல்லவா? அதனால்தான் போட்டேன். :)

   Delete
 10. பக்குவப்பட்ட பாங்கான பதில்கள்

  நீங்கள் உங்கள் தோழியுடன் தொலைபேசியில் பேசுவது நல்லது என்று தோன்றுகிறது சகோதரி...
  தாமதம் வேண்டாம்..

  ReplyDelete
  Replies
  1. தோழியுடன் பேசவேண்டும்.. ஆனால்.. எப்படி? என்னவென்று? நினைக்கும்போதே பகீர் என்கிறது. விரைவில் பேசுகிறேன் மது. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

   Delete
 11. சுவாரஸ்யமான அருமையான
  சிந்திக்கத் தூண்டும் பதில்கள்
  பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ரமணி சார்.

   Delete
 12. கீதமஞ்சரி,

  உங்களின் அனைத்து பதில்களும் படிக்க சுவாரசியமாக உள்ளன.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் பதில்களை ரசித்தமைக்கும் நன்றி சித்ரா.

   Delete
 13. பதில்களை வெகு அருமையாக சொல்லி இருக்கிறீர்கள்.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் பதில்களை ரசித்தமைக்கும் மிகவும் நன்றி மேடம்.

   Delete
 14. உங்கள் பதில்கள் அனித்தும் படிக்க மிகவும் சுவாரஸ்யமாக இருக்கின்றன. என்னை பதில் எழுத அழைத்துள்ளீர்கள். பிட் அடித்து எழுதினால் கோபித்துக் கொள்ள மாட்டீர்களே!

  ReplyDelete
  Replies
  1. எதையும் சுவாரசியமாய் எழுதும் தாங்களாவது பிட் அடிப்பதாவது? தங்களுக்கே உரித்த சிறப்பான சுவாரசிய நடையில் எழுதவிருக்கும் தங்கள் பதில்களை விரைவில் எதிர்பார்க்கிறேன். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மேடம்.

   Delete
 15. மிக அருமையான பதில்கள்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் பதில்களை ரசித்தமைக்கும் நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 16. தீர்க்கமான பதில்கள்..வாழ்த்துகள் கீதமஞ்சரி.

  //ஓடிக்கொண்டே இருக்கும் வாழ்க்கையில் ஒருநிமிடம் நிதானித்து நம்மை சுய அலசல் செய்துகொள்ள உதவும் கேள்விகளை முன்வைத்த தோழமைகளுக்கு நன்றி. // மிகச்சரி..நானும் இதையே சொல்லிக்கொள்கிறேன், முக்கியமாக இதை ஆரம்பித்த மதுரைத் தமிழன் சகோவிற்கு.

  த.ம.5

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் பதில்களை ரசித்தமைக்கும் வாழ்த்துக்கும் தமிழ்மண வாக்குக்கும் மனமார்ந்த நன்றி கிரேஸ்.

   Delete
 17. தொடர் பதிவு எழுத அழைத்த சகோதரிக்கு நன்றி! பார்ப்போம்!
  த.ம.6

  ReplyDelete
  Replies
  1. எதிர்பார்த்திருக்கிறேன் ஐயா.

   Delete
 18. Anonymous23/6/14 06:50

  நல்ல பதில்கள்.
  நானும் எழுத வேண்டும்.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் பதில்களை வாசித்துக் கருத்திட்டேன். அருமையாக எழுதியுள்ளீர்கள். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழி.

   Delete
 19. எல்லோரும் போலின்றி ஏற்றமுற தந்துவிட்டீர்
  கல்லாரும் ஏற்க கனிந்து !

  அழகான நிஜமான பதில்கள்
  வாழ்த்துக்கள்
  ( எல்லோர் பதிவும் பார்க்கிறேன் நான் எழுதிய விடைகளை இன்னும் போடல்ல ஹி ஹி எஹி )

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சீராளன்.

   Delete
 20. முத்துக்கு முத்தாக
  பத்துக்குப் பத்தாக
  கேள்வி - பதில்
  நன்றாக இருக்கிறதே!

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

   Delete
 21. அருமை சகோதரீ.. ஐந்தாம் மற்றும் ஆறாம் பதில்களை மிகவும் ரசித்தேன். மற்ற பதில்களும் பொறுப்போடு தந்திருக்கிறீர்கள் நன்றி வணக்கம்

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் பதில்களை ரசித்து குறிப்பிட்டுப் பாராட்டியமைக்கும் மிக்க நன்றி ஐயா.

   Delete
 22. எல்லா பதிலுமே அருமை சகோதரி இதில் 1 வதும் 6 வதும் நெஞ்சை தொட்டன.... நானும் இதில் சிக்கி எனது சிற்றறிவுக்கு எட்டியதை கொட்டியிருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் பதில்களை வாசித்து ரசித்துக் கருத்திட்டுள்ளேன். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

   Delete
 23. நானும் கேள்விகளுக்கு பதில் அளித்து இருக்கிறேன் கீதமஞ்சரி.
  என்னை அழைத்தார் அம்பாளடியாள் அவர்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் பதில்களை வாசித்துக் கருத்திட்டேன். அனைத்தும் மனம் தொட்ட பதில்கள். தங்கள் பதிவில் என்னுடைய இந்தப் பதிவையும் குறிப்பிட்டிருந்தது மகிழ்வையும் நெகிழ்வையும் தந்தது. நன்றி மேடம்.

   Delete
 24. அனைத்தும் அருமையான பதில்கள் 5, 6 ம் மனதை தொட்டன நிதானமாக பொறுப்போடு தந்தது சிறப்பு வாழ்த்துக்கள்....!

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் பதில்களை ரசித்தும் சுட்டியும் பாராட்டியமைக்கும் மிக்க நன்றி இனியா.

   Delete
 25. கீத்ஸ்... என்னையும் தொடர்ந்து பதிவிட அழைத்தமைக்கு முதலில் நன்றி. உங்களின் பதிலின் பாதிப்பில் என் பதிவு அமைந்துவிடக் கூடாது என்று நான் முதலில் எழுதிப் பதிவிட்டு விட்டு வந்து இப்போது முழுமையாகப் படித்தேன். ஆழமான அழகான பதில்களைத் தந்து அசத்திட்டீங்க. நிலாவின் அந்தக் கல்லூரி அனுபவத்தை எங்களிடமும் பகிர்ந்திருந்தால் நாங்களும் சிரித்திருப்போமே.... (உள்பெட்டில என்கிட்டயாவது ப்ளீஸ்....!)

  ReplyDelete
  Replies
  1. உங்களைப் போலத்தான் கணேஷ் நானும் மற்றவர்களின் பதில்களை வாசிக்குமுன் என்னுடையதை எழுதிவைத்துக்கொண்டு பிறகுதான் வாசித்தேன். ஒத்த கருத்து கண்டு மகிழ்ச்சி. உங்கள் பாராட்டுக்கு நன்றி கணேஷ்.

   நிலாவின் கல்லூரி நண்பர்கள் தங்களுக்குப் பிடிக்காத பாடங்களை எப்படியெல்லாம் உருவகப்படுத்துகிறார்கள் என்று கார்ட்டூன் போல் படம் வரைந்து காண்பித்தார்களாம். அதைப் பற்றி சொன்னாள். பொதுவாகவே ஒன்றுமில்லாத விஷயம் என்றாலும் நிலா சொல்லும்போது நகைச்சுவையாக சொல்வாள். அவளது சிரிப்பு கேட்பவர்களையும் தொற்றிக்கொள்ளும். அதனால் அவள் வீட்டிலிருந்தாலே வீடு கலகல என்றிருக்கும். சிரிப்புக்கும் பஞ்சமிருக்காது.

   Delete
 26. நீங்கள் தீர்க்க விரும்பும் பிரச்சனை நிஜமாவே சீரியசானதுதான்மா! என் பிள்ளைகளுக்கும் அவர்களின் குழந்தைப் பருவ கதைகளைக் கேட்க பிடிக்கும்.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம்பா. உங்களுடைய பதிவிலும் உங்கள் பக்கத்து வீட்டில் நிகழ்ந்த இதுபோன்ற மனம் பதைக்கும் சம்பவம் பற்றிப் பார்த்தேன். உங்களுடைய துணிச்சலான மற்றும் தெளிவான அணுகுமுறையைக் கண்டு வியந்தேன். பாராட்டுகள் ராஜி.

   வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி ராஜி.

   Delete
 27. கீதா தெள்ளத்தெளிவாக மிக அழகா பதில்கள் அனைத்தும் ..வாழ்த்துக்கள் ..
  அட்வைஸ் //பற்றிய உங்கள் குறிப்பு உண்மையில் பின்பற்ற வேண்டிய ஒன்று ..மன்த்லி எக்ஸ்பென்ஸ் நோட்டில் எழுதுவதைப்போல பிரச்சினைகளை எழுதி மீண்டும் வாசித்தாலே பாதி ஓடிபோயிடும் :)
  fantastic ஐடியா ..

  ஒவ்வொருவர் பதில்களையும் அவர்கள் பதிவில் சென்று வாசித்து வரேன் ..
  மிக சந்தோஷமாக இருக்கு ..வித விதமான பதில்கள் ...ஆர்வமாக இருக்கு
  ஒரு கேள்விக்கு எப்படி இத்தனை பதில்கள் என்று

  கேள்வியின் நாயகன் சகோதரர் மதுரை தமிழன் :))
  மிக்க நன்றி சகோ

  ReplyDelete
  Replies
  1. உங்களுடைய பதில்களையும் வாசித்து மகிழ்ந்தேன் ஏஞ்சலின். பிரச்சனைகளுக்கு நான் தீர்வு எடுக்கவேண்டிய சூழலில் குழப்பமாக இருந்தால் எப்போதும் இந்த வழியைத்தான் கடைபிடிப்பேன். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஏஞ்சலின்.

   Delete
 28. தமிழ்மண வாக்குக்கு மிக்க நன்றி ரமணி சார்.

  ReplyDelete
 29. நல்ல பதில்கள்...

  பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை - எப்போது தான் அடங்குமோ.... :(((

  ReplyDelete
  Replies
  1. கட்டாயம் கடுமையான சட்டங்கள் கொண்டுவரவேண்டும். செல்வாக்கைக் கொண்டு குற்றவாளிகள் தப்பித்துவிடாமல் தகுந்த தண்டனை கிடைக்கும்படி இருந்தால் ஓரளவு குறைய வாய்ப்புள்ளது என்று நினைக்கிறேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வெங்கட்.

   Delete
 30. அருமையான பதில்கள். அழைப்பிற்கு மிக்க நன்றி. தாமதப்படுத்தாமல் விரைவில் எழுத முயற்சி செய்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் பதில்களை வாசித்து மகிழ்ந்தேன். நன்றி ஆதி.

   Delete
 31. அருமை. கலக்கல். நானும் எனது பதிலை விரைவில் முன்வைக்கிறேன்.நமது வலைத்தளம் : சிகரம்

  ReplyDelete
 32. பதில்கள் எல்லாமே எதார்த்தமாக இருந்தன. நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்.

  ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.