சிறுநதியொன்றின் சன்னப் பிரவாகத்தில்
என் விருப்பமின்றியே கொண்டு சேர்த்தது
காலம்.
கரடுமுரடாய்க் கிடந்து முரண்டுபிடித்த
என்னை
வாரியணைத்தும் வருடிக்கொடுத்தும்
வாழ்க்கைப் பாடங்களைக்
கற்றுக்கொடுக்கிறது ஆறு.
நிலைகொண்டால் பாசத்துக்காளாகி பாழாவாய்,
ஓடிக்கொண்டிருந்தால் மட்டுமே
உருப்படுவாய்
என்று செவியோரம் போதித்தபடி
ஓடிக்கொண்டிருக்கும் அதன் கூடவே
உருண்டோடி உருப்பெறுகிறேன் நான்.
ஈரிரண்டு எடுக்கவே இலந்தை
பழுக்கவேயென்று
கழங்காடும் சிறுமியரின்
கையிலாடிமுடித்து
பேருவகையோடு மாளுவேன் ஒருநாள்.
*************
படம் உதவி; இணையம்