Showing posts with label வலைச்சரம். Show all posts
Showing posts with label வலைச்சரம். Show all posts

17 September 2014

வலைச்சரத்தில் மூன்றாம் முறையாக நான்...


கீதா மதிவாணன் என்னும் நான் கீதமஞ்சரி என்ற பெயரில் பதிவுலகில் அடியெடுத்துவைத்து மூன்றரை வருடங்களாகின்றன. சராசரியாக வாரமொரு பதிவு என்ற கணக்கில் இதுவரை 199 பதிவுகள் இட்டுள்ளேன். என்னுடைய இருநூறாவது பதிவை வலைச்சரத்தில் இடுவதை பெருமையாகக் கருதுகிறேன். இதற்கு முன் இரண்டு முறை வலைச்சர ஆசிரியப் பணியில் இருந்துள்ளேன் என்பதால் என்னைப் பற்றி பெரிய அளவில் அறிமுகம் தேவையில்லை என்று எண்ணுகிறேன். 

முதன்முதலில் என்னை வலைச்சர ஆசிரியராகப் பரிந்துரை செய்த திரு.வை.கோபாலகிருஷ்ணன் சார் அவர்களுக்கும் நியமித்த திரு. சீனா ஐயா அவர்களுக்கும் என் பணிவான நன்றியும் வணக்கமும்.



இதுவரை எழுதி என்ன சாதித்திருக்கிறேன் என்று என்னை நானே கேட்டுக்கொள்கிறேன். பதிவுலகில் பல நல்ல நட்புகளைப் பெற்றிருக்கிறேன். சிறப்பான பதிவர்களை அடையாளம் கண்டுகொண்டிருக்கிறேன். பலருடைய எழுத்துக்களை முன்வைத்து என் எழுத்துத் திறனை மேம்படுத்தும் ஆர்வத்தை வளர்த்திருக்கிறேன். போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகள் விருதுகள் பெற்று எனக்கென ஒரு இடத்தை உங்கள் அனைவர் மனத்திலும் தக்கவைத்திருக்கிறேன். இவற்றோடு, நானறிந்தவரை எந்த வகையிலும் பிறர் மனம் புண்படாதவகையிலும், என் மனத்துக்கு நிறைவு உண்டாகும் வகையிலும் வாசகர் எதிர்பார்ப்பை ஓரளவேனும் ஈடுசெய்யும் வகையிலும் எழுதியுள்ளேன், எழுதிக்கொண்டிருக்கிறேன் என்று நம்புகிறேன்.

இதுவரை பல கவிதைகள், சிறுகதைகள், தொடர்கதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புக் கவிதைகள், மொழிபெயர்ப்பு கதைகள், பல்சுவைப் பதிவுகள் என கலந்துகட்டி எழுதியிருந்தாலும் பலராலும் விரும்பி வாசிக்கப்படுபவை என்னுடைய கட்டுரைகளே என்பதை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அவற்றுள் ஆஸ்திரேலிய உயிரினங்கள் பற்றிய கட்டுரைகள் பெரிய அளவில் வரவேற்பினைப் பெற்றிருக்கின்றன. 



இந்த வாரம் முழுவதும் என்னோடு பயணிக்க உள்ள உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்று மகிழ்கிறேன். என்னால் இயன்றவரை பல நல்ல படைப்பாளிகளை அறிமுகப்படுத்த விழைகிறேன். புதியவர்களுக்குப் பழகியவர்களையும் பழகியவர்களுக்குப் புதியவர்களையும் பரஸ்பரம் அறிமுகப்படுத்தி தமிழ்ப் பதிவுகளின் தரத்தையும் பெருமையையும் அடுத்த படிக்கு உயர்த்தும் வலைச்சரத்தின் நன்னோக்கத்துக்கு நம்மாலான பங்கினை ஆற்றுவோம். வாருங்கள். நன்றி.

இரண்டாம் நாள்
தம்பொருள் என்ப தம் மக்கள்



மூன்றாம் நாள்
பெண்மை வாழ்கென்று கூத்திடுவோமடா!


படம்: நன்றி இணையம்







ஐந்தாம் நாள்
தமிழன் என்றோர் இனமுண்டு

படம்: நன்றி இணையம்









இதுவரை என்னுடன் பயணித்து கருத்திட்டு ஊக்கமளித்த அனைவருக்கும் என் அன்பான நன்றி. 

20 January 2014

மீண்டும் வலைச்சரத்தில்....





கடந்த மார்ச் 2012- இல் அன்புக்குரிய திரு.வை.கோபாலகிருஷ்ணன் ஐயாவின் பரிந்துரை மற்றும் மதிப்புக்குரிய திரு.சீனா ஐயாவின் அழைப்பின் பேரில் வலைச்சர ஆசிரியர் பொறுப்பை ஏற்றேன். ஏற்றுக்கொண்ட பொறுப்பை ஓரளவு சரியாகவே நிறைவேற்றினேன் என்று நம்புகிறேன். 

கிட்டத்தட்ட இரண்டாண்டுகள் ஆகவிருக்கும் நிலையில் மறுபடியும் அந்தப் பொறுப்பு என்னைத் தேடிவந்துள்ளது. மீண்டும் என்னை வலைச்சர ஆசிரியராகப் பணியாற்ற அழைப்பு விடுத்துள்ள திரு.சீனா ஐயா அவர்களுக்கும் என்மேல் அவர் வைத்திருக்கும் நம்பிக்கைக்கும் என் உளமார்ந்த நன்றி. 

புதியவர்களையும் பழகியவர்களையும் ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்தி உற்சாகமாய் கைகுலுக்கும் வகையில் ஒரு அற்புதப் பாலமாய் அமைந்த வலைச்சரத்துக்கும் அதன் நிர்வாகிகளுக்கும் மனமார்ந்த நன்றிகள்! 

இந்த வாரம் முழுவதும் வலைச்சரம் வழியே சந்திப்போம். 
நன்றி. வணக்கம்.


இரண்டாம் நாள்
பாரம்பரியம் காட்டும் பைந்தமிழ்ச் சான்றுகள்

தமிழரின் மொழி, வாழ்க்கை, கலாச்சாரம், பாரம்பரியம், பண்பாடு போன்றவற்றின் அடிப்படையிலான பதிவுகள் இன்று.




மூன்றாம் நாள்
சாதிக்க ஏதுவாய் சில சவடால்கள்

வாசிப்பு, விமர்சனங்கள் தொடர்பான பதிவுகள் இன்று.




நான்காம் நாள்
காலமணற்பரப்பில் சில காலடிச்சுவடுகள்

வாழ்வியல் தொடர்பான பல அரிய சிந்தனைகளை
முன்வைக்கும் பதிவுகள் இன்று.





இயற்கை மற்றும் சூழலியல் போற்றும் பதிவுகள் இன்று.





புதிய இடங்கள், பயண அனுபவங்கள் குறித்த  சுவாரசியப் பதிவுகள் இன்று





 குழந்தைகள், குழந்தைநலம் பற்றிய பதிவுகள் இன்று
. 



இதுவரை என்னுடன் பயணித்து எனக்கு ஊக்கமும் உற்சாகமும் அளித்து ஆதரவளித்தமைக்கு 
அனைவருக்கும் என் அன்பான நன்றி. 
வணக்கம்.