|
1. தோட்டத்தின் முகப்பு வளைவு
|
சிட்னி நகரின் வணிக மையத்தியிலிருந்து சுமார் 40 கி.மீ. தொலைவில் 90 ஹெக்டேர் நிலப்பரப்பில் விரிந்துகிடக்கிறது நுராஜிஞ்சி வனப்பகுதி (Nurragingy Natural Reserve) இதன் உள்ளே நுழைந்தவுடன் நம்மை வரவேற்கிறது சாங் லாய் யுவான் சீனத்தோட்டம் (Chang Lai Yuan Chinese garden) ஆஸ்திரேலியாவுக்கும் சீனாவுக்கும் என்ன தொடர்பு? இருக்கிறதே.. நியூ சௌத் வேல்ஸ் மாநிலத்தின் ப்ளாக்டவுன் நகரமும் சீனாவின் லியாவோசங் நகரமும் 2003 முதல் சகோதர நகரங்களாகக் கைகோத்துள்ளன.
சரி, அதென்ன சகோதர நகரங்கள்? இரு நாட்டு மக்களிடையே நட்புறவு பேணவும், அவரவர் கலாச்சாரம், பாரம்பரியம், வாழ்க்கைமுறை ஆகியவற்றைப் புரிந்துகொள்ளவும், வியாபாரம், அரசியல், கல்வி, பொருளாதார மேம்பாடுகள் மற்றும் வளர்ச்சி குறித்த கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளவும். ஒத்த ரசனை உள்ளவர்களை ஒன்றிணைக்கவும் இதுபோன்ற sister cities அல்லது twin towns எனப்படும் சகோதர நகரங்கள் உருவாக்கப்படுகின்றன. இதுபோல் உலகமுழுவதும் ஏராளமான சகோதர நகரங்கள் உள்ளன.