28 February 2017

சீனத்தோட்டத்தில் சிறகடிக்கும் பறவைகள்


சிட்னியின் சீனத்தோட்டம் பற்றி சென்ற பதிவில் சொன்னேன் அல்லவா... என்னால் படமெடுக்கப்பட்ட சில பறவைகள் மட்டும் இங்கே...
படமெடுக்கப்படாதவை அநேகம் அங்கே... 


காக்கட்டூ பறவைகளுக்கு இது நல்ல வேட்டைக்காலம்... 
(sulphur crested cockatoo)
மரம் முழுக்கப் பழுத்துக்கிடக்கின்றன ஆலம்பழங்கள்... 


உண்டமயக்கம் நமக்கு மட்டுந்தானா... 

நீருலாவும் தாழைக்கோழி
(dusky moorhen) ஒற்றைக்கால் தவஞ்செய்யும் 
அரிவாள் மூக்கன் அல்லது அன்றில்
(Australian white ibis)நீரோடு என்ன கோபமோ... 
புறமுதுகுகாட்டி அமர்ந்திருக்கும்
சிறிய நீர்க்காகம் 
(little black cormorant) சிறிய கருப்புவெள்ளை நீர்க்காகம்
(little pied cormorant)
நீர்க்காகங்களின் இறக்கைகளில் மெழுகுத்தன்மை இல்லாமையால்
நீரிலிருந்து வந்தவுடனேயே நீரின் கனத்தால் பறக்கமுடியாது..சற்றுநேரம் இறக்கைகளை விரித்துக் காயவைத்த பின்னர்தான் பறக்கமுடியும்.  ஆஸ்திரேலிய காட்டுவாத்து சோடி
(Australian wood duck pair)
நீ போகுமிடமெல்லாம் நானும் வருவேன் போ.. போ.. போ.


வெள்ளைக்கண் வாத்து 
அல்லது கடுந்தலை வாத்து 
(white eyed duck or hardhead duck)


முக்குளிப்பான் (little grebe)
இருப்பதே இத்தனியூண்டு... 
நொடிநேரம் வெளியில் தலைகாட்டி
தண்ணீருக்குள் ஓரிடம் மூழ்கி
வேறிடம் எழுந்தால் 
எப்படிதான் படம்பிடிப்பது..வெள்ளை இறகு செவ்வலகி (white winged chough)
வெள்ளை இறகு எங்கே என்று தேடுகிறீர்களா.. அது சிறகின் உள்ளடுக்கில் உள்ளது. பறக்கும்போது மட்டும்தான் வெளியில் தெரியும். அப்புறம் செவ்வலகு? chough  பறவைகளுக்கானப் பொதுப்பெயர் அது. 


மண்ணைக்கிளறி பூச்சிதேடி...
 முகம் முழுக்கப் புழுதி பூசிக்கொண்டு... 
அமைதியாயிருக்கும் 
 அலப்பறைக்குருவி
 (noisy miner) 


மிடுக்குநடை போடும்
கொண்டைப்புறா
(crested pigeon)
பசிபிக் கருப்பு வாத்து
(pacific black duck)
பச்சை நீலம் என்று மாறிமாறிக் காட்சியளிக்கும் 
இறகுவண்ணம் அழகு.பறக்கையில் சிறகில் வயலட் நிறம்

வளரிளம் குஞ்சுகள்..மஸ்கோவி வாத்து
(muscovy duck)
குண்டு உடம்பைத் தூக்கிக்கொண்டு
நடக்கமுடியாமல் அரக்கியரக்கி
நடந்து வந்தது..  இதனால் பறக்கவும் முடியும் என்பதை 
நினைத்தே பார்க்காத வேளையில்
அழகாக சிறகைவிரித்துப் பறந்து அக்கரைக்குப் போனது.. 
உருவுகண்டு எள்ளாமை வேண்டுமெனப் பாடம்புகட்டியபடி... 
 உறுமீன் வரும்வரை 
மரத்தில் காத்திருக்கும் மீன்குத்தி
(kingfisher) மைனாக்களைப் பார்க்காவிட்டால்தான் ஆச்சர்யம்..
(Indian myna)ஆள்காட்டிக் குருவி 
(Masked lapwing) புல்லாங்குழல் பறவை எனப்படும் மேக்பை
(Australian magpie)மர நிழலில் இளைப்பாறிக் கொண்டிருக்கும் 
கருப்புவெள்ளை கரவாங் பறவை
(pied currawong)


அப்போஸ்தலர் பறவைகள் (apostlebirds) - 
ஒரு குழுவில் பெரும்பாலும் பன்னிரண்டு பறவைகள் இருப்பதால் அப்பெயராம்.    


நான் பார்த்தபோது இரண்டுதான் இருந்தன.மேக்பை போலவே இருப்பதால் மேக்பை குருவி என்று பெயர். 
(Magpie lark)நாமக்கோழி 
(eurasian coot)
 இரையெடுத்துக்கொண்டுபோய் 
கூட்டில் அடைகாக்கும் இணைக்கு 
அடிக்கடி ஊட்டிவிட்டுத் திரும்பியது. அத்திப்பழப் பறவை
(Austrasian figbird)
மரங்கள் முழுக்கப் பழங்கள்
 எதைத்தின்பது எதை விடுவது என்று புரியாத குழப்பம்.. பறவைகளை ரசித்துக்கொண்டிருக்கும்
தாயும் சேயும்கொசுறாய் கொஞ்சம்...


இலவம்பூ


மரத்தில் மலர்ந்து... காயாகும் பேறற்று... 


மண்ணில் உதிர்ந்து மரத்துக்கு உரமாகும் பேறு..... 


குவீன்ஸ்லாந்து பாட்டில் மரங்கள்
(Queensland bottle trees)
சாடி வடிவிலிருப்பதால் இப்பெயர்..32 comments:

 1. பறவைகள், விலங்குகள், இயற்கை...அடடா..அழகு

  ReplyDelete
  Replies
  1. அனைத்தையும் ரசித்தமைக்கு மிக்க நன்றி ஐயா.

   Delete
 2. இயற்கையின் அழகும், பறவைகளின் அழகும் ஒன்றை ஒன்றுதான் விஞ்சி இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. பறவைப்பிரியரான உங்கள் ரசனைக்கு சொல்லவேண்டுமா.. நன்றி மேடம்.

   Delete
 3. அழகான மரங்கள்

  ReplyDelete
  Replies
  1. இயற்கையின் விநோதங்களுள் ஒன்று. நன்றி மேடம்.

   Delete
 4. மிகவும் ரசித்தேன்...

  அருமை...

  தமிழ்மணம் இணைத்து +1... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. மிகவும் நன்றி தனபாலன். தமிழ்மணம் கடவுச்சொல் மறந்திருந்தேன். இப்போது நினைவுக்கு வந்துவிட்டது. மிக்க நன்றி :))

   Delete
 5. படங்களும் பட விளக்கங்களும் அருமையோ அருமையாக உள்ளன.

  இயற்கையின் விந்தையில் எத்தனை எத்தனை உயிரினங்கள் / பறவைகள் / மரங்கள் / மலர்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு அழகு + தனிதன்மை கொண்டதாக உள்ளது வியப்பளிக்கிறது.

  எப்படித்தான் ஒவ்வொன்றையும் பொறுமையாக ரஸித்து அருமையாகப் படம் எடுத்துக் காட்டியுள்ளீர்களோ !

  மிடுக்குநடை போடும் கொண்டைப்புறா (crested pigeon) ... மிகவும் பிடித்துள்ளது. :)

  பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. படங்கள் அனைத்தையும் ரசித்துப் பாராட்டிய தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி கோபு சார்.

   Delete
 6. Replies
  1. வருகைக்கும் ரசித்தமைக்கும் மிகவும் நன்றி சார்.

   Delete
 7. நீர் காகம் (எல்லா ஊர்களிலும் , நாடுகளிலும்) ஒரே மாதிரிதான் உட்கார்ந்து போஸ் கொடுக்கும் போல.

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான். தொடர் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மேடம்.

   Delete
 8. Replies
  1. தங்கள் வருகைக்கும் பதிவை ரசித்தமைக்கும் மிக்க நன்றி.

   Delete
 9. எத்தனை விதமான பறவைகள்! பொருத்தமான தலைப்புகள்! பாட்டில் மரங்கள் வித்தியாசமாய் உள்ளன. அழகு! பகிர்வுக்கு நன்றி கீதா!

  ReplyDelete
  Replies
  1. அனைத்தையும் ரசித்தமைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி அக்கா.

   Delete
 10. ரசிக்கத் தக்கனவாய் இயற்கை எழில் சூழ இந்தப் பறவைகள்! நன்றி தோழி... எங்களுக்கும் காட்சிப் படுத்தியமைக்கு!

  ReplyDelete
  Replies
  1. ரசித்துக் கருத்திட்டதற்கு மிகவும் நன்றி தோழி.

   Delete
 11. அத்தனை பறவைகளும் அழகாக போஸ் குடுக்கின்றனர். ஆலம் பழங்கள் என்கிறீங்கள்.. ஆலம் பழங்கள் வெள்ளை நிறமோ?.. இப்படி ஒருவித பழங்கள் நான் சாப்பிட்டிருக்கிறேன் அவை சுரவணைப் பழங்கள் என.

  இலவம் பூ என்பது இலவம் பஞ்சு மரத்தின் பூக்களோ? கொள்ளை அழகு. சாடி வடிவில் இருக்கும் மரங்கள் ஸ்பெயினுக்கு போனபோது பார்த்து வியந்திருக்கிறோம். அத்தனையும் அழகு.

  ReplyDelete
  Replies
  1. ஆலமரங்களிலேயே நிறைய வகைகள் இங்குண்டு அதிரா. இவை வெளிர்மஞ்சள் நிறப்பழங்கள்.. சிவப்பு பழங்கள் உள்ள மரங்களும் உண்டு.

   இலவம்பஞ்சு மரத்தின் பூவைத்தான் இலவம்பூ என்கிறேன். எல்லாவற்றையும் ரசித்தமைக்கும் கருத்திட்டு சிறப்பித்தமைக்கும் நன்றி அதிரா.

   Delete
 12. அனைத்தும் படங்களும் மிக அழகு

  ReplyDelete
  Replies
  1. மிகவும் நன்றி மதுரைத்தமிழன்.

   Delete
 13. கீதா, எல்லா படங்களுமே அழகு !

  ReplyDelete
  Replies
  1. அன்பும் நன்றியும் சித்ரா.

   Delete
 14. Replies
  1. மிகவும் நன்றி ஐயா.

   Delete
 15. பறவைகள் பற்பலவற்றை உயிரியல் பூங்காவில் பார்ப்பதைக் காட்டிலும் எழில் வாய்ந்த இயற்கைப் பின்புலத்துடன் காண்பது எவ்வளவு அழகு ! மிகப் பொருத்தமான, சுவைமிக்க விவரங்கள் ! மீன்குத்தி என்று சரியான சொல் . பகிர்வுக்கு மிகுந்த நன்றி .

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி. தாங்கள் குறிப்பிடுவது போல பறவைகளை சுதந்திரவெளியில் பார்க்கும்போதுதான் நமக்கும் மிகவும் மகிழ்வாக உள்ளது. மீன்குத்தி என்ற சொல்லைத் தங்கள் பதிவின் வாயிலாகவே அறிந்தேன். இங்கு குறிப்பிட்டுப் பாராட்டியமைக்கு மிக்க நன்றி.

   Delete
 16. படங்கள் எல்லாம் நல்லா இருந்தது. நிறைய பறவைகளின் தமிழ்ப்பெயர் எப்படித்தான் தெரிந்ததோ.

  'வளரிளம்' - அருமையான சொல்லாடல். 'வளரிளம் பொழில் சூழ்' என்று இலக்கியத்தில் வரும். இளமையான அதேசமயம் வளரும் தன்மையுள்ள.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க நெல்லைத்தமிழன். தமிழ்நாட்டுப் பறவைகள் பட்டியலிலிருந்து சில பறவைகள் பெயரைத் தமிழில் அறிந்துகொண்டேன். அலப்பறைக்குருவி போன்ற சிலவற்றுக்கு நானே பெயரிட்டுவிட்டேன். :)))

   Delete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.