30 June 2017

நாமக்கோழி
 
ராலிடே குடும்பத்தைச் சேர்ந்த கரிய நிறப் பறவையின் நெற்றியில் வெள்ளைநிறத்தில் நாமம் வரைந்ததைப் போன்ற தோற்றம் இருப்பதால் நாமக்கோழி என்ற காரணப்பெயர் இதற்கு. நாமக்கோழிகள் ஆசியா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா என உலகின் பல பகுதிகளிலும் காணப்படுகின்றன. இவற்றின் உயிரியல் பெயர் Fulica atra.  ஆங்கிலத்தில் Eurasian coot எனப்படுகிறது.
தரைவாழ் நீர்ப்பறவைகளான இவை, ஏரி, ஆறு போன்ற நீர்நிலைகளை ஒட்டியும் சதுப்பு நிலங்களிலும் வாழ்கின்றன. இவற்றின் கால்கள் நீளமும் வலிமையும் கொண்டவை. இவற்றின்  விரல்களுக்கிடையில் வாத்தினைப் போல சவ்வு கிடையாது என்றாலும் அபாரமான நீச்சல்காரர்கள்.
நாமக்கோழிகள் பெரும்பாலும் கூட்டமாக வாழும். ஆனால் முட்டையிடும் பருவத்தில் ஆண் பெண் இரண்டும் தங்கள் கூட்டினைக் கட்ட ஒரு எல்லையை உருவாக்கிக் கொள்வதோடு அதைப் பாதுகாக்க மிகவும் மூர்க்கமாக செயல்படும். காய்ந்த புற்கள், இலைச்சருகுகளாலான கூட்டில் ஒரு ஈட்டுக்கு பத்து முட்டைகள் வரை இடும். பருவகாலம் ஏதுவாக இருந்தால் வருடத்துக்கு இரண்டு அல்லது மூன்று ஈடுகள் முட்டையிடும். 
நாரை, ஆலா போன்ற நீர்ப்பறவைகளுக்கு பெரும்பாலான நாமக்கோழிக் குஞ்சுகள் முட்டையிலிருந்து வெளிவந்த பத்து நாட்களுக்குள்ளாகவே எளிதில் இரையாகிவிடுவதால் தப்பிப் பிழைப்பவற்றின் விகிதம் குறைவே. நாமக்கோழிக்குஞ்சுகள் பொரிக்கும் சமயத்தில் நாமத்தோற்றம் இருப்பதில்லை.. அவற்றுக்கு முழுமையான நாமத்தோற்றம் உருவாக ஒருவருட காலம் பிடிக்கும்.
நாமக்கோழிக் குஞ்சுகளின் இறப்புக்கு எதிரிகளை விடவும் தாய் தந்தையே முதற்காரணம் எனலாம். உணவு கிடைக்காத பொழுதுகளில் குஞ்சுகளின் நச்சரிப்பு தாளாமல் அவற்றைக் கொத்திக் கொத்தியே கொன்றுவிடும் வழக்கம் இவற்றிடம் உண்டு என்பது அதிர்ச்சி தரும் தகவல். மேலும் சில நாமக்கோழிகள் தங்கள் முட்டைகளை வேறொரு நாமக்கோழியின் கூட்டில் திருட்டுத்தனமாய் இட்டு தங்கள் பொறுப்பிலிருந்து தப்பித்துக்கொள்வதும் உண்டு. அமெரிக்க நாமக்கோழிகள் தங்கள் முட்டையிலிருந்து வந்த குஞ்சுகள் எவை.. திருட்டு முட்டையிலிருந்து வந்த குஞ்சுகள் எவையென்று பிரித்தறியும் அறிவு படைத்தவை என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது வியப்பளிப்பதாக உள்ளது.


 


நாமக்கோழிகள் அனைத்துண்ணிகள்.. நீர்த்தாவரங்கள், பழங்கள், கொட்டைகள், இலைகள், பாசி போன்றவற்றோடு பிற பறவைகளின் முட்டைகளையும், மீன், தவளை, எலி போன்ற சிற்றுயிர்களையும் தின்றுவாழும். இவற்றின் ஆயுட்காலம் சுமார் 5-9 வருடங்கள். படத்தில் நாமக்கோழிக்குப் போட்டியாக நெற்றியில் செந்தூரமிட்டிருப்பது தாழைக்கோழி.  :)))

12 June 2017

சிட்னியில் சித்திரைத் திருவிழா 2017

சிட்னியில் உள்ள தமிழ் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம் கடந்த ஐந்து வருடங்களாக ஒருநாள் கொண்டாட்டமாக சித்திரைத் திருவிழாவை  நடத்திவருகிறது. இருப்பினும் ந்த வருடம்தான் தோழி மணிமேகலாவின் தயவால் பார்த்து ரசிக்கும் கொடுப்பினை அமைந்தது. தோழிக்கும் அன்பும் நன்றியும். 

கடந்த 07-05-2017 அன்று நடைபெற்ற திருவிழாவில் காணுமிடமெலாம் தமிழர் கலாச்சாரம் போற்றும் பாரம்பரிய உடை மற்றும் அலங்காரங்களுடன் ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமாய்.. தமிழ்நாட்டில் இருப்பதைப் போன்ற உணர்வு.. கூடுதலாய் பாரம்பரியக் கொண்டாட்டங்களும் ஆடற்கலைகளும்.. நாசி துளைத்து நாவூற வைக்கும் தமிழர் உணவும்.. செவிக்கு உணவாக செந்தமிழ் சிறப்புரைகளும்...

முத்தாய்ப்பாய்.. தமிழ்நாட்டிலிருந்து வருகை தந்து தமது கணீர்க்குரல்களால் கட்டிப்போட்ட திரு. புஷ்பவனம் குப்புசாமி மற்றும் திருமதி அனிதா குப்புசாமி குழுவினரின் நாட்டுப்புறப் பாடல்கள் மற்றும் தெள்ளிய தமிழ்ப்பாடல்களாலான இசை விருந்து. தமிழ்நாட்டிலிருந்து வந்து பங்கேற்ற மற்றுமிரு சிறப்பு விருந்தினர்கள் எழுத்தாளர் நாறும்பூநாதன் அவர்களும் சிலம்பாட்டக் கலைஞர் திரு. எல்லாளன் அவர்களும். திருவிழாவின் அங்கமாக தமிழர் வாழ்வியல் சார்ந்த பொருட்காட்சியும் குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு விளையாட்டரங்கும் இடம்பெற்றிருந்தன. அன்றைய காட்சிகளுள் சில இங்கே உங்கள் பார்வைக்கு.. படம் 1

படம் 2
குத்துவிளக்கேற்றி பாரம்பரிய முறைப்படி
விழா துவக்கிவைக்கப் பட்டது. 

படம் 3

படம் 4

படம் 5

படம் 6

படம் 7

 படம் 8


படம் 9
புஷ்பவனம் குப்புசாமி தம்பதியினர்

படம் 10


படம் 11


படம் 12


படம் 13


படம் 14
சிலம்பாட்டக் கலைஞர் திரு.எல்லாளன் அவர்கள்


படம் 15
கலாநிதி ஆறு திருமுருகன் ஐயா அவர்கள்.


படம் 16
எழுத்தாளர் நாறும்பூநாதன் அவர்கள் 

படம் 17
இசைவிருந்துக்கு முன்னரான ஆயத்தம்... 

படம் 18
பொருட்காட்சி அரங்கத்திலிருந்து.. 

படம் 19

படம் 20

படம் 21


படம் 22

படம் 23
தமிழக நாட்டுப்புறக் கலைகள்...

படம் 24
செயலாளர் திரு. அனகன் பாபு அவர்கள்

படம் 25

படம் 26
அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுடன்.. 

படம் 27
கலை வாரிசு..