6 October 2012

கழங்காடுகல்லெனவே…


  
சிறுநதியொன்றின் சன்னப் பிரவாகத்தில்
என் விருப்பமின்றியே கொண்டு சேர்த்தது காலம். 
கரடுமுரடாய்க் கிடந்து முரண்டுபிடித்த என்னை
வாரியணைத்தும் வருடிக்கொடுத்தும்
வாழ்க்கைப் பாடங்களைக் கற்றுக்கொடுக்கிறது ஆறு.
 
நிலைகொண்டால் பாசத்துக்காளாகி பாழாவாய்,
ஓடிக்கொண்டிருந்தால் மட்டுமே உருப்படுவாய்
என்று செவியோரம் போதித்தபடி
ஓடிக்கொண்டிருக்கும் அதன் கூடவே
உருண்டோடி உருப்பெறுகிறேன் நான்.
 
ஈரிரண்டு எடுக்கவே இலந்தை பழுக்கவேயென்று
கழங்காடும் சிறுமியரின் கையிலாடிமுடித்து
பேருவகையோடு மாளுவேன் ஒருநாள்.


*************
படம் உதவி; இணையம்

40 comments:

 1. ஓடிக்கொண்டிருந்தால் மட்டுமே உருப்படுவாய்
  என்று செவியோரம் போதித்தபடி
  ஓடிக்கொண்டிருக்கும் அதன் கூடவே
  உருண்டோடி உருப்பெறுகிறேன் நான்.

  எண்ணங்கள் எங்கெங்கோ ஓட்டம் பிடித்தன சகோ.

  ReplyDelete
 2. ஆஹா! என்ன அற்புதமான கவிதை!

  போதனை எத்தனை எளிமையாய்! நகர்ந்து செல்லும் நதியின் ஆழமாய்!

  ReplyDelete
 3. நிலைகொண்டால் பாசத்துக்காளாகி பாழாவாய்,
  ஓடிக்கொண்டிருந்தால் மட்டுமே உருப்படுவாய்

  அற்புதமான கவிதை
  குறிப்பாக இறுதி வரிகள்
  மனம் தொட்ட கவிதை
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. நிலைகொண்டால் பாசத்துக்காளாகி பாழாவாய்,
  ஓடிக்கொண்டிருந்தால் மட்டுமே உருப்படுவாய்
  என்று செவியோரம் போதித்தபடி
  ஓடிக்கொண்டிருக்கும் அதன் கூடவே
  உருண்டோடி உருப்பெறுகிறேன் நான்.//
  இரசித்தேன்! அருமை!

  ReplyDelete
 5. மனிதா
  தொடர்ந்து இயங்கு
  இல்லையேல் துருப்பிடித்து
  இந்த உலகில்
  தொலைந்து போவாய்!

  - எங்கோ என்றோ படித்த இந்த கவிதைதான் நினைவுக்கு வருகிறது தங்களது கவிதையைக் கண்டவுடன். அருமையான சொற்பிரவாகம்... உணர்வுகளை வருடிச் செல்கிறது. இலட்சியக் கனவையும் ஊட்டுகிறது. அருமை. வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 6. நல்ல கவிதை கீதம்ஞ்சரி.
  ஆறு போல் ஓடிக்கொண்டு இருக்க வேண்டும்.
  குட்டையாக தேங்கி விட்டால் ஆபத்து.

  கழங்காடும் சிறுமியரின் படம் அருமை யார் வரைந்தது?
  இந்த விளையாட்டு எல்லாம் இப்போது பல குழந்தைகளுக்கு தெரியாது.
  என் அம்மா இந்த விளையாட்டுக்கு பாட்டு வைத்து இருந்தார்கள் அந்த காலத்தில் பாடிக் கொண்டு ஆடுவார்கள் .

  ReplyDelete
 7. முடிவு வரிகள் மிகவும் அருமை... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 8. பேருவ‌கை கொள்ள‌ வைத்த‌து க‌விய‌ழ‌கு!
  விளையாட்டாய் க‌ற்பித்த‌ வாழ்க்கை பாட‌மெல்லாம் வ‌ழ‌க்கொழிந்து போச்சே!
  நினைவ‌டுக்கில் அப்பாட‌ல்க‌ளை துழாவுகிற‌து ம‌ன‌வோட்ட‌ம். கையில் சிக்காம‌ல் ந‌ழுவி ந‌ழுவி... பிடித்துவிட‌லாம் ஒருநாள்... பிடித்து விடுவோம்.

  ReplyDelete
 9. கீதமஞ்சரி அக்கா....

  நீங்களும் கியுபிஸ கவிதை எழுதுகிறீர்களோ என்று யோசித்துத் திரும்ப படித்துப்பார்த்தேன்.

  அருமை அருமை.

  ஆற்றில் அடித்துச்செல்லப்படும் கல்லை
  உவமானமாக வைத்து வாழ்வின் அமைப்பை நுழைத்து அமைத்திருக்கும் கவிதையில் உங்களின் நுண்ணறிவைக் கண்டு வியக்கிறேன்.

  வாழ்க!

  ReplyDelete
 10. என்னுடைய வலைப்பக்கத்தில் உதயம், கற்காலம் குறுங்கவிதைகள்! முடிந்தால் வருகை தாருங்கள்!நன்றி!

  ReplyDelete

 11. IF YOU REST, YOU WILL RUST. வெகு அழகாக இயல்பாய் சொல்லிவிட்டீர்கள். முத்தாய்ப்பாக கழங்காடு கல் எனக் கூறி இருக்கிறீர்கள். சிறுமிகள் விளையாடுவது பார்த்திருக்கிறேன். பாட்டெல்லாம் கேட்டதில்லை. முடிந்தால் அப்பாட்டை எழுதலாமே. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 12. "ஓடிக்கொண்டிருக்கும் அதன் கூடவே
  உருண்டோடி உருப்பெறுகிறேன்.
  எண்ணக் கரு அருமை.

  ReplyDelete
 13. ம்ம்ம் ..நல்ல கவிதை

  ReplyDelete

 14. வாழ்க்கை ஆற்றில் அனுபவ நீரால் மனிதக்கல் என்படி உருவாகிறது என்பதை,மிக அழகிய கவிதை ஆக்கிய தங்களை வியந்து பாராட்டுகிறேன்!

  ReplyDelete
 15. நல்லதொரு கவிதை.

  ReplyDelete
 16. ஆஹா.... என்ன வியப்பு. என் மனதில் ஓடிய எண்ணங்கள் இங்கே புலவர் சா.இராமாநுசம் சாரின் எழுத்தில் பதிந்திருக்கக் காண்கிறேன். ஆகவே அதையே நானும் வழிமொழிகிறேன் தோழி.

  ReplyDelete
 17. அக்கா தங்களோடு ஒரு விருதினை பகிர்ந்துள்ளேன்! அதை ஏற்றுக்கொள்ள தங்களை எனது வலைப்பூவிற்கு அழைக்கிறேன்!
  http://dewdropsofdreams.blogspot.in/2012/10/2.html

  ReplyDelete
 18. ஈரிரண்டு எடுக்கவே இலந்தை பழுக்கவேயென்று
  கழங்காடும் சிறுமியரின் கையிலாடிமுடித்து...

  அருமை கீதமஞ்சரி

  ReplyDelete
 19. இங்கு கருத்திட்டு உற்சாக ஊக்கமும் பாராட்டும் அளித்த அனைத்து நண்பர்களுக்கும் என் மனம் நிறைந்த நன்றி. சில பொறுப்புகளை நிறைவேற்றவேண்டிய நிமித்தம் எனக்கு கால அவகாசம் தேவைப்படுவதால் இன்னும் சில மாதங்களுக்கு என் வலைப்பக்கம் என்னால் முன்போல் வர இயலாது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். முடியும்போது நண்பர்களின் வலைத்தளம் பார்வையிடுகிறேன். அனைவரின் அன்புக்கும் நன்றி. சிறிய இடைவேளையின் பின் சந்திப்போம்.

  ReplyDelete
 20. அருமை
  நல்லதொரு கவிதை
  நேரமிருந்தால் இங்க வாங்க‌
  http://alakinalaku.blogspot.com/

  ReplyDelete
 21. ஆஹா! என்ன ஒரு அழகுக் கவிதை!!

  கூழாங்கல்லோடு வாழ்க்கையைப் பொருத்திப் பார்க்க ஒரு கவியுள்ளத்தால் தான் முடியும்.

  கீதா,உங்களை மிஸ் பண்ணப் போகிறோம். விரைவாக வாங்கோ! காத்திருக்கிறோம்

  ReplyDelete
 22. கழங்காடிய காலங்கள் நினைவுக்கு வருகிறது.... ஓட ஓடத் தான் வாழ்க்கை பிடிபடுகிறது...

  ReplyDelete
 23. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_14.html) சென்று பார்க்கவும்...

  நன்றி...

  ReplyDelete
 24. சிறுவயது ஆங்கிலப் பாடத்தில் படித்த "ஒரு கூழாங்கல்லின் கதை " நினைவுக்கு வருகிறது.
  மீண்டும் மீண்டும் படிக்கத் தோன்றிய அருமையான கவிதை

  ReplyDelete
 25. பாச வலை உன்னை அப்படியே தேங்க வைத்து விடும், ஓடிக்கொண்டேயிருப்பது மட்டுமே துருப்பிடிக்காது உன்னைக் காப்பாற்றும் என்ற அர்த்ததுடன் சொல்லும் கவிதை வரிகள் மிக அருமை கீதமஞ்சரி!

  ReplyDelete
 26. கழங்காடும் சிறுமியரின் கையிலாடிமுடித்து
  பேருவகையோடு மாளுவேன் ஒருநாள்.

  கழங்காடு கல்லென்வே ரசிக்கவைத்த கவிதை !

  ReplyDelete
 27. //ஈரிரண்டு எடுக்கவே இலந்தை பழுக்கவேயென்று//
  நானும் ஆடியிருக்கிறேன் சிறு வயதில்...

  கூழாங்கல் தொலைந்து போகலாம் .. ஆனால் வெகு காலம் இருக்கும்..

  எளிமையான வரிகளில் கவிதை சிரிக்கிறது
  பவழ மல்லிப் பூவாய்..

  வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 28. நிலைகொண்டால் பாசத்துக்காளாகி பாழாவாய்,
  ஓடிக்கொண்டிருந்தால் மட்டுமே உருப்படுவாய்
  என்று செவியோரம் போதித்தபடி
  ஓடிக்கொண்டிருக்கும் அதன் கூடவே
  உருண்டோடி உருப்பெறுகிறேன் நான்.

  அருமையான வரிகள்

  ReplyDelete
 29. ''...வாரியணைத்தும் வருடிக்கொடுத்தும்வாழ்க்கைப் பாடங்களைக் கற்றுக் கொடுக்கிறது ஆறு...''
  teaching of life..good! congratz!
  Vetha.Elangathilakam.

  ReplyDelete
 30. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/11/7_25.html) சென்று பார்க்கவும்... நன்றி...

  ReplyDelete
 31. வணக்கம் சகோதரி...

  இன்னொரு முறை சிறப்பாக உங்களின் தளம், வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/11/blog-post_29.html) சென்று பார்க்கவும்... நன்றி...

  ReplyDelete
 32. Anonymous1/12/12 23:10

  நலமா sis ? என்ன சத்தத்தைக் காணோமே?
  இனிய வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 33. தங்களின் படைப்பை வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன். வாருங்கள் மேடம்!http://blogintamil.blogspot.in/2012/12/blog-post_20.html நன்றி!-காரஞ்சன்(சேஷ்)

  ReplyDelete
 34. உங்கள் தோழமையை நிறைய மிஸ் பண்ணுகிறோம். புது வருஷத்தோடேனும் நேரம் கிட்டக் கூடுமா தோழி?

  இனிய புது வருட நல்வாழ்த்துக்கள். புது வருஷம் உங்களை எங்களிடம் அழைத்து வரட்டும்!

  ReplyDelete
 35. தங்கள் வரிகளை காணாது வாடிக்கிடக்கிறேன்.

  என்று வருவீர்கள் சகோ.
  இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

  ReplyDelete

 36. ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  பிரான்சு
  01.01.2013
  kambane2007@yahoo.fr

  ReplyDelete
 37. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

  2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்


  அன்புடன்
  மதுரைத்தமிழன்

  ReplyDelete

 38. வணக்கம்!

  பொங்கும் தமிழ்ச்சுவையைப் பொங்கல் திருநன்னாள்
  எங்கும் அளிக்கட்டும் ஈந்து!

  ReplyDelete
 39. அழகான கவிதை ..

  இதயம் நிறைந்த இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!

  ReplyDelete
 40. //கரடுமுரடாய்க் கிடந்து முரண்டுபிடித்த என்னை
  வாரியணைத்தும் வருடிக்கொடுத்தும்
  வாழ்க்கைப் பாடங்களைக் கற்றுக்கொடுக்கிறது ஆறு.//

  அழகான கவிதைக்குப் பாராட்டுக்கள்

  ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.