12 June 2014

சென்னைத் தமிழும் ஆஸி ஆங்கிலமும் 3


தங்களை உயர்த்திக்காட்ட அடுத்தவரை மட்டம் தட்டுவது என்பது உலக மக்கள் அனைவருக்குமே மிகவும் பிடித்தமான விஷயம் போலும். தனிமனிதனாக இருக்கும் போது அடுத்தவனை, குழுவாக இருக்கும்போது அடுத்த குழுவை, மாநிலம் என்றால் அடுத்த மாநிலத்தை, நாடென்றால் அடுத்த நாட்டைப் பழிப்பதில் அவ்வளவு சந்தோஷம். ஆஸ்திரேலியாவின் ஒவ்வொரு மாநிலத்தவரும் பிற மாநிலத்தவரைக் கேலியாக குறிப்பிடும் பட்டப்பெயர்கள் ஐரோப்பியக் குடியேற்றத்தின் ஆரம்ப காலத்தில் (1800-களில்) மக்களிடையே புழக்கத்தில் இருந்திருக்கின்றன. கால ஓட்டத்தில் பல மறைந்துபோனாலும் ஒன்றிரண்டு இப்போதும் உள்ளன.ஆறு மாநிலங்களையும் இரண்டு யூனியன் பிரதேசங்களையும் உள்ளடக்கியதுதான் ஆஸ்திரேலியா.

மாநிலங்கள்குவீன்ஸ்லாந்து, நியூ சௌத் வேல்ஸ், விக்டோரியா, தெற்கு ஆஸ்திரேலியா, மேற்கு ஆஸ்திரேலியா, டாஸ்மேனியா.

யூனியன் பிரதேசங்கள்வடக்கு பிரதேசம், ஆஸ்திரேலிய தலைநகர் பிரதேசம்.

ஒவ்வொரு மாநிலமும் யூனியன் பிரதேசமும் தங்களைத் தாங்களே எப்படிப் பெருமைப்படுத்திக்கொள்கிறார்கள் என்பதையும் மற்ற மாநிலத்தார் அவர்களை எப்படி கேலி செய்கிறார்கள் என்பதையும் பார்ப்போம்.1. முதலில் குவீன்ஸ்லாந்து. கிழக்கிலிருப்பதால் ஆஸ்திரேலிய மாநிலங்களில் முதலில் சூரிய உதயத்தைக் காணும் மாநிலம் என்பதால் சூரியன் ஒளிரும் மாநிலம் (Sunshine state) என்று மார்தட்டுகிறது. வாழை அதிகமாக விளையும் மாநிலம்  என்பதால் வாழைத்தோட்டம் என்ற பெயரும் அதற்குண்டு. குவீன்ஸ்லாந்தின் தலைநகர் பிரிஸ்பேனை வாழைப்பழ நகரம் (Banana city) என்பர். வாழை விளைச்சலிலேயே வாழ்நாளை செலவழிப்பதால் அவர்கள் வேலையில்லாத நேரங்களில் வாழைப்பழங்களை வளைத்துக் கொண்டிருப்பார்கள் என்ற அர்த்தத்தில் வாழைப்பழ வளைப்பான்கள் (Banana benders) என்று நக்கலாய்க் குறிப்பிடுகின்றனர் அடுத்த மாநிலத்தினர்.

குவீன்ஸ்லாந்து மக்களுக்கு கரும்புத் தேரைகள் (cane toads) என்றொரு பட்டப்பெயரும் உண்டு. அதற்குப் பின்னால் ஒரு கதை உண்டு. ஆஸ்திரேலியாவின் பிரதானப் பணப்பயிர் கரும்பு. கரும்பின் குருத்துக்களை அழிக்கும் பூச்சிகளான கரும்பு வண்டுகளை அழிப்பதற்காக ஹவாய் தீவுகளிலிருந்து கொண்டுவரப்பட்டவை தென்னமெரிக்காவைச் சேர்ந்த இந்த கரும்புத் தேரைகள். வளர்ந்த வண்டுகள் கரும்பின் குருத்தைத் தின்று வாழும். ஆனால் மண்ணுக்குள்ளிருக்கும் அவற்றின் லார்வாக்கள் கரும்பின் வேர்களைத் தின்று வளரும். அதனால் கரும்பின் விளைச்சல் பாதிப்புறுவதால் 1935 இல் கிட்டத்தட்ட நூறு இளம் தேரைகள் கொண்டுவரப்பட்டு குவீன்ஸ்லாந்தின் சில பகுதிகளில் வயல்களில் விடப்பட்டு பரிசோதிக்கப்பட்டன. ஆனால் எவரும் எதிர்பாராத அளவுக்கு அவற்றின் இனம் பல்கிப்பெருகி இன்று இருநூறு மில்லியனைத் (இருபது கோடி) தாண்டிவிட்டது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.தேரை என்றால் சாதாரணமாய் நாம் பார்க்கும் சிறிய அளவுத் தேரைகள் அல்ல, பெரியவை, மிகப்பெரியவை. ஒவ்வொன்றும் 19 முதல் 23 செ.மீ. நீளமும் தோராயமாக ஒன்றேமுக்கால் முதல் இரண்டு கிலோ வரை எடையும் கொண்டவை. போதாக்குறைக்கு எதிரிகளிடமிருந்து தற்காக்க, இவற்றின் காதின் பின்னால் ஒரு நச்சு சுரப்பியும் உண்டு. அதன் நச்சுக்கு மனிதர்களைக் கொல்லும் அளவு வீரியம் இல்லை என்றாலும் கண் எரிச்சல், கை கால்கள் அரிப்பு போன்றவற்றை ஏற்படுத்தும்.

பரிணாம வளர்ச்சியினால் இத்தனை வருடங்களில் அவற்றின் கால்களின் நீளம் அதிகரித்திருக்கிறதாம். அதனால் இடப்பெயர்வு இன்னும் விரைவாக நடந்து பக்கத்து மாநிலங்களுக்கும் பரவி விட்டனவாம். குவீன்ஸ்லாந்து இந்த கரும்புத் தேரைகளை அறிமுகப்படுத்தியதால் ஏற்பட்ட பிரச்சனைகளால் எரிச்சலடைந்த பக்கத்து மாநிலமான நியூ சௌத் வேல்ஸ் மக்கள் குவீன்ஸ்லாந்து மக்களையும் கரும்புத் தேரைகள் என்றே குறிப்பிட்டு கேலி செய்தனர்.

2. பதிலுக்கு நியூ சௌத் வேல்ஸ் மக்களை கரப்பான்பூச்சிகள் (cockroaches) என்று நையாண்டி செய்தனர் குவீன்ஸ்லாந்து மக்கள். எங்கள் மாநிலத் தேரைகளை விடவும் எண்ணிக்கையில் அதிகம் உங்கள் மாநிலக் கரப்பான் பூச்சிகள் என்று கேலி செய்தனர். (கரப்பான் பூச்சி படம் போடமாட்டேனே..)நியூ சௌத் வேல்ஸ் மாநிலத்துக்கு கோட் ஹேங்கர் மாநிலம் (coat hanger state) என்ற பட்டப்பெயரும் உண்டு. அது ஏனாம்? சிட்னியின் பிரசித்தமான ஹார்பர் பாலத்தைத் தூரநின்று பார்த்தால் கோட் ஹேங்கர் போலத் தெரிகிறதாம் அவர்களுக்கு.ஆரம்பகாலத்தில் நியூ சௌத் வேல்ஸில் குடியேறிய ஐரோப்பிய மக்களுடைய வாரிசுகள் நெடுநெடுவென்று உயரமாகவும் மக்காச்சோள நிறத்திலும் இருந்ததால் சோளத்தட்டைகள் (cornstalk) என்ற பட்டப்பெயருக்கும் ஆளாகியிருந்திருக்கின்றனர்.
ஆனால் நியூ சௌத் வேல்ஸ் தன்னைப் பெற்றிப் பெருமையாகச் சொல்வது என்ன தெரியுமா? முதன்மை மாநிலம் (Premier state). காரணம்?

1788 இல் முதன்முதலில் ஐரோப்பிய காலணி உருவானது இங்குதான். ஆரம்பகால நியூ சௌத் வேல்ஸ் காலனியில் டாஸ்மேனியா, தெற்கு ஆஸ்திரேலியா, விக்டோரியா, குவீன்ஸ்லாந்து, வடக்கு பிரதேசம் எல்லாமே அடங்கியிருந்திருக்கின்றன. 1825 க்குப் பிறகு ஒவ்வொன்றாய் தனி மாநிலமாகப் பிரிந்திருக்கின்றன. அதனால் தாய்மாநிலம் என்ற பெருமையும் சேர்ந்து முதன்மை மாநிலம் என்ற பெருமைக்குரியதாகிவிட்டது.

3. விக்டோரியா மாநிலம் ஆஸ்திரேலியாவின் மற்ற மாநிலங்களை விடவும் சிறியது என்பதாலும் அது தன்னைதோட்ட மாநிலம்’ (Garden state) என்று பெருமையாகக் குறிப்பிடுவதாலும் பிற மாநிலத்தவர் அதைமுட்டைக்கோஸ் தோட்டம்’ (Cabbage patch) என்று குறிப்பிட்டனர். விக்டோரிய மாநிலத்தைச் சார்ந்தவர்களை முட்டைக்கோஸ் தோட்டக்காரர்கள் (cabbage patchers) என்றனர்.

விக்டோரிய மாநிலத்தவரின் மற்றொரு பெயர் கோந்து மெல்பவர்கள். பொதுவாகவே ஐரோப்பியக் குடியேறிகள் அனைவரிடமும் ஒரு பழக்கம் இருந்தது. ஆஸ்திரேலிய மரமான வாட்டில் மரத்திலிருந்து கிடைக்கும் இனிப்பான பிசினை பொழுதுபோக்குக்காக மென்று கொண்டிருப்பார்களாம். சொந்த நாட்டில் சூயிங்கம் மென்று பழக்கப்பட்ட வாயால் வந்த நாட்டில் சும்மா இருக்கமுடியுமா? ஆனால் இந்த கோந்து மெல்பவர்கள் (Gum Suckers) என்ற பட்டப்பெயர் விக்டோரியா மாநிலத்தவர்க்கு மட்டும் ஏன் வழங்கப்பட்டது என்பது வியப்பு.4. தெற்கு ஆஸ்திரேலியாவைச் சார்ந்தவர்களை காக்கை தின்னிகள் (crow eaters) என்று கேலி செய்கிறார்கள் பிற மாநிலத்தார். தெற்கு ஆஸ்திரேலியாவின் கொடியைப் பாருங்கள், ஒரு சாப்பாட்டுத் தட்டில் காக்கையை மல்லாத்தியிருப்பது போலவே இருக்கிறது. அவர்களை காக்கை தின்னிகள் என்பது சரிதானே என்கிறார்கள் அவர்கள். ஆனால் அதை மறுப்பதோடு மேற்கு ஆஸ்திரேலியர்கள்தாம் உண்மையான காக்கை தின்னிகள் என்கிறார்கள் இவர்கள்.
பாலை நிலமான மேற்கு ஆஸ்திரேலியாவில் வறட்சிக்காலத்தில் உண்ண உணவு எதுவும் கிடைக்காத நிலையில் அங்கு வசித்தவர்கள் கண்ணில் தென்படும் காக்கைகளையும் காக்கட்டூகளையும் சுட்டுவீழ்த்தி அவற்றின் கறியை உண்டார்களாம். அதற்கு ஆதாரமாக மேற்கு ஆஸ்திரேலியாவில் குடியேறிய ஐரோப்பியக் குடியேறிகளின் குறிப்புகள் உள்ளனவென்று அடித்துச் சொல்கிறார்கள் தெற்கு ஆஸ்திரேலியர்கள். தெற்கும் மேற்கும் வழக்கில் இடமாறிப் போய்விட்டது போலும். ஆனால் வைத்த பெயர் வைத்ததுதான் என்றாகிவிட்டது.


தெற்கு ஆஸ்திரேலியர்களுக்கு கோதுமை விவசாயிகள் (wheat fielders) என்ற பெயரும் உண்டு. அங்கு கோதுமை வயல்கள் அதிகமாக இருப்பதாலும் கோதுமை ஏற்றுமதியில் முன்னிலை வகிப்பதாலும் அந்தப்பெயர். மற்றவர்கள் சொல்வது இருக்கட்டும். அவர்கள் தங்களுக்கு என்ன பெயர் வைத்திருக்கிறார்கள் தெரியுமா? திருவிழா மாநிலமாம், மதுரச மாநிலமாம், படைப்பாக்க மாநிலமாம்… இதுபோல் இன்னும் பல. இத்தனை பெருமைகளுக்கும் காரணம் இல்லாமல் இல்லை. சர்வதேச அளவிலான பல இசை, ஓவிய கலை நிகழ்ச்சிகள் தெற்கு ஆஸ்திரேலியாவின் தலைநகரான அடிலெய்டில் வருடந்தோறும் நடைபெற்றுக் கொண்டிருப்பதால் மக்களின் கொண்டாட்டத்துக்கு காரணம் கேட்கவா வேண்டும்!

5. மேற்கு ஆஸ்திரேலியாவின் அழகிய கடற்கரைகள் யாவும் மண்ணுளிப்பூச்சிகளால் நிறைந்திருப்பதால் மேற்கு ஆஸ்திரேலியர்களுக்கு மண்ணுளிப் பூச்சிகள் (sand gropers) என்ற பட்டப்பெயர் வழங்கலாயிற்று. மண்ணுளிப் பூச்சிகளைப் பார்ப்பதற்கு நம்மூர் பிள்ளைப்பூச்சிகள் போலிருக்கின்றன.ஆனால் மேற்கு ஆஸ்திரேலியாவோ, தன்னைத்தானே தங்க மாநிலம் (The golden state) என்று பெருமையடித்துக் கொள்கிறது. பொய்யில்லை, உண்மைதான். ஒரு வருடத்தில் ஆஸ்திரேலியா மொத்தத்திலும் கிடைக்கும் தங்கத்தில் சுமார் 60 சதவீதம் (கிட்டத்தட்ட 150 டன்) மேற்கு ஆஸ்திரேலியாவில்தான் கிடைக்கிறது என்பதும் தங்கம் மட்டுமல்லாது ஏராளமான இதர கனிமப்பொருட்களும் தோண்டியெடுக்கப்பட்டு ஏற்றுமதியாகின்றன என்பதும் அவர்களைப் பெருமை கொள்ளச் செய்யும் விஷயங்கள்.


மேற்கு ஆஸ்திரேலியாவில் 1931 இல் கிடைத்த 35 கிலோ தங்கக்கட்டி

6. உச்சிநுனிக்காரர்கள் (Top Enders) வேறு யார்? வடக்குப் பிரதேசத்தவருக்குதான் அந்த அரும்பெயர். ஆஸ்திரேலியாவின் உச்சியில் இருப்பவர்கள் அவர்கள்தானே. மற்ற மாநிலங்களிலிருந்து மாறுபட்ட சூழல், வாழ்க்கை கொண்ட வடக்குப் பிரதேசத்தினர் ஆஸ்திரேலியாவின் தனித்துவ மாநிலமாயிருப்பதே தங்கள் சிறப்பு என்கின்றனர்.7.   எக்கச்சக்கமாய் ஆப்பிள் விளையும் டாஸ்மேனியாவை ஆப்பிள் தீவு (Apple Isle) என்றும் இயற்கை எழில் கொஞ்சும் மாநிலம் என்றும் டாஸ்மேனியர்கள் தங்கள் மாநிலத்தைப் பெருமை சாற்ற, மற்ற மாநிலக்காரர்களோ அவர்களை ஆப்பிள் தின்னிகள் (apple eaters) என்றும் பாராகோட்டாக்கள் (Barracoutas) என்றும் குறிப்பிட்டனர். செழுமையான காலங்களில் ஆப்பிள்களையும் வறட்சிக்காலங்களில் கடலில் கிடைக்கும் பாராகோட்டா வகை மீன்களையுமே பிரதான உணவாய்க் கொண்டு உயிர்வாழக்கூடியவர்கள் என்று கிண்டலாய்க் குறிப்பிடுவர்.


8. ஆஸ்திரேலிய தலைநகர்ப் பிரதேசத்தவருக்கு வட்டப்பாதைகளில் வலம்வருவோர் (Roundabout-abouters) என்று பெயர். தலைநகரமான கான்பெராவில் காணப்படும் பெரிய பெரிய வட்டப்பாதைகளில் சுற்றிச் சுற்றி எரிச்சலுற்ற மற்ற மாநிலத்தவர் இந்தப் பெயரை வைத்திருக்கக்கூடும். மற்றவர்கள் என்னவேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளட்டும். தலைநகர்ப் பிரதேசத்தவர் என்பதை விடவும் அவர்களுக்கு வேறு பெருமை வேண்டுமா என்ன?

கான்பெராவின்  பெரிய பெரிய வட்டப்பாதைகள்

இவ்வாறு ஒருவரை ஒருவர் கேலி செய்து சீண்டும்படியாக இருந்த பல பட்டப்பெயர்கள் காலப்போக்கில் ஒழிந்துவிட்டன. 1901-இல் ஆஸ்திரேலியா ஒரே நாடான பிறகு ஆஸ்திரேலியர்கள் என்னும் ஒன்றுபட்ட தேச உணர்வே மேலோங்கி நிற்கிறது. மாறுபட்ட மாநில விரோதங்கள் மறைந்துபோய்விடுகின்றன. பன்னாட்டு மக்களும் பன்னாட்டு கலாச்சாரங்களும் ஆஸ்திரேலிய வாழ்க்கையுடன் ஒன்றிவிட்ட இக்காலத்தில் நிற இன மொழி அடையாளங்களால் ஒருவரை ஒருவர் துவேஷிப்பது சட்டப்படி குற்றமாகும்.

(அடுத்த பதிவுடன் நிறைவுறும்)

படங்கள் அனைத்துக்கும் நன்றி - இணையம்)

தொடர்ந்து வாசிக்க

சென்னைத் தமிழும் ஆஸி ஆங்கிலமும் 4

முந்தைய பதிவுகள்

சென்னைத் தமிழும் ஆஸி ஆங்கிலமும் 1

சென்னைத் தமிழும் ஆஸி ஆங்கிலமும் 2


46 comments:

 1. அறியாதனப் பல அறிந்தோம்
  முன்னுரையும் அதற்கு விளக்கமாக அமைந்த
  விரிவான பதிவும் அருமை
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்கள் உடனடி வருகைக்கும் ஊக்கம் தரும் பின்னூட்டத்துக்கும் தமிழ்மண வாக்குக்கும் மிக்க நன்றி ரமணி சார்.

   Delete
 2. வணக்கம்
  தங்களின் பதிவின் வழி அவுஸ்ரேலியா பற்றி பல தகவல்கள் அறிய முடிந்து பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் பதிவை ரசித்தமைக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி ரூபன்

   Delete
 3. கேலி செய்வது என்று சொன்னாலும் இவை வழக்காமாகி சில அடையாள பெயர்கள் சுவாரஸ்யமாக அமைந்து விடுகின்றன. எல்லாவற்றையும் தொகுத்து சுவாரஸ்யம் கூட்டி இருக்கிறீர்கள். கரப்பான் படம் போடக் கூட அலர்ஜியா! :))))

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் பதிவை ரசித்து இட்டக் கருத்துரைக்கும் மிகவும் நன்றி ஸ்ரீராம். கரப்பான்பூச்சி பயம் எனக்கில்லை. ஆனால் பல பதிவர்களுக்கு உண்டென்று தெரியும். :)

   Delete
 4. மத்தவங்களைக் கேலி செய்யறதுன்னா என்னா சுவாரஸ்யமா பட்டப் பெயர்களைக் கண்டுபிடிக்கறாங்க... ஒவ்வொண்ணும் ரசனை. பட்டப்பெயர் வரலாறினூடாக நிறையத் தகவல்களும் கிடைச்சது போனஸ்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் பதிவை ரசித்தமைக்கும் மிகவும் நன்றி கணேஷ்.

   Delete
 5. கேலிப்பெயர்கள் எல்லாம் காரணப்பெயர்களாக ஆகி இருக்கே!!!! வெகுவாக ரசித்தேன். இந்த கரும்புத் தேரையை இதுவரை கண்ணில் பார்க்கலையேன்னு இப்போ புதுக் கவலை:(

  ReplyDelete
  Replies
  1. டீச்சர், சத்தமா சொல்லிடாதீங்க. இதுதான் சாக்குன்னு நியூஸியில் கரும்புத்தேரை இறக்குமதி ஆகிடப்போறது...

   வருகைக்கும் ரசித்தமைக்கும் நன்றி டீச்சர்.

   Delete
 6. நிறைய வரலாற்று செய்திகளை சொல்லியிருக்கிறீர்கள் சகோதரி . வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. பல நீங்கள் அறிந்தவையாகவும் இருக்கலாம். பதிவை ரசித்தமைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சொக்கன்.

   Delete
 7. இந்தப்பதிவிலிருந்து அருமையான ஆச்சர்யமான பல வரலாற்றுச் செய்திகளை பொருத்தமான படங்களுடன் அறிய முடிந்தது.

  முன்னுரையும், முடிவுரையும் கூட மிக அழகாக யோசிக்க வைப்பதாக அமைந்துள்ளன.

  பாராட்டுக்கள். வாழ்த்துகள். பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் பதிவை ரசித்து இட்டக் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி கோபு சார்.

   Delete
 8. செய்திகளைச் சேகரிக்க மெனக்கெடும்போது நாமும் பல விஷயங்களை உன்னிப்பாய் கவனிக்கிறோம். ஒரு ஆராய்ச்சியே நடத்திவிட்டீர்கள். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் ஐயா. ஒரு தகவலைத் தேடினால் தொடர்ந்து சங்கிலிப்பின்னலாய் பல தகவல்கள் கிடைக்கின்றன. அவற்றைத் தொகுப்பது ஒரு சவால்தான். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

   Delete
 9. வணக்கம் கீதமஞ்சரி. வாசிக்கும் இடத்தைப் பற்றி பல்வேறு விசயங்களை ஆர்வமுடன் தரும் உங்களை கண்டு வியக்கிறேன். வாழ்த்துகள் தோழி! மேலும் பல அருமையான பதிவுகளுக்கு வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வருகைக்கும் பதிவை ரசித்து இட்டக் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி கிரேஸ்.

   Delete
 10. ஆஸ்திரேலிய தீவு ஒன்றில் தேங்காய்கள் அதிகம் விளைவதால் அந்த தீவு மக்களை கோகனெட் என்று மற்ற மாநிலத்தார் அழைக்க கோகனெட் என்பதே வசைச்சொல் போல தங்களை அவமானப்படுத்துவதாக வருத்தப்பட்டார் அந்த தீவுக்காரர் ஒருவர்.. அந்தத் தீவுக்கே கோகனெட் தீவு என்று பெயராம்..

  ஆரம்பத்தில் மிக வேடிக்கையாக இருந்தது ..

  ReplyDelete
  Replies
  1. பதிவை ரசித்ததோடு புதிய தகவலைப் பகிர்ந்துகொண்டமைக்கும் மிகவும் நன்றி மேடம்.

   Delete
 11. ஆஸ்திரேலியாவின் ஆரம்பகால நையாண்டி வார்த்தைகள் அந்த நாட்டின் வரலாற்றையும் சேர்த்தே விளக்குகின்றன.தொகுத்து தந்தமைக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. அறிந்துகொள்கையில் சுவாரசியமாக இருந்ததால் அனைவருடனும் பகிர்ந்துகொள்ளத் தோன்றியது. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா.

   Delete
 12. அறியாத தகவல்கள் ...
  மிக்க நன்றி சகோ..

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் பதிவை ரசித்தமைக்கும் மிகவும் நன்றி சீனி.

   Delete
 13. பல தகவல்கள் வியக்க வைக்கின்றன... ஒவ்வொரு விளக்கமும் பிரமாதம்...

  நன்றி சகோதரி...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் பதிவை ரசித்தமைக்கும் மிகவும் நன்றி தனபாலன்.

   Delete
 14. [quote]வாழைப்பழ வளைப்பான்கள் (Banana benders) என்று நக்கலாய்க் குறிப்பிடுகின்றனர் அடுத்த மாநிலத்தினர்.[/quote]

  பனை மரம் அதிகம் உள்ள பிரதேசத்தை சேர்ந்தவர்களை பனங்கொட்டையான்,பனக்கொட்டை சூப்பிகள் ...என நக்கலாக சொல்வார்கள்....அவுஸ்ரேலியாவில் அல்ல .....சிறிலங்காவில் ....நான் பனைமரம் அதிகம் உள்ள பிரதேசத்தை சேர்ந்தவன்...

  ReplyDelete
  Replies
  1. பிறரை மட்டந்தட்டி கேலிபேசுவதென்பது உலக மக்கள் யாவருக்கும் உள்ள பொதுக்குணம்தான் என்பது உங்கள் பதிவின் மூலம் தெளிவாகிறது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி புத்தன்.

   Delete
 15. இதைப் பார்த்துதான் கவுண்டமணி செந்தில் ஜோக்குகள் ஆரம்பித்ததோ. எனக்கு ஆஸ்ட்ரேலியாவிலும் யூனியன் பிரதேசங்கள் இருக்கும் என்றே தெரியாது. நன்றி.

  ReplyDelete
  Replies
  1. எனக்கும் எழுதும்போது அந்த நினைவு வந்தது வல்லிம்மா. சரியாக நீங்களும் சொல்லிவிட்டீர்கள். வருகைக்கும் பதிவை ரசித்தமைக்கும் மிகவும் நன்றி வல்லிம்மா.

   Delete
 16. தம. ஆறு
  http://www.malartharu.org/2014/01/word-verification.html

  ReplyDelete
 17. வீட்டில் கீதமஞ்சரி அத்தை என்று நிறைமதி அவளுடைய அம்மாவிடம் பலமுறை பேசியதைக் கேட்டிருக்கிறேன்.
  ஏன் என்று இப்போதுதான் புரிகிறது..
  விரிவான தகவல்கள்
  அசத்தலான நடை ...
  அப்புறம் உங்களின் நடை பாதிப்பில் ஒரு பதிவரிடம் பார்த்தேன்.
  வாழ்த்துக்கள்
  http://www.malartharu.org/2014/01/word-verification.html இது நீங்கள் படிக்க அல்ல கூகிள் படிக்க ..

  ReplyDelete
  Replies
  1. நிறைமதியின் மனத்தில் எனக்கொரு இடமிருப்பது அறிந்து மிகவும் மகிழ்ச்சி. என் நடை பாதிப்பில் இன்னொரு பதிவரிடம் பார்த்தீர்களா? புதிய விஷயம் இது. மகிழ்ச்சியும் கூட. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி மது.

   Delete
 18. ஆஸ்திரேலியா பற்றிய தகவல் அறிய கண்ணை மூடிக்கொண்டு உங்கள் வலைக்கு வரலாம். எல்லாவற்றையும் ஒரு நூலாக்குங்கள் சகோதரி. பலருக்கும் பயன்படும். மிக்க நன்றி. ஜெர்மானியர்கள் கூட மாநிலத்திற்கு மாநிலம் வேறுபாடு பார்ப்பார்கள். இது மனிதர்களின் குணம் தான் போல் இருக்கின்றது

  ReplyDelete
  Replies
  1. நூலாக்கும் எண்ணம் இதுவரை இல்லை கௌரி. நூலாக்கம் செய்ய இன்னும் நிறைய மெனக்கெட வேண்டும். நிறைய தகவல்களை இணைக்கவேண்டும். பிற்காலத்தில் முயற்சி செய்கிறேன். ஊக்கம் தரும் உங்கள் கருத்துரைக்கு மிகவும் நன்றி சந்திரகௌரி.

   Delete
 19. அடுத்தவர்களை கிண்டல் செய்ய எத்தனை எத்தனை பெயர்கள்......

  பல விஷயங்களை தெரிண்டு கொண்டேன்.. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வெங்கட்.

   Delete
 20. வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்..!

  ReplyDelete
  Replies
  1. தங்கள் தகவலுக்கு மிக்க நன்றி மேடம்.

   Delete
 21. வேறுபட்ட நல்லதொரு பகிர்வு....

  வலைச்சர அறிமுகத்தின் வாயிலாக தொடர்கிறேன்..

  http://pandianinpakkangal.blogspot.com

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் தொடர்வதற்கும் நன்றி பாண்டியன். தமிழ்மன்றத்தில் பாவூர்பாண்டி தாங்கள்தானே?

   Delete
 22. வலைச்சரம் மூலமாக தங்களைப் பற்றி அறிந்தேன். தங்கள் பதிவுகள் தெர்டர வாழ்த்துக்கள்.
  www.ponnibuddha.blogspot.in
  www.drbjambulingam.blogspot.in

  ReplyDelete
 23. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஐயா.

  ReplyDelete
 24. VERY INFORMATIVE BLOG, THANKS

  ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.