19 October 2015

கூழைக்கடா - பெலிக்கன்


பெலிக்கன் (pelican) என்னும் பறவையைத் தமிழில் கூழைக்கடா என்றும் மத்தாளிக்கொக்கு அல்லது மத்தாளி என்றும் குறிப்பிடுகின்றனர். இதன் தசை கெட்டியாக இல்லாமல் கூழ் போல் இருப்பதாலும் கிடா போன்ற பெருந்தோற்றத்தாலும் இதை கூழைக்கடா என்பதாகக் கருத்துள்ளது. 

நீர்நிலையொன்றில் 
எதிர்பாராமல் காணக்கிடைத்த கூழைக்கடா சோடி

பொதுவாகவே கூழைக்கடாக்களுக்கு பை போல் விரிவடையக்கூடியக் கீழ்த்தாடை ஒரு சிறப்பு. Australian Pelican (Pelicanus conspicillatus) எனப்படும் ஆஸ்திரேலியக் கூழைக்கடாவுக்கு இன்னொரு சிறப்பு உண்டு. என்ன தெரியுமா?  உலகிலேயே மிக நீண்ட அலகுடைய பறவை இதுதான். அலகின் நீளம் சுமார் 33 செ.மீ. - 45 செ.மீ. வரையிலும் கூட இருக்கும்.  இதுவரை பதிவாகியுள்ளவற்றுள் 51 செ.மீ. நீள அலகுதான் அதிகபட்சம். 



உலகில் தற்போது வாழும் எட்டு வகையான கூழைக்கடாக்களும் தரையில் கூடு கட்டுபவை, மரத்தில் கூடு கட்டுபவை என இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஆஸ்திரேலியக் கூழைக்கடாக்கள் நீர்நிலையை ஒட்டிய நிலப்பகுதிகளில் தரையில் கூடுகட்டி வாழ்பவை.. 


மூன்று வகை  கூழைக்கடாக்கள் அச்சுறுத்துநிலையை எட்டியவை என பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கம் (IUCN) குறிப்பிட்டுள்ளது. ஆனால் ஆஸ்திரேலியக் கூழைக்கடாக்களுக்கு அந்த ஆபத்து இல்லை. 


ஆகாயமளக்கும் இந்தப் பெரிய நீர்வாழ்ப்பறவையின் சிறகுவிரிநீளம் இரண்டரை மீட்டர்களாம்.  ஆனால் உயர வானில் பறக்கும்போது அப்படியா தெரிகிறது?

ஆகாயத்தில் புள்ளியாய் அன்றொரு நாள்... 

வருகினும் ஐயே! பறவைகள் வருகினும் ஐயே!
வருகினும் ஐயே! திரிகூட நாயகர் 
வாட்டமில் லாப்பண்ணைப் பாட்டப் புரவெல்லாம் 
குருகும் நாரையும் அன்னமுந் தாராவும்
கூழைக் கடாக்களும் செங்கால் நாரையும்....

என்று திரிகூட நாயகரின் வாட்டமில்லா வயல்களில் மேயவரும் பல்வேறு நீர்ப்பறவைகளுள் கூழைக்கடாவையும் குறிப்பிடுகிறது 
திருக்குற்றாலக் குறவஞ்சிப்பாடல்.  


22 comments:

  1. அறியாத தகவல்கள் அறிந்தேன் நன்றி சகோ
    தமிழ் மணம் 1

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் தமிழ்மண வாக்குக்கும் மிகவும் நன்றி கில்லர்ஜி.

      Delete
  2. சுவாரஸ்யம்.
    தம +1

    ReplyDelete
    Replies
    1. பதிவை ரசித்தமைக்கும் தமிழ்மண வாக்குக்கும் மிகவும் நன்றி ஸ்ரீராம்.

      Delete
  3. நல்ல தகவல்கள். படங்களும் அருமை. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. பதிவையும் படங்களையும் ரசித்தமைக்கும் கருத்துரைக்கும் மிகவும் நன்றி வெங்கட்.

      Delete
  4. வணக்கம்
    சகோதரி

    தகவலை அறியத்தந்தமைக்கு நன்றி. த.ம4
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் தமிழ்மண வாக்குக்கும் மிக்க நன்றி ரூபன்.

      Delete
  5. Replies
    1. தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி.

      Delete
  6. பாலி தி பெலிகன் என்ற நூலைக் கணக்கில்லா முறைகள் வாசித்து வாசித்து (முன்பு) இப்பறவை மேல் தனிக்காதல் வந்துவிட்டது என்றே சொல்லலாம் :-)
    தமிழ்ப் பெயரையும் இலக்கியப் பாடலையும் அறிந்து கொண்டேன். பகிர்விற்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. பாலி தி பெலிகன் நூலை நான் வாசித்ததில்லை கிரேஸ்.. நீங்கள் காதல் கொண்ட இப்பறவையைப் படமெடுக்க முடிந்ததில் எனக்கு மகிழ்ச்சிப்பா.. இலக்கியப்பாடல் விக்கிபீடியா மூலம்தான் அறிந்தேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கிரேஸ்.

      Delete
  7. அறியாத செய்திகள் அறிந்தேன் சகோதரியாரே
    படங்கள் அருமை
    நன்றி
    தம +1

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் தமிழ்மண வாக்குக்கும் மிக்க நன்றி ஐயா.

      Delete
  8. Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      Delete
  9. இலக்கியத்தில் இடம்பிடித்த பறவையைப்பற்றிய பகிர்வுக்கு நன்றிங்க கீதா.

    பதிவர் சந்திப்பில் தங்களுக்கான பரிசை வாங்கிய கலையரசி அவர்களை சந்தித்து பேசும் போதே தங்கள் உறவு முறையைத்தெரிந்து கொண்டு மகிழ்ந்தேன்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சசி. கலையரசி அக்கா போன்ற உறவுகள் கிடைத்தது என் பாக்கியம் என்றுதான் சொல்வேன். நீங்கள் அவர்களைப் பார்த்துப் பேசியதில் மிகவும் மகிழ்ச்சி சசி.

      Delete
  10. அருமையான விளக்கம், அதிலும் கடைசியான திரிகூடப் பாடல் சொன்ன விதம் அருமை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மகேஸ்வரி. குற்றாலக் குறவஞ்சிப் பாடலை விக்கிபீடியா மூலம்தான் கண்டுகொண்டேன். உங்கள் வாழ்த்துகளுக்கும் நன்றி தோழி.

      Delete
  11. அருமையான விளக்கத்துடன் அமைந்த பதிவு. கூழைக்கடா பற்றி தெரிந்து கொண்டேன்.
    த ம 7

    ReplyDelete
    Replies
    1. படங்கள் மட்டும்தான் முதலில் போடுவதாக இருந்தேன். கூடவே அவை குறித்தத் தகவல்களையும் வெளியிட்டால் நன்றாக இருக்கும் என்றெண்ணி சில தகவல்களை மட்டுமே திரட்டி வெளியிட்டேன். முழுமையான பதிவாக விரைவில் ஒரு பதிவை எழுதிவெளியிடுவேன். வருகைக்கும் கருத்துக்கும் தமிழ்மண வாக்குக்கும் மிகவும் நன்றி செந்தில்.

      Delete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.