புதுகை பதிவர் திருவிழாவின் வெற்றியின் பின்னணியிலுள்ள நல்லுள்ளங்கள். |
புதுக்கோட்டை பதிவர்
சந்திப்புத் திருவிழா திட்டமிட்டபடியே சிறப்பாக நடைபெற்றிருப்பதில் அளவிலாத மகிழ்ச்சி.
அன்று காலை முதலே நேரலை ஒளிபரப்புக்கு என்னைத் தயார்படுத்திக்கொண்டிருந்தேன். ஆனால்
அதுகுறித்த அறிவிப்பு எதுவும் எங்கும் காணப்படாமையால் ஏதேனும் காரணங்களால் அத்திட்டம்
கைவிடப்பட்டுவிட்டதோ என்ற கலக்கம் ஏற்பட்டது. புதுக்கோட்டை பதிவர் சந்திப்புக்குழுவின்
தளத்தில் என் ஐயத்தை வெளியிட்டேன். அடுத்த சில நிமிடங்களிலேயே பதிவர்களின் ஆபத்பாந்தவனான
திண்டுக்கல் தனபாலன் அவர்களின் தளத்தில் நேரலை ஒளிபரப்புக்கான இணைப்பு கிட்டியது.
அரங்கில் நாமும்... |
உடனடியாக அந்த
இணைப்பை கீதமஞ்சரியிலும் வெளியிட்டேன். மகிழ்வோடு கணவரிடம் காட்டியபோது, அவர், இதை
பெரிய திரையிலேயே நீ பார்க்க ஏற்பாடு செய்கிறேன் என்று சொல்லி தொலைக்காட்சியின் அகன்றதிரையில்
ஒளிபரப்பைப் பார்க்க ஏற்பாடு செய்துதந்ததோடு தானும் என்னோடு அமர்ந்து நிகழ்வுகளைப்
பார்த்து ரசித்தார். பதிவர் சந்திப்புத் திருவிழாவின் நிகழ்வுகளை ஆயிரம் மைல்களுக்கு
அப்பாலிருந்தே.. அதுவும் உடனுக்குடன் பார்க்க முடிந்தது பெரிய வரம் என்றுதான் சொல்லவேண்டும்.
இதற்கான ஏற்பாடுகளைச் செய்த புதுக்கோட்டை பதிவர் குழாமுக்கும் ஒளிபரப்பிய யூகே இன்ஃபோடெக்
நிறுவனத்துக்கும் என் அன்பான நன்றிகள் பல. சீருடை அணிந்து செவிக்கும் வயிற்றுக்கும் சிறப்பாக விருந்தோம்பிய பதிவர்களுக்கும், வருகை தந்து சிறப்பித்த அனைத்துப் பதிவர்களுக்கும் இனிய வாழ்த்துகள்.
விக்கிபீடியாவில் தொடர்ந்து எழுதிவரும் முனைவர் பா.ஜம்புலிங்கம் அவர்கள் சிறப்பிக்கப்படும்போது.. |
வலைப்பதிவர் திருவிழா
– 2015 மற்றும் தமிழ் இணையக் கல்விக்கழகம் நடத்திய மின்தமிழ் இலக்கியப்போட்டிகளில்
ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பித்ததில் மிகவும் மகிழ்ச்சி. போட்டியில் உத்வேகத்துடன்
பங்கேற்ற மற்றும் வெற்றிபெற்ற அனைத்துப் பதிவர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுகள். போட்டிமுடிவுகளை
இங்கு காணலாம்.
த.இ.க. உதவி இயக்குநர் முனைவர் மா.தமிழ்ப்பரிதி அவர்கள் |
போட்டிக்குப் பிறகான விமர்சனப்போட்டியின் வாயிலாய் பல நல்ல எழுத்தாளர்களையும் புதியவர்களையும் அடையாளங்காண முடிந்தது கூடுதல் சிறப்பு. எல்லோருமே நன்றாக எழுதியிருந்ததால் யாருக்குப் பரிசு கிடைக்கக்கூடும் என்று கணிப்பது பெரும் சவாலாகவே இருந்தது. அப்படியிருந்தும் ஓரளவு சிறப்பாகக் கணித்து இரண்டாம், மூன்றாம் பரிசுகளைப் பெற்ற கலையரசி அக்காவுக்கும் திரு. துரை. தியாகராஜ் அவர்களுக்கும் பாராட்டுகள்.
பதிவர் கையேடு வெளியீட்டின்போது... |
முனைவர் பழனி.கந்தசாமி ஐயா சுய அறிமுகத்தின்போது... |
எனக்கானப் பரிசை தோழி மு.கீதா பெற்றுக்கொண்டபோது நானே நேரில் வந்து பரிசைப் பெற்றுக்கொண்ட மகிழ்வில் திளைத்தேன். மிகவும் நன்றி தோழி. கேடயம் என் கரம் சேர சில மாதங்களோ வருடங்களோ ஆகலாம் என்ற நிலையில், என் உளக்கிடக்கையைப் புரிந்துகொண்டு வெற்றிக்கேடயத்தை உடனடியாகப் படமெடுத்து எனக்கு அனுப்பிவைத்த கலையரசி அக்காவுக்கு நெஞ்சம் நெகிழும் என் நன்றி.
என் சார்பில் பரிசினைப் பெற்றுக்கொண்ட தோழி மு.கீதாவுக்கு அன்பான நன்றி. |
விழாவின் நிகழ்வுகள் அனைத்துமே மனந்தொட்டன. பாடல், ஓவியம், கவிதை என்று பல்வேறு தளங்களிலும் சிறப்பானதொரு முத்திரை. புத்தகங்களை வெளியிட்ட கரந்தை ஜெயக்குமார் ஐயா அவர்களுக்கும் திரு.ரூபன் அவர்களுக்கும் பாராட்டுகள். விழாவின் சிறப்பு விருந்தினர்கள் அனைவரின் பேச்சும் பயனுள்ளவையாகவும் இணையத்தமிழை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும் முயற்சிகளை முன்வைப்பவையாகவும் இருந்தன. எஸ். ராமகிருஷ்ணன் அவர்களுடைய பேச்சு பதிவர்களுக்கு பலத்த நம்பிக்கை தருவதாக இருந்தது.
விக்கிமீடியாவின் இந்தியத் திட்ட இயக்குநர் திரு. அ.ரவிசங்கர் அவர்கள் |
விழா முடிந்த சில நிமிடங்களிலேயே கலையரசி அக்காவைத் தொடர்பு கொண்டேன். அப்போது அவர்கள் சொன்ன ஒரு தகவல் என்னை ஆனந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியது. விழா முடிந்தவுடன் எஸ்.ரா அவர்களிடம் என் புத்தகத்தைக் கொடுத்தபோது, அவர் கீதமஞ்சரியில் சில கதைகளை முன்பே வாசித்திருப்பதாகவும் மொழிபெயர்ப்பு நன்றாக உள்ளதாகத் தெரிவித்ததாகவும் சொன்னார். பிரபல எழுத்தாளர்களும் நம் வலைப்பக்கத்தை வாசிக்கிறார்கள் என்றால் எழுத்தின் மீதான சிரத்தை இன்னும் பன்மடங்கு கூடுகிறது. எஸ்.ரா. அவர்கள் பேசும்போது, எல்லோருடைய பதிவுகளின் பக்கமும் செல்வதில்லை என்றும் அதற்கான நேரமும் இருப்பதில்லை என்றும் தெரிவித்த அவர், யாராவது பரிந்துரை செய்தால்மட்டும் அந்த வலைப்பக்கம் சென்று வாசிப்பது வழக்கம் என்று கூறினார். எனவே என் வலைப்பக்கத்தை யாரோதான் அவருக்குப் பரிந்துரை செய்திருக்க வேண்டும். அந்த நல்லுள்ளத்துக்கு என் அன்பான நன்றி.
ஒரு திருமணத்தை வெகு விமரிசையாக நடத்திமுடித்த ஆயாசத்தோடு களைத்திருக்கும் புதுகை பதிவர் சந்திப்புக் குழுவினருக்கு
தற்சமயம் ஏற்பட்டுள்ள குறையைக் கேட்டு மனம் வருந்துகிறது. பதிவு செய்த பதிவர்களில்
பாதிப்பேர் வரவில்லை என்றும் வராததை முன்கூட்டியே தெரிவிக்கவும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
வராமையை முன்கூட்டியே தெரிவித்திருந்தால் உணவு ஏற்பாட்டில் செலவைக் குறைத்துக் கவனமாக
இருந்திருக்கமுடியுமே என்ற அவர்களது ஆதங்கம் நியாயமானதே.
தோழி மு.கீதா நன்றியுரையின்போது... |
ஒருமாத காலத்திற்கும் மேலாய் ஊண், உறக்கம் அற்று ஓயாது உழைத்துச்சோர்ந்த நம் நட்புகளுக்கு உதவ முன்வருவோம்.. நிதிப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய பதிவர்கையேடுகள் விற்பனையாகவேண்டும். அதற்கு நம்மாலான ஒத்துழைப்பை நல்குவோம். கையேடுகளைப் பெறுவதற்கான விவரங்கள் இங்கே.
(படங்கள் அனைத்தும் புதுக்கோட்டை பதிவர் சந்திப்பு -2015 தளத்திலிருந்து நன்றியுடன் பகிரப்பட்டவை..)
சிறப்பான பகிர்வு. போட்டியில் வெற்றி பெற்றதற்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி வெங்கட்.
Deleteஅடுத்த பதிவர் சந்திப்பு நடத்துவோருக்கு (என்னையும் சேர்த்து) பல பாடங்கள் உள்ளன...
ReplyDeleteவாழ்த்துகள்...
நன்றி...
எவ்வளவு திட்டமிட்டு செய்தாலும் ஏதாவது சிறு குறை அல்லது நெருடல் நிகழ்ந்துவிடுகிறது. அடுத்தடுத்த நிகழ்வுகளின்போது அவை தவிர்க்கப்படும்போது இந்த அனுபவங்களே அழகான பாடங்களாகிவிடுகின்றன. விழாக்குழுவினர் அனைவரின் உழைப்பையும் எப்படிப் பாராட்டுவது என்றே தெரியவில்லை. நிறைவான அர்ப்பணிப்பு. மனமார்ந்த வாழ்த்துகளும் நன்றியும் தனபாலன்.
Deleteஉண்மை கீதமஞ்சரி, பல மைல்களுக்கு அப்பாலிருந்தும் விழாவைக் கண்டுகளிக்க முடிந்தது பேரானந்தம். பரிசு பெற்றதற்கு வாழ்த்துகள்!
ReplyDeleteஎஸ்.ரா. அவர்கள் உங்கள் நூலைப்படித்துப் பாராட்டியிருப்பதற்கு உங்கள் எழுத்து உரித்தானதே. இனிய வாழ்த்துகள்!
உங்கள் அன்பான வாழ்த்துகளுக்கு மிகவும் நன்றி கிரேஸ். நேரலை ஒளிபரப்பு ஒரு பெரும் நிறைவைத் தந்தது உண்மைதான்பா.
Deleteசிறப்பானதொரு பகிர்வு சகோதரியாரே
ReplyDeleteநன்றி
தம +1
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் தமிழ்மண வாக்குக்கும் மிக்க நன்றி ஐயா.
Deleteபுகைப்படங்கள் அருமை சகோ
ReplyDeleteதமிழ் மணம் 4
புகைப்படங்கள் அனைத்தும் புதுகை வலைப்பதிவர் சந்திப்பு தளத்திலிருந்து பகிரப்பட்டவைதாம்.. அவர்களுக்கு என் நன்றிகள். வருகைக்கும் தமிழ்மண வாக்குக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.
Deleteமிக்க நன்றி சகோ...
ReplyDeleteஉங்களுக்குதான் நான் நன்றி சொல்லவேண்டும். உங்கள் அனைவரின் உழைப்புக்கும் செயற்திறனுக்கும் தலைவணங்குகிறேன். பாராட்டுகள் கீதா.
Deleteமிக மிக அற்புதமாக
ReplyDeleteநிகழ்வுகளை நேரலையில் கண்டு
பதிவு செய்துள்ளீர்கள்
தங்கள் புத்தகம் கிடைக்கப் பெற்றேன்
வாசித்துக் கொண்டிருக்கிறேன்
மிக்க நன்றி
வாழ்த்துக்களுடன்....
தங்கள் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ரமணி சார். புத்தகத்தை வாசித்துக்கொண்டிருப்பது மகிழ்வளிக்கிறது.
Deleteபோட்டியில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகள்
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஐயா.
Deleteமனம் நிறைந்த வாழ்த்துகள்.
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி புத்தன்.
Deleteமனம் நிறைந்த வாழ்த்துகள்.
ReplyDelete"கலந்து கொண்ட பதிவர்களின் பதிவுகள்" என்று தனி லேபில் உருவாக்கப்பட்டு, தங்களின் இந்தப் பதிவு சேர்க்கப்பட்டு விட்டது...
ReplyDeleteஇணைப்பு : →கலந்து கொண்ட பதிவர்களின் பதிவுகள்←
நன்றி...
அன்புடன் திண்டுக்கல் தனபாலன்
மிகவும் நன்றி தனபாலன்.
Delete