அரிச்சந்திரபுராணம் விவாக காண்டத்திலிருந்து சந்திரமதி குறித்தான சில வர்ணனைப் பாடல்களை ரசித்துக்கொண்டிருக்கிறோம். முதல் பதிவில் சந்திரமதி அறிமுகம், குணம், கூந்தல் அழகு பார்த்தோம். இப்பதிவில் அவளுடைய குரலினிமையும் விழியழகும் பார்க்கவிருக்கிறோம்.
இனிமைக்கு
உதாரணமாக உலகு சொல்லும் அத்தனையையும்
சந்திரமதியின் குரலுக்கு இலக்கணமாய் ஒற்றைப்பாடலுக்குள் கொண்டுவந்துவிடுகிறார் புலவர். பச்சைக்கற்பூரம், பால்,
தேன், அமுதம், குயிலின் குரல்,
கிளியின் இனிமையான மொழி, குழல், யாழ்
என்று இந்த உலகில் இனிமை
தரக்கூடிய அத்தனைப் பொருட்களையும் ஒன்றுகுழைத்து, மயிலைப்போன்ற சாயலையுடைய சந்திரமதியின் இனிய குரலாக அந்த
பிரம்மன் படைத்தானாம். இந்த வரிகளிலிருந்து சந்திரமதியின்
குரலினிமை தெரிகிறது. அவளுடைய குரலின் தன்மை
எப்படிப்பட்டதாம் தெரியுமா? அவளுடைய குரலைக் கேட்டால்
கருகிய பயிர்களும் உயிர்பெற்று பசிய பயிர்களாகுமாம். பட்ட
மரம் தழைத்திடுமாம்… பலநாள் மண்ணில் கிடந்து
மக்கிப்போன பிரேதத்தின் மீந்துகிடக்கும் வெண்ணிற எலும்புகளும்கூட புத்துயிர்
பெற்று எழுந்துவிடுமாம். போதுமா இந்த வர்ணனைகள்
என்னும்படியாக எவ்வளவு எவ்வளவு வர்ணனைகள்…
பயிர்கள்
தீந்தனவும் பட்ட மா மரமும்
பண்டைநாள்
உக்க வெள் என்பும்
உயிர்பெறற்
பொருட்டுப் பளிதமும் பாலும்
ஒழுகிய
தேனும் ஆரமுதும்
குயிலினிற்
குரலும் கிளியினின் மொழியும்
குழலும்
யா ழும் குழைத் திழைத்து
மயிலியற்
சாயல் வாள்நுதல் தனக்கு
மலரயன்
வகுத்தது என் மொழியாள்.
சந்திரமதியின்
மொழியழகு பார்த்தாயிற்று.. அடுத்து விழியழகு பார்ப்போமா?
சந்திரமதியின் கண்கள் எப்படிப்பட்டவை தெரியுமா?
பொதுவாக கவிஞர்கள் ஒரு பெண்ணின் கண்களுக்கு
உவமையாகக் கூறக்கூடிய பொருட்கள் என்னென்ன? கடல், மீன், அம்பு,
மருண்ட பெண்மான், நீலோற்பல மலர், கருவிளம்பூ, மாவடு
போன்றவை. ஆனால் இவை யாவற்றையும்
வென்றுவிடக்கூடிய அழகு வாய்ந்தவையாம் சந்திரமதியின்
கண்கள். கண்களின் அழகைப் பார்த்தோம். அதன்
தீவிரம்? உயிர்பறிக்கும் கொடிய எமனையும், எவரையும்
சிக்கவைக்கும் வலையையும், கொன்று கூறுபோடும் வாளையும்
வெல்லக்கூடிய வன்மை அக்கண்களுக்கு உண்டாம்.
அக்கண்களின் நீளம் எவ்வளவு தெரியுமா?
குமிழம்பூ போன்ற மூக்கையும், காதணியாடும்
காதுகளையும் மாறி மாறி சீறும்
அளவுக்கு நீளமாம். நிறம்? அரவம் தீண்டி
விடமேறியது போன்ற கருநிறமாம்.
கடலினைக்
கயலைக் கணையைமென் பிணையைக்
காவியைக்
கருவிள மலரை
வடுவினைக்
கொடிய மறலியை வலையை
வாளைவேன்
றறவுநீண் டகன்று
கொடுவினை
குடிகொண் டிருபுறம் தாவிக்
குமிழையும்
குழையையும் சீறி
விடமெனக்
கறுப்புற் றரிபரந் துன்கை
வேலினும்
கூரிய விழியாள்.
(தொடரும்)
படங்கள் உதவி: இணையம்
அழகிய வர்ணனைகள்
ReplyDeleteவருகைக்கும் வர்ணனைகளை ரசித்தமைக்கும் மிக்க நன்றி.
Deleteஅருமை.
ReplyDelete//மயிலைப்போன்ற சாயலையுடைய சந்திரமதியின் இனிய குரலாக//
மயில் போல இனிமையான குரல்???!!
மயிலை போன்ற சாயலும் குயிலைபோன்ற இனிய குரலும் என முன் வரும் வாக்கியங்களை சேர்த்து படிக்கணுமோ? அப்படித்தானே அக்கா!
Deleteகருத்துக்கு நன்றி ஸ்ரீராம். உங்கள் சந்தேகத்துக்கான பதில் நிஷா சொல்லியிருப்பதுதான்.. மயிலைப் போன்ற சாயலை உடையவள் சந்திரமதி... ஆனால் அவள் குரலோ இனிமையாக உள்ளது.. அதுதான் இங்கே முரண்சுவை... :)))
Deleteகருத்துக்கு நன்றி நிஷா... மயிலைப்போன்ற சாயலை உடைய சந்திரமதியின் இனிய குரல்.. என்னும் வாக்கியத்தில் மயிலின் சாயல் சந்திரமதியின் அழகுக்குதான் உவமையாகிறதே தவிர அவள் குரலுக்கு இல்லை என்பதை \\மயிலியற் சாயல் வாள்நுதல் தனக்கு\\ என்ற வரிகள் விளக்கும்.. மயிலின் சாயலையும் ஒளிபொருந்திய நெற்றியையும் உடைய சந்திரமதி என்று பொருள். எளிமை கருதி சுருக்கினேன். அதுவே ஐயந்தோன்றவும் காரணமாயிற்று.
Deleteரசித்துக் கொண்டே இருக்க வைக்கும் வர்ணனைகள் அழகு... அருமை...
ReplyDeleteகாணொளி இணைத்து விட்டீர்கள்... நன்றி...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தனபாலன்..காணொளியை இணைத்திருப்பதைக் கவனித்துப் பாராட்டியமைக்கு மிக்க நன்றி.
Deleteவணக்கம்
ReplyDeleteசகோதரி
எவ்வளவு அழகு வாய்ந்தவள் அவளின் கண்.குரல் எல்லாம் பற்றிய வர்ணனை நன்று படித்து மகிழ்நதேன் வாழ்த்துக்கள் த.ம 3
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வருகைக்கும் கருத்துக்கும் தமிழ்மண வாக்குக்கும் மிக்க நன்றி ரூபன்.
Deleteஅருமை விளக்கவுரைகளுடன்....
ReplyDeleteகாணொளி இரண்டும் நன்று முதல் காணொளி நான் தினமும் கேட்கும் பாடல்
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.. முதல்பாடல் உங்களுக்கு ஏன் பிடிக்கும் என்பதையும் அறிந்திருப்பதால் மனம் கனக்கிறது.
Deleteசந்திரமதியைத் தொடர்ந்து வருகிறேன்.
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் தொடர்வதற்கும் மிக்க நன்றி ஐயா.
Deleteசந்திரமதியை பற்றி அழகிய வர்ணனைகள், பாடல் பகிர்வு மிக அருமை.
ReplyDeleteவருகைக்கும் பதிவையும் பாடல்களையும் ரசித்தமைக்கும் மிக்க நன்றி மேடம்.
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஉங்கள் பதிவுகள் படிக்கும் போது வரும் ஆச்சரியம் இதை படித்த பின்னும்! இத்தனையையும் ஆராய்ந்தெழுத உங்களுக்கு எங்கிருந்து நேரம் கிடைக்கின்றது அக்கா?
ReplyDeleteசந்திரமதியின் அழகு குறித்த வர்ணனை அழகோ அழகு.
குழந்தைகள் வளர்ந்துவிட்டால் பிறகு நமக்கு நேரம் போவதுதான் பெரிய பிரச்சனை.. அதை தமிழ் ஈடுசெய்துவிடுகிறது. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிம்மா நிஷா.
Deleteஅழகிய வர்ணனைகள்! ரசித்தேன்! தொடர்கிறேன்!
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சுரேஷ்.
Deleteஅடேயப்பா
ReplyDeleteசந்திரமதியை விட்டு
மனம் அகலாதுபோய்விடுமோ என பயம்
வரத் துவங்கிவிட்டது
வர்ணனைகள் அற்புதம்
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
தங்கள் ஊக்கந்தரும் கருத்துரைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ரமணி சார்.
Delete//சந்திரமதியின் கண்கள். கண்களின் அழகைப் பார்த்தோம். அதன் தீவிரம்? உயிர்பறிக்கும் கொடிய எமனையும், எவரையும் சிக்கவைக்கும் வலையையும், கொன்று கூறுபோடும் வாளையும் வெல்லக்கூடிய வன்மை அக்கண்களுக்கு உண்டாம். //
ReplyDeleteஉவமைகள் எத்தனை அழகு!!
உண்மையே. இது போன்ற அழகிய உவமைகள் மூலம் நம்மை இலக்கியத்தின்பால் ஈர்க்கும் பாடல்கள் ஏராளம். தங்கள் ரசனைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மேடம்.
Deleteவர்ணனைகள் ஹப்பா என்று சொல்ல வைக்கின்றன. அவளது குரல் கேட்டால்..பட்ட மரங்களும் தளிர்க்கும் ...என்பது கேட்டதுண்டு. ஆனால் எலும்புகளும் உயிர்பெறும் எனும் வர்ணனை முதல் முதலாகக் கேட்கின்றோம் சகோதரி. இலக்கியங்களில் பெண்களை வர்ணிப்பதில் எவ்வளவு உவமைகள்...அருமை..தொடர்கின்றோம் சகோதரி..
ReplyDeleteபொதுவாகவே நம் தமிழ்ப்புலவர்களுக்கு கற்பனை வளம் அதீதம்.. அவற்றை வர்ணனைகளில் மிக அழகாகக் காணலாம். அதுவும் பெண்ணைக் குறித்த வர்ணனைகள் எனில் சொல்லவேண்டுமா என்ன? வருகைக்கும் பதிவை ரசித்தமைக்கும் தொடர்வதற்கும் அன்பான நன்றி.
Deleteஅழகிய வர்ணனைகள்.... முதல் பாடல் எனக்கும் பிடித்த பாடல்... சில கல்லூரி நினைவுகளை மீட்டெடுத்த பாடல். சற்றே சோகமும் தந்த பாடல். விரைவில் நினைவுகளை பகிர்ந்து கொள்கிறேன்.....
ReplyDeleteநன்றி வெங்கட். உங்கள் நினைவலைகளை அறியக் காத்திருக்கிறேன்.
Delete