என்றும் நம் உள்ளத்தில் மறக்காதிருக்கவேண்டிய மாமனிதர்களை நினைவுகூரும் நிறைவான பதிவுகளுக்கு சொந்தக்காரரும், கால ஓட்டத்தில் மறக்கடிக்கப்பட்டுவிட்ட எண்ணற்ற ஆளுமைகளைப் பற்றியெழுதி மீண்டும் நம்
உள்ளங்களில் இடம்பிடிக்கச்செய்யும் முயற்சிகளை இடையறாது தொடர்பவரும், வரலாற்றில் இடம்பெற்ற மற்றும் மறைக்கப்பட்டப்
பொன்னானத் தருணங்களைத் தம் அற்புதமான எழுத்தாற்றல் மூலம் இன்றைய தலைமுறையும் அறியச்செய்வதில் பெரும் அக்கறை கொண்டவரும், எவ்வளவு பெரிய பதிவாக
இருந்தாலும் சுவாரசியம் குன்றாமல் கொண்டுசெல்லும் எழுத்துவல்லமை உடையவரும், அன்பும் பண்பும் நிறைந்தவருமான கரந்தை ஜெயக்குமார் ஐயா பதிவுலகில் நான் பெரிதும் மதிக்கும் பெருந்தகைகளுள் ஒருவர். அவர் ஒரு கணித ஆசிரியர் என்றாலும் அவரது எழுத்தெல்லாம் தமிழ் இனப்பற்றும், மொழிப்பற்றும், தமிழ்ச்சமூகம் மீதான அக்கறையும், தேசத்தின்பால் கொண்ட பிரேமையும் பிரதிபலிக்கும்.
இதோ அவரே அவரைப் பற்றிக் குறிப்பிடும் வரிகள்…
\\கரந்தைத் தமிழ்ச்
சங்கக் கல்வி நிலையங்களுள் ஒன்றான, உமாமகேசுர மேனிலைப் பள்ளியில் பட்டதாரி நிலை கணித
ஆசிரியராகப் பணியாற்றி வருகின்றேன். கரந்தை வரலாற்றில் சில செப்பேடுகள்,விழுதுகளைத்
தேடி வேர்களின் பயணம், கணித மேதை சீனிவாச இராமானுஜன்,கரந்தை ஜெயக்குமார் வலைப்பூக்கள்,
கரந்தை மாமனிதர்கள் முதலிய ஐந்து நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளேன். கரந்தைத் தமிழ்ச்
சங்கத் திங்களிதழாகிய தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர். தமிழ்ப்
பொழில் இதழில் கரந்தைத் தமிழ்ச் சங்கப் பணிகள், சாதனைகள் குறித்து கட்டுரைகள் எழுதி
வருகின்றேன்.\\
இவ்வளவு பெருமைக்கும் பெருமதிப்புக்கும்
உரிய ஐயாவின் பார்வையில் என்னுடைய மொழிபெயர்ப்பு நூலான ‘என்றாவது ஒருநாள்’ பற்றிய விமர்சனம்
மிகுந்த நிறைவும் மகிழ்வும் அளிப்பதாய் உள்ளது. கரந்தை ஜெயக்குமார் ஐயா அவர்களுடைய
இவ்விமர்சனத்தால் பலருக்கும் இந்நூல் பற்றிய அறிமுகம் சென்று சேர்ந்திருப்பதோடு எனக்கும்
ஒரு புதிய அடையாளம் கிடைத்திருக்கிறது என்பதில் பெரும் மகிழ்ச்சி.
அவர்தம் பதிவில்
என்னுடைய பின்னூட்டம்..
\\என்ன ஒரு இனிய... அழகான…
ஆச்சர்யம்! மொழிபெயர்ப்பாளரைக் கொண்டாடுவதை விடவும் அதை எழுதத்
தூண்டிய மூலக்கதை ஆசிரியருக்கு உரிய மரியாதை தரப்படவேண்டும்
என்பதில் மிகுந்த உறுதியுடையவள் நான்.
அந்த வகையில் எழுத்தாளர் ஹென்றி
லாசன் அவர்களைப் பற்றியும் அவருக்கு பக்கபலமாய் இருந்து அவரை அவருடைய
பிரச்சனைகளிலிருந்து மீட்டு ஏராளமாய் எழுதவைத்த
இஸபெல் அம்மையாரைப் பெருமைப்படுத்தும் விதமாகவும் அவர்கள் வாழ்வில் நடந்த
சம்பவங்களைச் சுவைபடப் புனைந்தமை மனம் நிறைக்கிறது. மொழிபெயர்ப்பு
குறித்த தங்கள் பாராட்டும் கதைகளை
வாசிக்கும்போது உண்டான அனுபவப்பகிர்வும் மேலும்
எழுதும் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் தருகிறது. மிகுந்த நன்றி ஐயா.
புதுகை
பதிவர் விழாவின்போது தங்களுக்கு இந்த நூலை வழங்கிய
கலையரசி அவர்கள் என் கணவரின்
தமக்கை. அன்புக்கும் மதிப்புக்கும் உரிய அவரை என்னுடைய
உடன்பிறவா தமக்கை என்று கூறிக்கொள்வதிலும்
மிகுந்த பெருமை எனக்கு. என்
வேண்டுகோளை ஏற்று, புத்தகங்களைப்
பொறுப்புடன் ஒப்படைத்த அவர்களுக்கும் இவ்வேளையில் என் இனிய நன்றியைத்
தெரிவித்துக் கொள்கிறேன்.\\
நண்பர் கரந்தையாரின் பதிவில் தங்களின் நூல் விமர்சனத்தை படித்து மகிழ்வுற்றேன். அருமையான நூல், அருமையான பதிவு.
ReplyDeleteத ம 1
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் தமிழ்மண வாக்குக்கும் மிக்க நன்றி செந்தில்.
Deleteநீங்க புத்தகம் வெளியிட்டிருக்கீங்களா?! வாங்கி படிச்சுடுறோம்.
ReplyDeleteஆஸ்திரேலிய காடுறை கதைகள் சிலவற்றை மொழிபெயர்த்து 'என்றாவது ஒருநாள்' என்ற தலைப்பில் புத்தகமாக்கியுள்ளேன். வாய்ப்பு அமைந்தால் வாசிங்க ராஜி. நன்றிப்பா.
Deleteவணக்கம்
ReplyDeleteநூல் விமர்சனம் மிக அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்.. ஐயாவின் கற்பனையில் நன்றாக எழுதியுள்ளார்...வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ரூபன்.
Deleteமொழிபெயர்ப்பு என்பதே கடினமாக முயற்சிதான் சகோதரியாரே
ReplyDeleteஅதுவும் வேற்று நாட்டுக் கதைகளை, தமிழுக்கு அறிமுகம் செய்வது என்பது மிகவும் கடினமாக ஒன்றாகும்,
ஆனால் மொழிபெயர்ப்பு என்பதே தெரியாத வண்ணம், சுவை குன்றாமல்,
படிப்போரை அடுத்து என்ன? அடுத்து என்ன?என்ற எதிர்பார்போடு கொண்டு சென்ற தங்களின் எழுத்து வல்லமையைப் பாரட்டியே ஆக வேண்டும் சகோதரியாரே
இந்த எளியேனைப் பற்றி ஒரு பெரிய முன்னுரையினை வழங்கிய, தங்களின் அன்பிற்கு மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்து மகிழ்கின்றேன் சகோதரியாரே
நன்றி
தம +1
தங்களுடைய பாராட்டும் நூல் பற்றிய கருத்துரையும் எனக்குப் பெரும் உத்வேகத்தை அளிப்பதாக உள்ளன. மிக்க நன்றி ஐயா. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் தமிழ்மண வாக்குக்கும் மிக்க நன்றி.
Deleteவாழ்த்துகள் சகோதரி...
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி தனபாலன்.
Deleteகரந்தை ஐயாவின் பதிவில் அவரது விமரிசனம் கண்டேன் கீதா!
ReplyDeleteதேடி வாங்கிப் படிக்க ஆவல் கொள்ள வைத்துவிட்டார்!
நீங்களும் எத்தனை திறமை சாலி!.. நான் வியந்து பார்ப்பவர்களில் நீங்களும் ஒருவர்!.. மிகையில்லை இக்கூற்று!
ஓங்கட்டும் உங்கள் திறமை!
ஐயாவுக்கும் உங்களுக்கும் உளமார்ந்த நல் வாழ்த்துக்கள்!
உங்கள் அன்புக்குப் பாத்திரமானதில் பெருமகிழ்ச்சி தோழி.. வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி இளமதி.
Deleteவாழ்த்துகள் சகோதரி,...
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி தோழி.
Deleteதங்களது நூல் விமர்சனத்தை அவருடைய தளத்தில் படித்தேன். ஒரு நூல் விமர்சனம் போல் அல்லாது நிகழ்விடத்திற்குக் கொண்டு சென்று, பின்னர் தன் பாணியில் விமர்சனம் செய்திருந்தார். ஒருவர் பணியை மற்றொருவர் பாராட்டும்போது கிடைக்கும் மகிழ்ச்சி தனியே. பகிர்ந்த வகையில் நீங்கள் இருவரும் வெற்றி பெற்றுள்ளீர்கள். நன்றி.
ReplyDeleteதங்கள் உயரிய கருத்துக்கண்டு மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் ஐயா.
Deleteஅருமையாக எழுதியிருந்தார்! நானும் படித்தேன்! பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சுரேஷ்.
Deleteஅவரது தளத்தில் வாசித்து ரசித்தேன்.....
ReplyDeleteவாழ்த்துகள்.
வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி வெங்கட்.
Delete