வலைதேடிவந்து
தானேயதில் வீழ்ந்து
வசமாய்
சிக்குவோர் வையகத்திலுண்டோ?
வலையில்
வீழ்வோம் வாரீர் என்றே
வக்கணையாய்
அழைப்போரைக் கண்டதுமுண்டோ?
அழைக்கிறாரே மு.கீதாவெனும்
அன்பினாழி..
அகமெலாம் நிறைக்கும்
அருந்தென்றற்றோழி…
நந்தலாலாவிலொரு
வலைத்தொடர்க்கட்டுரை
நயமாய்த் தீட்டுகிறார்
நல்லெழுத்துப்பட்டறை..
அறிமுகம்.. அடையாளம்…
அங்கீகாரம்…
அவைதாமே எழுத்தின்
வளர்ச்சிக்கு ஆதாரம்…
வலையெழுத்தை
அறிவிக்கச் சொன்னதும்
வந்தேனாம்
உடனே நினைவில் நானும்…
நேயமிகு நட்புக்காய்
நன்றிபல தோழி..
நற்பணி சிறப்புறவே
வாழ்த்துகிறேன் வாழி..
வலைப்பூக்களைத் தொடர் அறிமுகம் செய்யும்
நந்தலாலா.காம் இணைய இதழுக்கும் மிகவும் நன்றி.
முதல் வலைப்பூவாய் கீதமஞ்சரியைத் தேர்ந்தெடுத்ததோடு
வலைப்பூ துவங்கிய நாள் முதலாய் நானிட்டப் பதிவுகளை
ரசித்தும் சிலாகித்தும் அடையாளங்காட்டியிருக்கும் தோழிக்கு
அன்புகலந்த நன்றி..
அவருக்கான என் நன்றியுரை...
\\வலையெழுத்தின்
தலையெழுத்தாய் கீதமஞ்சரியைத் தேர்ந்தெடுத்து சிறப்பித்தமைக்கு மிக்க நன்றி தோழி
கீதா. பதிவுகளால் தங்கள் மனத்தில் இடம்பெற்ற
மகிழ்வோடும் நிறைவோடும் தங்களுக்கும் என்னைத்
தொய்வின்றி எழுதவைத்துக் கொண்டிருக்கும் பதிவுலக நட்புள்ளங்களுக்கும் நன்றி
கூறிக்கொள்கிறேன்.
வலைப்பூ
துவங்கிய நாளாய் என் பதிவுகளை
வாசித்துக் கருத்திட்டு சிறப்பித்ததோடு, அவற்றை இங்கே தாங்கள்
அழகாக அடையாளங்காட்டியுள்ளமை என்னெழுத்தை வளப்படுத்துவதாகவும் மென்மேலும் எழுதும் ஊக்கத்தை வளர்ப்பதாகவும்
உள்ளது.
சென்றிடுவீர்
எட்டுத்திக்கும்.. கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்
என்னும் பாரதியின் வரிகளுக்கேற்ப, என்னால் இயன்றவரை நான்
சார்ந்துவாழும் நாடு குறித்தப் பல்வேறு
தகவல்களையும் தமிழுக்குக் கொணர்ந்து கொண்டிருக்கிறேன்.
இத்தகு
அங்கீகாரங்களாலும் அன்பின் ஊக்கத்தாலும் அப்பணி
இனியும் இனிதே தொடரும் என்று
உறுதியளிக்கிறேன். தங்களுக்கும் நந்தலாலா
இதழுக்கும் என் மனங்கனிவான நன்றி.\\
இந்த கீதாக்கா போல அந்த கீதாக்காவும் ரொம்ப சமத்து. கரெக்டா செய்திருக்கிறார் பாருங்கள்:) இருவருக்கும் என் வாழ்த்துகள்!
ReplyDeleteநன்றிம்மா மைதிலி..
Deleteமிகவும் மகிழ்ச்சிம்மா....வலையெழுத்தில் முதன்முதலாய் உங்களை அறிமுகம் செய்ததில் வாழ்த்துகள்...மேலும் வெற்றி பெற...
ReplyDeleteமிகவும் நன்றி கீதா.
Deleteவாழ்த்துகள்.
ReplyDeleteநன்றி ஸ்ரீராம்.
Deleteவாழ்த்துகள் சகோதரி...
ReplyDeleteநன்றி தனபாலன்.
Deleteவாழ்த்துகள்!
ReplyDeleteநன்றி ராமலக்ஷ்மி.
Deleteவாழ்த்துக்கள்
ReplyDeleteதம +1
வாழ்த்துக்கும் தமிழ்மண வாக்குக்கும் மிக்க நன்றி ஐயா.
Deleteநந்தலாவில் முதல் வலையெழுத்தாக கீதமஞ்சரி இடம் பெற்றிருப்பதறிந்து மகிழ்ந்தேன். தொடர்ச்சியாக எழுதுவதற்கு இந்த அங்கீகாரம் புத்துணர்ச்சி அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்தப் பெருமைக்கு நீ தகுதியானவர் தாம். வாழ்த்துடன் கூடிய பாராட்டுக்கள் கீதா!
ReplyDeleteதங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி அக்கா.
Deleteவாழ்த்துக்கள். for both geethas
ReplyDeleteநன்றி சுவாதி.
Deleteஅறிமுகமாகின்றவர், அறிமுகப்படுத்தப்படுபவர், அறிமுகப்படுத்தப்படும் தளம் என்ற அனைத்து நிலைகளும் சிறப்பாக அமையும்போது மனம் திறந்து பாராட்டுவோம். வாழ்த்துகள். நந்தலாலா மூலமாக அறிமுகமாகும்போது இன்னும் மனம் மகிழ்வே. எழுத்துக்குக் கிடைக்கும் ஓர் அங்கீகாரம். நன்றி.
ReplyDeleteமிக்க நன்றி ஐயா.
Deleteதிருமதி. கீதா மதிவாணன் அவர்களுக்கு எமது வாழ்த்துகள்.
ReplyDeleteமிகவும் நன்றி கில்லர்ஜி.
Deleteவலையெழுத்தில் முதல் அறிமுகமாக உங்களை அறிமுகம் செய்திருக்கிறார்கள் என தெரிந்து மகிழ்ச்சி. வாழ்த்துகள் சகோ.
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி வெங்கட்.
Deleteவாழ்த்துக்கள் !!
ReplyDeleteமிகவும் நன்றி மேடம்.
Deleteமுதல் வலையெழுத்தாக ’கீதமஞ்சரி’ வலைத்தளம் இடம் பெற்றிருப்பதறிந்து மகிழ்ந்தேன்.
ReplyDeleteதங்களுக்கும் அவர்களுக்கும் என் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.
’நந்தலாலா’ மட்டுமல்ல ’எந்த லாலா’ விலும் புகழ்ந்து முதன்முதலாக அடையாளம் காட்டப்பட வேண்டிய மிகச்சிறந்த எழுத்தாளர்தான் தாங்கள் என்பதையும் மகிழ்ச்சியுடன் இங்கு பதிவு செய்துகொள்கிறேன்.
மீண்டும் என் நல்வாழ்த்துகள்.
பிரியமுள்ள நட்புடன் கோபு
தங்கள் அன்புக்கும் பாராட்டுகளுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி கோபு சார். தாங்கள் என் எழுத்தின்மீது வைத்திருக்கும் நம்பிக்கை நெகிழ்விக்கிறது. மீண்டும் என் நன்றி தங்களுக்கு.
Deleteவணக்கம்
ReplyDeleteவாழ்த்துக்கள் சகோதரி த.ம 5
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வாழ்த்துக்கும் தமிழ்மண வாக்குக்கும் மிக்க நன்றி ரூபன்.
Deleteவாழ்த்துக்கள் கீதா.
ReplyDeleteமிகவும் நன்றி ப்ரியா.
Deleteமிகவும் மகிழ்ச்சி. இருவருக்கும் எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்.
ReplyDeleteதங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி ஐயா.
Deleteவாழ்த்துக்கள்!
ReplyDeleteநன்றி சுரேஷ்.
Deleteசுறுசுறுப்பான இரண்டு பெண் எழுத்தாளர்கள் ஒருவரை ஒருவர் நியாமான காரணத்திற்காகப் பாராட்டிக்கொள்ளும் இடத்தில் நமக்கு என்ன வேலை? - என்கிறார் ஓர் ஆண் எழுத்தாளர். - இராய செல்லப்பா
ReplyDeleteதங்கள் ரசனையானக் கருத்துரைக்கு மிக்க நன்றி ஐயா.
Deleteவாழ்த்துகள்! சகோ!
ReplyDeleteவாழ்த்துகளுக்கு மிகுந்த நன்றி.
Deleteகீதாவின் தளத்தில் பார்த்தேன் என்றாலும் இப்பொழுதுதான் இங்குக் கருத்திட நேரம் வாய்த்தது.
ReplyDeleteகீதமஞ்சரியின் அனைத்துப் பதிவுகளும் எட்டுத் திக்கும் சேர வேண்டியவை! தகவலுக்காக மட்டுமல்ல, சீரிய எழுத்தாக்கத்திற்கும்!! நந்தலாலாவில் முதல் வலையெழுத்தாய்க் கீதமஞ்சரியைத் தேர்ந்தெடுத்த கீதாவிற்கு நன்றியும் உங்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்! :-) :-))
உங்கள் அன்புக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி கிரேஸ்... உங்களைப் போன்ற நல்ல நட்புகளைப் பெற்றுத்தந்த வலையுலகுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.
Delete