என்னைக் கவர்ந்த பதிவுகள் என்னும் தொடர்பதிவுக்கு எனக்கு அழைப்பு விடுத்த கலையரசி அக்காவுக்கு என் அன்பான நன்றி. அவர் தம்முடைய ஊஞ்சல் வலைப்பூவில் மூன்று தொடர் பதிவுகளில் தம்மைக் கவர்ந்த பல அருமையான பதிவர்களை அடையாளங்காட்டியமைக்காக அவருக்கு என் இனிய பாராட்டு. அவர் அடையாளங்காட்டிய பதிவர்கள் பலரும் என்னையும் கவர்ந்த பதிவர்கள்தாம் என்பதில் எனக்குப் பெருமகிழ்ச்சி.
என்னைக் கவர்ந்த வலைப்பூக்கள் அனைத்தையும் ஒரு பூமாலையாக்கி வாசிக்கும் வலைப்பூ என்ற பெயரில் சேகரித்து வைத்துக்கொண்டிருக்கிறேன். அவ்வலைப்பூவை எனக்கான பிரத்தியேக சேகரிப்பென்றுதான் ஆரம்பத்தில்
எண்ணிமகிழ்ந்திருந்தேன். ஆனால் என்னைத் தொடரும் பதிவர்கள் சிலருக்கும்
அது உபயோகமாக இருப்பதாக அறிந்தபிறகு மகிழ்ச்சி பன்மடங்காகிவிட்டது. இத்தொடர் பதிவில் நான் தொடரும்
பதிவர்கள் அனைவரையும் அடையாளங்காட்டத்தான் ஆசை..
ஆனால்… அவர்களுள் பலரையும் எனக்கு முன்பு தொடர்ந்த
நட்புகள் அடையாளங்காட்டிவிட்டமையால் பதிவுலகில் எனக்குத்தெரிந்து இதுவரை குறிப்பிடப்படாத பதிவர்களுள் என்னைக் கவர்ந்த சில
எழுத்தாளுமைகளை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.
பெண்ணியல்புகளை மிகத் தீர்க்கமாகவும், நுண்மையாகவும், பொருண்மையாகவும்
கையாளக்கூடிய எழுத்தாளுமைகளுள் குறிப்பிடத்தக்கவர் தோழி சக்திஜோதி. கருத்தாழமிக்க கவிதைகளால் பரிச்சயமானவர்.
தற்சமயம் குங்குமம் தோழியில்
தொடர்ந்து எழுதிவரும் சங்ககாலப் பெண்பாற்புலவர்களின் பாடல்கள் வாயிலாய் இவர் வெளிப்படுத்தும்
பெண்களின் உடல், மனம், மொழி சார்ந்த இவரது சிந்தனைகளும் ஆய்வுகளும் அனுபவம்
சார்ந்த கருத்தோட்டங்களும் அவசியம் வாசிக்கப்படவேண்டியவை. தற்காலப் பெண்களின் வாழ்வியலையும் அனுபவச் செறிவுகளையும் சங்ககாலப் பெண்டிர் வாழ்வியலோடு பிணைத்து மிக அழகாக
அறியத்தருகிறார். சான்றுக்கு
சில…
1. அஞ்சில் அஞ்சியாரின் பாடல்வழியே இவர் வெளிப்படுத்தும் விளையாட்டிலிருந்து
வெளியேற்றப்படும் ஒரு பெண்ணின் மனநிலை.
இதுவரை சுமார் 18 பதிவுகள் குங்குமம் தோழியில் வெளிவந்திருந்த போதும் வலையில் ஏனோ எட்டே பதிவுகள்தாம்
பதிவேற்றப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல் கடந்த வருடம் ஜூன் மாதத்தோடு வலையேற்றம் நிறுத்தப்பட்டிருக்கிறது.
ஃபேஸ்புக்கில் பல அற்புதமான கவிதைகளை வழங்கும் இவர் வலையிலும் அவற்றைப்
பதிவு செய்து பலருக்கும் வாசிக்கத்தரவேண்டும் என்பதே என் விருப்பம்.
நாம்
எளிதில் கடந்துபோகும் ஒரு எளிய விஷயத்தைக்கூட அழகியலாக்கும் அல்லது மனத்தை நெகிழ்விக்கும் எழுத்துக்கு உரிய எழுத்தாளுமை வண்ணதாசன் அவர்கள். கல்யாண்ஜி என்றும் அறியப்படும் இவரது எழுத்துகளை வாசிப்பது ஒரு வரம் என்பேன். சமவெளி என்ற இவரது தளத்தில் அவ்வப்போதுதான் எழுதுகிறார். ஃபேஸ்புக்கில்
தொடர்ச்சியாக
இவரது படைப்புகளை வாசிக்க முடிகிறது.
இயற்கையின்
படைப்புகள்
ஒவ்வொன்றையும்
நேசிக்கும்
அவற்றோடு
உரையாடும்
அதியற்புத
நேசமனம் இவருடையது. அந்த
நேசமனம் இவரது படைப்பின் ஒவ்வொரு வரியிலும் வெளிப்படுவது அழகு.
2. கதவுக்குப் பின்னால் காத்திருக்கும்
தெருநாயோடு அத்தெருநாய் குறித்து தான் எழுதியவற்றைப் பற்றிப் பேசமுடியும் என்கிறார்
உறுதியாய்..
3. உதிர்ந்துகிடந்த ஒரு இறகுக்கு அடைக்கலமும்
கொடுத்து அதற்குத் தன்பெயரையும் சூட்டிய இவரது தணியாத இரக்கம் குறித்து அறியவேண்டுமா… இங்கே வாருங்கள்.
நம் மதிப்புக்குரிய ஜீவி சார் எழுதிய ந.பிச்சமூர்த்தியிலிருந்து எஸ்.ரா வரை என்னும் நூலின் அறிமுகத்தை நம் பதிவுலக நட்புகள் பலரும் எழுதியிருந்தாலும் அந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ள எழுத்தாளர்கள் குறித்த விரிவான தொடராக தம்முடைய வலைப்பூவில் நம் அன்புக்குரிய வை.கோபாலகிருஷ்ணன் சார் எழுதிவருவதை நம்மில் பலரும் அறிவோம். அற்புதமான அப்படைப்பாளிகளோடு இன்னும் சில அரிய எழுத்தாளர்களின் எழுத்து குறித்தும் படைப்புகள்
குறித்தும் அறிய விரும்புவோர்க்கு அழியாச்சுடர்கள் தளம் ஒரு வரப்பிரசாதம்.
2. ஒரு
இளம்பிஞ்சின்
மரணம் ஒரு மனிதனுக்குள் எழுப்பும் வாழ்க்கை குறித்த தத்துவார்த்த சிந்தனை வீச்சு சி.சு.
செல்லப்பா அவர்களின் எழுத்து வாயிலாய் எவ்வளவு எளிமையாகவும் இயல்பாகவும் கடத்தப்படுகிறது வாசகனுக்குள்.
பல்லுயிர்ப் பாதுகாப்பின் அவசியத்தை எளிய வகையில்
அவரவர் தாய்மொழியில் அனைவருக்கும்
எடுத்துச் சொல்வது ஒவ்வொரு இயற்கை ஆர்வலர்களின், காட்டுயிர் ஆராய்ச்சியாளர்களின் கடமை எனக் குறிப்பிடும் காட்டுயிர் ஆராய்ச்சியாளரான பி.ஜெகநாதன் அவர்கள் தம் வலைப்பதிவான உயிரியின்
நோக்கமும் அதுதான் என்கிறார்.
1. கடந்த ஜனவரி மாதம் நான்கு நாட்கள் நடைபெற்ற பறவைகள் கணக்கெடுப்பின்படி
சுமார் 322 வகையான பறவைகள் பார்த்து பதிவு செய்யப்பட்டுள்ளன என்று குறிப்பிடும்இவர் திருவாரூர் மாவட்டம் வடுவூர் ஏரிப்பகுதியில் படம்பிடித்த சில பறவைகளை இங்கே காட்டியுள்ளார்.
3. தாவரங்கள்
குறித்து
அறிய தணியாத தாகம் கொண்டவரா நீங்கள்? அப்படியானால் உங்களுக்காகவே இந்தப் பதிவு.. தமிழிலும் ஆங்கிலத்திலுமாய் தாவரங்கள் குறித்து இதுவரை வந்துள்ள நூல்களின் அறிமுகப்பட்டியல் இதோ…
சிறந்த
சிந்தனாவாதி, நல்லதொரு எழுத்தாளர் & மொழிபெயர்ப்பாளர்,
புத்தகப்பிரியர்,
தயாளகுணம்
மிக்கவர், நட்புக்கு நல்லிலக்கணம், நகைச்சுவை உணர்வு மிக்கவர், சமூக அக்கறை மிகுந்த மனிதர் என்று ஏராளமான நல்லியல்புகளைக் கொண்டு, ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பலருக்கும்
பரிச்சயமான பெயர் டெல்லி ஷாஜகான் அவர்கள்.
சமீபத்திய
சென்னை வெள்ளப் பேரிடரின்போது மத்திய அரசு வழங்கிய டோல் தொகை ரத்து,
ரயில்
குடிநீர்
போன்ற பல
உதவிகளுக்கு
முக்கியக்
காரணகர்த்தாவாக, முன்னின்றும் பின்னணியில் இருந்தும் செயல்பட்டவர்.
கல்வி சார்ந்த எந்த உதவியானாலும் தயங்காமல் இவரைக் கோரும்
நெஞ்சங்கள் ஏராளம். தன்னால் இயன்றவற்றை சத்தமின்றி தனியாகவும், இயலாதவற்றை
மற்ற நட்புகளின் உதவிக்கரங்களோடு இணைந்தும் செயலாற்றுவதில் வல்லவர். பிரிவினைவாத
அரசியலுக்கு எதிராகவும்,
சமூக நலன் குறித்த அக்கறையுடனும் பகிரப்படும் இவரது கருத்துகள் வீச்சும்
விவேகமும் நிறைந்தவை. புதியவன் பக்கம் என்ற இவரது வலைப்பூவிலிருந்து சான்றுக்கு
சில பதிவுகள்...
என்னைக் கவர்ந்த மேலும் சில பதிவுகளின் அறிமுகம் அடுத்த பதிவில்...







