26 March 2016

பறவைகள் பலவிதம் 6

பறவைகள் பலவிதம் தொகுப்பில் இந்தமுறை நம் ரசனைக்கு உலா வருகின்றன ஆஸ்திரேலியாவின் சொந்தப்பறவைகள் அல்லாத அந்நிய நாட்டுப் பறவைகள் சில.. அழகுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட பறவைகளுள் ஒன்று நம் தேசியப் பறவையான மயில். இங்கு பல பூங்காக்களில் சுதந்திரமாக உலவும் அவற்றின் அழகும் நடையும் அகவலோசையும்  மனத்துக்குள் புதியதொரு உற்சாகத்தை உருவாக்குவது உண்மை. 


ஆண்மயில் (peacock)

ஆண்மயில் ஆட்டம் (peacock fanning)

இள ஆண்மயில் (peacock juvenile)

முளைச்சு மூணு இலை விடல..அதற்குள் இந்த ஆட்டமா என்பார்கள். அதுபோலத்தான் இருந்தது இந்த விடலை மயிலின் ஆட்டமும்.. இன்னமும் கண்கள் உருவாகாத தன் தோகையை அழகாய் விரித்து அதுவும் ஆடியது அழகுக்காட்சி. 


விடலை ஆட்டம்  (peacock juvenile fanning)

ஆண்மயில்கள் தோகை விரித்தாடும் என்பதை அறிவோம். பெண்ணும் தன் சின்னஞ்சிறிய தோகையை விரித்தாடுவதை இங்குதான் கண்டேன். ஆணுக்குத் தானும் இளைப்பில்லை என்று காட்டவோ இந்த உற்சாக ஆட்டம். 


பெண்மயில் ஆட்டம் (peahen fanning)

பெண்மயில் (peahen)

ஐரோப்பியர்கள் தங்கள் உணவுத்தேவைக்கென அறிமுகப்படுத்தியவை வளர்ப்புப் பறவைகளான கோழி, வாத்து, பெருவாத்து போன்றவை.. 
இன்றும் ஆஸ்திரேலிய மக்களின் இறைச்சிப் பயன்பாட்டில் 50% -ஐ ஆக்கிரமிப்பது கோழி, வாத்து இறைச்சிகளே.  


வளர்ப்பு சேவல் (domestic fowl)

வளர்ப்பு சேவல் (domestic fowl)

பெருவாத்து (pilgrim goose)

பெருவாத்து (pilgrim goose)

மஸ்கோவி வாத்து ஆண் (muscovy duck)


மஸ்கோவி  இளம் வாத்துகள் (muscovy ducks juvenile)

தேவைக்கென அறிமுகப்படுத்தப்பட்ட பறவைகளுள் சில இன்று ஆஸ்திரேலியாவின் தலைவலியாய் இருப்பதை ஒண்டவந்த பிடாரிகள் தொடரில் பார்த்தோம். அவற்றுள் முக்கியமானது முட்டைக்கோஸ் தோட்டத்தில் புகுந்து விளையாடும் புழுக்களை அழிப்பதற்கெனக் கொண்டுவரப்பட்ட மைனா. மைனாவை உள்ளூர் மக்கள் எதிரியாகப் பார்த்தாலும் , சின்ன வயதிலிருந்து அவற்றோடு வளர்ந்ததாலோ என்னவோ  மைனா, மாடப்புறா, மணிப்புறா போன்ற பறவைகளைப் பார்க்கும்போது ஊர்ப்பாசம் இயல்பாகவே வந்துவிடுகிறது


மைனா (Indian myna)

சற்றே வித்தியாசமான மைனா.. வயது முதிர்ந்ததாக இருக்கலாம். (Indian myna)


ஐரோப்பியக் கருங்குருவி (common european starling)

மாடப்புறா (rock dove)

பறவைகள் என்றாலே  மகிழ்ச்சிதான்.. பறவை பார்த்தலின் சுகமும் சுவாரசியமும் அறிந்தவர்களுக்கு சோறு, தண்ணீர் கூட தேவைப்படாது. பறவைகளைப் போல சிறகுவிரித்துப்பறக்க ஏங்கும் மனத்தின் முன் சொந்தப்பறவையென்ன அந்நியப்பறவையென்ன? அனைத்துமே அற்புதம்தான். அல்லவா?

27 comments:

 1. படங்களெல்லாம் அழகோ அழகு.

  தங்களின் விளக்கங்கள் மேலும் அழகுக்கு அழகூட்டுகின்றன.

  பாராட்டுகள். வா(ழ்)த்துகள். :)

  பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் படங்களை ரசித்தமைக்கும் பாராட்டுகளுக்கும் வா(ழ்)த்துகளுக்கும் மிக்க நன்றி கோபு சார். :)))

   Delete
 2. சுவாரஸ்யம்தான். படங்கள் அருமை.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் படங்களை ரசித்தமைக்கும் மிகவும் நன்றி ஸ்ரீராம்.

   Delete
 3. பார்க்கப் பார்க்க சலிக்காத சிருஷ்டி பறவைகள். இறைவன் எழுதிய கவிதைத் தொகுப்பு கீதா மேடம் !

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் பறவைகளை ரசித்தமைக்கும் மிகவும் நன்றி மோகன்ஜி.

   Delete
  2. வானவில் மனிதன் பக்கம் வரக்கூடாது என்று ஏதும் சபதம் பூண்டிருக்கிறார்களா?��

   Delete
 4. என்ன ஒரு அழகு ..!..அருமை

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் பறவைகளை ரசித்தமைக்கும் மிகவும் நன்றி அனுராதா.

   Delete
 5. வண்ணப் பறவைகளோடு உங்கள் உலகம் மகிழ்ச்சியைத் தருகிறது
  கீதா மதி. மிக மிக நன்றி.

  ReplyDelete
  Replies
  1. பறவைகளைப் பார்க்கும்போதே மனத்தில் மகிழ்ச்சி பெருகுவது உண்மை வல்லிம்மா. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி.

   Delete
 6. படங்கள் ஒவ்வொன்றும் பறவைகளை நேரில் பார்க்கும்உணர்வை ஏற்படுத்துகின்றன
  நன்றி சகோதரியாரே

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் பறவைகளை ரசித்தமைக்கும் மிகவும் நன்றி ஐயா.

   Delete
 7. பலவிதப் பறவைகளைப் பார்த்தேன், படித்தேன், ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் பறவைகளை ரசித்தமைக்கும் மிகவும் நன்றி ஐயா.

   Delete
 8. பலவிதப் பறவைகளைப் பார்த்தேன், படித்தேன், ரசித்தேன்.

  ReplyDelete
 9. புகைப்படங்கள் அனைத்தும் அழகு சகோ
  தமிழ் மணம் 2

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் தமிழ்மண வாக்குக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

   Delete
 10. பகிர்வுக்கு நன்றிகள்

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் பதிவினை ரசித்தமைக்கும் மிக்க நன்றி புத்தன்.

   Delete
 11. பகிர்வுக்கு நன்றிகள்

  ReplyDelete
 12. ஒவ்வொரு படத்தையும் ரசித்தேன். மயில்கள் நான் மைசூர் இயற்கைப் பூங்காவில் அவற்றைப் படமாக்கிய நினைவுகளை மீட்டெடுத்தன. முதிர்ந்த மைனாவின் படம் கூர்மை. மிக அருமை.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராமலக்ஷ்மி. இங்கும் ஒரு பூங்காவில்தான் மயில்கள் சுதந்திரமாக உலா வருகின்றன. இந்தியாவில்கூட இவ்வளவு அருகில் நான் மயில்களைப் பார்த்ததில்லை. இங்கு பார்க்க முடிவதில் அளவிலாத மகிழ்ச்சி. உங்களுடைய நினைவுகளையும் மீட்டெடுத்ததில் கூடுதல் மகிழ்ச்சி.

   Delete
 13. பறவைகளின் அழகான படங்களும் அதற்கான விளக்கங்களும் அருமை.
  த ம 3

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் பறவைகளை ரசித்தமைக்கும் மிகவும் நன்றி செந்தில்.

   Delete
 14. என்ன அழகான படங்கள்! விளக்கங்களும் அதே போன்று. மைனா எதனால் எதிரியாகப்பார்க்கப்படுகிறது அங்கு?

  கீதா: இங்கு மயில்கள் கூண்டிற்குள் நாங்கள் வெளியில் இருந்து அவை கூண்டிற்கு அருகில் அதுவும் ஆண் மயில் தோகை விரித்தாடிக் கொண்டு அருகில் பார்த்திருக்கின்றோம். திருநெல்வேலிக்கருகில் இருக்கும் கோடகநல்லூரில் மயில்கள் காலையில் வந்து உலாவும். அப்போதும் அருகில் பார்த்திருக்கின்றேன். தானியங்கள் போடுவதுண்டு. அதே போன்று வெண் மயிலும். மிக அழகாக இருக்கும். நல்ல பதிவு..

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ. மயில்கள் எப்போதுமே அழகுதான், வெள்ளை வண்ணத்திலும் கூட.

   இங்கே மைனாக்கள் அறிமுகப்படுத்தப்பட்ட பறவைகள். அவை இங்கே பல்கிப்பெருகி மற்றப் பறவைகளை வாழவிடாமல் செய்யும் ஆக்கிரமிப்புப் பறவைகளாகிவிட்டன. அதனால் அவற்றை சிறைபிடித்துக் கொல்வதற்கு அரசு பல நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இதைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள விரும்பினால் ஒண்டவந்த பிடாரிகள் என்ற தலைப்பில் நான் பதிவிட்டுள்ள இப்பதிவின் மூலம் அறிந்துகொள்ளலாம்.

   http://www.geethamanjari.blogspot.com.au/2015/03/4.html

   Delete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.