17 April 2016

என்னைக் கவர்ந்த பதிவுகள் - 1 (தொடர் பதிவு)

என்னைக் கவர்ந்த பதிவுகள் என்னும் தொடர்பதிவுக்கு எனக்கு அழைப்பு விடுத்த கலையரசி அக்காவுக்கு என் அன்பான நன்றி.  அவர் தம்முடைய ஊஞ்சல் வலைப்பூவில் மூன்று தொடர் பதிவுகளில் தம்மைக் கவர்ந்த பல அருமையான பதிவர்களை அடையாளங்காட்டியமைக்காக அவருக்கு என் இனிய பாராட்டு.  அவர் அடையாளங்காட்டிய பதிவர்கள் பலரும் என்னையும் கவர்ந்த பதிவர்கள்தாம் என்பதில் எனக்குப் பெருமகிழ்ச்சி. 

என்னைக் கவர்ந்த வலைப்பூக்கள் அனைத்தையும் ஒரு பூமாலையாக்கி வாசிக்கும் வலைப்பூ என்ற பெயரில் சேகரித்து வைத்துக்கொண்டிருக்கிறேன். அவ்வலைப்பூவை எனக்கான பிரத்தியேக சேகரிப்பென்றுதான் ஆரம்பத்தில் எண்ணிமகிழ்ந்திருந்தேன். ஆனால் என்னைத் தொடரும் பதிவர்கள் சிலருக்கும் அது உபயோகமாக இருப்பதாக அறிந்தபிறகு மகிழ்ச்சி பன்மடங்காகிவிட்டதுஇத்தொடர் பதிவில் நான் தொடரும் பதிவர்கள் அனைவரையும் அடையாளங்காட்டத்தான் ஆசை.. ஆனால்… அவர்களுள் பலரையும் எனக்கு முன்பு தொடர்ந்த நட்புகள் அடையாளங்காட்டிவிட்டமையால் பதிவுலகில்  எனக்குத்தெரிந்து இதுவரை குறிப்பிடப்படாத  பதிவர்களுள் என்னைக் கவர்ந்த சில எழுத்தாளுமைகளை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.
பெண்ணியல்புகளை மிகத் தீர்க்கமாகவும், நுண்மையாகவும், பொருண்மையாகவும் கையாளக்கூடிய எழுத்தாளுமைகளுள் குறிப்பிடத்தக்கவர் தோழி சக்திஜோதி கருத்தாழமிக்க கவிதைகளால் பரிச்சயமானவர்.  தற்சமயம் குங்குமம் தோழியில் தொடர்ந்து எழுதிவரும் சங்ககாலப் பெண்பாற்புலவர்களின் பாடல்கள் வாயிலாய் இவர் வெளிப்படுத்தும் பெண்களின் உடல், மனம், மொழி சார்ந்த இவரது  சிந்தனைகளும் ஆய்வுகளும் அனுபவம் சார்ந்த கருத்தோட்டங்களும் அவசியம் வாசிக்கப்படவேண்டியவை. தற்காலப் பெண்களின் வாழ்வியலையும் அனுபவச் செறிவுகளையும் சங்ககாலப் பெண்டிர் வாழ்வியலோடு பிணைத்து மிக அழகாக அறியத்தருகிறார்.  சான்றுக்கு சில
இதுவரை சுமார் 18  பதிவுகள் குங்குமம் தோழியில் வெளிவந்திருந்த போதும் வலையில் ஏனோ எட்டே பதிவுகள்தாம் பதிவேற்றப்பட்டுள்ளனஅதுமட்டுமல்லாமல் கடந்த வருடம் ஜூன் மாதத்தோடு வலையேற்றம் நிறுத்தப்பட்டிருக்கிறது. ஃபேஸ்புக்கில் பல அற்புதமான கவிதைகளை வழங்கும் இவர் வலையிலும் அவற்றைப் பதிவு செய்து பலருக்கும் வாசிக்கத்தரவேண்டும் என்பதே என் விருப்பம்.
நாம் எளிதில் கடந்துபோகும் ஒரு எளிய விஷயத்தைக்கூட  அழகியலாக்கும் அல்லது மனத்தை நெகிழ்விக்கும் எழுத்துக்கு உரிய  எழுத்தாளுமை வண்ணதாசன்வர்கள். கல்யாண்ஜி என்றும் அறியப்படும் இவரது எழுத்துகளை வாசிப்பது ஒரு வரம் என்பேன். சமவெளி என்ற இவரது தளத்தில் அவ்வப்போதுதான் எழுதுகிறார். ஃபேஸ்புக்கில் தொடர்ச்சியாக இவரது படைப்புகளை வாசிக்க முடிகிறதுஇயற்கையின் படைப்புகள் ஒவ்வொன்றையும் நேசிக்கும் அவற்றோடு உரையாடும் அதியற்புத நேசமனம் இவருடையது.  அந்த நேசமனம் இவரது படைப்பின் ஒவ்வொரு வரியிலும் வெளிப்படுவது அழகு.
நம் மதிப்புக்குரிய ஜீவி சார் எழுதிய ந.பிச்சமூர்த்தியிலிருந்து எஸ்.ரா வரை என்னும் நூலின் அறிமுகத்தை நம் பதிவுலக நட்புகள் பலரும் எழுதியிருந்தாலும் அந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ள எழுத்தாளர்கள் குறித்த விரிவான தொடராக தம்முடைய வலைப்பூவில் நம் அன்புக்குரிய வை.கோபாலகிருஷ்ணன் சார் எழுதிவருவதை நம்மில் பலரும் அறிவோம். அற்புதமான அப்படைப்பாளிகளோடு இன்னும் சில அரிய எழுத்தாளர்களின் எழுத்து குறித்தும் படைப்புகள் குறித்தும் அறிய விரும்புவோர்க்கு அழியாச்சுடர்கள் தளம் ஒரு வரப்பிரசாதம்.
பல்லுயிர்ப் பாதுகாப்பின் அவசியத்தை எளிய வகையில் அவரவர்  தாய்மொழியில் அனைவருக்கும் எடுத்துச் சொல்வது ஒவ்வொரு இயற்கை ஆர்வலர்களின், காட்டுயிர் ஆராய்ச்சியாளர்களின்  கடமை எனக் குறிப்பிடும் காட்டுயிர் ஆராய்ச்சியாளரான பி.ஜெகநாதன் அவர்கள் தம் வலைப்பதிவான உயிரியின் நோக்கமும் அதுதான் என்கிறார்.சிறந்த சிந்தனாவாதி, நல்லதொரு எழுத்தாளர் & மொழிபெயர்ப்பாளர்புத்தகப்பிரியர், தயாளகுணம் மிக்கவர், நட்புக்கு நல்லிலக்கணம், நகைச்சுவை உணர்வு மிக்கவர், சமூக அக்கறை மிகுந்த மனிதர் என்று ஏராளமான நல்லியல்புகளைக் கொண்டு, ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பலருக்கும் பரிச்சயமான பெயர் டெல்லி ஷாஜகான் அவர்கள்.  சமீபத்திய சென்னை வெள்ளப் பேரிடரின்போது மத்திய அரசு வழங்கிய டோல் தொகை ரத்துரயில் குடிநீர் போன்ற  பல உதவிகளுக்கு முக்கியக் காரணகர்த்தாவாக,  முன்னின்றும் பின்னணியில் இருந்தும் செயல்பட்டவர்.

கல்வி சார்ந்த எந்த உதவியானாலும் தயங்காமல் இவரைக் கோரும் நெஞ்சங்கள் ஏராளம். தன்னால் இயன்றவற்றை சத்தமின்றி தனியாகவும், இயலாதவற்றை மற்ற நட்புகளின் உதவிக்கரங்களோடு இணைந்தும் செயலாற்றுவதில் வல்லவர். பிரிவினைவாத அரசியலுக்கு எதிராகவும், சமூக நலன் குறித்த அக்கறையுடனும் பகிரப்படும் இவரது கருத்துகள் வீச்சும் விவேகமும் நிறைந்தவை. புதியவன் பக்கம் என்ற இவரது வலைப்பூவிலிருந்து சான்றுக்கு சில பதிவுகள்...
என்னைக் கவர்ந்த மேலும் சில பதிவுகளின் அறிமுகம் அடுத்த பதிவில்... 

41 comments:

 1. அழியாச்சுடர்கள் தளம் முன்பு போவதுண்டு. மிகவும் மதிப்பு வாய்ந்த, சுவாரஸ்யமான தளம்.

  ReplyDelete
  Replies
  1. உடனடி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸ்ரீராம். ஜீவி சார் குறிப்பிடும் எழுத்தாளர்களை அறிய அறியத்தான் அத்தளத்தில் தேடி வாசிக்கும் ஆவல் பெருகுகிறது. பலரையும் சமீபத்தில்தான் வாசிக்கத் துவங்கியுள்ளேன். :))

   Delete
 2. மிக ஆழமான பதிவு சகோதரி. வாழ்த்துகள்.
  https://kovaikkavi.wordpress.com/

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி தோழி.

   Delete
 3. இங்கு குறிப்பிட்டிருக்கும் நான்கு பதிவர்களுமே நான் அறியாதவர்கள். அவர்களை அறியத்தந்த தங்களுக்கு நன்றியும் பாராட்டும்.

  ReplyDelete
  Replies
  1. பதிவுலகில் அதிகம் அறியப்படாதவர்களை அறிமுகப்படுத்தும் நோக்கோடு நான் இங்கே குறிப்பிட்ட தளங்கள் நான்குமே தங்களுக்குப் புதியவை என்று அறிய மகிழ்ச்சி. நன்றி செந்தில்.

   Delete
 4. அழியாசுடர் தளத்தில் பகிரபடுவதை படித்து விடுவேன். இப்போது கொஞ்சகாலமாய் அழியாசுடர் தளத்தில் எதுவும் பகிரபடவில்லையே!
  ”எங்கிருந்தோ வந்தான்” என்ற மெளனி அவர்களின் கதைக்கு பின் எதுவும் பகிரபடவில்லை.
  ஷாஜகான் அவர்களையும் அவர்கள் குடும்பத்தினரையும் டெல்லியில் நேரில் சந்தித்து இருக்கிறேன். அவர் தளம் படித்தது இல்லை படிக்க வேண்டும்.
  நல்ல பகிர்வுகள். நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கோமதி மேடம். அழியாச்சுடர் தளத்தில் சமீபகாலமாக எதுவும் பகிரப்படவில்லை என்றாலும் புதிதாக அறிமுகமாகும் வாசகர்களுக்கு இதுவரையிலான பதிவுகளை வாசிக்க வாய்ப்பு கிட்டும் என்ற ஆவலில் இங்கு குறிப்பிட்டுள்ளேன். ஷாஜகான் அவர்களையும் குடும்பத்தினரையும் நேரில் சந்தித்திருப்பதை அறிந்து மிகவும் மகிழ்ச்சி மேடம்.

   Delete
 5. தங்களைக் கவர்ந்த பதிவுகள் - 1 என்ற இந்தப்பதிவினில் பல சுவாரஸ்யமான விஷயங்களை நான் புதிதாக இன்று அறிய முடிந்ததில் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. பகிர்வுக்கு நன்றிகள்.

  ’அழியாச்சுடர்கள்’ வலைத்தளத்தில் புதிதாக FOLLOWER ஆக இன்று இப்போது என்னை இணைத்துக்கொண்டுள்ளேன்.

  என் பெயரும் என் வலைத்தளமும் ஏதோ ஒரு வகையில் இன்றைய தங்களின் பதிவினில் இடம்பெற்றுள்ளது, நான் செய்ததோர் பாக்யமே என எண்ணி மகிழ்கிறேன்.

  பகிர்வுக்கு நன்றிகள் .... தொடர வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி கோபு சார். தங்களைப் பற்றியும் தங்கள் வலைப்பூவைப் பற்றியும் பதிவுலக சாதனைகள் பற்றியும் எழுத ஒரு பத்தியோ ஒரு பதிவோ போதாது. அவ்வளவு சாதனைகளுக்கு உரியவர் தாங்கள். எனக்குமுன் கலையரசி அக்கா விரிவாகக் குறிப்பிட்டுவிட்டதால் இங்கு சுருக்கமாக குறிப்பிட்டுள்ளேன். அழியாச்சுடர்கள் தளத்தைத் தொடர்வது அறிந்து மிகவும் மகிழ்ச்சி. நல்லதொரு வாசிப்பனுபவம் கிட்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

   Delete
 6. என் அழைப்பை ஏற்று உடனே செயலில் இறங்கியதற்கு நன்றி கீதா! தலைப்பிலேயே தொடர் பதிவு என்று குறிப்பிடவும். இந்த வாரத் தோழி இதழில் சக்தி ஜோதி உமா மோகன் கவிதையுடன் தம் தொடரைத் துவங்கியிருக்கிறார். அதனை வாசித்து விட்டுக் கீத மஞ்சரி வந்தால் சக்தி ஜோதி அறிமுகம்! ஷாஜஹான் பற்றியும் இப்ப்போது தான் தெரிந்து கொண்டேன். ஜெகநாதன் தளம் அறிவேன். வண்ணதாசன் பக்கம் பற்றி அறிந்திருந்தாலும் எதுவும் வாசித்ததில்லை. இனி தான் வாசிக்கவேண்டும். சுவாரசியமான அறிமுகங்கள். தொடர்கிறேன்! வாழ்த்துடன் கூடிய பாராட்டுக்கள் கீதா!

  ReplyDelete
  Replies
  1. உடனடி வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி அக்கா.. குங்குமம் இதழ் எனக்கு வாசிக்கக் கிடைக்காததால் சக்திஜோதியின் வலைப்பூவில்தான் உடல் மனம் மொழி தொடரை வாசித்துக் கொண்டிருக்கிறேன். விரைவில் மற்றப் பதிவுகளையும் பதிவிடுவார் என்று நம்புகிறேன். சுவாரசிய அறிமுகங்கள் என்ற பாராட்டுக்கு மிகவும் நன்றி அக்கா.

   Delete
 7. அறியாத தளங்கள் சில அறிந்தவை சில ஆனால் தொடராத தளங்கள் அவை. ஜீவி, டெல்லி ஷாஜகான் அறிந்தவர்கள் பலரும் பகிர்வதிலிருந்து. கருத்திடுவதில் தயக்கம். இவர்கள் எல்லாம் அறிவு ஜீவிகள் சராசரியாக எழுதும் எங்களைப் போன்றவர்கள் கருத்திட முடியுமா என்று ஒரு தயக்கம் இருந்ததாலேயே தொடராத வலைத்தளங்கள் பல.

  உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் தங்களைப் பற்றிப் பலரும் எழுதிய போதும் உங்கள் எழுத்தை வாசித்த போதும் தயக்கம் இருக்கத்தான் செய்தது, கருத்திட. பின்பு இயற்கை பற்றி நிறைய நீங்கள் எழுதியதை வாசித்ததும் கருத்திடத் தொடங்கினோம் சகோ/தோழி.

  ஜெயமோகன், எஸ்ரா இருவரையும் நாங்கள் வாசிப்பதுண்டு. எழுத்தாளுமைகள். பிறரையும் தொடர முயற்சி செய்கிறோம். அருமையான, அழகியல் கலந்த வார்த்தைகளில் அறிமுகங்கள் மனதைக் கவர்கின்றன. பகிர்வுக்கு மிக்க நன்றி. தொடர்கின்றோம்.

  ReplyDelete
  Replies
  1. துளசி & கீதாவின் கருத்துதான் எனது கருத்தும் அருமையாக எழுதும் உங்கள் தளத்தில் நானெல்லாம் கருத்திட்டால் நல்லாவா இருக்கும் என்று கருத்திதான் நானும் கருத்துக்கள் இடுவதில்லை...அதுமட்டுமல்லாமல் பாதி நேரம் நான் கலாய்த்துதான் கருத்து இடுவேன் அதுமாதிரி உங்கள் தளம் துளசி டீச்சர்தளம் ரஜினியம்மா தளம் போன்றவைகளை படித்துவிட்டு செல்வதோட்டு சரி கருத்துகள் இடுவதில்லை நீங்கள் அறிமுகப்படுத்திய தளம் அனைத்தும் நான் ஏற்கனவே அறிந்ததுதான்

   Delete
  2. @ துளசி சார் & தோழி கீதா - நான் குறிப்பிட்ட எழுத்தாளர்களுள் பலரும் பெரிய எழுத்தாளுமைகள், அறிவுஜீவிகள் என்பதெல்லாம் ஏற்புடையவையே என்றாலும் என்னவோ அவர்களுடைய எழுத்துகள் என்னை மிகவும் கவர்ந்திருக்கின்றன. நான் அண்ணாந்து வியக்கும் எழுத்தாளுமைகளைக் குறிப்பிட இப்பதிவினை ஒரு வாய்ப்பாக அமைத்துக்கொண்டேன். அவ்வளவுதான்.

   ஆனால் என்னை அவர்களோடெல்லாம் ஒப்பிடுவது சரியல்ல.. நான் ஒரு சாதாரண பதிவர்தான். சொல்லப்போனால் நீங்கள் & அவர்கள் உண்மைகள் போன்றோர் என்னைப் பற்றி என்ன நினைத்து தயங்கினீர்களோ அதையேதான் நான் உங்களைப் பற்றி எண்ணி உங்கள் தளங்களில் கருத்திடத் தயிங்கியிருந்தேன். உங்கள் பதிவு என்றில்லை.. பொதுவாகவே ஆழமான விஷயங்கள் குறித்துப் பகிரப்படும் பதிவுகளில் எப்போதுமே கருத்திடுவதில் தயக்கம் உண்டு.

   இப்போதுதான் நமக்குள் அறிமுகமாகிவிட்டோமே.. இனி தயக்கம் இருபுறமும் வேண்டாம். :)))

   Delete
  3. @ அவர்கள் உண்மைகள் - சரிதான் நீங்களும் அவர்களோடு சேர்ந்துகொண்டீர்களா? உங்களுடைய சமூக, அரசியல் நையாண்டி பதிவுகளை மிகவும் விரும்பி ரசிப்பேன். ஆனால் கருத்திடுவதில் தயக்கம் உண்டு. தெரியாத விஷயத்தில் மூக்கை நுழைப்பது போலத் தோன்றும். நான் அடையாளங்காட்டிய தளங்கள் அனைத்தும் நீங்கள் ஏற்கனவே அறிந்த தளங்கள் என்று அறிய மகிழ்ச்சி. நன்றி.

   Delete
 8. அறிமுகப்பதிவர் அனைவருக்கும் வாழ்த்துகள்!

  ReplyDelete
 9. Replies
  1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

   Delete
 10. அறியாத பதிவர்களைத் தங்களால் அறிந்து கொண்டேன்
  மகிழ்ச்சி சகோதரியாரே
  நன்றி

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா.

   Delete
 11. நானும் ரசிக்கும் பதிவர்களை சுட்டியிருக்கிறீர்கள் கீதா !

  ReplyDelete
  Replies
  1. ரசனை மன்னன் அல்லவா? நிச்சயம் இவர்கள் அனைவரும் தாங்கள் ரசிக்கும் பதிவர்களாகத்தான் இருக்கவேண்டும். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மோகன்ஜி.

   Delete
 12. வலைப்பதிவர்கள் மத்தியில் எழுதுவதும், வாசிப்பதும் இன்னும் குறைந்துவிடவில்லை என்பதனையே உங்களின் இந்த பதிவும், பின்னூட்டங்களும் சொல்லுகின்றன. தொடர்கின்றேன். நன்றி.

  ReplyDelete
  Replies
  1. நிச்சயமாக ஐயா.. கருத்திடுவதில்தான் முன்பின்னாகிவிடுகிறது. வாசிப்பதில் பெரும்பாலும் குறை வைப்பதில்லை. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

   Delete
 13. சற்று மேம்பட்ட இலக்கிய தர கொண்ட பதிவுகள்.இவற்றில் ஒரு சில படித்ததுண்டு, ,மற்றவற்றை படிக்க முயற்சிக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. இலக்கியத்தில் ஆர்வம் இருப்பவர்களுக்கு தீனிபோடும் தளங்கள்தாம். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

   Delete
 14. தாங்களை கவர்ந்த பதிவுகள் மட்டும்
  இந்த பதிவில் இல்லை...
  எங்களை கவர்ந்த பதிவுகளும் உள்ளது ....
  அருமையான பதிவு சகோ....

  ReplyDelete
 15. இப்படிப் பலவான பதிவர்களை அறிமுகப்படுத்தி அவர்கள் எழுத்தின் ஆழத்தையும் அழகாகச் சொல்லியுள்ளீர்கள். அத்தனையும் நன்று. அறிமுக நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி இளவல்.

   Delete
 16. பதிவர்கள் குறித்த கட்டுரை சிந்திக்க வைக்கிறதுஅறிமுகப் படுத்திய பதிவர்களின் பெயர்கள் புதியவை பிறரது பின்னூட்டங்களில் காணாததுஇவர்களை தேடிப் பிடித்து வாசிக்க முனைந்தால் அவர்களின் சிந்தனையே வேறு. பண்டைய இலக்கியங்களில் தேர்ச்சி இருந்தால்தான் ரசிக்க முடியுமோ. மேலும் இவர்கள் எழுத்தை வாசிக்கும் போதே இவர்கள் அறிவு ஜீவிகள் என்னும் எண்ணம் வருவதைத் தடுக்க இயலவில்லை. வாசித்துக் கருத்திடும் தகுதி நமக்கில்லை என்று தோன்றுகிறது

  ReplyDelete
  Replies
  1. நானும் இதுவரை இவர்களுடைய தளங்களில் பெரிய அளவில் கருத்திட்டதில்லை. ஆனால் இவர்களுடைய எழுத்துகளை வாசிக்க எனக்குப் பிடிக்கும். ஒருவேளை என் ரசனையோடு ஒத்த ரசனை உள்ளவர்களுக்கு பயன்படலாமே என்ற எண்ணத்தினாலேயே இங்கு குறிப்பிட்டேன். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா.

   Delete
 17. எனக்குத் தெரியாத எத்தனையோ பதிவர்களை அடையாளம் காட்டியமைக்கு மிக்க நன்றி .வாசிக்கும் வயதை நான் கடந்துவிட்டேன் ,

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. வாசிக்கும் வயதைக் கடந்துவிட்டதாக தாங்கள் கூறினாலும் இன்னும் வாசிப்பில் ஈடுபடுகிறீர்கள் என்பதை தங்களுடைய நூலறிமுகப் பதிவுகள் வாயிலாக அறிகிறேன். இப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள அழியாச்சுடர்கள் தளத்தை எனக்கு அறிமுகப்படுத்தியது தாங்கள்தான் என்பதால் அதற்காகவும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

   Delete
 18. அருமையான தளங்களின் அறிமுகம். தொடருங்கள்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 19. பகிர்வுக்கு நன்றிகள்

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி புத்தன்.

   Delete
 20. பகிர்வுக்கு நன்றிகள்

  ReplyDelete
 21. தங்கள் வாசிக்கும் வலைப்பூக்கள் பட்டியல் கண்டு வியந்ததுண்டு. அவ்வளவும் வாசித்துவிட முடிகிறதா என்று!

  வண்ணதாசனில் அமிழ்ந்திருக்கிறேன். மற்ற பதிவர்களின் அறிமுகம் நல்ல தூண்டல்! நன்றி தோழி.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழி.. வண்ணதாசனிலிருந்து வெளிவருதல் அவ்வளவு கடினம்.. வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் ரசிக்கவைக்கும் எழுத்தல்லவா?

   Delete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.