24 April 2016

என்னைக் கவர்ந்த பதிவுகள் - 2 (தொடர்பதிவு)

என்னைக் கவர்ந்த பதிவுகள் என்னும் தொடர்பதிவுக்காக சில எழுத்தாளுமைகளைப் பற்றி சென்ற பதிவில் குறிப்பிட்டிருந்தேன். ஏராளமான பதிவர்களும் பதிவுகளும் என் மனம் கவர்ந்திருந்தாலும் இதுவரை அதிகம் அடையாளங்காட்டப்படாத வலைத்தளங்களையே இத்தொடரில் குறிப்பிட்டு வருகிறேன். அந்த வரிசையில் இன்னும் சில…
ஆஸியில் எனக்கமைந்த அற்புதமான தோழி மணிமேகலா. இவரது தளம் அட்சயப்பாத்திரம். தமிழின்மீதும் தமிழர் சமுதாயம் மீதும் அளவிலாப்பற்று கொண்டவர் என்பதோடு தமிழின் வளர்ச்சிக்காக அதன் மொழிச்சிறப்பையும், பாரம்பரியப் பெருமைகளையும் தொடர்ந்து வரும் தலைமுறைக்குக் கடத்த தன்னால் என்னென்ன செய்ய இயலும் என்று எந்நேரமும் யோசிப்பவர். எந்தக் கருத்தை எடுத்துக்கொண்டாலும் அதன் ஆழம் வரை சென்று அலசுபவர். உயர்திணை என்ற அமைப்பின்மூலம் மாதாந்திர இலக்கியக்கூடல்களை நிகழ்த்திக்கொண்டிருப்பவர். இன்னும்கூட இவரைப்பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். இவருடைய பதிவுகளில் சமீபமாய் என் மனம் கவர்ந்தவை கண்டறியாத கதைகள் என்ற தலைப்பில் இவர் பதிவிடும் அருமையானதொரு தொடர்பண்டையப் பாரம்பரியப் பொருட்களின் அமைப்பு, பயன்பாடு, மாற்றம், அழகியல் இவற்றை இலக்கிய மேற்கோள்களோடு அவர் எடுத்துரைப்பது சிறப்பு.


குடும்ப மருத்துவர் டாக்டர் எம்.கே.முருகானந்தன் அவர்களை நம் குடும்பத்தில் ஒருவராகவே எண்ணிக்கொள்ளலாம். மனம் விட்டு அவரிடம் நம் நோய்கள் குறித்துப் பேசி ஆலோசனைகள் கேட்கலாம். தினக்குரலில் மருத்துவரைக் கேளுங்கள் என்ற பகுதியில் அவரிடம் கேட்கப்படும் அந்தரங்கமான உடல் மனப் பிரச்சனை குறித்த கேள்விகளும் அதற்கான அவர் பதில்களும் கூட நம்மில் பலருக்கும் பயன்படக்கூடும். அவர் தொடாத உடற்கோளாறுகள் ஏதுமில்லை என்னுமளவுக்கு அவர் தளத்தில் கொட்டிக்கிடக்கின்றன  நோய் மற்றும் உடற்கோளாறுகள் குறித்த விழிப்புணர்வும், மருத்துவ ஆலோசனைகளும், முன்னெச்சரிக்கைக் குறிப்புகளும், நோயாளிகளின் சந்தேகங்களும் தீர்வுகளும், பயம் போக்கும் தெளிவுகளும்மருத்துவம் தவிரவும் தமிழிலக்கிய ஆர்வலர், கவிஞர், பதிவர், புகைப்பட ஆர்வலர் என்று பன்முகங்கொண்ட மருத்துவரின் தமிழ்ச்சேவை முக்கியமாய் நோய்கள் குறித்து எளிய தமிழில் விளக்கும் அவரது திறம் மிகுந்த பாராட்டுக்குரியது.


இப்போது நான் குறிப்பிடப்போகும் பதிவரை முன்பே பலமுறை பல பதிவுகளில் குறிப்பிட்டிருக்கிறேன் என்றாலும் இப்போதும் குறிப்பிடுவதில் பெருமையே எனக்கு. சமீபத்தில் தன்னுடைய தொண்ணூறாவது பிறந்தநாளைக் கொண்டாடியவரும் எங்கள் குடும்பத்தின் மூத்த வழிகாட்டியும் எங்கள் அனைவரின் அன்புக்கும் மதிப்புக்கும் உரியவருமான சொ.ஞானசம்பந்தன் ஐயா அவர்கள். எழுத்துச்சோர்வு ஏற்படும்போதெல்லாம் அவரை எண்ணிக்கொண்டால் போதும், சோர்வு பறந்துவிடும் என்று நான் உரைப்பதெல்லாம் வெற்றுப் புகழாரமன்று. உண்மை. அவருடைய அற்புதமான பல பதிவுகள் இன்னும் பலரைச் சென்றடையவேண்டும் என்னும் பேராசையின் உந்துதலோடு இலக்கியச்சாரல் என்னும் அவரது தளத்திலிருந்து சில பதிவுகளை இங்கு குறிப்பிடுகிறேன்.
கட்டுப்பெட்டித்தனமான சமூக நடவடிக்கைகளுக்கு எதிராக நேர்மையுடனும் துணிச்சலுடனும் தன் எழுத்துகளை முன்வைக்கும் பெண் எழுத்தாளர், பல்கலைக்கழக விரிவுரையாளர், தமிழிலும் சிங்களத்திலும் தேர்ந்த புலமை வாய்ந்தவர், சிறந்த மொழிபெயர்ப்பாளர், கவிஞர், சிறுகதையாசிரியர், பாடகர், பாடலாசியர், ஆய்வறிஞர், ஏராளமான இலக்கிய விருதுகளுக்கு சொந்தக்காரர் என்னும் ஏராளமான சிறப்புகளுக்கு உரியவர் இலங்கையைச் சேர்ந்த தோழி லறீனா அப்துல் ஹக் அவர்கள்.  அவருடைய காத்திரமான கருத்தாழமிக்கப் பதிவுகளிலிருந்து சில..

(முக்கியக்குறிப்பு – இத்தளத்துக்குச் செல்லுமுன் நம்முடைய கணினியின் ஒலியளவைக் குறைத்துக்கொண்டு செல்வது நலம். சட்டென்று எங்கிருந்தோ பாடல் ஒலித்துத் திடுக்கிடச்செய்கிறது. தங்களுடைய தளங்களில் தானியங்கியாக இதுபோன்று பாடல்களை ஒலிக்கவிடும் பதிவர்கள்,  பதிவினை ஊன்றிப்படிக்க இயலாமல் வாசகர்க்கு ஏற்படும் சங்கடத்தை உணர்ந்தால் நல்லது. )இத்தொடரில் நான் குறிப்பிட்டுள்ள பதிவர்களுள் ஓரிருவர் தவிர மற்றவர்கள் மற்றத் தளங்களுக்கு வருகை புரிவதோ கருத்திடுவதோ இல்லை என்றாலும் நான் வியந்து வாசிக்கும் பதிவர்கள் என்ற வகையில் அவர்களைக் குறிப்பிட்டுள்ளேன். இங்கே குறிப்பிடப்பட்டவர்களோடு, என் நட்பு வட்டத்தில் உள்ள நான் தொடரும், அனைத்துப் பதிவர்களும் எனக்குப் பிடித்த, என் மனம் கவர்ந்த பதிவர்கள்தாம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.  


வாசிக்கும் வலைப்பூ வழியே நான் தொடரும் பதிவர்கள் ஒவ்வொருவரிடமும் என்னைக் கவர்ந்த அம்சங்களாக அழகிய எழுத்துவன்மை, படைப்பாற்றல், தமிழார்வம், கவித்திறம், சமூக நலன் சார்ந்த சிந்தனை, நட்புறவு, சுவாரசியமான அனுபவப்பகிர்வு, பயணக்குறிப்புகள் என ஏராளமுண்டு. அனைவரைப் பற்றியும் எழுதத் தொடங்கினால் இத்தொடருக்கு முடிவே இராது. எனவே நட்புகள் அனைவருக்கும் என் அன்பினைத் தெரிவித்து இத்தொடரை நிறைவு செய்கிறேன். என் எழுத்தை வாசித்தும் ஊக்கந்தரும் பின்னூட்டங்கள் அளித்தும் என்னைத் தொடர்ந்து எழுதவைத்துக் கொண்டிருக்கும் அன்புள்ளங்கள் அனைவருக்கும் அன்பான நன்றி. 
இத்தொடரில் என்னை இணைத்த ஊஞ்சல் கலையரசி அக்காவுக்கு என் சிறப்பு நன்றி. 

24 comments:

 1. என்னைக் கவர்ந்த பதிவுகள் - 2 (தொடர்பதிவு) என்ற தங்களின் இந்த பதிவினை வாசித்து, என்னிடம் தனியாகக் குறித்துக்கொண்டுள்ளேன்.

  என்னைக் கவர்ந்த பதிவாகிய ‘கீத மஞ்சரி’ வலைத்தளத்தையே, இவர்கள் கவர்ந்துள்ளார்கள் என்றால், நிச்சயம் அவர்களுக்குள் ஏதோவொரு தனித்தன்மையும், தனித் திறமையும் இருக்கத்தான் செய்யும்.

  நேரம் கிடைக்கும்போது ஒவ்வொன்றாய்ப் போய்ப்பார்க்க முயற்சிக்கிறேன்.

  தங்களின் இந்தப் பதிவுக்கு நன்றிகள் மேடம்.

  பிரியமுள்ள கோபு

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கோபு சார். குறிப்பிட்டுள்ள தளங்களை அவசியம் சென்று பார்ப்பீர்கள் என்பதை சென்ற பதிவில் நான் குறிப்பிட்ட தளங்களை வாசித்துப் பகிர்ந்ததன் மூலம் அறிவேன். மிக்க நன்றி.

   Delete
 2. அருமையான பதிவர்கள்! சிறப்பாய் அறிமுகம் செய்தமை சிறப்பு! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சுரேஷ்.

   Delete
 3. மிக அருமையாக எழுதியிருக்கிறீர்கள் கீதமஞ்சரி!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மனோ மேடம்.

   Delete
 4. ரொம்பப் பெருமைப் படுத்துறீங்க கீதா.
  அறியவும் தெரியவும் எவ்வளவு இருக்கு! உங்கள் ஸ்நேகம் கிடைத்ததே எனக்கான சந்தோஷம்.

  நீங்கள் நான் சேர்த்துக் கொண்ட சொத்தில் ஒன்றென்று சொல்வதே பொருத்தம்.

  உங்கள் உறவுக் குழுமத்தில் என்னையும் அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி கீதா.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் நட்பு எனக்குப் பெருமை.. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழி.

   Delete
 5. சிறப்பான அறிமுகங்கள் ... நல்ல எழுத்துக்கள் மலரட்டும் .

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மோகன்ஜி.

   Delete
 6. அருமையான பதிவர்கள்
  நன்றி சகோதரியாரே

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா.

   Delete
 7. அறிமுகங்களுக்கு நன்றி. நல்ல முயற்சி. பாராட்டுகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி ஐயா.

   Delete
 8. அறிமுகங்களுக்கு நன்றி சகோ...
  தொடர்ந்து அறிமுகம் தாருங்கள்...

  தாங்கள் விரும்பினால் எம் தளத்திற்கு
  வருகை தாருங்கள் சகோ
  http://ajaisunilkarjoseph.blogspot.com

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் அழைப்புக்கும் மிக்க நன்றி.

   Delete
 9. பொதுவாகவே நான் பிறர் அறிமுகப்படுத்தும் பதிவர்களையே தொடரும் வழக்கம். உங்களைப் போன்ற ரசனையான எழுத்தாளர்களுக்கு பிடித்த எழுத்துக்களும் அருமையாகத்தானே இருக்கும்...கண்டிப்பாக படித்துப் பார்க்கிறேன். உங்களுக்கு நன்றி. அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி எழில். நேரம் அமையும்போது வாசித்துப் பாருங்கள்.

   Delete
 10. மருத்துவர் முருகானந்தன் அவர்கள் தளத்துக்கு நீண்ட நாட்களுக்கு முன்னால் சென்றிருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸ்ரீராம். மருத்துவர் தளத்துக்குத் தொடர்ச்சியாக செல்லமுடியாவிட்டாலும் அவ்வப்போது சென்று பதிவுகளை மொத்தமாகப் பார்வையிட்டுவிடுவேன். எந்தப் பிரச்சனை என்றாலும் அவர் தளத்தில் ஒரு முடிவு இருக்கும் என்பதால் பலவற்றை புக்மார்க் செய்து வைத்து பயன்படுத்திக் கொள்கிறேன்.

   Delete
 11. அருமையான அறிமுகங்கள். அனைவருக்கும் வாழ்த்துடன் கூடிய பாராட்டுக்கள். சில தளங்கள் எனக்குப் புதியவை. மிகவும் சிறப்பாகத் தொடரை நிறைவு செய்தமைக்குப் பாராட்டுக்கள் கீதா!

  ReplyDelete
  Replies
  1. தங்கள் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி அக்கா.

   Delete
 12. மருத்துவர் முருகானந்தன் அவர்களின் தளத்திற்கு முன்பு சென்றதுண்டு. மீண்டும் தொடர வேண்டும். பிற அருமையான தளங்களை அறிந்து கொண்டோம். அனைவருக்கும் வாழ்த்துகள். மருத்துவரின் தளம் தவிர மற்றவை எல்லாமே புதியவை. அறிமுகத்திற்கு மிக்க நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி கீதா & துளசி சார்.

   Delete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.