11 November 2019

பாப்பி தினம்

தோட்டத்துப் பிரதாபம் - 8


அன்புத்தோழியின் தங்கை சுவிஸிலிருந்து வந்திருந்தபோது  எனக்கொரு அன்பளிப்பு தந்தார். பிரித்துப் பார்த்தால் குட்டி குட்டியாய் நான்கு விதை உருண்டைகள். அளவிலா மகிழ்ச்சி எனக்கு. 



விதையுருண்டைக்குள் என்ன விதைகள் உள்ளன என்று பார்க்கலாம் என்றால் என்னென்னவோ மொழிகள்.  Google translator உதவியால் அவை German, French, Italy என்பதோடு சொல்லப்பட்டிருக்கும் விவரமும் புரிந்தது. பாப்பிப் பூக்கள். 


சில நாடுகளில் பாப்பி தடை செய்யப்பட்ட தாவரம் என்பதால் மிகுந்த கவனமாக  இருக்கும்படி தோழியொருவர் எச்சரித்தார்.  ஆனால் ஆஸியில் பாப்பி வளர்ப்பு சட்டத்துக்குப் புறம்பானதில்லை என்றறிந்து நிம்மதியானேன்.

கான்பெரா மலர்த்திருவிழாவில் துலிப் & பாப்பி மலர்கள்

ஓபியம் பாப்பி (பூங்காவில்)


வசந்தகாலத் துவக்கத்தில் விதையுருண்டைகளை தொட்டியில் விதைத்தாயிற்று. ஓபியம் பாப்பியா… சிவப்புப் பாப்பியா எது பூக்கும் என்று ஆர்வத்தோடு காத்திருந்தேன். (ஓபியம் பாப்பி என்றால் சமையலுக்குத் தேவையான கசகசாவை தோட்டத்திலேயே அறுவடை செய்துவிடலாமே)



பூத்தவை Flanders poppy எனப்படும் சிவப்புப் பாப்பிகள். ஏமாற்றமில்லை. மகிழ்ச்சிதான். சிவப்பு பாப்பிச் செடிகளுக்கு பன்னெடுங்கால அழகியல் வரலாறு உண்டு. எகிப்திய கல்லறைகளில் கூட அவை காணப்படுகின்றனவாம். முதல் உலகப்போரில் உயிர்நீத்த போர்வீரர்களின் அடையாள மலராகவும் போர்வீரர் தினத்தின் நினைவுமலராகவும் சிவப்பு பாப்பி மலர்கள் அனுசரிக்கப்படுகின்றன.


இன்று நவம்பர் 11-ஆம் நாள் - Remembrance day. போர்களில் உயிர்நீத்த மாவீரர்களை நினைவுகூரும் தினம். இது பாப்பி தினம் என்றும் குறிப்பிடப்படுகிறது. இன்று அனைவரும் துணியாலும் நூலாலும் நெய்யப்பட்ட சிவப்புப் பாப்பி மலர்களை ஆடையில் அணிந்திருப்பர்.  



என் வீட்டுத் தோட்டத்திலோ மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியபடி மலர்ந்து காற்றாடுகின்றன… நிஜ சிவப்புப் பாப்பிப் பூக்கள், எம்மண்ணிலிருந்தோ சுமந்து வந்த அன்பையும் தம் இதழ்களிலேந்தி.

தோழிகளின் அன்புப் பரிசுகள்


20 comments:

  1. படங்கள் மிக பளிச்சென பார்க்க மிகவும் அழகாக வந்துள்ளன. பாராட்டுக்கள்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி மதுரைத்தமிழன்.

      Delete
  2. வாழ்த்துகள்
    படங்கள் அருமை

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஐயா.

      Delete
  3. மலர்கள் அழகு... அதற்குள் தான் எத்தனை தகவல்கள்...!

    ReplyDelete
    Replies
    1. அன்பும் நன்றியும் தனபாலன்.

      Delete
  4. கசகசாவின் கதையா மலர்களழகு மனம்மயக்குகிறது ஒரு வேளை அவை பாப்பியாக இருப்பதாலா

    ReplyDelete
    Replies
    1. :))) இருக்கலாம் ஐயா. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      Delete
  5. Replies
    1. அன்பும் நன்றியும் தோழி.

      Delete
  6. அழகான பூ எனக்கும் பிடிக்கும். இப்பூவுக்கு இத்தனை விடயங்கள் இருக்கின்றன. படங்கள் அழகா இருக்கு கீதா.

    ReplyDelete
    Replies
    1. பாப்பி மலர்களுக்கென்று ஒரு வசீகரம் இருக்கத்தானே செய்கிறது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ப்ரியா.

      Delete
  7. அழகான பூ வரலாறு அருமை.
    காப்பி கலர் அருமை.மலர் தேவதை அழகு.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் ரசனையான பின்னூட்டத்துக்கும் நன்றி கோமதி மேடம்.

      Delete
  8. என்ன ஒரு அழகு!

    இங்கே காணக் கிடைக்காத பல மலர்களை உங்கள் பதிவுகள் மூலமாகத் தகவல்களுடன் தெரிந்து கொள்கிறோம். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. அன்பும் நன்றயும் ராமலக்ஷ்மி.

      Delete
  9. கவரும் அழகு மலர்.ஞ

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் ரசித்தமைக்கும் நன்றி மாதேவி.

      Delete
  10. சிவப்பு பாப்பி மலர்கள்...ஆஹா வெகு அழகு ..

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பூக்களை ரசித்தமைக்கும் நன்றி அனு.

      Delete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.