28 April 2016

காதல் சிறகை காற்றினில் விரித்து...


எங்கே அவள் என்றே மனம் 
தேடுதே ஆவலால் ஓடிவா.. 
அங்கே வரும் என் பாடலைக் 
கேட்டதும் கண்களே பாடிவா...




தூது செல்ல ஒரு தோழியில்லையென்று
துயர் கொண்டாளோ தலைவி...






உன்னை நான் சந்தித்தேன் - நீ
ஆயிரத்தில் ஒருவன்...




ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா..
உண்மைக்காதல் மாறிப்போகுமா..




காதல் சிறகைக் காற்றினில் விரித்து
வானவீதியில் பறக்கவா... 




உன்னிடம் மயங்குகிறேன்..
உள்ளத்தால் நெருங்குகிறேன்
எந்தனுயிர்க் காதலியே..
இன்னிசை தேவதையே...




உண்ணும்போதும் உறங்கும்போதும்
எண்ணம் முழுதும் கண்ணன்தானே...




காதல் காதல் என்று பேச கண்ணன் வந்தானோ...
காலம் பார்த்து ஜாலம் செய்ய மன்னன் வந்தானோ...




உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
உன்னை உள்ளமெங்கும் அள்ளித்தெளித்தேன்
உறவினில் விளையாடி
வரும் கனவுகள் பல கோடி...




நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்
அன்புமணி வழங்கும் சுரங்கம் 
வாழ்க.. வாழ்க... 




யாதும் ஊரே.. யாவரும் கேளிர்..
அன்பே எங்கள் உலக தத்துவம்..
நண்பர் உண்டு பகைவர் இல்லை..
நன்மை உண்டு தீமை இல்லை.. 


38 comments:

  1. படங்களும், பாடல்களும் அருமையோ அருமை. என்ன, காதல் சிறகைப் பாடலைக் கடைசியாகக் கொடுத்திருக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. காதல் வந்தவுடனேயே மனம் சிறகடித்துப் பறக்க ஆரம்பித்துவிடுகிறதே.. கடைசிவரை எங்கே பொறுமை காக்கிறது? :))

      வருகைக்கும் நல்ல ரசனையாக கருத்துக்கும் நன்றி ஸ்ரீராம்.

      Delete
  2. அனைத்துப் படங்களும், ஆங்காங்கே பொருத்தமான பாடல் வரிகளும் மிகவும் அழகாக உள்ளன. பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் படங்களையும் பாடல்களையும் ரசித்து இட்டக் கருத்துக்கும் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் மனமார்ந்த நன்றி கோபு சார்.

      Delete
  3. பறவை படங்களும் பாடல் வரிகளும் சிறப்பு! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பதிவினை ரசித்தமைக்கும் மிக்க நன்றி சுரேஷ்.

      Delete
  4. நிறையவே காதல் பாடல்கள் கைவசம் போல நல்ல கற்பனை

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான். வானொலி நிகழ்ச்சிக்காக சேகரித்த பாடல்கள் கைவசம் ஏராளமுண்டு. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா.

      Delete
  5. மிக தெளிவான அழகான படங்களுடன் சொல்லும் செய்திகள் அட்டகாசம்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் படங்களை ரசித்தமைக்கும் மிகவும் நன்றி மதுரைத்தமிழன்.

      Delete
  6. பாட்டும்
    படமும்
    அழகு சகோதரியாரே

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் பதிவினை ரசித்தமைக்கும் மிக்க நன்றி ஐயா.

      Delete
  7. அழகான படங்களுக்கேற்ற அருமையான பாடல்கள்!புகைப்படக்கலையில் நல்ல தேர்ச்சி பெற்று விட்டாய் என்பது தெரிகிறது. படம் நான்கும் ஆறும் அருமை! பாராட்டுக்கள் கீதா!

    ReplyDelete
    Replies
    1. இன்னும் தேர்ச்சி பெற வேண்டும் அக்கா.. எனினும் தங்கள் பாராட்டு உற்சாகமளிக்கிறது. வருகைக்கும் கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி அக்கா.

      Delete
  8. படமும் பாடலும் சூப்பர்..

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பதிவினை ரசித்தமைக்கும் மிகவும் நன்றி சீனி.

      Delete
  9. படங்களும் அதற்கு பொருத்தமான பாடல்களும் அட்டகாசம்!
    த ம 2

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் படங்களையும் பாடல்களையும் ரசித்தமைக்கும் தமிழ்மண வாக்குக்கும் மிக்க நன்றி செந்தில்.

      Delete
  10. பார்த்துக் களித்தேன்!!
    பாடிக் களித்தேன்!!

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சி தோழி.. வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி நிலாமகள்.

      Delete
  11. ஆஆஆ.... கீதா, இதேமாதிரியே ஆனால் வேறொரு வகை வாத்துக்கள் உள்ள படங்களை எங்கள் ஊர் பூங்காவில் நிறைய எடுத்து வச்சிருக்கேன். நானும் போட்டுவிடுகிறேன்.

    பளிச்பளிச் படங்களை அழகான பாடல்களுடன் வெளியிட்டது அருமை.

    ReplyDelete
    Replies
    1. போடுங்க.. போடுங்க.. ரசிக்க நானும் காத்திருக்கிறேன்.. வருகைக்கும் அழகான கருத்துப்பகிர்வுக்கும் நன்றி சித்ரா.

      Delete
  12. அருமையான பகிர்வு

    தங்கள் பதிவுகளை இணைத்து மின்நூல் ஆக்க உதவுங்கள்
    http://tebooks.friendhood.net/t1-topic

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா.

      Delete
  13. படங்களோடு பொருத்தமான பாடல் வரிகளையும் இரசித்தேன். அருமையான பகிர்வு.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் படங்களையும் பாடல்வரிகளையும் ரசித்தமைக்கு மிகவும் நன்றி ராமலக்ஷ்மி.

      Delete
  14. அடடா.... அழகோ அழகு. கலையழகு பாட்டோட சொட்டுது!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பதிவினை ரசித்தமைக்கும் மிக்க நன்றி தோழி.

      Delete
  15. எழில் வாய்ந்த படங்கள் ! ஏற்ற பாடலடிகளைத் தேர மிக்க உழைப்பு தேவைப்பட்டிருக்கும் . பாராட்டுகிறேன் .

    ReplyDelete
    Replies
    1. வானொலி நிகழ்ச்சிக்காக பல பாடல்களைத் திரட்டி கைவசம் வைத்திருப்பதால் பாடல்களைத் தேர்ந்தெடுப்பதில் சிரமம் வெகுவாக இல்லை. தங்கள் வருகைக்கும் படங்களை ரசித்தமைக்கும் மிக்க நன்றி.

      Delete
  16. தூது செல்ல ஒரு தோழியில்லையென்று
    துயர் கொண்டாளோ தலைவி...,,,

    அருமை அருமை,, அழகான மனம் கொள்ளைப்போகும் படங்கள்.. பல முறை வந்தும் பின்னூட்டம் ?????? அனைத்தும் அழகு.

    ReplyDelete
    Replies
    1. மிகவும் மகிழ்ச்சி தோழி. தங்கள் வருகைக்கும் ரசனையான பின்னூட்டத்துக்கும் மனமார்ந்த நன்றி.

      Delete
  17. ஆகா. அழகான படங்களும்,அதற்கேத்த பாடல்களும் அருமை.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பதிவினை ரசித்தமைக்கும் மிக்க நன்றி சிவகுமாரன்.

      Delete
  18. படங்கள் மிகத் தெளிவாக அட்டகாசம். அதற்கான பாடல்கள் மிக மிக அருமை....ரசித்தோம் படங்களையும் அதற்கான பாடல்களையும்

    ReplyDelete
    Replies
    1. மிகவும் மகிழ்வும் நன்றியும் கீதா & துளசி சார்.

      Delete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.