27 March 2017

மின்னூல்கள் சில என்னூல்களென...சிலேட்டுப் பலகையில் அ,ஆ என்று கைப்பிடித்து எழுதிப் பழகிய காலத்தில் நாலுகோடு நோட்டுப் புத்தகத்தின் மேல் கவனம் வைத்திருந்தோம். பென்சிலால் எழுதியழித்துப் பழகியபோது மைப்பேனாவின் மீது மோகம் கொண்டோம். கசியும் மைப்பேனாவை கையேந்திய போது பால்பாயிண்ட் பேனா மீது கண்வைத்தோம். கணினி வந்ததும் காகிதங்களைக் கைவிட்டோம். வலையுலகில் எழுத்தால் வலம் வந்தோம். கணினியில் ஏற்றியவற்றை மறுபடி காகிதத்தில் அச்சேற்ற ஆசை கொண்டோம்.. அச்சிலேற ஆகும் சில காலம் எனும்போது.. உடனுக்குடன் மின்னூலாக்கி உலகெங்கும் தவழவிட உவகை கொண்டோம். காத்திருந்த வாய்ப்பு நம் வாசல் கதவைத் தட்டக்கண்டோம். கரம்பற்றிக்கொண்டோம். வரிசையாய் நம் பதிவுலக நட்புகள் மின்னூலாக்கம் என்னும் அடுத்த கட்டத்துக்கு ஆர்வமாய் நகர்ந்திடக் கண்டு மகிழ்வில் துள்ளுகிறது மனம்.. அந்த வரிசையில் நானுமிருக்கிறேன் என்பதில் அகநிறைவு.

புஸ்தகா நிறுவனம் மூலம் இவ்வாய்ப்பினை அமைத்துக் கொடுத்த புதுகை கணினி தமிழ்ச்சங்கத்துக்கும் ஏற்பாடு செய்த நா.முத்துநிலவன் அண்ணனுக்கும் புஸ்தகா பற்றி விரிவாக எனக்கு எடுத்துச்சொல்லி ஊக்கமளித்த கலையரசி அக்காவுக்கும் என் மனம் நிறைந்த நன்றி.  

புஸ்தகாவில் வெளியான என் மின்னூல்கள்.. 
படத்தையோ தலைப்பையோ சொடுக்கி இணைப்புக்குச் செல்லலாம்.   


புஸ்தகாவில் என் மின்னூல்கள் வெளியாகியிருப்பதைப் பகிரும் இவ்வேளையில் இந்நூல்கள் குறித்த நட்புகளின் விமர்சனங்கள் மனத்தை நெகிழவைக்கின்றன. 

என் அம்மாச்சியும் மகிழம்பூக்களும் – சிறுகதைத் தொகுப்பு குறித்த தன் வாசிப்பனுபவத்தை மிக அழகாக தன் வலைப்பூவில் பதிவிட்டுள்ள வெங்கட் நாகராஜ் அவர்களுக்கு என் அன்பும் நன்றியும். வாசிப்பில் பெரும் ஈடுபாடு கொண்ட அவருடைய விமர்சனம் எனக்கு ஊக்கமும் உற்சாகமும் தருவதாக உள்ளது. மிகவும் நன்றி வெங்கட்.

இதே தொகுப்பில் உள்ள ஒன்றும் அறியாத பெண்ணோ கதையுடன் தன் வாழ்வை ஒப்பிட்டு ஃபேஸ்புக்கில் சிலாகித்த மகாதேவன் அண்ணாவுக்கு என் அன்பான நன்றி.


நம் படைப்புகளை 
உலகளாவிய வாசகர்க்குக் கொண்டுசேர்க்கும் 
புஸ்தகா நிறுவனத்துக்கு 
நம் நெஞ்சம் நிறைந்த நன்றி. 

34 comments:

 1. வாவ் !! பார்த்தேன் எல்லாமே அழகா வந்திருக்கு .வாழ்த்துக்கள் கீதா

  ReplyDelete
  Replies
  1. அன்பும் நன்றியும் ஏஞ்சலின் :)

   Delete
 2. முகநூல் என்று ஏதேதோ சொன்னார்கள். அதுதான் ஃபேஸ்புக் என்பதே நான் சமீபத்தில் தான் தெரிந்துகொண்டேன். அந்த வழிக்கே அதிகம் நான் போவதும் இல்லை. அதற்குள் இது என்ன மின்னூல் ?????

  புதுசு புதுசா ஏதேதோ சொல்றீங்களே ! :)

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. ஆறே ஆறு நூல்களை வெளியிட்டுவிட்டு குறைகுடமாக நான் இங்கு கூத்தாடிக்கொண்டிருக்க.. புஸ்தகாவில் வரிசையாய் மின்னூல்களை வெளியிட்டும் இன்னும் சில நிலுவையிலும் வைத்திருக்கும் தாங்கள் நிறைகுடமாக அமைதியாக இருப்பதோடு மின்னூல் என்றால என்ன என்று கேள்வியும் கேட்கிறீர்களே.. இந்த தன்னடக்கம்தான் உங்கள் உயர்வுக்கு வழிகோலுகிறது. அன்பும் நன்றியும் கோபு சார்.

   Delete
 3. ஆஹா ! சிலேட்டுப் பலகை, நாலுகோடு நோட்டு, பென்சில், மைப்பேனா, பால்-பாய்ண்ட் பேனா, காகிதங்களற்ற கணினி, வலையுலகம், அச்சு நூல்கள் என எல்லாம் போய் மின்னல் வேகத்தில் இப்போது மின்னூல்களா? வெரி குட்.

  எழுத்துலகில் நமக்குள்ள நல்ல முன்னேற்றத்தினை நயம்படச் சொல்லி உள்ளீர்கள்.

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. எழுத்து பயணித்த பாதையைத் திரும்பிப் பார்க்கும்போது ஏற்படும் எண்ண அதிர்வுகள் வியப்பளிப்பதாகவே உள்ளன. அதைத் தாங்களும் ரசித்தமைக்கு நன்றி கோபு சார்.

   Delete
 4. அதற்குள் உங்களின் வெளியீடாக மட்டுமே ஆறு மின்னூல்களா? மிகவும் ஆச்சர்யமாக உள்ளது. மயக்கமே வந்து விட்டது எனக்கு.

  சும்மாக் கலக்குங்கோ ! :)

  ’ஆறு’ இப்போதைக்கு ’நூறு’ ஆகட்டும். அதன்பின் ஆயிரம் ஆயிரமாக ஆகட்டும்.

  மனம் நிறைந்த இனிய பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. மயக்கமா.. உங்களுக்கா... ஆஹா... \\’ஆறு’ இப்போதைக்கு ’நூறு’ ஆகட்டும். அதன்பின் ஆயிரம் ஆயிரமாக ஆகட்டும்\\ தங்கள் வாக்கு பலிக்கட்டும். :)))

   மனம் நிறைந்த பாராட்டுகளுக்கும் வாழ்த்துகளுக்கும் மிகவும் நன்றி கோபு சார்.

   Delete
 5. //புஸ்தகா பற்றி விரிவாக எனக்கு எடுத்துச்சொல்லி ஊக்கமளித்த கலையரசி அக்காவுக்கும் என் மனம் நிறைந்த நன்றி.//

  இதுபோன்றதொரு அருமையான + பாசம் மிக்க அக்கா இருக்கும்போது உங்களுக்கு எந்தவொரு கவலையுமே இருக்க நியாயம் இல்லை. :)

  ReplyDelete
  Replies
  1. \\இதுபோன்றதொரு அருமையான + பாசம் மிக்க அக்கா இருக்கும்போது உங்களுக்கு எந்தவொரு கவலையுமே இருக்க நியாயம் இல்லை. :)\\ நிச்சயமாக. என்னை இந்த அளவுக்கு ஊக்கமளித்து எழுதவைத்திருப்பதில் கலையரசி அக்காவின் பங்கு அளப்பரியது. அவர்கள் எனக்கு மட்டுமில்லாமல் இன்னும் நிறைய பேருக்கும் சொல்லி அவர்களும் புஸ்தகாவில் மின்னூல் வெளியிட்டு வருகின்றனர் என்பது கூடுதல் மகிழ்வளிக்கும் செய்தி.

   Delete
 6. மனம் நிறைந்த வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வாழ்த்துக்கு மிகவும் நன்றி ஐயா.

   Delete
 7. மனம் நிறைந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்

  ReplyDelete
  Replies
  1. மிகவும் நன்றி மதுரைத்தமிழன்.

   Delete
 8. உடனடி வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் பாராட்டுகளுக்கும் மிகவும் நன்றி ஸ்ரீராம்.

  ReplyDelete
 9. மனம் நிறைந்த வாழ்த்துகள். மேலும் உங்களது ஆக்கங்கள் அச்சுப் புத்தகங்களாக, மின்புத்தகங்களாக வெளிவரட்டும்.

  என் பதிவு பற்றியும் இங்கே குறிப்பிட்டிருப்பதற்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. அன்பும் நன்றியும் வெங்கட்.

   Delete
 10. வாழ்த்துக்கள் கீதா.

  ReplyDelete
  Replies
  1. அன்பும் நன்றியும் ப்ரியா.

   Delete
 11. வாழ்த்துகள் சகோதரி. புதுக்கோட்டைக் கணினித் தமிழ்ச்சங்கத்தின் முயற்சியில் நடத்தப்பட்ட மின்னூல் வழிகாட்டு முகாமின் வழியாக, அன்புத்தங்கை கலை தந்த உற்சாகத்தில் என்று தங்களின் நன்றிமிகுந்த வரிகளில் நெகிழ்கிறேன். எங்கள் முயற்சி எங்கெங்கோ சென்று இணைய வழி, நம்மை இணைப்பது கண்டு மகிழ்கிறேன், இதுதானே நம் எதிர்பார்ப்பும்! தங்களின் படைப்புகள் ஏற்கெனவே வலையுலகில் புகழ்மிக்கவைதான். இப்போது உலகம் முழுவதும் சென்று சேர மின்னூல் வடிவம் உதவும் என்பதில் சந்தேகமில்லை. தங்களின் படைப்பாற்றல் மேன்மேலும் வளர என் அன்பான வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் ஊக்கந்தரும் கருத்துரைக்கும் வாழ்த்துகளுக்கும் அன்பும் நன்றியும் அண்ணா.

   Delete
 12. வாழ்த்துகள் சகோ ..

  ReplyDelete
  Replies
  1. மிகவும் நன்றி மது.

   Delete
 13. மகிழ்ச்சி. மனமார்ந்த வாழ்த்துகள் கீதா.

  ReplyDelete
  Replies
  1. மிகவும் நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 14. திரு கோபு அவர்கள் சொன்னது போல சிலேட்டும் பென்சிலுமாக இருந்து ஒற்ரைறூல், இரட்டை ரூல், நாலு றூல் கொப்பிகளுக்கு மாறி பென்சில், மை பேனாவாகி பிறகு அது குமிழ் முனைப் பேனாவாகி, தகவல் தொழில் நுட்பப் புரட்சியின் பின் தாள் இன்றி பேனா இன்றி தட்டச்சி உலகம் முழுக்க வினாடி அளவு மணித்துளியில் உலகம் முழுக்கப் போய் இன்று மின்னூலென புத்தகங்கள் விரல் நுனியில் கிட்ட...

  பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் கீதா....

  ReplyDelete
  Replies
  1. அன்பும் நன்றியும் தோழி.

   Delete
 15. காலை வணக்கம் மா. இந்த எளியவனையும் பெருமை படுத்தியதற்கு நன்றி

  ReplyDelete
  Replies
  1. நாலை வாங்கி வாசித்துப்பெருமைப்படுத்திய தங்களுக்கு என்னாலான நன்றி அண்ணா.

   Delete
 16. மிக அருமையாக இருக்கு கீதா வாழ்த்துக்கள் பாராட்டுக்கள். புத்தக அட்டை அனைத்தும் அருமை. எனக்கொன்று தோணுது, உங்கள் படம் போட்டிருக்கும் இடத்தில் பக்கிரவுண்ட் இல்லாமல் போட்டால் இன்னும் நன்றாக இருக்கும். நான் சொல்வது வெள்ளைப் பெட்டிபோல தெரிவதை நீக்கி உங்கள் படம் மட்டும் வருவதுபோல் போட்டால் இன்னும் முகப்பு ஜொலிக்கும்.

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் அழகான கருத்துக்கும் நன்றி அதிரா.. புஸ்தகா நிறுவனமே அட்டைப்படங்களை வடிவமைத்துக் கொள்வதால் அதில் திருத்தம் செய்ய நம்மால் இயலாது.

   Delete
 17. மிகவும் மகிழ்ச்சி கீதா! இன்னும் பல நூல்கள் வெளிவர வாழ்த்துகிறேன்! பாராட்டுகள்!

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் மனமார்ந்த நன்றி அக்கா..

   Delete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.