6 November 2016

நட்புகளால் தொடரப்படும் நன்முயற்சி


வாய்ப்புகளின் கதவு இன்னும் திறந்திருப்பது மகிழ்வும் நம்பிக்கையும் ஊட்டுவதாக உள்ளது. ஆம்... ஆஸ்திரேலிய இயற்கைச்சூழல் பாதுகாப்பு புகைப்படப் போட்டியில் கலந்துகொண்ட என்னுடைய படங்களுள்  நேற்று காலை வரை அதிகபட்ச வாக்குகளாக 111 வாக்குகளைப் பெற்ற படம் கடற்பாசிப் படம். நூற்றுக்கணக்கான வாக்குகளைப் பெற்ற படங்களின் மத்தியில் இந்தப்படத்துக்கான வெற்றி சாத்தியமா என்று தெரியாத நிலையில் இப்போது சின்னதொரு ஆசுவாசம். நடுவர்கள் போட்டிப்படங்களைப் பரிசீலனை செய்யவிருப்பது நவம்பர் ஏழிலிருந்து என்பதால் வாக்குக்கான காலம் நீட்டிக்கப்பட்டிருக்கலாம். இப்போதும் வாக்களிக்க முடிகிறது என்பது கூடுதல் மகிழ்ச்சி. அதனால் இந்த ஒரு படத்தை மட்டும் முன்னிலைப்படுத்தி வாக்கு சேகரிக்க விரும்பினேன்.


இத்தகவலை நேற்று ஃபேஸ்புக்கில் தெரிவித்தவுடன் ஓடோடி வந்து வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்ட அவர்கள் உண்மைகள் மதுரைத்தமிழன்,  காகிதப்பூக்கள் ஏஞ்சலின்,  ஆல்ப்ஸ் தென்றல் நிஷாந்தி பிரபாகரன் என மூவருக்கும் அளவிலாத என் அன்பையும் நன்றியையும் தெரிவித்து மகிழ்கிறேன். அவர்களுடைய அதிரடி முயற்சியினால்தான் கடற்பாசி படத்துக்கு தற்போதைய நிலவரப்படி 224 வாக்குகள் கிடைத்துள்ளன. அவர்கள் உண்மைகள் வலைப்பூவில் தமிழர்களே ஆஸ்திரேலியாவாழ் தமிழ்ப்பெண்ணுக்கு உங்களின் ஆதரவு தேவை ப்ளீஸ் என்று பதிவாக எழுதியுள்ளார்.  நிஷாந்தியோ தமிழ்மன்றத்தின் சொத்து என்றெழுதி மலைக்கவைத்துள்ளார்.. ஏஞ்சலின் தன் பக்கத்தில் அல்லாது பசுமை விடியல் பக்கத்திலும் பகிர்ந்து வாக்கு சேகரிக்கிறார். இத்தகையோரின் அன்புக்கு முன் நன்றி என்னும் ஒற்றை வார்த்தை அர்த்தமற்றுப் போகிறது.  ஆயினும் அவர்களுக்கு என் அன்பும் நன்றியும்.


தொடர்ந்து நட்புகளும் நலம்விரும்பிகளும் என் பதிவை ஷேர் செய்தவண்ணம் உள்ளனர். இதுவரை 31 பேர் பகிர்ந்துள்ளனர் என்பது கூடுதல் மகிழ்ச்சி.  இன்னுமிருக்கும் சொற்ப மணித்துளிகளில் இன்னும் சில வாக்குகள் கிடைக்கக்கூடும். வெற்றிக்குப் போதுமானதா இல்லையா என்பது தெரியாது எனினும் நம்மாலான முயற்சிகளை எல்லா வழியிலும் செய்திருக்கிறோம் என்ற மன நிம்மதி கிடைக்கும். அத்துடன் உறவுகளும் நட்புகளும் நலம்விரும்பிகளும் என்மீது கொண்ட அன்பும் அக்கறையும் என்னை முன்னிலைப் படுத்த எடுத்துக்கொண்ட முயற்சிகளும் வாழும் நாளெல்லாம் மனம் நிறைத்து மகிழ்வாய்த் தாலாட்டும்.  அனைவருக்கும் என் அன்பான நன்றி.


இதுவரை இப்படத்துக்கு வாக்களிக்காதவர்கள் வாக்களிக்க விரும்பினால்..

படத்துக்குக் கீழே உள்ள கடற்பாசி என்று சிவப்பு நிறத்தில் இருக்கும் பெயரைக் க்ளிக் செய்தால் தளம் திறக்கும்.  அங்கு இதே படம் இருக்கும்.  படத்தின் கீழே வலப்பக்கம் உள்ள இதயவடிவத்தையோ அல்லது ஃபேஸ்புக் பட்டனையோ அல்லது இரண்டையுமோ க்ளிக் செய்யலாம்.  அவ்வளவுதான்.வாக்களித்த மற்றும் வாக்களிக்கவிருக்கும் 
அனைவருக்கும் என் அன்பான நன்றி. 

27 comments:

 1. நானும் வாக்களித்துவிட்டேன்..... வெற்றி பெற வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. மிகவும் நன்றி வெங்கட்.

   Delete
 2. இறுதிச் சுற்றுவரை முன்னணியில் வந்து வெற்றிபெற மனம் நிறைந்த நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. அன்பும் நன்றியும் கோபு சார்.

   Delete
 3. வாக்களித்து விட்டேன். வெற்றி பெற வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. மிகவும் நன்றி கௌரி.

   Delete
 4. வாக்களித்துவிட்டேன்

  ReplyDelete
  Replies
  1. மிகவும் நன்றி அருணா.

   Delete
 5. வாக்களிக்க முடிகிறது. இப்பொழுது 228.

  வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. மிகவும் நன்றி ஜீவி சார். அதிகபட்சமாக 392 வாக்குகள் கிடைத்திருந்தன.

   Delete
 6. நானும் வாக்கு அளித்து விட்டேன், வெற்றி கீதமஞ்சரிக்கு தான்.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் அன்புக்கு மிகவும் நன்றி மேடம்.

   Delete
 7. வாக்கு அளித்து விட்டேன்
  வாழ்த்துக்கள் சகோதரியாரே

  ReplyDelete
  Replies
  1. மிகவும் நன்றி ஐயா.

   Delete
 8. விரைவில் வெற்றி வந்து சேரும் சகோதரி... வாழ்த்துகள்...

  ReplyDelete
  Replies
  1. வருகையும் வாழ்த்தும் மகிழ்வளிக்கிறது. நன்றி தனபாலன்.

   Delete
 9. உங்களுக்கு வலது கை இடது கை போல நிஷா அவர்களும் ஏஞ்சல் அவர்களும் இருக்கிறார்கள் .ஒரு பெண்ணின் வெற்றிக்கு உழைக்கும் மற்ற பெண்களை பார்ப்பது அதிசயமே வெளியே பலர் பாராட்டினாலும் உள்ளுக்குள் புகைவார்கள் ஆனால் இவர்களோ அப்படி அல்லாமல் தேவதைகளாக உங்களை சுற்றி வருகிறார்கள் இவர்கள் இருவருக்கும் எனது பாராட்டுக்கள்

  ReplyDelete
  Replies
  1. கண்ணு பட்டிருச்சேப்பா!சுத்தி சுத்தி தூக்கி போடணுமே!திருஷ்டி பூசணிக்காய்க்கு ஆர்டர் செய்து விட்டேன்.

   மனமார்ந்த வாழ்த்துக்களுக்கு நன்றி!

   Delete
  2. இந்த இணைய உலகில் கிடைத்த அன்புத்தங்கைகள் அவர்கள்.. கைம்மாறு கருதாத அவர்கள் மற்றும் உங்களுடைய உதவியை எந்நாளும் மறவேன். நன்றி மதுரைத்தமிழன்.

   Delete
 10. வெற்றிபெற வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. மிகவும் நன்றி சிவகுமாரன்.

   Delete
 11. முயற்சி திருவினையாக வாழ்த்துகள்

  ReplyDelete
 12. வாழ்த்துகள் ...

  ReplyDelete
  Replies
  1. மிகவும் நன்றி மது.

   Delete
 13. வெற்றி பெற்றதை அறிய ஆவலாக உள்ளேன்

  ReplyDelete
  Replies
  1. முடிவுகள் டிசம்பர் மாதம் வெளியாகும். வெற்றி பெற்றாலும் பெறாவிட்டாலும் நிச்சயம் அறிவிப்பேன். நன்றி சுரேஷ்.

   Delete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.