2 November 2016

உங்கள் பொன்னான வாக்குகளை வேண்டி...

அனைவருக்கும் அன்பான வணக்கம்… புதிதாய் அரசியல் களமிறங்கியுள்ள ஒரு சுயேட்சையின் சங்கடத்தோடு உங்களை வாக்கு கேட்டு அணுகுகிறேன். அரசியலில் இறங்கிவிட்டேனோ என்று அச்சம் கொள்ளவேண்டாம். விஷயம் இதுதான். 

ஆஸ்திரேலியாவின் இயற்கைச்சூழல் பாதுகாப்பு குறித்த புகைப்படப்போட்டியில் இவ்வருடம் பங்கேற்றுள்ளேன் என்பதை மிகவும் மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறேன். புகைப்படப் போட்டிகளில் பங்கேற்கும் ஆர்வம் இருந்தாலும் நான் எடுக்கும் படங்கள் போட்டியில் பங்கேற்கும் தகுதிவாய்ந்தவைதானா என்ற ஐயம் உள்ளுக்குள் இருந்துகொண்டே இருக்கும். பங்கேற்பாளர்கள் பலரும் பிரமாதமான ஒளிப்படக் கலைஞர்கள் என்பதும் பிரமிக்க வைக்கும் படங்களால் நம்மை மிரளவைப்பதுமே காரணம். இம்முறை என் திறமை மீது ஓரளவு நம்பிக்கை வளர்ந்திருப்பதால் துணிந்து களமிறங்கிவிட்டேன். வெற்றியோ.. தோல்வியோ… போட்டியில் பங்கேற்றால்தானே பலன் தெரியும்.. 

The Nature Conservancy Australia 2016 photo competition என்பது போட்டியின் பெயர். ஆஸ்திரேலியாவில் வசிக்கும் எவரும் பங்கேற்கலாம். ஒருவருக்கு 50 படங்கள் வரைமுறை. நான் இதுவரை பதினைந்து படங்களைப் பதிவேற்றியுள்ளேன். ஃபேஸ்புக்கிலும் கடந்த இரு நாட்களுக்கு முன்னர் அறிவிப்பு கொடுத்துள்ளேன். நடுவர்கள் தேர்ந்தெடுக்கும் முதல் மூன்று படங்களுக்கு பரிசு… அதைத் தவிர புகைப்படரசிகர்கள் தேர்ந்தெடுக்கும் படத்துக்கும் பரிசு உண்டு. ஒவ்வொரு படத்துக்கும் கிடைக்கும் வாக்குகளைப் பொறுத்து அப்பரிசுப்படம் எதுவெனத் தேர்வாகும். அதற்குதான் உங்கள் உதவியை நாடுகிறேன். 

உண்மையாகவே என்னுடைய படங்கள் உங்களுக்குப் பிடித்திருந்தால் அவற்றுக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்யுமாறு அனைவரையும் அன்புடன் வேண்டிக்கொள்கிறேன். இதுவரை வாக்களித்த உறவுகளுக்கும் நட்புகளுக்கும் இனி வாக்களிக்கவிருக்கும் அன்புள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றி.  

வாக்களிக்கும் முறை - இங்கு நான் இணைத்துள்ள ஒவ்வொரு படத்தின் கீழேயும் உள்ள ஆங்கிலப் பெயரைச் சொடுக்கினால் போட்டித்தளத்துக்குச் செல்லமுடியும். அங்கிருக்கும் படத்தின் கீழே வலப்பக்க ஓரம் உள்ள இதய வடிவத்தையோ ஃபேஸ்புக் பட்டனையோ க்ளிக் செய்து உங்கள் வாக்கினை செலுத்தலாம். ஒருவர் ஒரு படத்துக்கு ஒரு வாக்குதான் அளிக்க இயலும். ஆனால் எத்தனைப் படங்களுக்கு வேண்டுமானாலும் வாக்களிக்கலாம். 

வாக்களிக்க கடைசி நாள் - நவம்பர் 4.
படம் 1 கருப்பு அன்னங்கள் மேய்தல்படம் 2 சிரிக்கும் கூக்கபராபடம் 3 தேனீபடம் 4 - வெட்டுக்கிளிபடம் 5 - கொரெல்லா குஞ்சுக்கு இரையூட்டுதல்படம் 6 - ஆலமரத்தின் அண்டைவேர்கள்படம் 7 - கருப்பு அன்னங்கள் இணைபடம் 8 - கடற்புறா இணை
படம் 9 - ஒளிர்தல்படம் 10 - நீர் அரணை
படம் 11 - ஸ்குவாஷ் வண்டுபடம் 12 - கடற்பாசி
              படம் 13 - காலா காக்கட்டூ

படம் 14 - கருப்பு அன்னம்படம் 15 - ஆஸ்திரேலிய காகம்

இந்த பதினைந்து படங்களில் உங்களை அதிகம் கவர்ந்த சிலவற்றுக்கோ அல்லது அனைத்துக்குமோ வாக்களிக்கலாம். எனவே உங்கள் பொன்னான வாக்குகளை என் படங்களுக்கு அளித்து ரசிகர் விருப்பப் பரிசுக்குத் தேர்வுசெய்யுமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறேன். வாக்களிக்க இன்னும் இரண்டு நாட்களே உள்ளன. வாக்களிக்க கடைசி தேதி 4-11-16. அனைவருக்கும் என் அன்பும் நன்றியும். 

76 comments:

 1. ஆகிற்று! வாழ்த்துக்கள் கீதா.

  ReplyDelete
  Replies
  1. உடனடியாய் வந்து வாக்களித்தமை கண்டு மிகவும் மகிழ்ச்சி. நன்றி மணிமேகலா..

   Delete
 2. அனைத்து படங்களுக்கும் வோட்டு போட்டுவிட்டேன். எனது வலைத்தளத்திலும் பேஸ்புக்கிலும் பகிர்கிறேன் தமிழ்பெண்மணி வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. பலவிதங்களிலும் ஆதரவளித்து ஊக்கமளிக்கும் உங்களுக்கு என் அன்பும் நன்றியும் மதுரைத்தமிழன்.

   Delete
 3. எல்லாப் படங்களுமே அசத்தல். மிக அருமை. முதலில் இதய வடிவத்தைத் தொட்டு மட்டும் வாக்கு அளித்தேன். பின்னர் லைக் பட்டனையும் சோதித்துப் பார்த்தால் இரண்டும் தர முடிகிறது. எனவே எல்லாப் படங்களுக்கும் இரண்டு பட்டன்களையும் க்ளிக்கி விட்டேன்! அப்புறம் தம வாக்கும் அளித்து விட்டேன் - வழக்கம்போல! வெற்றி பெற வாழ்த்துகள்.

  சமீபத்தில் வாட்ஸாப்பில் ஒரு காணொளி வந்தது. ஒரு இத்தாலிய மங்கையா, ஆஸ்திரேலிய மங்கையா என்று தெரியவில்லை.. நாய், ஆந்தை, யானை, சிரிக்கும் கூக்கபரா போன்று எல்லாம் தத்ரூபமாய்க் குரல் எழுப்பியிருந்தார். ஒவ்வொன்றுக்கும் முத்தாய்ப்பாய் ஒரு சிறு சிரிப்பு! அது நினைவுக்கு வந்தது.

  ReplyDelete
  Replies
  1. இரண்டிரண்டு வாக்குகள் அளித்து ஆதரவு காட்டுவதற்கு அன்பான நன்றி ஸ்ரீராம். தமிழ்மண வாக்குக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

   நீங்கள் குறிப்பிடும் காணொளி நான் பார்த்ததில்லை.. சுற்றிச்சுற்றி என்றாவது எனக்கும் வரும். பார்க்கிறேன். :))

   Delete
 4. படங்கள் ஒவ்வொன்றும் அழகோ அழகு
  வாழ்த்துக்கள் சகோதரியாரே

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் அனைத்துப் படங்களுக்கும் வாக்களித்து சிறப்பித்தமைக்கும் மனம் நிறைந்த நன்றி ஐயா.

   Delete
 5. அனைத்துப் படங்களுக்கும் வாக்கு அளித்துவிட்டேன் சகோதரியாரே

  ReplyDelete
 6. பயர்பாக்ஸில் பேஸ்புக் லைக் பட்டன் தெரியவில்லை... அதனால் குரோமில் உங்கள் தளத்தை மீண்டும் ஒப்பன் செய்து அதன்மூலம் முயற்சி செய்தேன் அதில் லைக்பட்டன் தெரிந்தது லைக்பட்டனை தொடாமல் மீண்டும் இதயம் பட்டனை க்ளிக் செய்தபோது வாக்கு எண்ணிக்கை ஒன்று அதிகரித்தது அதனால் எல்லாபடங்களுக்கும் மீண்டும் ஒரு முறை வாக்கு அளித்துவிட்டேன். இதை நம் நண்பர்களும் முயற்சித்து வாக்கு எண்ணிக்கை அதிகரிக்க உதவலாம் மனம்மிருந்தால்

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் சொன்னபிறகுதான் இதை கவனித்தேன். ஸ்ரீராமும் இதைச் செய்திருப்பதாகத் தெரிவித்துள்ளார். மனமார்ந்த நன்றி மதுரைத்தமிழன்.

   Delete
 7. நேரமில்லை சகோ மாலை மீண்டும் வந்து அனைத்திற்கும் வாக்களிப்பேன் - கில்லர்ஜி

  ReplyDelete
  Replies
  1. மிகவும் நன்றி கில்லர்ஜி.. இன்னும் இரண்டு நாட்கள் உள்ளனவே.. நேரமிருக்கும்போது வாக்களியுங்கள்.

   Delete
 8. வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றிங்க ஜோதிஜி.

   Delete
 9. எல்லா படங்களுக்கும் வாக்களித்துவிட்டேன்...

  ReplyDelete
  Replies
  1. மிகவும் மகிழ்வும் நன்றியும் சரவணன்.

   Delete
 10. வாக்கு போடவிடில் தண்டப்பணம் $50 கட்ட வேண்டும் என்ற பயத்தில் வாக்கு போட்டுள்ளேன்....

  ReplyDelete
  Replies
  1. ஹா... ஹா... இதுகூட நல்ல யோசனையாக இருக்கிறதே.. பயமோ.. பாசமோ... வாக்களித்துவிட்டீர்கள் அல்லவா... என் அன்பும் நன்றியும் புத்தன்.

   Delete
 11. Melbourne இல் இருந்து வாக்குகள் உங்களுக்காக..

  பிடித்தது ... வரிசையில்

  1. Galah
  2.Glowing..

  ReplyDelete
  Replies
  1. வாக்குகளை அளித்ததோடு மிகவும் பிடித்தவற்றையும் குறிப்பிட்டதில் மிகவும் மகிழ்ச்சி. நன்றி நண்பரே.

   Delete
  2. நன்றி சகோதரி... Melbourne பக்கம் வந்தால் அறிவியுங்கள்.. படம் பிடிக்க நிறையவே காட்சிகள் காத்திருக்கின்றன..

   வாழ்த்துக்கள் உங்கள் முயற்சிக்கு ... இப்படி நம்மவர் பலர் ஆஸ்திரேலியாவில் முயல வேண்டும் என்பதே ஆசை

   Delete
  3. மிகவும் நன்றி Dan. சிலவருடங்களுக்கு முன்பு மெல்போர்னில் வசித்திருந்தோம். ஆனால் அப்போது புகைப்படக்கலையில் ஆர்வம் இல்லை.. :)))

   Delete
 12. உங்கள் ஆர்வத்தையும் முயற்சியையும் பாராட்டி அனைத்திற்கும் வாக்களித்துவிட்டேன். வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் வாக்குகளை அளித்து சிறப்பித்தமைக்கும் நெஞ்சம் நிறை நன்றி ஐயா.

   Delete
 13. தங்கள் படங்கள் அனைத்துமே வெகு சிறப்பு!! ஏற்கனவே நாங்கள் வியந்துள்ளோம் தங்கள் படங்களைக் கண்டு, வியந்து ரசித்துப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல இருக்கும். அதனால் எல்லா படங்களுக்கும் இதயத்தையும் தொட்டு, லைக்கும் போட்டுவிட்டோம். அனைத்துப் படங்களுக்கும் போட்டுவிட்டோம்.

  வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. இரட்டை வாக்குகள் அளித்த இரட்டையர் இருவருக்கும் என் அன்பும் நன்றியும்.. தங்கள் வாழ்த்துகளுக்கும் மனமார்ந்த நன்றி கீதா & துளசி சார்.

   Delete
 14. எல்லா படங்களுக்கும் வாக்கு அளித்து விட்டேன் கீதமஞ்சரி.
  படங்கள் எல்லாம் மிக அழகு.
  வெற்றிப்பெற வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் அனைத்துப் படங்களுக்கும் வாக்களித்து சிறப்பித்தமைக்கும் மனமார்ந்த நன்றி மேடம்.

   Delete
 15. போட்டியில் முதல் பரிசு பெற்று வெற்றி வாகை சூட மனம் நிறைந்த வாழ்த்துக்கள் கீதமஞ்சரி!

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் அன்பான நன்றி மனோ மேடம்.

   Delete
 16. லைக் மற்றும் இதய பட்டன்களில் அழுத்தி எல்லாப் படத்துக்கும் வாக்களித்து விட்டேன் வெற்றி பெற வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. இரட்டை வாக்குப்பதிவு செய்து ஊக்கமளிப்பதற்கும் வாழ்த்துகளுக்கும் மனம் நிறைந்த நன்றி ஐயா.

   Delete
 17. அனைத்து படங்களும் அருமை. தேர்ந்த நேர்த்தியுடன் இருந்தது. வெற்றிக்கு வாழ்த்துக்கள்! அனைத்துப் படங்களுக்கும் வாக்களித்துவிட்டேன்.
  த ம 2

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் தமிழ்மண வாக்குக்கும் மிகவும் நன்றி செந்தில். அனைத்துப் படங்களுக்கும் வாக்களித்திருப்பது மகிழ்வளிக்கிறது. மீண்டும் என் நன்றி.

   Delete
 18. அன்பின் தோழி...
  தாங்கள் போட்டியில் வென்றிட எமது மனம் கனிந்த வாழ்த்துக்கள்!
  எனது வாக்குகளும் எனது கணவரின் முகநூல் கணக்கு வாக்குகளும் தங்களுக்கே வழங்கியுள்ளோம்... அனைத்து படங்களுக்கும்!

  ReplyDelete
  Replies
  1. நெகிழவைக்கிறது உங்கள் அன்பு நிலாமகள்.. உங்களுக்கும் உங்கள் கணவருக்கும் என் அன்பும் நன்றியும் தோழி.

   Delete
 19. எல்லாப் படங்களுக்கும் வாக்களித்து விட்டேன் கீதா. வெற்றி பெற வாழ்த்துகிறேன்!

  ReplyDelete
  Replies
  1. எல்லாப் படங்களுக்கும் வாக்களித்தமைக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி அக்கா.

   Delete
 20. வெற்றி பெற வாழ்த்துக்கள்... அனைத்திற்கும் வாக்களித்து விட்டேன்...

  ReplyDelete
  Replies
  1. நீண்டகால இடைவெளிக்குப் பிறகான தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி தனபாலன். வாக்களித்து ஊக்கமளிப்பதற்கும் வாழ்த்துக்கும் அன்பும் நன்றியும்.

   Delete
 21. வணக்கம் சகோ
  புகைப்படங்கள் அனைத்தும் அழகாக இருக்கின்றது உள்ளே சென்று என்றும் 16 வாக்குகள் அளிக்க முயன்றேன் 15 மட்டுமே ஏற்றுக்கொண்டது போட்டியில் வெற்றி பெற எமது மனமார்ந்த வாழ்த்துகள் - கில்லர்ஜி
  த.ம.3

  ReplyDelete
  Replies
  1. ஹா.. ஹா.. என்றும் 16 இல்லையெனில் என்றும் 15 ஆக இருந்திடலாமே... தங்கள் வருகைக்கும் வாக்குகளுக்கும் வாழ்த்துகளுக்கும் மனம் நிறைந்த நன்றி கில்லர்ஜி.

   Delete
 22. எல்லா படங்களுக்கும் வாக்களித்துவிட்டேன்.. All are so nice ma'm.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் படங்களைப் பாராட்டி வாக்களித்தமைக்கும் மிகவும் நன்றி அருணா.

   Delete
 23. வாக்களித்துவிட்டேன்.
  அத்தனை படங்க்ளும் அழகு. அருமை. குறிப்பாய் அந்த ரோமாபுரி இளவரசியும்,டைனோசரின் பாதங்களும் வெகு அருமை.
  (எவையெவை தெரிகிறதா?)

  ReplyDelete
  Replies
  1. ரசனையோடு படங்களுக்கு வாக்களித்தமைக்கு நன்றி சிவகுமாரன். டைனோசரின் பாதங்கள் புரிகிறது.. ரோமாபுரி இளவரசியைத்தான் கண்டறிய இயலவில்லை.

   Delete
  2. ஹாஹா:)
   வெட்டுக்கிளியை உற்றுப் பாருங்கள்

   Delete
  3. ரசனைக்காரர்தான் :)))

   Delete
 24. Anonymous3/11/16 03:46

  சகோதரிக்கு
  தமிழ் மணம் 5.ம்
  படங்கள் 4-5க்கும் வாக்களித்துள்ளேனடா....
  நல்லதிஷ்டம் கிட்டட்டும்.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் வாக்குகள் அளித்து சிறப்பித்தமைக்கும் மனம் நிறைந்த நன்றி தோழி.

   Delete
 25. பல்வேறு வேலைகளால், இப்போது தான் இந்தத்தங்களின் பதிவினை இன்று என்னால் படிக்கவே முடிந்தது.

  இருப்பினும் தாங்கள் சொன்ன முறையில் நான் பதினைந்து இதயங்களையும் வரிசையாகத் தொட்டுப்பார்த்து மகிழ்ந்து விட்டேன். :)

  வாக்கு எண்ணிக்கைகள் மாறிய பிறகு எனது வாக்கின் வரிசை எண் இதோ வரிசையாக (முறையே படம் எண்: 1 முதல் படம் எண்: 15 வரை):-

  72, 85, 70, 51, 70, 61, 57, 58, 66, 72, 60, 93, 58, 55 and 68

  எல்லாப் புகைப்படங்களுமே ஏதோ ஒரு வகையில் மிகச்சிறப்பாகவே அமைந்துள்ளன.

  இந்தப்போட்டியில் முதலிடமும், பரிசுகளும் பெற்றிட என் மனம் நிறைந்த இனிய அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. பல்வேறு வேலைகளுக்கிடையிலும் தவறாமல் வந்து வாக்குகளை அளித்ததோடு வாக்கு எண்ணிக்கைகளையும் அழகாக இங்கே தொகுத்தளித்தமை வியக்கவைக்கிறது. தங்கள் அன்புக்கும் பாராட்டுகளுக்கும் மனம் நிறைந்த நன்றி கோபு சார்.

   Delete
 26. அத்தனைப் படங்களும் அற்புதம். எனது வாக்குகளையும் எல்லாப் படங்களுக்கும் அளித்து விட்டேன். போட்டியில் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துகள் கீதா!

  ReplyDelete
  Replies
  1. தேர்ந்த புகைப்படக் கலைஞரான உங்களிடமிருந்து பாராட்டுப் பெறுவது மிகுந்த மகிழ்வளிக்கிறது ராமலக்ஷ்மி. வாக்குகளுக்கும் வாழ்த்துகளுக்கும் மிகவும் நன்றி.

   Delete
 27. அனைத்து படங்களுக்கும் வோட்டு போட்டுவிட்டேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் வாக்களித்து சிறப்பித்தமைக்கும் மிகவும் நன்றி சுரேஷ்.

   Delete
 28. Replies
  1. வருகைக்கும் வாக்குகளுக்கும் அன்பும் நன்றியும் இமா.

   Delete
 29. டபக்..டபக்னு எல்லாத்தையும் சிந்தாம சிதறாமல் அளிச்சிட்டேன் என்னோட வாக்குகள..
  வாழ்த்துகள் அக்கா..

  ReplyDelete
  Replies
  1. சிந்தாமல் சிதறாமல் வாக்களித்து சிறப்பித்த உங்களுக்கு என் அன்பும் நன்றியும் விஜயகுமார்.

   Delete
 30. டபக்..டபக்னு எல்லாத்தையும் சிந்தாம சிதறாமல் அளிச்சிட்டேன் என்னோட வாக்குகள..
  வாழ்த்துகள் அக்கா..

  ReplyDelete
 31. அனைத்துப் படங்களுக்கும் வாக்கு அளித்துவிட்டேன்...

  silver gulls...little corella mom feeding her chick are beautiful..

  ReplyDelete
  Replies
  1. வாக்குகளோடு உங்களைக் கவர்ந்த படங்களையும் குறிப்பிட்டிருப்பது கூடுதல் மகிழ்வளிக்கிறது. மிகவும் நன்றி அனுராதா.

   Delete
 32. வெற்றி பெற வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஐயா.

   Delete
 33. 3, 4, 5, 6 மிக அருமை. வாழ்த்துக்கள். வாக்களித்தாகிவிட்டது.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் படங்களை ரசித்துக் குறிப்பிட்டமைக்கும் வாழ்த்துகளுக்கும் வாக்குகளுக்கும் மனம் நிறைந்த நன்றி நெல்லைத்தமிழன்.

   Delete
 34. எல்லா படங்களுக்கும் , Love மற்றும் Like வாக்குகள் அளித்துள்ளேன். சகோதரி வெற்றி பெற வாழ்த்துகள். - த.ம.6

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் இரட்டை வாக்குகளுக்கும் வாழ்த்துகளுக்கும் தமிழ்மண வாக்குக்கும் மிகுந்த நன்றி ஐயோ.

   Delete
 35. இன்றைக்கு இரண்டாம் முறையாக வாக்களிக்க முயன்று அவையும் ஏற்றுக் கொண்டது என்று தெரிவிக்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. இரண்டாம் முறையாக வாக்களிக்க முயன்று அவையும் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்ற தங்கள் தகவல் கண்டுதான் வாக்குவேட்டையை மீண்டும் துவங்கினேன். அதற்காக தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி ஐயா. நவம்பர் 4 ஆம் தேதி மாலை 4 மணியோடு வாக்குகள் நிறுத்தப்படும் என்று முன்பு குறிப்பிடப்பட்டிருந்தது.

   Delete
 36. இன்று மூன்றாம் முறை முயன்ற போது ஏற்கவில்லை.

  ReplyDelete
  Replies
  1. இரண்டு முறை வாக்களித்தமையே மிகவும் மகிழ்வளிக்கிறது. மிகவும் நன்றி ஐயா..

   Delete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.