8 February 2012

இன்னுமொரு இனிய தருணம்.




முதல் விருதினை வாங்கிய மகிழ்ச்சியை இன்னும் முழுமையாய் அனுபவித்து முடிப்பதற்குள் அடுத்த விருது. என் எழுத்துக்களின் பால் நேசமும் நம்பிக்கையும் முன்னிலும் அதிகமாய் உணர்கிறேன். இன்னும் அதிகரித்துள்ள கடமையையும் பொறுப்பையும் நினைவுபடுத்தும் அங்கீகாரத்துக்குத் தலைவணங்குகிறேன்.  

மின்மினிப்பூச்சிகள் வலைப்பூவின் விருதுகள்... அன்பின் அங்கீகாரம்என்ற தலைப்பில் தோழி ஷக்திபிரபா பரிந்துரைத்துள்ள விருது "The Versatile blogger award" .



'பன்முகத் திறமையாளர்' என்ற பொருள்படும் இவ்விருதுக்கு எழுத்துலக ஜாம்பவான்களுக்கு மத்தியில் என் பெயரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது கண்டு இன்ப அதிர்ச்சி. அவரது மனம் கவரும் வகையில் என் எழுத்துக்களும் இருப்பது குறித்து பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். நான் வியந்து பார்க்கும் எழுத்தாளுமை உள்ள பதிவர்களுள் அவரும் ஒருவர். அவரிடமிருந்து கிடைக்கும் இவ்விருதினை மிகவும் மகிழ்வோடும் பெருமிதத்தோடும் பெற்றுக்கொள்கிறேன். விருதின் பெருமையைக் காப்பேன் என்றும் உறுதி கூறுகிறேன். ஷக்திபிரபா அவர்களுக்கு மனம் நிறைந்த நன்றிகள் பல. என்னுடன் விருது பெற்ற மற்ற நண்பர்களுக்கும் என் அன்பு வாழ்த்துக்கள். 




தோழி ஷக்திபிரபா அவரது  பதிவினைக் காண இங்கே செல்லவும். 









எழுதுவது தவிர மேலும் எனக்கு விருப்பமான விஷயங்கள்;

1.   இந்தியாவிலிருக்கும் என் அம்மாவுடன் தொலைபேசியில் மணிக்கணக்காய் உரையாடுவது
2.   பிள்ளைகள் பள்ளி விட்டு வந்து சொல்லும் கதைகளைக் கேட்பது
3.   புத்தகங்கள் வாசிப்பது, முக்கியமாய் இயற்கையின் விசித்திரங்களைத் தேடித்தேடிப் படிப்பது
4.   பழைய திரைப்படப் பாடல்களைக் கேட்டு ரசிப்பது
5.   நாணயங்கள், தபால்தலைகள் சேகரிப்பது
6.   வாசலில் அழகழகாய்க் கோலம்போடப் பிடிக்கும்.(இப்போது அந்த வாய்ப்பு இல்லை)
7.   எங்கு, எந்தக் குழந்தையைப் பார்த்தாலும் தூக்கிக் கொஞ்ச மனம் ஏங்கும். (அது சாத்தியமில்லையென்றபோதும் மானசீகமாக சிறு கொஞ்சல்)

 இப்போது என் மதிப்புக்குரிய சில பதிவர்களுக்கு இவ்விருதினை வாசமிகு ரோஜாக்களோடு வழங்கி மேலும் மகிழ்கிறேன்.





 1.   ஹரணி பக்கங்கள்’ திரு. ஹரணி அவர்கள். கையளவு கற்க ஆசை. கடுகளவில் கற்றதிலேயே உழன்று கொண்டிருக்கிறேன் என்று சுயவிமர்சனம் செய்தாலும் இவரது கடுகளவு கற்றலே எனக்குக் கடலளவு கருத்தாழம் கற்பிப்பதால் இந்த விருதுக்குரியவராய் இவரைத் தேர்ந்தெடுப்பதில் பெரிதும் மகிழ்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துக்கள் ஹரணி சார்.






 2.   ’சமரசம் உலாவும் இடமே’ திரு. சார்வாகன் அவர்கள். அறிவியல் கலை, இலக்கியம் சார்ந்த தன் தேடல்களை அழகுத் தமிழில் அனைவரும் அறியும் வண்ணம் பகிரும் திறனுக்கு நன்றியாய் நட்புடன் இவ்விருதை இவருக்கு வழங்குவதில் பெருமகிழ்வு அடைகிறேன். நல்வாழ்த்துக்கள் சார்வாகன் அவர்களே.



 3.   பறத்தல்-பறத்தல் நிமித்தம்’ நிலாமகள் அவர்கள். பரந்த வாசிப்பனுபவம் பறைசாற்றும் பதிவுகள், அநாயாசமான எழுத்துவன்மை, எடுத்தாளும் கருக்களின் பருண்மை என எல்லா பக்கங்களிலும் என்னை அசரவைக்கும் இவருக்கு இவ்விருதினைப் பரிந்துரைத்துப் பெருமையடைகிறேன். மனமார்ந்த வாழ்த்துக்கள் நிலாமகள்.





4.   ஹாய் நலமா?’ மருத்துவர் திரு. எம்.கே.முருகானந்தன் அவர்களுக்கு வழங்குவதில் மிகவும் மகிழ்கிறேன். கட்டுரைகள், அனுபவங்கள் மூலம் மக்களுக்கு நோய்கள் பற்றிய விழிப்புணர்வு உண்டாக்குவதோடு, தமிழின்பால் மிகுந்த பற்றுடன் இலக்கியம், தமிழ் சார்ந்த படைப்புகளின் பகிர்வு, மருத்துவத்துறையின் செயல்பாடுகள் போன்ற பலதரப்பட்ட நிகழ்வுகளையும் எளிய தமிழில் பகிர்ந்து மருத்துவச்சேவையோடு, ‘மறந்து போகாத சில’ தமிழ்ச்சேவையும் ஆற்றும் இவ்வரிய மருத்துவருக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம். அன்பு வாழ்த்துக்கள் டாக்டர்.




5.   தீதும் நன்றும் பிறர்தர வாரா’ திரு. ரமணி அவர்கள். எந்தப் படைப்பிலும் நல்லதொரு கருத்தை உள்ளடக்கி, எளிமையாகவும் அதே சமயம் ஆழ்ந்த சிந்தனை தோற்றுவிக்கும் வண்ணமாகவும், வாழ்வியல் அடிப்படை ரகசியங்களை எவர் மனமும் ஏற்கும் வகையிலும், எண்ணங்களில் ஏற்றம் உண்டாக்கும் வகையிலும் எழுதும் வீரியமிகு எழுத்தாளுமை கொண்டவர். இவருக்கு இவ்விருது மிகவும் பொருத்தமான ஒன்று. உளம் நிறைந்த வாழ்த்துக்கள் ரமணி சார்.   




இன்னும் பலர் இப்பட்டியலில் அடங்கினாலும் விதிமுறைகளைக் கருத்தில் கொண்டு இவர்களுடன் நிறுத்துகிறேன். அனைவருக்கும் என் அன்பு வாழ்த்துக்கள்.



30 comments:

  1. விருது பெற்ற உங்களுக்கும் உங்களிடம் வாங்கும் தோழர்களுக்கும் வாழ்த்துகள் சகோதரி.

    ReplyDelete
  2. தங்களின் கவிதையினை வலைச்சரத்தில் சுட்டிக் காட்டியிருக்கிறேன்.நேரமிருப்பின் பார்வையிடுங்கள்..
    நன்றி.

    ReplyDelete
  3. 'பன்முகத் திறமையாளர்'விருது பெறுவதற்கு மிகவும் பொருத்தமானவர் தாங்கள்.
    வாழ்த்துக்கள். தொடர்ந்தும் உங்கள் படைப்புலகு சிறப்படைய மனமார வாழ்த்துகிறேன்.
    எனக்கும் விருது அளித்துக் கெளரவித்ததற்கு மிக்க நன்றி

    ReplyDelete
  4. வணக்கம் சகோ கீதமஞ்சரி
    உங்கள் பதிவு பார்த்தேன்.பாராட்டுக்கு மிக்க மகிழ்ச்சி எனினும் நாம் செய்வது தேனீ போன்று கருத்துத்தேனை சேகரித்து தமிழ் பதிவெனும் தேன் கூட்டில் வைப்பதுதான்!!!!!!!!!!!!!!!!.

    உண்மையான‌ புகழுக்கு உரியவர்கள் இக்கருத்துகளை உருவாக்கி மனித சமூகத்தை முன்னேற்றப் பாதையில் செல்ல வைத்த மாம்னிதர்களுக்கே
    உங்கள் ஊக்கத்திற்கு மன்மார்ந்த நன்றி

    ReplyDelete
  5. Anonymous8/2/12 15:19

    விருதுகளின் மழைக் காலம் போல் !
    ஆனந்தமாக நனைய வாழ்த்துக்கள் கீத்ஸ் !

    ReplyDelete
  6. உன் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கத் துவங்கி யிருக்கிறது. மேலும் பல விருதுகளை நீ வெல்லும் காலம் வெகுதூரத்திலில்லை! பாராட்டுக்கள் கீதா!

    ReplyDelete
  7. மிக்க நன்றி கீதா. அனைவருக்கும் வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
  8. உங்களால் விருதுகள் பெருமைப்படும் அளவுக்கு மென் மேலும் வளர வாழ்த்துகள்.

    ReplyDelete
  9. மகிழ்ச்சி !பாராட்டுக்கள்..என் கையில் நீங்கள் அளித்த பூச்சரம் பங்கிட்டு வந்தால் என் மன எதிரொலி இங்கும் கண்டேன்...ஆதரவாளர் கூட்டத்தால் முதல் முறை தவறவிட்ட ரமணி அவர்களின் பெயரை இங்கு கண்டு மகிழ்ந்தேன்!

    ReplyDelete
  10. @ மதுமதி,

    வாழ்த்துக்கும், வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதற்கும் மனம் நிறைந்த நன்றி மதுமதி.

    ReplyDelete
  11. @ Muruganandan M.K.

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி டாக்டர். தங்கள் சேவை மகத்தானது. மேலும் பலரும் தங்களால் பயனடைய என் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. @ சார்வாகன்,

    தாங்கள் சாதாரணமென்று சொன்னாலும் அதிலிருக்கும் சிரமம் அறிவேன். அறிவியலை எளிமையாய் அனைவருக்கும் புரியும்வண்ணம் அழகுத்தமிழில் எழுதுவது அனைவராலும் இயலும் செயல் அல்ல. தங்கள் பணி மேலும் சிறக்கட்டும். வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே.

    ReplyDelete
  13. @ ஸ்ரவாணி,

    துவங்கிவைத்தக் கரங்களுக்கு உரியவர் தாங்கள்தானே! தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி தோழி.

    ReplyDelete
  14. @ கலையரசி,

    தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் மனம் நெகிழ்ந்த நன்றி அக்கா.

    ReplyDelete
  15. @ Shakthiprabha

    எனக்கு விருதளித்ததன் மூலம், மேலும் பல பதிவர்களின் பெருமையைப் பறைசாற்ற வாய்ப்பளித்ததற்கு உங்களுக்குதான் நன்றி சொல்லவேண்டும். மனமார்ந்த நன்றி ஷக்தி.

    ReplyDelete
  16. @ dhanasekaran .S

    நிச்சயம் முயல்வேன். உங்களனைவரின் ஊக்கம் என் எழுத்துகளை இன்னும் மேம்படுத்தும். வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி தனசேகரன்.

    ReplyDelete
  17. @ சக்தி,

    ஆம், ரமணி சார் ஒரு அற்புத எழுத்தாளர். அவரைப் பெருமைப்படுத்த எனக்கொரு வாய்ப்பு அமைந்ததற்காய் ஷக்திபிரபாவுக்கு நன்றி சொல்லி மகிழ்கிறேன்.

    வெல்லக்கட்டி பங்களிப்பு இனிக்கிறது சக்தி.

    ReplyDelete
  18. விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.....

    ReplyDelete
  19. விருதினைப் பெற்ற தங்களுக்கும் தங்களினால் விருது வழங்கப்பட்டவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  20. சூட்டோடு சூடாக இன்னுமொன்று.வாழ்த்துகள் கீதா !

    ReplyDelete
  21. அன்புள்ள கீதா அவர்களுக்கு..

    வணக்கம். என்ன சொல்வது என்று நான் அமைதியில் ஆழ்ந்து இருக்கிறேன். இதுவரை நாம் என்ன செய்திருக்கிறோம் என்று விரைவாக காலக் குதிரைகளை விரட்டிவிரட்டியோய்ந்து போயிருக்கிறேன். அவற்றோடு பயணித்தத் தடங்களை மனக்காட்சியில் கொண்டு வந்து பார்க்கிறேன். முடிந்தவரை ஏதோ செய்திருகிறோம் என்கிற ஒரு நிறைவின் நிழலை நான் அனுபவிக்கத் தொடங்கியிருக்கிறேன் அதை உங்களின் அன்புகலந்த விருதால் உணர வைத்திருக்கிறீர்கள்.

    விருது பகிர்தல் என்கிற உங்களின் பெருந்தன்மையில் எனக்குப் பகிர்ந்த விருதினை மிகப் பணிவுடன் உள்ளத்தில் நிரம்பி வழியும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறேன்.

    இன்னும் எனது இலக்குகளை தெளிவுபடுத்தும் ஒரு சாட்டை சுண்டலை இந்த விருதின் வழி எனக்கு சொடுக்கியிருக்கிறீர்கள். முடியுமா என்கிற ஒரு சிறு தயக்கம் இருந்தாலும் நம்மால் முடியாவிட்டால் இனி யாரால் என்கிற பழமொழியின் ஊக்கத்தோடு..பயத்தை மனத்தில் நிறைய தேக்கி இதனைத் தொடர்ந்து கையப்படுத்தித் தக்கவைத்துக்கொண்டு இயங்கவேண்டும் என்கிற முனைப்போடும் இருக்கிறேன்.

    தாங்கள் விருதுபெற்றமைக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். எழுதுங்கள்.
    நன்றிகள் கீதா.

    ReplyDelete
  22. வாழ்த்துக்களக்கா..!

    ReplyDelete
  23. கோவை2தில்லி said...


    \\விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.....

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஆதி.

    ReplyDelete
  24. @ கணேஷ்,

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் என் உளங்கனிந்த நன்றி.

    ReplyDelete
  25. @ ஹேமா,

    சூட்டோடு சூடாக வந்த விருதால் மனம் மிகவும் குளிர்ந்து போயிருக்கிறது. என்ன முரண் பாருங்களேன்.

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஹேமா.

    ReplyDelete
  26. @ ஹரணி சார்,

    தங்கள் கருத்துகள் கண்டு நெகிழ்ந்தேன். எழுத்துலகில் தங்களிடமிருந்து கற்றுக்கொள்ள நிறைய உள்ளது எனக்கு. தங்கள் ஊக்கத்துக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி சார்.

    ReplyDelete
  27. வருகைக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி திவ்யா.

    ReplyDelete
  28. தங்கள் பாராட்டுரைக்கும்
    என்னையும் விருதுக்குரியவராகத் தேர்ந்தெடுத்துக்
    கௌரவித்தமைக்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  29. பதிவுலகில் பெரும் பெருமைக்குரிய படைப்பாளியானத் தங்களுக்கு விருது வழங்குவதில் எனக்குத்தான் பெருமை ரமணி சார்.

    ReplyDelete
  30. அன்புத் தோழியே... எவ்வளவு நாட்கள் கழித்து உங்க விருதைக் கண்ணுற்றாலும் ரோஜாக்களின் மயக்கும் அழகும் வசீகரிக்கும் மென்சுகந்தமும் போல் மனம் வருடிச் செல்கிறது. என்னைப் பற்றி இத்துணை அவதானிப்பு செய்யத் தக்க சிநேகங்கள் நிறைந்திருக்கும் இவ்வலையுலகில் சிறகடித்து பறக்க மேலும் உற்சாகம் தருகிறீர்கள். மிக்க நன்றி. தாமதமான வருகைக்கு பொறுத்தருள்க.

    ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.