13 January 2023

புத்தகத் திருவிழாவில் 'சாத்தான்'

 வணக்கம். 

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

2023 ஆரம்பித்து இரண்டு வாரமாகப் போகுது, இப்போதுதான் இவளுக்கு புத்தாண்டு வாழ்த்து சொல்லத் தோணுதோ என்று நினைப்பீர்கள். என்ன செய்வது, இப்புத்தாண்டை கோவிடோடு அல்லவா கொண்டாட நேர்ந்துவிட்டது! கடந்த மூன்று வருடங்களாக அந்தா இந்தா என்று போக்குக்காட்டி அதனிடமிருந்து ஓரளவு தப்பித்து வந்திருந்தோம். அதற்கு மேலும் தப்பிக்க முடியாதபடி 2022 கடைசியில் கணவருக்கும், 2023 துவக்கத்தில் எனக்கும் வந்துவிட்டது. விலா எலும்பே விட்டுப்போவது போல கடுமையான இருமலும் காய்ச்சலும் உடம்பு வலியுமாக பாடாய்ப்படுத்திவிட்டது. மருத்துவரின் பரிந்துரையின்பேரில் antiviral மருந்துகள் எடுத்துக்கொண்ட பிறகு ஒருவழியாக அதிலிருந்து மீண்டு வந்துவிட்டோம். நல்லவேளையாக தடுப்பூசிகளும் இரண்டு பூஸ்டர்களும் போட்டிருந்தோம். அப்படி இருந்துமே இவ்வளவு சிரமம் என்றால் தடுப்பூசி போடாதவர்களின் நிலையை நினைத்தாலே நடுக்கமாக உள்ளது. எப்படியோ நல்லபடியாக மீண்டு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிவிட்டோம். அம்மட்டில் நிம்மதி.


சரி, இப்போது மகிழ்ச்சியான விஷயத்துக்கு வருகிறேன். இந்த வருடம் 2023 சென்னை புத்தகத் திருவிழாவில் கனலி பதிப்பகம் வாயிலாக என்னுடைய அடுத்த மொழிபெயர்ப்பு நூல் வெளியாகியுள்ளது. லியோ டால்ஸ்டாயின்
‘The Devil’  என்ற குறுநாவல் ‘சாத்தான்’ என்ற பெயரில் வெளியாகியுள்ளது.



மற்றொரு மகிழ்ச்சியான செய்தி, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் வெளியிட்டுள்ள 2022-ல் கவனம் பெற்ற நூல்கள் தொகுப்பில் சென்ற வருடம் கனலி பதிப்பகம் வாயிலாய் வெளியான ‘மழைநிலாக் கதைகள்’ என்ற ஜப்பானிய மொழிபெயர்ப்பு நூலும் இடம்பெற்றிருக்கிறது. இது நான்  எதிர்பாராததொரு அங்கீகாரம்.

தற்போது நடைபெறும் சென்னை புத்தகத் திருவிழாவில் என்னுடைய இந்த இரு நூல்களும் கனலி பதிப்பகத்தின் பிற நூல்களும் கிடைக்கும் அரங்குகள்:

பரிதி பதிப்பகம் - 432

பரிசல் புத்தக நிலையம் -171-172

பனுவல் புத்தக நிலையம் - 199-200

குட்டி ஆகாயம் - 533

பூவுலகின் நண்பர்கள் - 642 - 643

காக்கைக் கூடு- 589-590

 


கோதை பதிப்பகம் வாயிலாக வெளியான என்னுடைய ‘என் அம்மாச்சியும் மகிழம்பூக்களும்’ சிறுகதைத் தொகுப்பு, ‘என்றாவது ஒரு நாள்’ மொழிபெயர்ப்பு நூல் மற்றும் கோதை பதிப்பகத்தின் அனைத்து நூல்களும் கிடைக்கும் இடம்:

கோதை பதிப்பகம் அரங்கு எண் - 303


நூல்களை வாங்கி ஆதரவளிக்குமாறும் வாசித்துக் கருத்தினைப் பகிர்ந்து ஊக்கமளிக்குமாறும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

 




13 comments:

  1. Replies
    1. தொடர்ந்து ஊக்கமளிப்பதற்கு நன்றி தனபாலன்.

      Delete
  2. இப்போது நலமாக இருப்பது அறிந்து மகிழ்ச்சி.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி மேடம்

      Delete
  3. மிக்க மகிழ்ச்சி கீதா. மலர்ந்திருக்கும் புது வருஷம் உங்கள் எழுத்துலகுக்கும் தனி வாழ்வுக்கும் ஒளிமயமான / பிரகாசமான வருடமாக மலரட்டும். கூடவே உங்கள் தரமான மொழிபெயர்ப்பு ஆற்றல் மேலும் மேலும் பிரகாசித்து பல சிகரங்களை எட்டட்டும்.
    வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். தொடர்ந்து உங்கல் பணி சிறப்பதாக!

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வாழ்த்துகளுக்கும் பாராட்டுகளுக்கும் அன்பும் நன்றியும் யசோ.

      Delete
  4. தமிழர் திருநாள் வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. இனிய வாழ்த்துகள் ஐயா.

      Delete
  5. உடல் நலம்மீண்டு நலமுடன் இருப்பது மகிழ்ச்சி. கோவிட்டினால் வரும் சில உடல் வலிகளுக்கு ஃபிசியோதெரப்பி செய்யுங்கள்....

    உங்கள் எழுத்து அங்கீகாரம் பெற்றதற்கு வாழ்த்துகள். மேலும் மேலும் உங்கள் எழுத்து வளர்ந்திட பணி சிறக்க வாழ்த்துகள்! பாராட்டுகள்!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. உங்கள் அன்புக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி தோழி.

      Delete
  6. இன்னும் நிறைய மொழிபெயர்ப்பு நூல்களை தாருங்கள்!.... கூடவே உங்கள் எண்ணங்களில் கருவான நூல்களையும்தான்!!... வாழ்த்துக்கள்!!!
    https://www.scientificjudgment.com/

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமாக தருகிறேன். ஊக்கமளிக்கும் கருத்துக்கு மிக்க நன்றி.

      Delete
  7. உங்கள் பணி மேலும் சிறப்புற வாழ்த்துகள்.

    ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.