தோட்டத்துப் பிரதாபம் - 17
வசந்தமே வருகவே என வசந்தகாலத்தை வரவேற்று
வாழ்த்திக் கொண்டிருக்கின்றன தோட்டம் முழுவதும் வண்ண வண்ணப் பூக்கள்.
பார்வைக்கு அழகாகவும் வசீகரமாகவும் ஆரஞ்சு மற்றும் பிங்க் வண்ணங்களில் பூத்துக்குலுங்கும் இப்பூக்களின் பெயர் Pigface flowers. பார்வைக்கு அழகாக இருக்கும் இப்பூக்களுக்கு பன்றிமுகப்பூ (Pigface flowers) என்று ஏன் பெயரிடப்பட்டுள்ளது தெரியுமா? இதன் பழங்கள்
பார்ப்பதற்கு பன்றி முகம் போல இருப்பதால்தான். பழங்கள் பழுத்தபின் அவற்றையும் படமெடுத்துப் பகிர்கிறேன்.
|
pigface flowers - pink |
|
pigface flowers
|
|
pigface flower |
பூத்துக் காய்த்து இப்பருவத்தின் முதல் விளைச்சலை தாராளமாய் வழங்கிக் கொண்டிருக்கும்
snowpeas பூவும் காயும் கொடியும்.
|
snowpeas flowers |
|
snowpeas |
|
snowpeas
|
தளதளவென்று பூத்துக்
குலுங்கி தோட்டம் முழுவதும் நறுமணத்தால் நிரப்பும் தளவம். குறிஞ்சிப்பாட்டில் கபிலர்
குறிப்பிடும் 99 மலர்களுள் தளவம் எனப்படுவதும் தற்காலத்தில் பிச்சிப்பூ எனப்படுவதும்
இந்த Jasminum polyanthum தானாம்.
|
பிச்சிப்பூ |
|
பிச்சிப்பூ |
|
பிச்சிப்பூ |
அவரைக்கு மட்டுமல்ல,
முள்ளங்கிக்கும் பூ அழகு. முள்ளங்கி விளைச்சலில் தொடர்ச்சியாகத் தோல்வியைத் தழுவினாலும்
பூக்களின் அழகு அதை மறக்கச் செய்துவிடுகிறது.
|
முள்ளங்கிப் பூக்கள்
|
|
முள்ளங்கிப் பூக்கள் |
சிவப்பு, வெள்ளை,
இரண்டும் கலந்தவை என்று ஒரே செடியில் விதவிதமாய் மலர்ந்து மகிழ்விக்கும் சால்வியா
மலர்கள்.
|
salvias |
|
salvias |
|
salvias |
|
salvias
|
|
salvia |
போன வசந்தகாலம் முதல் இப்போது வரை கடந்த ஒரு வருடமாக
ஒரு நாள் கூட விடாமல் பூத்துக்கொண்டிருக்கும் கேலண்டுலா பூக்கள்.
|
calendula |
|
calendula |
|
calendulas |
வசந்தகாலத்தின் முதல் பூக்கள்
|
snapdragon flower
|
|
Pink rose |
|
white rose
|
களையிலும் கலையழகு
காட்டும் குட்டிப்பூ
(பிரதாபங்கள் தொடரும்)
ஆகா...! பார்க்கும் போதே மனம் பார்க்கிறதே...! அற்புதம்...!
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி தனபாலன்.
Deleteமனதை கொள்ளை கொள்ளும் படங்கள்
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா.
Deleteமிகவும் அழகான படங்கள்! ஒவ்வொன்றும் ஒரு வகை அழகு!
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி வெங்கட்.
Delete