மேசைக்கரண்டி
தெரியும். இதென்ன மீசைக்கரண்டி? இரண்டில் ஏதாவது
ஒன்றுதான் சாத்தியம் என்ற சூழலில் இரண்டுக்குமே ஆசைப்பட்டால், கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசையா என்ற சொலவடையைப்
பயன்படுத்துவோம்.
உண்மையிலேயே
ஒருவருக்கு கூழ் குடிக்கவும் ஆசையிருந்து மீசை வளர்க்கவும் ஆசையிருந்தால் என்ன
செய்வார்? மீசையை
இடக்கையால் லேசாக ஒதுக்கிவிட்டுக் குடிப்பார்.
கொஞ்சம்
சோம்பேறிகளாகவோ அல்லது பெரும் செல்வர்களாகவோ அல்லது இரண்டுமாகவோ இருந்தால்?
ஸ்பெஷலாக ஒரு ஸ்பூன் தயாரிக்கப்பட்டுவிடும்,
ஸ்பூனே மீசை மயிரை
ஒதுக்கித் தந்துவிடும்படி.
19-ஆம் நூற்றாண்டில்
ஐரோப்பிய நாடுகளில் மீசை வளர்ப்பில் பெரு மோகம் உருவான காலகட்டத்தில், அரசர்கள் பிரபுக்கள் போன்ற உயர்மட்டத் தலைகள்
சூப் குடிக்கும்போது ஏற்பட்ட சிரமத்தைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டதுதானாம்
இந்த மீசைக்கரண்டி. 😄😄😄
இத்தகவல் இம்மாத 'காக்கைச்
சிறகினிலே' இதழில்
வெளிவந்துள்ளது. காக்கை குழுமத்துக்கு மனமார்ந்த நன்றி.
இது வரை கேள்விப்படாத தகவல். காக்கை சிறகினிலே வெளிவந்திருப்பதற்குப் பாராட்டுகள் கீதா!
ReplyDeleteவருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி அக்கா.
Deleteஅட...! வியப்பளிக்கும் தகவல்...
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தனபாலன்.
Deleteஅறியாத தகவல்
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா.
Deleteவியப்பான செய்தி - முன்பே நீங்கள் முகநூலிலும் பகிர்ந்து கொண்டீர்களோ? எப்படியெல்லாம் யோசித்து இருக்கிறார்கள்!
ReplyDeleteஆமாம் வெங்கட். ஃபேஸ்புக்கில் பகிர்ந்ததைதான் காக்கை சிறகினிலே இதழில் வெளியிட்டுள்ளார்கள். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
Deleteஇதுவரை அறியாத, ஆனால் மிகவும் சுவாரஸ்யமான தகவல்!
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மேடம்.
Deleteபடமும் தகவலும் அருமை.
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மேடம்.
Deleteஅறிந்திராத தகவல் கீதா
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி ப்ரியா.
Deleteநீங்கள் இத்தகவலை ஃபேஸ்புக்கில் பகிர்ந்திருந்த போதுதான் நானும் முதன்முறையாக இக்கரண்டி பற்றி அறிய வந்தேன்.
ReplyDeleteநானும் தற்செயலாகத்தான் இந்த விஷயத்தை அறிய நேர்ந்தது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராமலக்ஷ்மி.
Deleteமீசைக்கரண்டி...ஆஹா வித்தியாச தகவல் ..
ReplyDeleteவருகைக்கும் ரசித்தமைக்கும் நன்றி அனு.
Deleteவணக்கம் மேடம்,
ReplyDeleteஉங்களுடைய மொழிப்பெயர்ப்பு சேஜாவின் வேட்டைக்காரன் கதை படித்தேன். நான் ஒரு பதிப்பகம் நடத்தி வருகிறேன். செகாவ் கதைகள் தொகுப்பு கொண்டு வந்துள்ளேன். மேலும் மொழிப்பெயர்ப்பு தொடர்பாக உங்களிடம் பேசவேண்டும். உங்கள் மின்னஞ்சல் முகவரி அனுப்பவும். என்னுடையது.. creator.saravanan@gmail.com. நன்றி.
சரவணன்,
சென்னை.