4 July 2015

ஒண்டவந்த பிடாரிகள் – இறுதிப்பகுதி (தொலையும் தனித்துவம்)


மண்ணின் சொந்த விலங்குகள் பறவைகள் தாவரங்கள் பற்றி ஒவ்வொருவரும் அறிந்திருத்தல் அவசியம். ஒவ்வொரு பகுதியிலும் வாழும் மக்களுக்கு தங்கள் வாழுமிடத்தின் இயற்கை சார்ந்த புரிதல் இருப்பது சூழலின் வளர்ச்சிக்கு மிகவும் உதவும். குறைந்தபட்சம் சூழல் கெடாமல் பாதுகாக்க உதவும்.

மைனா
நாய்ஸி மைனர்

உதாரணத்துக்கு noisy miner  என்ற பறவையை எடுத்துக்கொள்வோம்.  ஆஸ்திரேலியாவின் சொந்த மண்ணின் பறவையான அது, கிட்டத்தட்ட நம்மூர் மைனாவைப் போன்ற உடல் அமைப்பும் நிறமும் கொண்டது. மைனாவோ அந்நியநாட்டுப் பறவை மட்டுமல்லாது  சொந்த மண்ணின் பறவைகளை வாழவிடாமல் செய்யும் ஒரு ஆக்கிரமிப்புப் பறவைபார்ப்பதற்கு ஒன்றுபோல் இருந்தாலும் உற்றுக் கவனித்தால் இரண்டு பறவைகளுக்குமான வேறுபாடு தெரியவரும். அந்த வேறுபாட்டை அறியாத பலர்  சொந்த மண்ணின் பறவையை வாழவைப்பதாக நினைத்து மைனாக்களுக்ககு இடமளித்தும் உணவளித்தும் வீடுகளில் வளர்த்தும் அவற்றின் எண்ணிக்கை பெருக வழிசெய்கிறார்கள். பொதுவாக செல்லப் பிராணிகள் அல்லாத எந்தப் பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் உணவளிக்கக்கூடாது என்பது ஆஸ்திரேலிய சட்டம். Noisy miner பறவைகளோ கூச்ச சுபாவமுடையவை. ஆனால் மைனாக்கள் மனிதர்களுடன் சகஜமாக பழகவல்லவைஆக்கிரமிப்புப் பறவையான மைனாக்களின் எண்ணிக்கை பெருகுவதற்கு சொல்லவேண்டுமா?

ஆஸ்திரேலியா  தனித்துவமிக்க அழகானதொரு  தீவு. தனித்துவமிக்க பறவைகளும் விலங்குகளும் தாவரங்களும் மனிதர்களும் வாழ்ந்துகொண்டிருந்த நாடு.  பூர்வகுடி மனிதர்களின் வாழ்வியலின் தனித்துவம் இப்போது பல பகுதிகளில் காணாமற்போய்விட்டது. தனித்துவமிக்க மக்களே காணாமல் போனபிறகு  அவர்களுடைய வாழ்வியலின் தனித்துவம் பற்றிப் பேச என்ன இருக்கிறது? இருக்கும் மிச்ச சொச்ச வாழ்க்கைமுறைகளும் ஆங்காங்கே வேடிக்கைக் கூத்தாகவும் விற்பனைப் பொருளாகவும் மாறிவிட்டன.  ஈமு நடனமும் டிஜிரிடூ இசையும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் கலைகளாகிவிட்டன.

டிஜிரிடூ வாசிக்கும் பூர்வகுடி பெரியவர்

இந்த மண்ணின் மைந்தர்கள் அவர்கள்ஆனால் தங்களுக்கென்று இருந்த கலாச்சார பாரம்பரிய வாழ்க்கை முறையை மறந்து அல்லது மறக்கடிக்கப்பட்டு, இன்று காலத்தின் ஓட்டத்தோடு தங்கள் வாழ்க்கை வண்டியை ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள். படிப்படியாய் பூர்வகுடி இனம் தங்கள் தனித்துவத்தை இழந்துவருவது போல் இங்கு வாழ்ந்துகொண்டிருந்த தனித்துவமிக்க உயிரினங்களும் தங்கள் தனித்துவம் இழந்து வாழலாம்அல்லது காலப்போக்கில் அயலக உயிரினங்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் மடிந்துபோகலாம். டைனோசார்கள் வாழ்ந்த காலங்களை கற்பனையாய்த் திரையில் காண்பது போல கங்காருக்களையும், கோவாலாக்களையும் வருங்கால சந்ததிக்கு திரையில் காண்பிக்கும் நிலை வரலாம். டோடோக்களையும் யானைப்பறவைகளையும் போல தரைவாழ் கிளியையும் ரீஜன்ட் தேன்சிட்டையும் படத்தில் காட்டி விளக்க நேரலாம்.  அப்படியொரு நிலைமை உண்டாகக் கூடாது எனில் இப்போதே நாம் விழித்துக்கொள்ளவேண்டும். சூழல் பற்றிய விழிப்புணர்வை நம்மிடையே பெருக்கவேண்டும்.

ஆஸ்திரேலியாவைப் போன்று அவசரப்பட்டு இயற்கைக்கு எதிராக எடுத்த முடிவுகளின் பலனை இன்றும் அனுபவித்துக் கொண்டிருக்கும் உலக நாடுகள் ஏராளம். இனிமேலும் இதுபோன்ற சூழலுக்கு ஒவ்வாத முறையற்ற அறிமுகங்களை மேற்கொள்ளாமல் இருக்க ஆஸ்திரேலியாவின் இன்றைய அவதியை உதாரணமாகக் கொள்வதுதான் புத்திசாலித்தனம் அல்லவா

(இப்போதைக்கு இந்தத் தொடரை நிறைவு செய்கிறேன். மீண்டும் இத்தலைப்பு தொடர்பான தகவல்கள் கிடைக்கும்போது தொடர்வேன். இதுவரை தொடர்ந்து வாசித்தும் கருத்திட்டும் ஆதரவளித்த அனைவருக்கும் அன்பான நன்றி.)

40 comments:

 1. ஆஸ்திரேலியாவின் நிலை மற்ற நாடுகளுக்கு ஒர் பாடம்...

  அருமையான தொடர்... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. தங்களுடைய தொடர்வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி தனபாலன்.

   Delete
 2. கங்காருக்களையும், கோவாலாக்களையும் வருங்கால சந்ததிக்கு திரையில் காண்பிக்கும் நிலை வரலாம்.........
  என்னவொரு அவலம் இயற்கையை நேசிக்க வளரும் தலைமுறைக்கு கற்றுக்கொடுக்க வேண்டும் அதற்கு தங்கள் பகிர்வுகள் உதவும் . வாழ்த்துக்கள் தோழி.

  ReplyDelete
  Replies
  1. பதிவின் நோக்கமும் அதுதான் சசிகலா. இயற்கையின் அருமை தெரியாமல் பிள்ளைகள் இன்று வளர்க்கப்படுகிறார்கள். வரும் தலைமுறையாவது விழித்துக்கொள்ளவேண்டும். அதற்கு இப்பதிவு ஓரளவேனும் உதவினால் மகிழ்ச்சி. நன்றி சசி.

   Delete
 3. இனிமேலும் இதுபோன்ற சூழலுக்கு ஒவ்வாத முறையற்ற அறிமுகங்களை மேற்கொள்ளாமல் இருக்க ஆஸ்திரேலியாவின் இன்றைய அவதியை உதாரணமாகக் கொள்வதுதான் புத்திசாலித்தனம் அல்லவா? //

  ஆம் உண்மைதான். இத்தொடரை படிக்கும் போது அப்படித்தான் தோன்றியது...வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. ஊக்கம் தரும் கருத்துகளுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி உமையாள்.

   Delete
 4. ஒரு கருப்பொருளை எடுத்துக் கொண்டு அதைச்சீராக எழுத மெனக்கெட்டு வெற்றிகரமாக முடித்துவிட்ட உங்களுக்கு என் பாராட்டுக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தொடர்ந்து வருகை தந்து ஊக்கம் தரும் கருத்துகளால் சிறப்பித்த தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி ஐயா.

   Delete
 5. இத்தொடரின் ஒவ்வொரு பகுதியிலும் தங்களின் அயரா உழைப்பும், தளரா ஆர்வமும் தெள்ளத் தெளிவாய் பளிச்சிட்டன
  தங்களைப் பாராட்டியே ஆக வேண்டும்
  நன்றி சகோதரியாரே
  தம +1

  ReplyDelete
  Replies
  1. தங்களுடைய வருகைக்கும் ஊக்கம் தரும் கருத்துக்கும் தமிழ்மண வாக்குக்கும் மிக்க நன்றி ஐயா.

   Delete
 6. கீதா,

  இயற்கையை எதிர்க்கும்போது வரும் பிரச்சினைகளையும் அனுபவித்துத்தானே ஆகவேண்டும் !

  இப்பகுதி சுவாரசியமாக இருந்தது. தகவலுடன் மீண்டும் வாருங்கள். நன்றி கீதா.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் பதிவை ரசித்து இட்டக் கருத்துக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி சித்ரா.

   Delete
 7. வணக்கம்
  ஒவ்வொரு தொடரும் மிகவும் அருமையாக உள்ளதுதங்களின் தேடலுக்கு எனது பாராட்டுக்கள் த.ம 4
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தொடர் வருகைக்கும் கருத்துக்கும் பாராட்டுக்கும் தமிழ்மண வாக்குக்கும் மிகவும் நன்றி ரூபன்.

   Delete
 8. பூர்வகுடி மக்களின் தனித்துவம் தொலைந்தது வருத்தத்துக்குரிய செய்தி! அது போல் மண்ணின் சொந்த உயிரினங்களின் இழப்பும் ஈடு செய்ய முடியாதது. ஆஸ்திரேலியாவிடமிருந்து மற்ற நாடுகள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். சுவையான தொடர். தகவல் கிடைக்கும் போது மீண்டும் துவங்கு கீதா! பாராட்டுக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தொடர்ந்து வந்து ஊக்கம் தரும் கருத்துகளால் சிறப்பித்த தங்களுக்கு மிகவும் நன்றி அக்கா.

   Delete
 9. அனைத்துலக மக்களுக்குமே விழிப்புணர்வூட்டிடும் அருமையானதொரு தொடர் முடிந்து விட்டதே என சற்றே வருத்தமாகத்தான் உள்ளது.

  இருப்பினும் இப்போதைக்கு மட்டும் நிறுத்திக்கொண்டு, பின்பு தகவல்கள் கிடைக்கும் போதெல்லாம் பகிர்ந்துகொள்வதாகச் சொல்லியிருப்பதில் சற்றே ஆறுதலாக உள்ளது.

  மற்றபடி நான் சொல்ல நினைத்த மேலும் சில கருத்துக்களையெல்லாம் திருமதி. ஞா. கலையரசி அவர்கள் மேலே சொல்லி விட்டார்கள்.

  தங்களுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். அன்பான இனிய நல்வாழ்த்துகள். பதிவுகளைத் தொடர்ச்சியாக பகிர்ந்துகொண்டதற்கு நன்றிகள்.

  பிரியமுள்ள கோபு

  ReplyDelete
  Replies
  1. கடுமையான பணிச்சுமைக்கு மத்தியிலும் தவறாது வந்து வாசித்துக் கருத்திட்ட தங்களுக்கு மனமார்ந்த நன்றி கோபு சார்.

   Delete
 10. அன்புடையீர்! வணக்கம்!
  அன்பின் அய்யா திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (05/07/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை அவரது வலைத் தளத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.
  இணைப்பு: http://gopu1949.blogspot.in/

  நன்றி!
  நட்புடன்,
  புதுவை வேலு
  www.kuzhalinnisai.blogspot.com

  ReplyDelete
  Replies
  1. தகவலுக்கும் பாராட்டுகளுக்கும் வாழ்த்துகளுக்கும் அன்பான நன்றி புதுவை வேலு.

   Delete
 11. அன்புள்ள சகோதரி திருமதி. கீதா மதிவாணன் அவர்களுக்கு வணக்கம்! தங்களது பதிவுகளை (தமிழ்மணத்தில்) தொடர்ந்து படித்து வரும் வாசகர்களில், நானும் ஒருவன்.

  நமது மூத்த வலைப்பதிவர் அய்யா திரு வை.கோபாலகிருஷ்ணன் [VGK] அவர்கள், தனது வலைத்தளத்தில் ”நினைவில் நிற்கும் பதிவர்களும், பதிவுகளும்” என்ற தலைப்பினில் வலைப்பதிவர்களை அறிமுகப்படுத்தும் தொடர் ஒன்றினை தொடங்கி எழுதி வருகிறார்.

  தங்களின் வலைத்தளத்தினை இன்று (05.07.2015) அறிமுகம் செய்து தங்கள் எழுத்துக்களை சிறப்பித்து எழுதியுள்ளார், என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

  இது ஒரு தகவலுக்காக மட்டுமே. தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் இனிய நல் வாழ்த்துக்கள்.

  அவரது வலைத்தளத்தின் இணைப்பு இதோ:
  நினைவில் நிற்போர் - 35ம் நிறைவுத் திருநாள்
  http://gopu1949.blogspot.in/2015/07/35.html

  ReplyDelete
  Replies
  1. தகவல் அறிவிப்புக்கும் வாழ்த்துகளுக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி ஐயா.

   Delete
 12. அன்புள்ள சகோதரி திருமதி. கீதா மதிவாணன் அவர்களுக்கு வணக்கம்! தங்களது பதிவுகளை (தமிழ்மணத்தில்) தொடர்ந்து படித்து வரும் வாசகர்களில், நானும் ஒருவன்.

  நமது மூத்த வலைப்பதிவர் அய்யா திரு வை.கோபாலகிருஷ்ணன் [VGK] அவர்கள், தனது வலைத்தளத்தில் ”நினைவில் நிற்கும் பதிவர்களும், பதிவுகளும்” என்ற தலைப்பினில் வலைப்பதிவர்களை அறிமுகப்படுத்தும் தொடர் ஒன்றினை தொடங்கி எழுதி வருகிறார்.

  தங்களின் வலைத்தளத்தினை இன்று (05.07.2015) அறிமுகம் செய்து தங்கள் எழுத்துக்களை சிறப்பித்து எழுதியுள்ளார், என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

  இது ஒரு தகவலுக்காக மட்டுமே. தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் இனிய நல் வாழ்த்துக்கள்.

  அவரது வலைத்தளத்தின் இணைப்பு இதோ:
  நினைவில் நிற்போர் - 35ம் நிறைவுத் திருநாள்
  http://gopu1949.blogspot.in/2015/07/35.html

  ReplyDelete
 13. அருமையானதோர் தொடர். பல புதிய விஷயங்களை உங்களது இத்தொடர் மூலம் தெரிந்து கொள்ள முடிந்தது. நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி வெங்கட்.

   Delete
 14. வணக்கம்,
  அருமையான தொடர்,
  தங்களின் கடுமையான தெடுதல் இதில் இருந்தது,
  வரும் இளம் தலைமுறையினர் இதனைப் படிக்க வேண்டும், ஏதேனும் செய்ய வேண்டும்.
  தங்களின் அடுத்த வரவிற்காய் காத்திருக்கிறோம்.

  ReplyDelete
  Replies
  1. எனக்குத் தெரிந்த தகவல்களை உங்கள் அனைவரோடும் பகிர்ந்துகொள்வதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. அவை பயனுள்ள தகவல்களாய் இருப்பதறிந்து கூடுதல் மகிழ்ச்சி. நன்றி மகேஸ்வரி.

   Delete
 15. நிறைய தகவல்களை வெறும் துளிகளாக கொட்டாமல், அழகாக தொடுத்து இருந்தீர்கள்.. நன்றி..

  ReplyDelete
  Replies
  1. வாசித்துக் கருத்திட்டு அனைவரும் அளித்த ஊக்கமே தொடரின் வெற்றிக்குக் காரணம். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

   Delete
 16. சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வைத் தூண்டியமைக்குப் பாராட்டு . விலங்கு முதலான உயிரினங்கள் மட்டுமல்லாது மனிதர்களே உலகினின்று மறைய நேருமோ ? புவி மேன்மேலும் வெப்பமடைதல் , அதன் விளைவாய்ப் பருவ மாற்றங்கள் , நீர்ப் பஞ்சம், பயங்கரவாதிகள் , ..

  ReplyDelete
  Replies
  1. தற்சமயம் உலகெங்கும் நடக்கும் இயற்கை சீற்றங்களையும் பயங்கரவாதங்களையும் பார்க்கும்போது தாங்கள் குறிப்பிட்டுள்ளது போல நடக்க வாய்ப்பு உண்டு என்றுதான் தோன்றுகிறது. இருக்கும் வரையிலாவது இயற்கையை நேசித்து வாழ்வோமே என்ற ஆதங்கமே எழுதத் தூண்டியது. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

   Delete
 17. மிகவும் அருமையான தொடர் ஒன்றை தந்தமைக்கு மிக்க நன்றிகள் .இவை யாவற்றையும் புத்தக மாக் தொகுத்து வெளியிட்டாள் நன்றாக இருக்கும் ....நன்றிகளும் பாராட்டுக்களும்

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் ஆலோசனைக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி புத்தன்.

   Delete
 18. மிகவும் அருமையான தொடர் ஒன்றை தந்தமைக்கு மிக்க நன்றிகள் .இவை யாவற்றையும் புத்தக மாக் தொகுத்து வெளியிட்டாள் நன்றாக இருக்கும் ....நன்றிகளும் பாராட்டுக்களும்

  ReplyDelete
 19. இயற்கையோடியைந்து வாழ்தலே நன்று... அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜனா சார்.

   Delete
 20. இயற்கை வாழ்வு அருமை ஆனாலும் காலத்தின் கோலம் . மைனா அழகாய் இருக்கு .முடியும் போதெல்லாம் தொடருங்கள் .

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் ஊக்கம் தரும் கருத்துக்கும் நன்றி.

   Delete
 21. வணக்கம்.

  அமெரிக்காவில் ஐரோப்பியர்களின் ஊடுருவல் காரணமாக அம்மண்ணும் மக்களும், உயிரினங்களும் பெருமளவில் அழித்தொழிக்கப்பட்டது இப்பதிவைக்காண நினைவுக்கு வருகிறது.

  மனிதனின் பேராசையும் சுயநலமும் எந்த எல்லை வரைக்கும் செல்லும் என்பதற்கான வரலாற்று உதாரணங்கள் இவை.

  வரலாற்றை முந்தைய மக்களின் படிப்பினைகளாகக் கண்டு தெளிவும் அறிவும் அடையாமல் வெறும் செய்தியாகத் தகவலாகப் படித்துப் போகின்ற மாணவச் சமுதாயத்தை நினைக்கக் கவலை தோன்றுகிறது.

  தொடர்கிறேன்.

  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. \\மனிதனின் பேராசையும் சுயநலமும் எந்த எல்லை வரைக்கும் செல்லும் என்பதற்கான வரலாற்று உதாரணங்கள் இவை\\ பதிவின் நோக்கமும் இதுதான். கடந்தவற்றிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு இனி வருங்காலத்தையாவது செம்மையாக நடத்த வழிவகை அறியவேண்டும். தங்கள் வருகைக்கும் தொடர் கருத்துகளுக்கும் அன்பான நன்றி.

   Delete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.