15 April 2015

அனங்கவேள் பவனி!

அனைவருக்கும் இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

மன்மத புத்தாண்டு என்று பெயரைக் கேட்டமாத்திரத்திலேயே மலர்ச்சி பொங்கும் உள்ளங்களுக்காக மன்மதன் பற்றிய சில வரிகள்... 

மன்மதன் எப்படிப்பட்டவன்?  மன்மதன் எந்த மன்னனுக்கும் குறைவிலாத செல்வாக்குடையவன். குளிர்நிலவை வெண்கொற்றக்குடையாகக் கொண்டு கிளியை வாகனமாய்க் கொண்டு தென்றலெனும் தேர் ஏறி வருகிறான் அவன். இருளெனும் களிறுகள் அவனைப் புடைசூழ்ந்துவர, அவன் வருகையை முரசறைந்து அறிவிக்கிறதாம் ஆர்ப்பரிக்கும் அலையோசை.  இவ்வளவும் எதற்காக? ஊர் துஞ்சும் நேரத்தில் உளந்துஞ்சாது தவிக்கும் நெஞ்சங்களில் காதலுண்டாக்கும் பொருட்டு காமபாணம் ஏந்தி வருகிறான் என்கிறது அரிச்சந்திர புராணப் பாடல். 

திங்கள் வெண்குடைக்கீழ் தென்றல் தேர்மிசை ஏறி வாரி
மங்கல முரசம் ஆர்ப்ப மகர கேதனம் நின்றோங்க
கங்குல் வெங்களிறு சூழ கடுங்கிளிப் புரவி தூண்டி
அங்கண் மாஞாலமெல்லாம் அனங்கவேள் பவனி வந்தான்

மன்மதனுடைய காமபாணம் எப்படிப்பட்டது? கரும்பே வில்... வண்டுகளே நாண்கள்... அம்பாக ஐவகை மலர்கள். அவை என்னென்ன? முதல் மலர் தாமரை.. இது காதலரைப் பற்றிய நினைவைத் தூண்டி காதல்போதையைத் தோற்றுவிக்கும். இரண்டாவது அசோகம்பூ.. இது ஊண் மறக்கச்செய்யும்.  மூன்றாவது மாம்பூ.. இது காதலர் நினைவால் மேனியில் பசலை படர்த்த... நான்காவது முல்லை காதற்பித்தைத் தலைக்கேற்றி உன்மத்தம் பீடிக்கச்செய்யுமாம். 

ஐந்தாவது மலரான நீலோற்பவத்தை மன்மதன் அநேகமாய் பயன்படுத்துவது இல்லையாம்...  அந்த அம்பு கொடுந்தன்மை வாய்ந்ததாம். விரகமேலீட்டால் காதலர் உயிரையும் பறித்துவிடும் தன்மை அதற்குண்டாம். அதனால் மன்மதன் மனமிரங்கி முதல் நான்கு மலரம்புகளை மட்டுமே எய்து காதல் நோயுண்டாக்குவதாக இலக்கியங்கள் பகர்கின்றன. 

நினைக்கு மரவிந்தம் நீள்பசலை மாம்பூ
வனைத்துணவு நீக்கு மசோகு - வனத்திலுறு
முல்லை கிடைகாட்டு மாதே முழுநீலங்
கொல்லுமத னம்பின் குணம்!

&&&&

வசந்தமில்லாத மன்மதன் வருகையா? 
இதோ நெஞ்சமள்ளும் அழகு மலர்களின் அணிவகுப்பு!

Rose- ரோஜா
white Plumeria - 

grevillea

Pink plumeria
red hibiscus - செம்பருத்தி

Bougainvillea - காகிதப்பூக்கள்

Abutilon

white chrysanthemums
Azalea
white water lily - வெள்ளை அல்லி

Ixora bunch - இட்லிப்பூ - வெட்சி

lavender

bird of paradise
madeira 

yellow chrysanthemum - சாமந்தி
pink roses - ரோஜா

cassia senna - ஆவாரம்பூ

Pink Belladonna
dandelion


10 comments:

  1. மன்மதன் பற்றிய மலர்ச்சியளிக்கும் செய்திகளும், மலர்களின் அணிவரிசையும் அழகோ அழகு. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் மன்மதன் பற்றிய பதிவையும் மலர்களையும் ரசித்தமைக்கும் மிக்க நன்றி கோபு சார்.

      Delete
  2. இதுவும் உங்கள் தளமா...
    சித்திரைத் திருநாளை் மலர் முகத்துடன் வரவேற்றாயிற்று...!

    உங்களுக்கும் வாழ்த்துகள்..

    த ம 1

    ReplyDelete
    Replies
    1. இதுவும் என் தளமே. புகைப்படங்களுக்கென தொடங்கிய தளம் இது. தங்கள் வருகையும் வாழ்த்தும் மகிழ்வளிக்கின்றன. மிக்க நன்றி விஜி சார்.

      Delete
  3. இன்று தான் பார்த்தேன். மலர்களின் அணிவகுப்பு கொள்ளை அழகு!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் மலர்களின் அணிவகுப்பை ரசித்ததற்கும் மிக்க நன்றி அக்கா.

      Delete
  4. மன்மதனின் தாக்கம் எம் போன்றோருக்கு இல்லையே. அழகான விளக்கம் நம் முன்னோர்களின் கற்பனைத் திற்த்துக்குத் தலை வணங்குகிறேன் பகிர்வுக்குப் பாராட்டுக்கள் இது ஏப்ரல் பதிவு......

    ReplyDelete
    Replies
    1. மன்மதனின் தாக்கம் தங்களுக்கு இல்லையா? தாக்காமலா அற்புதமானதொரு காதல் மனைவியை அடைந்திருக்கிறீர்கள்?

      தங்கள் வருகைக்கும் சுவையான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி ஐயா.

      Delete
  5. அழகான படங்கள்..... பூக்கள் அத்தனையும் மனதுக்கு இதம் தந்தன.

    ReplyDelete
    Replies
    1. பூக்களை ரசித்தமைக்கு மிகவும் நன்றி வெங்கட்.

      Delete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.