4 April 2015

ஆஸ்திரேலிய பூர்வகுடி மக்களின் கைவண்ணம்

ஆஸ்திரேலிய பூர்வகுடி மக்களின் 
கைவண்ணத்தால் உருவான பொருட்கள். 
(Museum of Contemporary Arts, Sydney)

pandanus palm  எனப்படும் ஒருவித சுருள் பனையின் ஓலைகளையும் 
நாணல் போன்ற புல்வகைகளையும் கொண்டு தயாரிக்கப்பட்ட 
கூடைகளும் மீன்பிடி உபகரணங்களும். 

மீன்பிடி கூடைகள்.

இந்த மீன்பிடி கூடைகளைப் போன்று 
தமிழகத்திலும் இலங்கையிலும் புழங்கப்படுபவை பற்றிய 
மேலதிக விவரங்களை முகநூலில் பகிர்ந்துகொண்ட நண்பர்களுக்கு 
மிகுந்த நன்றி. 

 • Dragonjai Jayaraj கீதா......இதன் பெயர்...ஊத்தால்.....தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் உள்ள ஆண்கள் கூட்டமாக சேர்ந்து கொண்டு இந்த .ஊத்தால்களை எடுத்துக்கொண்டு கடம்பாகுளம்....தாமிரபரணிஆறு....ஆகிய நீர்நிலைகளுக்குஇரவில்போய்....எட்டுக்கட்டைbatteryyin வெளிச்சம் முலமாக கழுத்தளவு தண்ணிரில்நடந்தபடி..இந்தஊத்தால்.களை மீன் இருக்கும் இடங்களில் கவிழத்து உள்ளே இருக்கும் தேள்கண்டை...விலாங்கு ஆகியமீன்களை கையில் உள்ள அருவாளால் வெட்டி பிடிப்பார்கள்...நானும்ஒன்பதாவதுவயதில்நான்குமுறை இந்த மீன்வேட்டையில் ஈடுபட்டுள்ளேன்.....இந்தஊத்தால்....முங்கில் ...பனைமரநார்களால் உருவாக்கப்படுகிறது.....இதன்அடிப்பாகம் இரண்டுஅடிஅகலத்தில்வட்டமாகஇருக்கும் ...மேல்புறம் ஒருஅண்டாவின்வாய்பகுதிபோல்வட்டமாகஇருக்கும்.....நன்றி கீதா ..மறந்துபோனவைகளை மீண்டும் கொண்டுவந்ததற்கு.........

 • Ranjakumar Somapala S இது மிகப் பழமையான மீன்பிடிமுறைகளுள் ஒன்று. இலங்கையின் யாழ்ப்பாணக் குடாநாட்டின் வற்றுக்கடல்களிலும், பரவைக்கடல்களிலும் இந்த முறையைப் பின்பற்றி இப்போதும் மீன் பிடிக்கிறார்கள். இந்தக் கூடை 'கரப்பு" எனச் சொல்லப்படும். யாழ்ப்பாணத்தில் நாணற்புற்கள் இல்லை. ஆகவே தென்னம் ஈர்க்கு, ஈச்சம் மிலாறுகள், பனம் நார் ஆகியவற்றால் மிக அழகாக இந்தக் கரப்புகளைப் பின்னுவார்கள். மீன்பிடிக் கரப்பு 'வால்வு" போன்ற ஒரு பொறிமுறையை அடிப்படையாகக் கொண்டது. கரப்பினுள் மீன்களால் உட்செல்ல முடியும். ஆனால் வெளிவர முடியாது. பல மணிநேரங்களோ அல்லது சில நாட்களோ உயிருடனேயே மீன்கள் இந்தக் கரப்பினுள் மாட்டிக்கொண்டிருக்கும். பரவைக்கடல்கள், வற்றுக்கடல்கள் ஊர் எல்லைகளில் உள்ளதால் அரைஉயிருடன் துடிக்கத் துடிக்க மீன்கள் ஊர்ச் சந்தைகளுக்கு வரும். அனேகமாக மாலை நேரங்களிலேயே கொண்டு வருவார்கள். பரவைக்கடல்களும் வற்றுக்கடல்களும் உப்புத்தன்மை அதிகமானவை. எவ்வளவுக்கெவ்வளவு நீரில் உப்புத்தன்மை அதிகமோ அவ்வளவுக்கவ்வளவு மீன் ருசியாக இருக்கும். எங்கள் ஊருக்கு மிக அருகில் பெரும் பரவைக்கடல் உண்டு. முன்னிரவு நேரத்தில் சுடச்சுடச் சோறும் இந்த மீன் குழம்பும்...... அதிலும் இந்த முறையில் பிடிக்கப்'படும் இறால் இருக்கிறதே...... அதை ஒருதரம் சாப்பிட்டவர் ஆயுளுக்கும் அதன் ருசிக்கு அடிமை. ஆஹா... இப்போ நினைத்தாலும் வாய் ஊறுகிறது.

Geetha Mathivanan இதன் பயன்பாட்டைச் சுட்டும் பூர்வகுடி ஓவியமொன்று.
Geetha Mathivanan's photo.

Ranjakumar Somapala S அசத்தல். அச்சொட்டாக இதே முறைதான் அங்கு பாவிக்கப்படுகிறது. Dragonjai Jayraj குறிப்பிட்ட முறையும் பாவிக்கப்படுவதுண்டு. அதைக் “கரப்புக் குத்துதல்“ என்பார்கள். அதற்கு மீன்பிடிப்பவர் இருளில் அதிக நேரம் செலவழிக்க வேண்டும். மீன் தப்பிச் செல்ல வாய்ப்பும் அதிகம். நான் குறிப்பிடும் முறை கண்டி கட்டுதல் எனப்படும். நீரினுள்ளே சிறு சிறு வயல்கள் போன்ற பரிமாணத்தில் ஈச்சம் மிலாறு மற்றும் அடர்த்தியான கம்புகள், கிளைகள் கொண்ட சிறு பற்றைச் செடிகளால் சுற்றிலும் மூடிய உருவத்தில் வேலி அடைப்பார்கள் . வேலிகளில் ஆங்காங்கே கரப்புகளை பொருத்தி விடுவார்கள். மீன்கள் நீரோட்டத்துடன் செல்கையில்.... வேலிகள் தடுக்க இந்தக் கரப்புகளினுள் நுழையும். ஆறுதலாகப் போய் எடுத்து வருவார்கள். அதைத்தான் இந்தப் படமும் விபரிக்கிறது.

Kuna Kaviyalahan வரலாற்று பேராசிரியர் ரகுபதி யாழ்ப்பாணத்தின் ஆதிக்குடி வள்ளுவ சமூகம் தான் என ஆய்வொன்றில் முன்வைத்தார். பிறிதொரு ஆய்வு பரவை கடல் பகுதியில் தான் யாழ்ப்பாணதின்ஆதிமனிதன்(கி.மு)குடியிருந்தான் எனச்சொல்கிறது. நான் அறிவேன் இந்த வள்ளுவ சமூகம் அதிகம் பரவை கடல் அண்டி இருந்தார்கள். இவர்களிடம் நிங்கள் சொன்ன களங்கண்டி முறை, கரப்புகுத்துமுறை,ஈட்டிகுத்துமுறை, வாள்வெட்டுமுறை, போன்றனவும் இருந்தன. இந்த வகை உபகரணங்கள் நிறைய பயன் படுத்தினார்கள். பல இடங்களில் இத்தொழிலும் இவர்களுக்கு மறுக்கப்பட்டது.

இந்த வள்ளுவ சமூகத்திற்கு என்று தனியான கோவிலும் தெய்வமும் உண்டு. இந்து சமயத்தோடு தொடர் பற்றது. ஒதுக்கப்பட்ட மக்களின் கோவிலை யாரும் போய் பார்த்ததில்லை. தம் தெய்வம் வல்லியக்கன் என்றார்கள். (வல்+இயக்கன்= வல்லியக்கன்)சிலஆயிரம் ஆண்டுகள் கடந்து வந்த மரபு இப்போ மாறுகிறது. அண்மை காலத்தில் இக்கோவில்கள் வல்லிபுர நாதர் என்றும். வல்லியப்பர் என அழைக்க பட்ட இடத்தில். இது பிள்ளையாரப்பா ஆக இருக்கலாம் என்று பிள்ளையார் என்றும் அண்மையில் மாற்ற பட்டிருக்கிறது. கோண்டாவில், சங்கானை. கலிகை, காரை நகர்?. இருபாலை, போன்ற இடங்களில் இக் கோவில்கள் உண்டு. தமிழன்வரலாற்று முதுமையும் பெருமையும் அழிக்க படுகிறது. இந்த வல் இயக்கர்களிடம் தான் மேலே உள்ள படத்தின் வகை கரப்பு, கண்டி, கூடை வகை மீன் பிடித்தல் இருந்ததை போதமையான கள ஆய்வில் கண்டேன். சாபிட்டால் கண்டியில் பட்ட றால் கூட்டு, கூடையில் பட்ட வென்முரல் சொதி, ஈட்டியில் பட்ட கலவாய் மீன் கூழ், கரப்பில் பட்ட விலாங்கு மீன் குழம்பும் ஒடியல் புட்டும் சாப்பிடணும். இதை விட்டு புலம் பெயர்ந்து நடதுறோமே இதல்லாம் ஒரு பொழைப்பு தூ. அண்ணே இந்த உருசி ரொம்ப உயர் சாதியண்ணே.

18 comments:

 1. அறிந்திராத பல தகவல்கள்.
  படங்களுடன்.
  மிக்க நன்றி சகோ!
  த ம 1

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் பதிவை ரசித்தமைக்கும் தமிழ்மண வாக்குக்கும் மிக்க நன்றி விஜி சார்.

   Delete
 2. சுவாரஸ்யமான விவரங்கள்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் பதிவை ரசித்தமைக்கும் நன்றி ஸ்ரீராம்.

   Delete
 3. இங்குதான் கலைகள் பிறக்கின்றன என்று கூறலாம். இவை போன்றவை காக்கப்படும்போதே நாட்டின் பெருமை மேம்படும். நல்ல பதிவு.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் பதிவைப் பாராட்டியதற்கும் மிக்க நன்றி ஐயா.

   Delete
 4. அன்பு சகோதரி
  வணக்கம்!
  மன்மத ஆண்டில் மகுடம் சூடி மகிழ்வு பெறுக!
  இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள்
  நட்புடன்,
  புதுவை வேலு
  WWW.KUZHALINNISAI.BLOGSPOT.COM

  சித்திரைத் திருநாளே!
  சிறப்புடன் வருக!

  நித்திரையில் கண்ட கனவு
  சித்திரையில் பலிக்க வேண்டும்!
  முத்திரைபெறும் முழு ஆற்றல்
  முழு நிலவாய் ஒளிர வேண்டும்!


  மன்மத ஆண்டு மனதில்
  மகிழ்ச்சியை ஊட்ட வேண்டும்!
  மங்கலத் திருநாள் வாழ்வில்!
  மாண்பினை சூட வேண்டும்!

  தொல்லை தரும் இன்னல்கள்
  தொலைதூரம் செல்ல வேண்டும்
  நிலையான செல்வம் யாவும்
  கலையாக செழித்தல் வேண்டும்!

  பொங்குக தமிழ் ஓசை
  தங்குக தரணி எங்கும்!
  சீர்மிகு சித்திரைத் திருநாளே!
  சிறப்புடன் வருக! வருகவே!

  புதுவை வேலு

  ReplyDelete
  Replies
  1. கவிதை வாழ்த்துக்கு மிக்க நன்றி. தங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

   Delete
 5. ஆஸ்திரேலிய பூர்வகுடி மக்களின் கைவண்ணத்தால் உருவான பொருட்கள் அனைத்துமே அழகாகவும் ஆச்சர்யமாகவும் உள்ளன. பகிர்வுக்கு நன்றிகள்.

  முகநூலில் வேறு பலரால் வெளியிடப்பட்டுள்ள, இதன் தொடர்புள்ள செய்திகளையும் அறியத்தந்துள்ளது புதிய முயற்சி. அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் படங்களையும் தகவல்களையும் ரசித்தமைக்கும் மிக்க நன்றி கோபு சார்.

   Delete
 6. அறிந்திராத தகவல்கள். முகநூல் நண்பர்களுக்கும் நன்றி இது ஏப்ரல் பதிவு.......

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் படங்களையும் தகவல்களையும் ரசித்தமைக்கும் மிக்க நன்றி ஐயா.

   Delete
 7. சுவாரசியமான தகவல்கள்.....

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் பதிவை ரசித்தமைக்கும் நன்றி வெங்கட்.

   Delete
 8. நல்ல தொகுப்பு
  வழக்கம்போலவே

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் ரசித்து இட்டக் கருத்துக்கும் நன்றி மது.

   Delete
 9. ஜீஎம்பி ஐயா உங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியமையறிந்து மகிழ்ச்சி. பாராட்டுக்கள்.
  http://drbjambulingam.blogspot.com
  http://ponnibuddha.blogspot.com

  ReplyDelete
  Replies
  1. வலைச்சர அறிமுகத்தைத் தெரியப்படுத்தியமைக்கு மிக்க நன்றி ஐயா.

   Delete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.