10 February 2015

மணிமேகலாவின் அட்சயப்பாத்திரத்தில் என்றாவது ஒரு நாள்!



ஆஸ்திரேலியப் புதர்க்காடுறை மாந்தர்களின் வாழ்க்கையை அடிப்படையாய்க் கொண்ட கதைகளின் தொகுப்பான என்றாவது ஒரு நாள் என்னும் என் புத்தகத்தில் நன்றியுரையில் இடம்பெற்றிருக்கும் தோழி மணிமேகலாவை பலர் அவருடைய வலைத்தளமான அக்ஷ்ய பாத்திரம் வழியே அறிந்திருக்கக்கூடும். தமிழ், தமிழர், சமூகம், பெண்கள், வாழ்க்கை போன்ற பல்வேறுபட்ட சிந்தனைக்களம் சார்ந்த அற்புதமான மற்றும் ஆழமான எழுத்துக்களின் சொந்தக்காரியான அவருடைய சிநேகம் கிடைத்த நாளிலிருந்து என்னுடைய இன்னொரு புதிய பரிமாணம் எனக்குப் பரிச்சயமானது எனலாம்.

ஆஸ்திரேலிய காடுறை கதைகளை நூலாகத் தொகுக்கும் முயற்சிக்கு வித்திட்டவர்களுள் முதன்மையானவர் தோழி மணிமேகலா. என் புத்தகம் எப்போது வரும் என்று காத்திருந்து பெற்றுக்கொண்டபோது அவருடைய உற்சாகம் புரிந்தது. ஒரு வார அவகாசத்தில் முழு புத்தகத்தையும் வாசித்துமுடித்து, கையோடு தன் சந்தோஷ உணர்வுக்குவியலைப் பகிர்ந்துகொண்டபோது உள்ளம் கரைந்துபோனது. தேர்ந்தெடுத்த கதைகளையும், தமிழாக்கிய திறத்தையும் சிலாகித்த அவர், அந்தக் கதைகளினூடே தான் அந்தக்காலத்துக்கே சென்றுவிட்ட உணர்வைப் பெற்றதாகவும் அதிலிருந்து மீளமுடியாமல் நிகழுலகு வரவியலாமல் தவிப்பதாகவும் சொன்னபோது நெகிழ்ந்துபோனேன்.

இப்போது தன் வலைப்பூவான அக்ஷ்ய பாத்திரத்தில் அமுதென வழங்கியிருக்கிறார் நூலின் மீதான தன் விமர்சனத்தை. எந்த ஒளிவு மறைவுமில்லாமல் குறை நிறைகளோடு கூடிய மனந்திறந்த அவரது விமர்சனம் அடுத்தடுத்தப் படைப்புகளின் மீதான என் சிரத்தையைக் கூட்டுமென்பதில் சந்தேகமில்லை.

தோழி மணிமேகலாவின் விமர்சனத்தை வாசித்திட இங்கு வாருங்கள்


வாசிப்பின் மூலம் மொழிபெயர்ப்பாளரோடு மூல ஆசிரியரின் உணர்வுகளையும் மிக அழகாக உணர்ந்ததோடு அவற்றை அனைவரும் அறியத் தந்துள்ள தோழியின் அன்புக்கு என்ன கைம்மாறு செய்வேன், அன்புக்கு பதில் அன்பைத் தருவதைத் தவிர! நன்றி மணிமேகலா.


18 comments:

  1. தங்களுக்கு என் பாராட்டுக்கள் + வாழ்த்துகள்.

    தங்கள் தோழி Ms. மணிமேகலா அவர்களுக்கு என் நன்றிகள்.

    அக்ஷய பாத்திர அமுதமாகவே விமர்சித்திருப்பார்கள் என்ற நம்பிக்கையோடு அங்கு செல்கிறேன்.

    என்றும் அன்புடன் கோபு

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் அன்பான நன்றி கோபு சார். மணிமேகலாவின் தளத்திலும் தங்கள் கருத்துரை கண்டு மிகவும் மகிழ்ந்தேன். மிக்க நன்றி.

      Delete
  2. மிகவும் அருமையாக விமர்சனம் செய்துள்ளார்,நானும் படித்தேன்....காடுறை மொழிபெயர்ப்புக்கு நன்றிகள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி புத்தன். மணிமேகலாவின் தளத்திலும் தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி.

      Delete
  3. மிகவும் அருமையாக விமர்சனம் செய்துள்ளார்,நானும் படித்தேன்....காடுறை மொழிபெயர்ப்புக்கு நன்றிகள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி புத்தன்.

      Delete
  4. முல்லாவின் கதையில் வந்த முல்லாவின் ‘உண்மையைக் காட்டும் திறன்’ அந்த சாதுர்யம் கீதாவுக்கும் அப்படியே வாய்த்திருக்கின்றது.//

    மிக அருமையாக விமர்சனம் செய்து இருக்கிறார் மணிமேகலா அவர்கள்.
    வாழ்த்துக்கள் கீதமஞ்சரி.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மேடம். அட்சயப்பாத்திரம் தளத்தில் விமர்சனத்தை வாசித்து தங்கள் அழகான கருத்துகளைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.

      Delete
  5. வாழ்த்துக்கள் சகோதரியாரே
    தம 1

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஐயா.

      Delete
  6. வாழ்த்துக்கள் கீதா.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி எழில். தோழியின் விமர்சனம் வாசித்துக் கருத்திட்டமைக்கும் மிக்க நன்றி.

      Delete
  7. வணக்கம்
    சகோதரி

    வாழ்த்துக்கள் த.ம2
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ரூபன்.

      Delete
  8. சிறப்பான விமர்சனம்... மணிமேகலா அவர்களுக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் அன்பான நன்றி தனபாலன்.

      Delete
  9. சிறப்பான விமர்சனம். படித்து ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் தோழியின் தளத்தில் விமர்சனத்தை வாசித்துக் கருத்திட்டமைக்கும் மனமார்ந்த நன்றி வெங்கட்.

      Delete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.