27 February 2015

ஒண்ட வந்த பிடாரிகள் - 2 (ஒட்டகங்கள்)




நாடாளவந்த ஐரோப்பியரின் வசதிக்காக ஆஸ்திரேலியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட விலங்குகளுள் ஆடு, மாடு, நாய், பூனை, நரி, கழுதை, குதிரை இவற்றின் வரிசையில் ஒட்டகமும் அடங்கும்.  சாலைவசதியில்லாத அப்போது போக்குவரத்துக்கென ஐரோப்பியர்கள்  அரேபியாவிலிருந்தும் இந்தியாவிலிருந்தும் முதன்முதலாய் 1840 இல் கொண்டுவந்த ஒட்டகங்களின் எண்ணிக்கை வெறும் 24. அதற்கடுத்த ஐம்பதாண்டுகளில் மொத்தமாய் இறக்கப்பட்டவை பன்னிரண்டாயிரம் இருக்கலாம்.


சாலை வசதியில்லாத காலத்தில் போக்குவரத்துக்காகவும், தந்திக்கம்பங்கள், தண்ணீர்க்குழாய்கள், உணவுப்பொருட்கள் போன்று பெரும்பாரங்களைத் தூக்கிச்செல்லவும் பயன்பட்ட அவை, சாலைகள் போடப்பட்டு வாகனங்கள் வழுக்கிக்கொண்டு செல்ல ஆரம்பித்தபின், தேவையற்றுப் போயின. பல ஒட்டகங்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டன.  

இன்றுவளர்ப்பாரும் மேய்ப்பாரும் இல்லாமல் ஆஸ்திரேலியப் பாலையில் திரியும் ஒட்டகங்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட பத்து இலட்சத்தைத் தொட்டிருக்கலாம் என்று 2012 இல் நடத்தப்பட்ட ஆய்வு தெரிவிக்கிறது. 2020 இல் இது இருமடங்காகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறதாம்.



பாலையில் பெரும் வறட்சி நீடிக்கும் காலங்களில் ஆற்றோரப்பகுதிகளை நாடி வரும் ஒட்டகங்கள் அங்கிருக்கும் விவசாய நிலங்களைப் பாழ்படுத்திவிடுகின்றன என்று அரசுக்குப் புகார்கள் குவிகின்றனவாம். செயற்கைக்கோள் மூலம் அவற்றின் நடவடிக்கைகளைக் கண்காணித்ததில் ஒரு ஒட்டகம் ஒரு நாளில் கிட்டத்தட்ட 60,000 சதுர கி.மீ பரப்பளவில் சுற்றித்திரிகிறது என்றும் சுமார் 50 கி.மீ. தூரம் பயணிக்கிறது என்றும் தெரிகிறதாம்.   

காடுவாழ் ஒட்டகங்கள் சில உணவுக்காகவும், பந்தயங்களுக்காகவும், போக்குவரத்துப் பயன்பாட்டுக்காகவும் சில அரேபிய நாடுகளுக்கு அவ்வப்போது ஏற்றுமதியாவது வழக்கம் என்றபோதும் எண்ணிக்கை கட்டுக்குள் அடங்கா நிலையில் ஒட்டுமொத்தமாய் வேட்டை நடத்தப்படுவது ஆஸ்திரேலிய வழக்கம். ஒட்டகம் என்றில்லை.. கங்காருக்களின் எண்ணிக்கை கூடினாலும் அவற்றைக் கட்டுப்படுத்த கங்காரு அறுவடை என்ற பெயரில் வேட்டை நடத்தப்படுகிறது.


ஆஸ்திரேலியாவில் தேவைகளுக்காக விலங்குகளை வேட்டையாடிய காலம் போய் உயிரினங்களின் எண்ணிக்கையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக வேட்டையாடும் காலமாகிவிட்டது. இப்போது. 2009 இல் கிட்டத்தட்ட 1,60,000 ஒட்டகங்கள் கொல்லப்பட்டன. ஒட்டகங்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கான திட்டங்கள் மேலும் தொடர்ந்துகொண்டிருக்கின்றன. அரசு தரப்பில் கிட்டத்தட்ட 19 மில்லியன் டாலர் (கிட்டத்தட்ட இந்திய ரூபாய் மதிப்பில் 92 கோடி 35 இலட்சம்) இதற்கெனவே ஒதுக்கப்பட்டுள்ளதாம்.

ஒட்டகங்களின் எண்ணிக்கை இந்த அளவுக்குப் பெருக என்ன காரணம்? முதலாவது ஆஸ்திரேலியக் கண்டத்தில் பாதிக்கும் மேற்பட்ட நிலப்பரப்பு பாலைதான். ஒட்டகங்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலும் பாலையில் வளரும் அபரிமிதமான கள்ளிச்செடிகளும் இருக்கையில் இனம் தழைக்க சொல்லவேண்டுமா என்ன?

இரண்டாவது காரணம் ஆஸ்திரேலியாவில் சிங்கம், புலி போன்ற வேட்டையாடக்கூடிய பெரிய அளவிலான மாமிச உண்ணிகள் கிடையாது. இங்கிருப்பவற்றிலேயே பெரிய மாமிச உண்ணி என்று சொல்வதானால் டிங்கோ நாய்களைச் சொல்லலாம். மற்றபடி நம்பேட், க்வோல், டாஸ்மேனியன் டெவில் போன்ற மாமிச உண்ணிகள் வீட்டுப்பூனையை விடவும் அளவில் சிறியனவாகத்தான் இருக்கும். பாலைவாழ் கங்காருக்களையும் துரத்தியடித்துவிட்டு ஏகபோக ராஜாங்கம் செய்துகொண்டிருக்கின்றன இந்த பாலைவனக்கப்பல்கள்.

அடுத்த பதிவில் தென்னமெரிக்கத் தேரைகளின் அட்டகாசம் பற்றிப் பார்ப்போம்.

(தொடரும்)
(படங்கள்: நன்றி இணையம்)

34 comments:

  1. அறியாத செய்திகள்... இருந்தாலும் வருத்தப்பட வைக்கின்றன...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தனபாலன்.

      Delete
  2. வியப்பளிக்கும் செய்திகளைப் பகிர்ந்தமைக்கு நன்றி! கொல்வதைத் தவிர வேறூ வழியில்லையா?

    ReplyDelete
    Replies
    1. பல வழிகளையும் யோசித்தே இந்த முடிவுக்கு வந்திருக்கிறார்கள். எல்லாவற்றையும் எழுத ஆரம்பித்தால் ஒரு பெரிய ஆராய்ச்சிக்கட்டுரையாகவே போகும். கருத்துக்கு நன்றிங்க சேஷாத்ரி.

      Delete
  3. ஒட்டகம் என்றில்லை.. கங்காருக்களின் எண்ணிக்கை கூடினாலும் அவற்றைக் கட்டுப்படுத்த கங்காரு அறுவடை என்ற பெயரில் வேட்டை நடத்தப்படுகிறது.//

    தேவை இல்லாத போது அழிப்பது வருத்தமான செய்தி. வேறு வழியில் யோசித்து ஏதாவது செய்யலாம்.

    ReplyDelete
    Replies
    1. உயிரினங்கள் கொல்லப்படுவது நமக்கெல்லாம் வருத்தம் தரும் செய்திதான். பல ஆராய்ச்சிகள் செய்து கடைசியில் இந்த முடிவுக்கு வந்திருக்கிறார்களாம். கருத்துக்கு நன்றி கோமதி மேடம்.

      Delete
  4. //இரண்டாவது காரணம் ஆஸ்திரேலியாவில் சிங்கம், புலி போன்ற வேட்டையாடக்கூடிய பெரிய அளவிலான மாமிச உண்ணிகள் கிடையாது//

    இதுதான் காரணமாக இருக்கும்.

    இல்லாவிட்டால் இயற்கைச் சுழற்சியில் எல்லாவற்றுக்கும் லிமிட் இருக்குமே. ஏதாவது ஒரு கண்ணி அறும்போது பிரச்னைதான். பாவம் ஒட்டகங்கள்!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம். சிங்கம், புலி போன்ற வேட்டையாடக்கூடிய மிருகங்கள் இல்லாத நாட்டில் இது போன்ற விலங்குகளை அறிமுகப்படுத்துமுன்பே யோசித்திருக்கவேண்டும். இப்போது அவதிப்படும்போது எப்படி அழிப்பது என்று யோசிக்கிறார்கள். கருத்துக்கு நன்றி ஸ்ரீராம்.

      Delete
  5. /எண்ணிக்கையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக வேட்டையாடும் காலமாகிவிட்டது. / உண்மைதான். உலகின் பல இடங்களில் பல விலங்கு, பறவைகள் இப்படி வேட்டையாடப்பட வேண்டிய சூழலில் சிக்கிக் கொண்டுள்ளன. தகவல்களுக்கும் பகிர்வுக்கும் நன்றி.

    ReplyDelete
    Replies
    1. இயற்கைக்கு மாறாக மனிதர்கள் எடுக்கும் முடிவுகளின் பாதிப்பு சில சமயங்களில் அவர்களுடைய எதிர்பார்ப்புக்கு மாறாய் அவர்களை நோக்கியே திரும்பிவிடுவதுதான் வருத்தத்துக்குரியது. கருத்துக்கு நன்றி ராமலக்ஷ்மி.

      Delete
  6. அனைத்தும் ஆச்சர்யமான தகவல்களாக இருக்கின்றது தொடர்கிறேன் சகோ
    தமிழ் மணம் 3

    ReplyDelete
    Replies
    1. நான் அறிந்தவற்றை உங்களனைவரோடும் பகிர்வதில் மிகவும் மகிழ்ச்சி. நன்றி கில்லர்ஜி.

      Delete
  7. ஒண்ட வந்த பிடாரிகள் - 2 - ஆஸ்திரேலியாவில் ஒட்டகங்கள் - அருமையான பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி கீதமஞ்சரி

    ReplyDelete
    Replies
    1. பதிவை தங்கள் பக்கத்தில் பகிர்வதற்கும் கருத்துக்கும் நன்றி ஐயா.

      Delete
  8. இந்தியாவில் இருப்பதுபோல் கோரக்க்ஷண சமிதிபோல் ஆஸ்திரேலியாவில் ஒட்டக சம்ரக்ஷணை என்று யாரும் துவங்க வில்லையா,,,,,,,,! ?

    ReplyDelete
    Replies
    1. இன்னும் யாரும் ஆரம்பிக்கவில்லை ஐயா. உங்கள் யோசனையைக் கேட்டு யாராவது ஆரம்பித்தாலும் ஆரம்பிக்கலாம். :) தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா.

      Delete
  9. ஆச்சர்யமான தகவல்கள். அடுத்த தொடரையும் ஆவலாக எதிர்நோக்குகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. இன்னும் இரண்டு மூன்று தொடர்களில் முடிந்துவிடும் என்று நினைக்கிறேன். ஆர்வத்துடனான பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி.

      Delete
  10. ஒரு பக்கம் சில விலங்குகளும் பறவைகளும் அழிவின் விளிம்புக்குத் தள்ளப்பட்டுள்ளன; ஒரு பக்கம் இந்த ஒட்டகங்கள் போல் அளவுக் கதிகமாகப் பெருகி அழிக்கப்படுகின்றன். அந்தந்த மண்ணுக்கேற்ற உயிரினங்கள் வாழும் போது, இயற்கை சமநிலை பாதுகாக்கப் படுகின்றது; நாமாக விலங்குகளையும், தாவரங்களையும் புது மண்ணில் புகுத்தும் போது இது போல் விபரீத விளைவுகள் ஏற்படுகின்றன. புது செய்திகளைச் சுவாரசியமாகக் கொடுப்பதற்குப் பாராட்டுக்கள் கீதா!

    ReplyDelete
    Replies
    1. மிகச்சரியாக சொன்னீர்கள் அக்கா. சூழலுக்கேற்ற விலங்குகளின் வாழ்க்கை மிக அழகாக சமன் செய்யப்பட்டுவிடுகிறது. மாறுபட்ட சூழலில் பாதிப்புகள்தாம் அதிகமாகின்றன. விரிவான கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி அக்கா.

      Delete
  11. வேதனை அளிக்கும் செய்தி சகோதரியாரே
    கோடிக் கணக்கில் நிதி ஒதுக்கி, விலங்கினங்களை வேட்டையாடுவதா,,,
    தம +1

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ஐயா. அவற்றால் ஏற்படும் பாதிப்புகளோடு பார்க்கையில் இந்த நிதி அரசுக்கு குறைவுதான். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா.

      Delete
  12. ஆச்சரியமான தகவல்கள்...பாவம் அவைகள். வருத்தமாக இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. வருத்தமாகத்தான் இருக்கிறது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி உமையாள்.

      Delete
  13. அறிந்திராத தகவல்கள் நிறைய இருந்தன! நல்ல பதிவு மேடம்!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஆறுமுகம் அய்யாசாமி.

      Delete
  14. //ஆஸ்திரேலியாவில் தேவைகளுக்காக விலங்குகளை வேட்டையாடிய காலம் போய் உயிரினங்களின் எண்ணிக்கையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக வேட்டையாடும் காலமாகிவிட்டது.//

    அடப்பாவமே !

    //இப்போது. 2009 இல் கிட்டத்தட்ட 1,60,000 ஒட்டகங்கள் கொல்லப்பட்டன. //

    அடேங்கப்பா !!

    //ஒட்டகங்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கான திட்டங்கள் மேலும் தொடர்ந்துகொண்டிருக்கின்றன. அரசு தரப்பில் கிட்டத்தட்ட 19 மில்லியன் டாலர் (கிட்டத்தட்ட இந்திய ரூபாய் மதிப்பில் 92 கோடி 35 இலட்சம்) இதற்கெனவே ஒதுக்கப்பட்டுள்ளதாம்.//

    ஹைய்யோ ! எதுவுமே அளவுக்கு அதிகமாக உற்பத்தியானால் எவ்வளவு கஷ்டம் பாருங்கோ !

    சுவாரஸ்யமான பகிர்வுகள் ..... இதுவரை அறியாத தெரியாத அரிய பல செய்திகளை தெரிந்துகொள்ள முடிகிறது. பாராட்டுக்கள். தொடரட்டும்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் உற்சாகமூட்டும் கருத்துகளுக்கும் மிகுந்த நன்றி கோபு சார்.

      Delete
  15. ஐயோ பாவம்..மனிதன் செய்யும் தவறுகளுக்குப் பலியாவது அப்பிராணி உயிரினங்கள்..

    ReplyDelete
    Replies
    1. உண்மை கிரேஸ். ஒவ்வொன்றைப் பற்றியும் தெரிந்துகொள்ளும்போது அவற்றின் பரிதாப நிலை நமக்குப் புரிகிறது. பழி ஓரிடம் பாவம் ஓரிடம் என்பது போல் ஆகிவிட்டது அவற்றின் நிலைமை.

      Delete
  16. Anonymous13/3/15 19:44

    ஒண்ட வந்த பிடாரிகள்.
    புதிய செய்திகளாக 2வது வாசித்தேன்.
    ஆர்வமாக உள்ளது தொடருவேன்.

    ReplyDelete
    Replies
    1. தொடர்வதற்கு மிக்க நன்றி தோழி.

      Delete
  17. இந்தியாவிலிருந்து கொண்டு போகப்பட்டது என்றாலும் இந்த ஒட்டகங்கள் சற்றே வித்தியாசமாக இருக்கின்றன.

    எண்ணிக்கை அளவுக்கு அதிகமாகி கொல்லப்படுவது சோகம்.

    ReplyDelete
    Replies
    1. ஒரு திமில் மற்றும் இரண்டு திமில் கொண்ட ஒட்டகங்கள் இரண்டுவகையுமே இங்கே உள்ளன. சில ஒட்டகங்கள் அரேபிய நாடுகளிலிருந்து கொண்டுவரப்பட்டவை என்பதால் இந்திய ஒட்டகங்களிலிருந்து மாறுபட்டிருக்கலாம். கருத்துக்கு நன்றி வெங்கட்.

      Delete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.