30 November 2013

விரக்தியின் விளிம்பில்...
விரக்தியின் விளிம்பு நோக்கி விரையுந்தோறும்
வீசப்படுகிறது ஒரு பாசக்கயிறு.
விடுக்கப்படுகிறது ஒரு விநோத விளிப்பு!
மதியாமல் முன்னேகும் மனக்கயிற்றைக்
இழுத்துப் பிடித்துத் திணறடிக்கிறது ஒரு இறைஞ்சல்.

முரண்டும் திமிறியும் ஆக்ரோஷித்தும் ஆங்கரித்தும்
இளங்கன்று போலத்துள்ளியும் துவண்டும் எனப் 
பலவாறாய் முயன்றும்
பலனற்றுச் சோர்ந்துவிழுமொரு பொழுதில்
கைவிரித்து தன் தளைகளைக் கழற்றிவிட்டு
கள்ளச் சிரிப்பொன்றை உதிர்த்துக்கொண்டே
கண்மறைந்து போகிறது 
வெறுமையின் கடைசித்தடமும்.

************************************** 


42 comments:

 1. வணக்கம்

  அழகான கவித்துவம்.... எழுதிய விதம் நன்று வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 2. வெறுமையின் கனத்தை உணர்ந்தேன்
  மனம் கவர்ந்த கவிதை
  பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. அருமை...

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 4. உங்கள் தளத்திற்கு நீண்டநாட்களுக்குப் பிறகு வருகிறேன்...கவிதை அருமை..

  ReplyDelete
 5. பாறை இடுக்கிலும் ஓர் பூ பூத்ததென்ன ?

  ReplyDelete
 6. சில் நேரங்களில் கவிஞர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்பது புரியாமல் போகிறது. புரியாவிட்டால் என்ன ?சொல்லத் துடிக்கும் உள்ளத்தின் ஏதோ வெளிப்பாடு என்று நினைத்து அருமை என்று பாராட்டிச் செல்கிறேன். வாழ்த்துக்கள்

  ReplyDelete
 7. mmm....
  ethaarththa nadai...

  ReplyDelete
 8. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/11/blog-post_30.html) சென்று பார்க்கவும்... நன்றி...

  ReplyDelete
 9. ’கண்மறைந்து போகிறது வெறுமையின் கடைசித்தடமும்’ என்ற இறுதி வரிகள் விரக்தியின் விளிம்பினை நன்கு எடுத்துக்கூறுவதாக உள்ளது.

  சோக கீத படைப்புக்கும், பதிவுக்கும் பாராட்டுக்கள்.

  ReplyDelete
 10. விரக்தியின் விளிம்பில் மனத்தின் நிலை குறித்து மிக அருமையாக
  உணர்வுக் கவிதை ஒன்றினைத் தந்துள்ளீர்கள் தோழி !! வாழ்த்துக்கள்
  தொடரட்டும் மென்மேலும் இன்பக் கவிதைகள் மகிழ்வுடனே .

  ReplyDelete
 11. எவ்வளவு இருந்தாலும் சில நேரங்களில் வெறுமையான சூழல் வந்து கொஞ்சம் மனதை அசைத்து பார்க்கும். கவிதை அருமை.

  ReplyDelete
 12. காரணமே புரியாமல் சில கணங்களில் மனதில் வெறுமை சூழ்வதை நானும் அனுபவித்ததுண்டு. நிதர்சனமான கவிதையின் கனம் என்னுள்ளும்! அருமை!

  ReplyDelete
 13. மிக அருமை...
  வணக்கம்...

  நீங்க செல்போன் வச்சிருக்கீங்களா?

  அப்போ கண்டிப்பா ஆண்ட்ராய்ட் போனாதான் இருக்கும்..

  சரியா...?

  உங்களோட செல்போனை மத்தவங்க அநாவசியமா பயன்படுத்த கூடாதுன்னு நினைக்கிறீங்களா?

  அப்போ தொடர்ந்து படிங்க...

  ஸ்மார்ட் போன்களை பாதுகாக்க புதிய சாப்ட்வேர்..!

  ReplyDelete
 14. வெறுமை ஒவ்வொருவரையும் ஏதோ ஒரு கணத்தில் விரக்தியின் விளிம்புக்குத் துரத்தவே செய்கிறது. ஆனால் கடைசி நிமிடத்தில் பெரிய மனது பண்ணித் தன் தளைகளை அவிழ்த்து விட்டு அது கண்மறைந்து போவதால் தான் பெரும்பாலோர் இவ்வுலகில் உயிர்பிழைத்திருக்கிறோம். நிதர்சனமான உண்மையை வெளிப்படுத்தும் நல்லதொரு கவிதைக்குப் பாராட்டு கீதா!

  ReplyDelete
 15. // விரக்தியின் விளிம்பு நோக்கி
  விரையுந்தோறும வீசப்படுகிறது
  ஒரு பாசக்கயிறு.//

  பாறைகளின் இடுக்கில் மலர்ந்திட்ட பாசமலர் போல விரக்தியின் இடையே ஒரு பாசக்கயிறு. எல்லோருக்கும் அவ்வப்போது தோன்றும் இனம்புரியாத கவலையை கவிதை வரிகளில் தந்ததற்கு நன்றி!

  ReplyDelete
 16. @ஸ்ரீராம்.

  உடனடி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸ்ரீராம்.

  ReplyDelete
 17. @2008rupan

  வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ரூபன்.

  ReplyDelete
 18. @Ramani S

  தங்கள் வருகைக்கும் கவிதையை ரசித்தமைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ரமணி சார்.

  ReplyDelete
 19. @திண்டுக்கல் தனபாலன்

  வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி தனபாலன்.

  ReplyDelete
 20. @kaliaperumalpuducherry

  நீண்டநாட்களுக்குப் பிறகான வருகைக்கும் கவிதையை ரசித்தமைக்கும் மிக்க நன்றி கலியபெருமாள்.

  ReplyDelete
 21. விரக்தியின் விளிம்பில் உள்ளவர்களுக்கு அதை தடை செய்ய பாசம் இரைஞ்சல் போன்றவையும் தேவைதான் . ஒருவிதத்தில் நல்லதும் கூட .
  ஆழமான பொருளுடைய கவிதை

  ReplyDelete
 22. @ஸ்ரவாணி

  அழகாய்ப் பற்றிக்கொண்டீர்கள் கவிமையத்தை. நன்றி ஸ்ரவாணி.

  ReplyDelete
 23. @G.M Balasubramaniam

  சிலநேர மனநிலைகள்... இதுபோல் சில பிதற்றல்களை உருவாக்கும். பொறுத்துக்கொள்ளவும்.
  தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஐயா.

  ReplyDelete
 24. @Seeni

  வருகைக்கும் ரசித்தமைக்கும் நன்றி சீனி.

  ReplyDelete
 25. @திண்டுக்கல் தனபாலன்

  தகவலுக்கு நன்றி தனபாலன். சென்று பார்க்கிறேன்.

  ReplyDelete
 26. @வை.கோபாலகிருஷ்ணன்

  தங்கள் வருகைக்கும் கவிதை பற்றியக் கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி வை.கோ.சார்.

  ReplyDelete
 27. @அம்பாளடியாள் வலைத்தளம்

  வருகைக்கும் கவிதை பற்றியக் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்.

  ReplyDelete
 28. @கோமதி அரசு

  அழகாகச் சொன்னீர்கள். தங்கள் வருகைக்கும் கவிதை பற்றியக் கருத்துக்கும் மிக்க நன்றி மேடம்.

  ReplyDelete
 29. @பால கணேஷ்

  வருகைக்கும் கவிதையை அனுபவித்துக் கருத்திட்டமைக்கும் மிக்க நன்றி கணேஷ்.

  ReplyDelete
 30. @வெங்கட் நாகராஜ்

  வருகைக்கும் கருத்துக்கும் தமிழ்மண வாக்குப்பதிவுக்கும் மிக்க நன்றி வெங்கட்.

  ReplyDelete
 31. @suppudu

  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சுப்புடு.

  ReplyDelete
 32. @கலையரசி

  மிக அழகான ரசனையான பின்னூட்டம். வருகைக்கும் கவிதையை ரசித்து இட்டப் பின்னூட்டத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி அக்கா.

  ReplyDelete
 33. @தி.தமிழ் இளங்கோ

  தங்கள் அருமையான கருத்துரை கண்டு மகிழ்ந்தேன். வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா.

  ReplyDelete
 34. விரக்தியும் வெறுமையும் வாராமல் இருக்காது வாழ்வில். பாசப்பிணைப்புகள் பற்றி இழுக்கும் போது வெறுமை காணாமல் போக அங்கு நிறைவு திரும்ப வந்துவிடும். சக்கரம் போல் சுழன்று கொண்டு தான் இருக்கப் போகிறது. நாம் யாரும் தப்பமுடியாது இதற்கு.
  அர்த்தமுள்ளவை பகிர்வுக்கு நன்றி வாழ்த்துக்கள் ....! தொடர்ந்து வருகிறேன்.

  ReplyDelete
 35. வெறுமைகளின் ஆக்கிரமிப்பு இருந்தாலும் மீறி எழும் தேடல் உணர்ச்சிதான் வாழ்க்கையை இழுத்துச் செல்லும் ரயில் எஞ்சினாய் வாழக்கை வண்டியை இழுத்துச் செல்கிறது. பாறைகளின் கடுமை பூக்களின் எழுச்சியை தடுத்து விடுமா என்ன? அருமையான கவிதை.

  ReplyDelete
 36. வெறுமை வெற்றிடமல்ல.எண்ணங்களின் ஓய்வு.பூக்கள் மலரவே .கவிதை உணர்வு பூர்வமாயுள்ளது. வாழ்த்துக்கள் தோழி

  ReplyDelete
 37. @Iniya

  வருகைக்கும் அழகான ஆழமானக் கருத்துரைக்கும் மிக்க நன்றி இனியா.

  ReplyDelete
 38. @துரைடேனியல்

  வருகைக்கும் அற்புதமானக்கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றி துரைடேனியல்.

  ReplyDelete
 39. @Geetha M

  வருகைக்கும் மேலானக் கருத்துரைக்கும் மிக்க நன்றி கீதா.

  ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.