19 July 2012

மடந்தை நிலா

 

நிலவென்றொரு பெயர்
தமிழுக்கு உண்டாம்;

நிலவின் தன்மையும்தமிழின் இனிமையும்,
நிழலாய் நல்லொழுக்கமும்,
நீங்காத நகையுணர்வும்
நிலைகொண்ட உனக்கிட்டேன்,
அப்பெயரினை, அன்பு மகளே!
வெண்ணிலா!
சொல்லவும் உன்பெயர் வெல்லமடி!
உன் உள்ளமோ, பாசத்தின் வெள்ளமடி!

என்னைத் தாயாக்கிய பெண்ணே,
நீயும் தாயாகிறாய்,
என்னைத் தாலாட்டும் தருணங்களில்!

கணினிப்பாடம் கற்பிக்கிறாய் எனக்கு,
கண்டிப்பான ஆசிரியையாய்!

கணிதம் கற்றுக்கொள்கிறாய் என்னிடம்,
கவனம் சிதறா மாணவியாய்!
 தலைவலித்தைலம் தடவும்
தளிர்விரல்களில் காண்கிறேனடி,
உன்னை ஓர் தாதியாய்!

குழம்பிய மனநிலையிலும், குமுறி அழும்போதும்,
இதமாய் அணைத்து, கண்ணீர் துடைத்து,
இதுவும் கடந்துபோகுமென்றே
ஆறுதல் சொல்கிறாய்,
அனைத்தும் அறிந்த தோழிபோல்!

பிறர் என்னைப் பரிகசித்தாலும்
பொறுக்கமாட்டாமல் பாய்ந்தெழுகிறாய், என்
பாதுகாவலனென பதவியேற்று!

சுட்டித் தனம் செய்யும் குட்டித்தம்பியிடம்
அம்மாவை வருத்தாதேயடா என்று
அவ்வப்போது அறிவுரைக்கும்
ஆசானாகவும் ஆகிறாய்!

பள்ளியிலே சிறப்புற்று  பெற்றவரை முன்னிறுத்தி
பெருமிதத்தில் எனையாழ்த்தி
பெற்ற பலனைப் பெறச்செய்கிறாய்!

 'இவளல்லவோ பெண்!' என்று
அத்தனைப் பேரும் உரைக்கக்கண்டு
பெறுகிறேனடி  பெண்ணே, உன்னால் பேரின்பம்!
இத்தனையும் செய்துமுடித்தபின்
போனால் போகிறதென்று
ஒருநாளுக்கு ஓராயிரம் முறை
அம்மா, அம்மா என்றழைத்து,
என் செல்ல மகளுமாய் வலம் வருகிறாய்!

எங்கிருந்தோ வந்தான், பாரதிக்கோர் கண்ணன்;
என் வயிற்றில் வந்துதித்தாய்,
எனையாள்கிறாய் உன் அன்பால்!

பதினாறாம் ஆண்டில் பாதம் பதிக்கும் உனக்கு
பதினாறு பேறும் தவறாமல் சேரும் என்றே
வாழ்த்துகிறேன் கண்ணே!
பாசப்பைங்கிளியே! பல்லாண்டு நீ வாழி!
******************

(இரண்டு வருடங்களுக்கு முன் நிலாவின் பதினாறாம்  பிறந்தநாளுக்கு அம்மாவின்  பரிசென  எழுதி  தமிழ்மன்றத்தில்  பதிவிட்ட கவிதை இது. )

படம் உதவி: இணையம். 

61 comments:

  1. சிறப்பான கவிதை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி சுரேஷ்.

      Delete
  2. இயல்பாய் அழகாய் அருமையாய் மனதை வருடி சென்றது இந்த கவிதை .ஆச்சர்யப்பட்டுபோனேன் நீங்க சொல்லிய அனைத்தும் எங்கள் வீட்டிலும் நடப்பவை
    (கணினி /SPELLINGS/ காபிடல் லெட்டர்ஸ் அனைத்தையும்எனக்கு திருத்துவது என் சுட்டிப்பென்தான்)

    ReplyDelete
    Replies
    1. தாய்க்கும் மகளுக்குமான பந்தம் தோழமையாய் மாறிவருவது எவ்வளவு அழகான ஒரு மாற்றம். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஏஞ்சலின்.

      Delete
  3. வெண்ணிலா பெயரும் அழகு, இந்தக்கவிதையும் அழகு, காட்டியுள்ள அசையும் படமும் அழகு. மொத்தத்தில் அனைத்துமே அழகோ அழகு; அழகு நிலா தான். மனமார்ந்த வாழ்த்துகள் தங்கள் மகளுக்கு. அழகு நிலா போலக் கவிதை தந்த தங்களுக்கு என் பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. அங்குலம் அங்குலமாய் அனைத்தையும் ரசித்த அழகுக்கும் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் மனமார்ந்த நன்றி வை.கோ.சார்.

      Delete
  4. Replies
    1. தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ராமலக்ஷ்மி.

      Delete
  5. கண்ணனை பாரதி பல ரூபங்களில்
    கண்டு மகிழ்ந்து படைத்த கவிதைகள் போல்
    பெண்ணைத் தாய் கண்டு மகிழ்ந்து கொண்டாடும்
    கவிதை அருமையிலும் அருமை
    மனம் கவர்ந்த பதிவு
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் தொடர் வருகைக்கும் ஊக்கம்தரும் பின்னூட்டத்துக்கும், தமிழ்மண வாக்குப்பதிவுக்கும் மனம் நிறைந்த நன்றி ரமணி சார்.

      Delete
  6. அன்பான வரிகள்... அழகான கவிதை...
    வாழ்த்துக்கள்...
    பகிர்வுக்கு நன்றி சகோ...தொடருங்கள்... (த.ம. 2)

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் ஊக்கத்துக்கும் மிகவும் நன்றி தனபாலன்.

      Delete
  7. சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை சகோதரி..
    படிக்க படிக்க எனக்கு இப்படி ஒரு பெண்பிள்ளை இல்லையே என
    மனம் ஏங்குகிறது....

    ReplyDelete
    Replies
    1. தங்கள் ஏக்கம் உணர்த்திய வரிகளே போதும், வேறொரு பாராட்டு வரிகள் தேவையில்லை. வருகைக்கும் நெகிழ்வானக் கருத்துக்கும் நன்றி மகேந்திரன்.

      Delete
  8. அழகான கவிதையொன்றை பரிசாக கொடுத்துவிட்டீர்கள் அருமை..

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி மதுமதி.

      Delete
  9. வாழ்கையின் ஒவ்வொரு சிறிய சந்தோசமான நிகழ்வுகளையும் மிகவும் ரசித்து ரசித்து அனுபவிக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.! உங்கள் கவிதை வரிகள் அதைத்தான் பறைசாற்றுகின்றன! வாழ்த்துக்கள் சகோதரி (TM 4)

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், வரலாற்று சுவடுகள். அதில்தானே மகிழ்வும் மனநிறைவும் வாழ்வதற்கான பொருளும் அடங்கியிருக்கிறது. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி.

      Delete
  10. anpaana thaayin-
    paasa velipaadu!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி சீனி.

      Delete
  11. மகளை ரசித்த தாயின் கவிதையையும் கவிதையின் ஊடாக மகளின் பாசத்தையும் நன்கு ரசித்தேன். மகளாய், தோழியாய், தாயாய் பல ரூபங்களில் வெண்ணிலாவைக் கண்டு மகிழ்வது பாசத்தின் உச்சம். கொடுத்து வைத்த வெண்ணிலா. பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் ரசித்து மகிழ்ந்து இட்டப் பின்னூட்டத்துக்கும், வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் நன்றி கணேஷ்.

      Delete
  12. Anonymous20/7/12 16:51

    ''...சொல்லவும் உன்பெயர் வெல்லமடி!
    உன் உள்ளமோ, பாசத்தின் வெள்ளமடி!...

    மிக இனிய வெளிப்பாடு!. நன்று!. ரசனை!.
    நல்வாழ்த்து சகோதரி.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோதரி.

      Delete
  13. தங்கள் வரிகளை மீண்டும் மீண்டும் படித்தேன் சகோ எனக்கும் பெண் பிள்ளையில்லை ஏக்கமே மிஞ்சுகிறது. படம் அழகு பார்த்தபடி வெகு நேரம் இருந்துவிட்டேன்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் ஏக்கம் எனக்குள் உண்டாக்கியது நெகிழ்வு. வருகைக்கும் ரசித்து மகிழ்ந்தமைக்கும் நன்றி சசிகலா.

      Delete
  14. பெண்மையின் உள்ளம்
    பொங்கும் பரவசம் .......
    தாய்மையின் தித்திப்பு
    மகளின் மருந்து ......
    அறுசுவை உணர்வு ............
    வளர்க உம புலமை

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் ரசித்து மகிழ்ந்து இட்டப் பின்னூட்டத்துக்கும் மனம் நிறைந்த நன்றி சரளா.

      Delete
  15. 'இவளல்லவோ பெண்!' என்று

    அத்தனைப் பேரும் உரைக்கக்கண்டு
    பெறுகிறேனடி பெண்ணே, உன்னால் பேரின்பம்!

    கீதாக்கா....

    தாயே மகளாக... மகளே தாயாக...
    அருமை அருமைங்க...
    எழுத வார்த்தையைத் தேடுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் ரசித்து மகிழ்ந்தமைக்கும் மிகவும் நன்றி அருணா செல்வம்.

      Delete
  16. மிக அழகான கவிதை.இவ்வளவு சிறப்பாக எழுத முடியுமா என்று என்னை வியப்பில் ஆழ்த்தி விட்டீர்கள்.உங்கள் மகளுக்கு என் வாழ்த்துகள் எல்லாம் பெற்று இன்புற வாழ

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மனமார்ந்த நன்றி ஐயா. மகளிடம் வாழ்த்தினை சேர்ப்பித்துவிட்டேன். மகிழ்வான நன்றி தங்களுக்கு.

      Delete
  17. பாசத்தின் வலையில் சிக்கிய தாய்ப்பறவை தன் குஞ்சின்
    சிறப்பைக் கண்டு மகிழ்வுற்றதனால் பிறந்த அழகிய கவிதை
    அருமை!...வாழ்த்துக்கள் சகோதரி உங்கள் அன்பும் இக் கவிதைபோல்
    என்றும் இன்புற்று இருக்க .மிக்க நன்றி பகிர்வுக்கு .

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் அழகான ரசனையான பின்னூட்டத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி அம்பாளடியாள்.

      Delete
  18. கவிதையும் படமும் அழகோ அழகு..

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் ரசனைக்கும் மிகவும் நன்றி கோவி.

      Delete
  19. ' வெண்ணிலவின்' குளிர்ச்சி ஒவ்வொரு வரியிலும் தெரிகிறது! ஒரு மகளுக்கு தாயின் இந்த அருமையான கவிதையை விடவும் அருமையான பரிசு வேறென்ன இருக்கிறது?

    அருமையான கவிதை கீதமஞ்சரி!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் மிகவும் ரசித்து இட்டப்பின்னூட்டத்துக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி மனோ மேடம்.

      Delete
  20. நிலவின் தன்மையும், தமிழின் இனிமையும்,
    நிழலாய் நல்லொழுக்கமும்,
    நீங்காத நகையுணர்வும்//

    ம‌ன‌ம் க‌னிந்த‌ வாழ்த்துக்க‌ள்... வெண்ணிலாவுக்கும் நிலாம்மாவுக்கும்!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் மனங்கனிந்த வாழ்த்துக்கும் மகிழ்வான நன்றி நிலாமகள்.

      Delete
  21. FACEBOOKல் பகிர்ந்துகொண்டேன்.

    ReplyDelete
    Replies
    1. நான் FACEBOOK பக்கம் போனதே இல்லை. மிகவும் நன்றி விச்சு.

      Delete
  22. சிறப்பான கவிதை. வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி வெங்கட்.

      Delete
  23. என் வயிற்றில் வந்துதித்தாய்,
    எனையாள்கிறாய் உன் அன்பால்!

    அன்பின் ஆட்சி என்றும் தொடரட்டும்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி ரிஷபன் சார்.

      Delete
  24. பொறாமையாக இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. ஹா.. ஹா... குழந்தைகள் பலவிதம். ஒவ்வொருவரும் ஒருவிதம். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஹூஸைனம்மா.

      Delete
  25. பதினாறாம் ஆண்டில் பாதம் பதிக்கும் உனக்கு
    பதினாறு பேறும் தவறாமல் சேரும் என்றே
    வாழ்த்துகிறேன் கண்ணே!
    பாசப்பைங்கிளியே! பல்லாண்டு நீ வாழி!//

    வெண்ணிலா பல்லாண்டு வாழ்க.

    அன்பான மகளுக்கு அன்பு தாயின் கவிதை பரிசு.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மனம் நிறைந்த நன்றி மேடம்.

      Delete
  26. உங்களுக்கும்தானே இத்தனை பெருமையும்.நிலவைப் பெற்ற அம்மா நிலாவுக்கும் வாழ்த்துகள் !

    ReplyDelete
    Replies
    1. பின்னே? எனக்கில்லாமலா? :) வருகைக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி ஹேமா.

      Delete
  27. மகளைப் பல பரிணாமங்களில் பார்த்து பெரிதுவக்கும் தாய்மனம் அற்புதம்!வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி சேஷாத்ரி.

      Delete
  28. பதினாறாம் ஆண்டில் பாதம் பதிக்கும் உனக்கு
    பதினாறு பேறும் தவறாமல் சேரும் என்றே
    வாழ்த்துகிறேன் கண்ணே!
    பாசப்பைங்கிளியே! பல்லாண்டு நீ வாழி!

    தாயின் அன்பு வாழ்த்துகள் தப்பாமல் தங்கப்பெண்ணை சேரட்டும் !

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் அன்பான வாழ்த்துக்கும் மிகவும் நன்றி மேடம்.

      Delete
  29. Anonymous28/7/12 19:36

    மறுபடி வாசித்து மகிழ்ந்தேன். நன்றி.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் மீள்வருகைக்கு மிகவும் நன்றி தோழி. சிலநாளாக வேலைச்சுமையால் வலைப்பக்கம் அவ்வளவாய் வர இயலவில்லை. இனி வருவேன்.

      Delete
  30. #குழம்பிய மனநிலையிலும், குமுறி அழும்போதும்,
    இதமாய் அணைத்து, கண்ணீர் துடைத்து,
    இதுவும் கடந்துபோகுமென்றே
    ஆறுதல் சொல்கிறாய்,
    அனைத்தும் அறிந்த தோழிபோல்!#

    அருமையான கவிதை. படித்து, தமிழ் குடித்து மகிழ்ந்தேன். நம்ம தளத்துக்கும் கொஞ்சம் வாங்களேன்?

    http://newsigaram.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி. தங்கள் தளத்துக்கு விரைவில் வருவேன்.

      Delete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.