தோட்டத்துப் பிரதாபம் - 14
இந்த கொரோனா கால
ஊரடங்கு நாட்களில் வீட்டுத்தோட்டமே கதியென்று இருந்த காரணத்தால் தோட்டத்தில் வாழும்
பற்பல சிற்றுயிர்களையும் உற்றுநோக்கும் அற்புத வாய்ப்பு கிடைத்திருக்கிறது. பறவை கூர்நோக்கல் (Bird watching) மாதிரி பூச்சிகள் கூர்நோக்கலும் (Insect watching) மிகுந்த சுவாரசியமுள்ளதாகத்தான் உள்ளது. முடிந்தவரை
சிலவற்றைப் படம் எடுத்திருக்கிறேன். பூச்சிகளை சாதாரணக் கண்களால் காண்பதற்கும் மேக்ரோ அல்லது
க்ளோசப் ஷாட்டில் படம்பிடித்துப் பார்ப்பதற்கும் எவ்வளவு வித்தியாசங்கள். இதுவரை அறிந்திராத
பல சிற்றுயிர்கள் குறித்த ஆய்வும் தேடலும் ஓரளவு அவற்றைப் பற்றிய அறிவைத் தந்திருக்கின்றன.
ஆச்சர்யங்களையும் அள்ளி வழங்கியிருக்கின்றன. நாள் ஒவ்வொன்றும் புதியதாய், அழகாய், அற்புதம்
தருவதாய் நகர்ந்துகொண்டிருக்கிறது. ஊரடங்கு காலம் மட்டுமல்லாது வாழுங்காலம் முழுவதும் வகுக்கப்பட்ட சுவரெல்லைக்குள் வாழ்ந்திருந்து வாழ்ந்திருந்து மூச்சுமுட்டத் தொடங்கியிருக்கும் இந்நாட்களில் உயிர்மூச்சும் உத்வேகமும் தந்து வாழ்விக்கும் என் சின்னஞ்சிறு தோட்டத்துக்கு நன்றி
சொல்லி இப்படங்களைப் பகிர்கிறேன்.
Blue skipper - நீலப் பட்டாம்பூச்சி (pic 1) |
Green stink bug - 3rd instar (pic 2) |
Fiddler beetle - பிடில் வண்டு (pic 3) |
Green stink bug - 4th instar (pic 4) |
Green shield bug nymph (pic 5) |
Crusader bug nymph - சிலுவை வண்டு இளம்பருவம் (pic 6) |
Black tipped orange Ichneumon wasp - ஒட்டுண்ணிக் குளவி (pic 7) |
Grasshopper - வெட்டுக்கிளி (pic 8) |
Green bush cricket (pic 9) |
Green grass dart skipper (pic 10) |
Torpedo bug (pic 11) |
Punctuate flower chafer beetle - புள்ளிப் பூவண்டு (pic 12) |
Lady bug - பொறிவண்டு (pic 13) |
Brown flower beetle - பழுப்பு பூவண்டு (pic 14) |
Green stink bug (pic 15) |
Tiger moth - அந்துப்பூச்சி (pic 16) |
Wasp mimic fly - குளவித்தோற்ற ஈ (pic 17) |
Ladybug - பொறிவண்டு (pic 18) |
Honeybee -தேனீ (pic 19) |
Fiery skimmer - சிவப்புத் தட்டான் (pic 20) |
பிரதாபங்கள் தொடரும்
என்சின்னத் தோட்டத்தில்கண்ட சிலபூச்சிகள் அபூர்வமாக இருந்தது நாம் அதுப்பற்றி எழுதிப்டமும் வெளியிட்டுள்ளேன்
ReplyDeleteமகிழ்ச்சி ஐயா. என்னால் அப்பதிவைக் கண்டுபிடிக்க இயலவில்லை. சுட்டி தந்தால் பார்ப்பேன்.
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
மிக மிக அழகான படங்கள்.
ReplyDeleteதுளசிதரன்
அட்டகாசமான படங்கள் கீதா. செமையா இருக்கு ஒவ்வொன்றும். உங்கள் வரிகளையும் ரசித்தேன். பூச்சிகளே அழகுதான். நானும் கண்டுவிட்டால் ரசித்துப் படம் எடுப்பேன்.அழகான பூச்சிகளுக்கு நீங்கள் உங்கள் புகைப்படதில் மேலும் அழகூட்டிவிட்டீர்கள். மிக மிக ரசித்தேன்
கீதா
வருகைக்கும் படங்களை ரசித்தமைக்கும் நன்றி கீதா. இயற்கை ஆர்வலரான உங்கள் படங்களை பெரிதும் ரசிப்பேன் நான்.
Deleteஅட்டகாசமாக வந்திருக்கின்றன நீங்கள் எடுத்த படங்கள். பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
ReplyDeleteமிகவும் மகிழ்ச்சி வெங்கட். அன்பும் நன்றியும்.
Deleteபடங்கள் அத்தனையும் பேரழகு!
ReplyDeleteவருகைக்கும் படங்களை ரசித்தமைக்கும் நன்றி செந்தில்.
Deleteஆகா...! மிகவும் துல்லியமான படங்கள்... மிகவும் ரசித்தேன்...
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி தனபாலன்.
Deleteஅருமை அருமை.தொடருங்கள்
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சிவக்குமார்.
Deleteபூச்சிகளின் நுட்பமான வடிவமைப்பு, நேர்த்தியான வண்ணக் கலவை, தோற்றம், .., இயற்கையின் படைப்பாற்றல் பிரமிக்க வைக்கிறது. படங்கள் தெளிவு. துல்லியம்.
ReplyDeleteவருகைக்கும் படங்களை ரசித்தமைக்கும் மிக்க நன்றி பாண்டியன்.
Delete