10 May 2016

மகிழ்வும் நெகிழ்வும் 3


ஒரு படைப்பாளிக்கு மகிழ்வும் நெகிழ்வும் தரக்கூடியவை படைப்புகளுக்கான அங்கீகாரங்கள் என்பதில் எந்தப் படைப்பாளிக்கும் மாற்றுக்கருத்திருக்க முடியாது. அப்படியான என் சமீபத்திய சந்தோஷங்கள் சிலவற்றை உங்கள் அனைவருடனும் பகிர்ந்துகொள்ளும்பொருட்டும்  எனக்கான ஆவணச்சேகரிப்பாகவும் இங்கு அவற்றைப் பகிர்கிறேன்.




ஆஸ்திரேலிய காடுறை மாந்தர்களின் வாழ்வை மையமாகக் கொண்டு ஆஸ்திரேலிய சிறுகதை மன்னர் ஹென்றி லாசன் அவர்கள் எழுதிய ஆங்கிலக்கதைகள் சிலவற்றை நான் தமிழில் பெயர்த்ததும், அவை என்றாவது ஒருநாள்என்ற நூலாக அகநாழிகை பதிப்பகம் வாயிலாக வெளியாகியிருப்பதையும் பலரும் அறிவீர்கள். இந்நாள்வரை அந்நூலுக்கான வெளியீட்டு நிகழ்வு எதையும் முறையாக செய்யவில்லை என்றாலும் நட்புகள் பலரையும் சென்றடைந்து அவர்களுடைய அறிமுக உரைகளையும் விமர்சனங்களையும் புகழுரைகளையும் என்னிடத்தில் கொணர்ந்து குவித்தது.


மகிழ்ச்சி 1



சென்ற ஞாயிறு (01-05-16) அன்று சிட்னியில் உள்ள ஹோம்புஷ் பள்ளி வளாகத்தில் ஆஸ்திரேலிய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற ஆஸ்திரேலிய தமிழ்ப் படைப்பாளர் விழாவில் நூலறிமுகம் நிகழ்ச்சியில் என்னுடைய நூலும் இடம்பெற்றது ஒரு நல்லங்கீகாரம். 


நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர் அவர்களுடன்...

(புகைப்படங்களுக்காய்
தோழி மணிமேகலாவுக்கு என் அன்பான நன்றி)

என்றாவது ஒரு நாள்நூலை அவ்விலக்கியக்கூட்டத்தில் அறிமுகம் செய்யும் வாய்ப்பினை உருவாக்கித் தந்ததோடு, அந்நூலுக்கான அறிமுக உரையையும் தானே வழங்க முன்வந்த நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர் அவர்களுக்கு என் அன்பான நன்றிஆஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் வானொலியில் பல வருடங்களாக 'பண்பாட்டுக் கோலங்கள்' என்னும் நிகழ்ச்சியை வழங்கிவரும் இவர், 'என்றாவது ஒரு நாள்' நூலை வாசித்தபிறகுஅவ்வானொலிக்காக என்னை நேர்காணல் கண்டதை நன்றியுடன் இவ்வேளையில் நினைவுகூர்கிறேன். நேர்காணல் நேரலையில் சென்றவருடம் ஒலிபரப்பானது.


மகிழ்ச்சி 2



இத்தகு அங்கீகாரங்களால் அகமகிழ்ந்திருக்கும் வேளையில் தற்செயலாய் அறிய நேர்ந்த மற்றொரு தகவல் மகிழ்வை மேலும் கூட்டுவதாக உள்ளதுசிங்கப்பூரில் தலைமை நூலகம் உள்ளிட்ட 21 நூலகங்களிலும், கனடாவில் ஒரு நூலகத்திலும் என்னுடையஎன்றாவது ஒருநாள்நூல் இடம்பெற்றுள்ளது என்பதை ஒரு மாபெரும் அங்கீகாரமாக கருதுகிறேன். இதற்கான முயற்சியில் ஈடுபட்ட முகமறியா தமிழார்வல நெஞ்சங்களுக்கு என் அன்பும் நன்றியும் உரித்தாகட்டும்.


மகிழ்ச்சி 3




பாரீஸில் வசிக்கும் ஃபேஸ்புக் தோழி ஒருவர், சென்றவாரம் அனுப்பிய செய்தியில், தற்சமயம் உங்களுடையஎன்றாவது ஒருநாள்நூலைத்தான் வாசித்துக்கொண்டிருக்கிறேன் என்று குறிப்பிட்டு உங்களுடைய படைப்புகள் மேலும் இருந்தால் வாசிக்கத்தாருங்கள் என்று கேட்டபோது, உவகையின் உச்சம் சென்றேன். வாசக அங்கீகாரம் ஒரு பெரும் அங்கீகாரமன்றோ?


மகிழ்ச்சி 4

(நண்பர் கலாகுமரன் அவர்களுக்கு நன்றி)

ப்ரதிலிபியில் என்னுடைய முதல் மின்னூல் வெளியானது மகிழ்வின் ஏடுகளில் மற்றொன்று. ‘அன்புக்கும் உண்டோ அடைக்குந்தாழ்?’ என்னும் 32 அத்தியாயங்கள் கொண்ட அத்தொடர்கதையின் முகப்பு ஓவியத்தை வழங்கிய ஓவிய நண்பர் கலாகுமரன் அவர்களுக்கு என் அன்பான நன்றி. இவர் இனியவை கூறல் என்ற வலைப்பூ வழியே பதிவுலக நட்புகளுக்கு பரிச்சயமானவர்.  

இவைபோக, பரபரப்பான பதிவுலகில் சகபதிவர்களின் மனத்தில் நமக்குமொரு இடம் ஒதுக்கப்பட்டு நம் கருத்துகளுக்கும் மதிப்பளிக்கப்படுகிறது என்றால் கூடுதல் மகிழ்விற்கு சொல்லவும் வேண்டுமா?


மகிழ்ச்சி 5


சமீபத்தில் ஃபேஸ்புக்கில் நான் பகிர்ந்திருந்த குடி குறித்த என் கவிதையை தன்னுடைய 'அவர்கள் உண்மைகள்' தளத்தில் பகிர்ந்து சிறப்பித்தமைக்காகவும், கோடைவகுப்புகள் குழந்தைகளுக்கு நன்மையா தீமையா என்ற தலைப்பில் மற்றப் பதிவுலகப் பிரபலங்களின் கருத்துகளோடு என்னுடைய கருத்தையும் வெளியிட்டு பெருமைப்படுத்தியமைக்காகவும் நண்பர் மதுரைத்தமிழன் அவர்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி.  




தொடர்ந்துவந்து ஊக்கமும் உற்சாகமும் அளிக்கும் பதிவுலக நட்புகள் அனைவருக்கும் அன்பான நன்றி. 

39 comments:

  1. வாழ்த்துக்கள் சகோதரியாரே

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஐயா.

      Delete
  2. கீத மஞ்சரி அவர்களின் எழுத்துத் திறம்
    அறிந்துப் பாராட்டிச் சிறப்புச் செய்த
    அனைவருக்கும் பதிவர்கள் சார்பில்
    மனமார்ந்த நன்றி

    அன்றும் சரி என்றும் சரி
    கீதமஞ்சரி எழுத்தின் தீவிர இரசிகன் நான்
    என்பதை இங்குப் பதிவு செய்வதில்
    மிக்க மகிழ்வு கொள்கிறேன்

    சாதனைகளும் விருதுகளும் தொடர
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்களைப் போன்ற எழுத்துலக ஜாம்பவான்களின் வாயால் பாராட்டு பெறுவதென்பது மகிழ்வின் உச்சம். தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ரமணி சார்.

      Delete
  3. உங்களின் மகிழ்ச்சி 1 to 4 க்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் மகிழ்ச்சி 5 க்கு எனது நன்றிகள். உங்களது படைப்புகளையும் கருத்துகளையும் எனது தளத்தில் பகிர வாய்ப்புக்கள் கொடுத்தற்கு

    ReplyDelete
    Replies
    1. :)) மிகவும் மகிழ்ச்சி மதுரைத்தமிழன். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி.

      Delete
  4. வாழ்த்துகள் சகோதரி

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

      Delete
  5. மகிழ்ச்சியான செய்தி! இன்னும் பல சிகரங்கள் தொட மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்!

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் அன்பான நன்றி செந்தில்.

      Delete
  6. உண்மை. எப்போதும் அங்கீகாரங்கள் மகிழ்ச்சி தரும். வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஐயா.

      Delete
  7. சகோதரி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஐயா.

      Delete
  8. அனைத்துக்கும் என் பாராட்டுகளும் வாழ்த்துகளும். மேலும் மேலும் உங்கள் புகழ் இந்தத் தரணியெங்கும் பரவ வேண்டும் என்ற ஆசை எனக்கு எப்போதும் உண்டு.

    இந்த சந்தோஷமான பகிர்வுக்கு என் நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. அது ஆசையா பேராசையா என்று தெரியவில்லை. :)) எனினும் தங்கள் அன்புக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி கோபு சார்.

      Delete
  9. வாழ்த்துக்கள் கீதமஞ்சரி.
    பாராட்டுக்கள். உங்கள் எழுத்துக்கள் மிக அருமையானவை.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி மேடம்.

      Delete
  10. https://soundcloud.com/subbu-thatha/kudiunவாழ்த்துக்கள் கீதமஞ்சரி.
    பாராட்டுக்கள். உங்கள் எழுத்துக்கள் மிக அருமையானவை.
    இந்தப் பாடலை பாட எனக்கு அனுமதி தருவீர்கள் என எதிர்பார்க்கிறேன்.

    எனது வலையில் இட்டு இருக்கிறேன்.

    சுப்பு தாத்தா.
    www.vazhvuneri.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. தன்யளானேன் சுப்பு தாத்தா.. இசையோடு பாடல் அருமை. இதைவிட பெரும்பேறு எனக்கென்ன இருக்கமுடியும்.. என் மகிழ்வின் பட்டியலில் தொடரும் மகிழ்ச்சி இது. மிகவும் நன்றி தங்களுக்கு.

      Delete
  11. வாழ்த்துக்கள் சகோ!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி சுரேஷ்.

      Delete
  12. வாழ்த்துக்கள்....தொடரட்டும் உங்கள் படைப்புக்கள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி புத்தன். விழாவில் உங்களை சந்தித்ததும் மிக மகிழ்ச்சி.

      Delete
  13. வாழ்த்துக்கள்....தொடரட்டும் உங்கள் படைப்புக்கள்

    ReplyDelete
  14. மனம் நிறைந்த நல்வாழ்த்துகள். மேலும் பல வெற்றிகள் உங்களை வந்தடையட்டும்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி வெங்கட்.

      Delete
  15. வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஐயா.

      Delete
  16. மனம் நிறைந்த வாழ்த்துக்கள் கீதா !

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி சித்ரா.

      Delete
  17. வாழ்த்துக்கள்,,, தொடருங்கள் இது போல்,,,,

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி மகேஸ்வரி.

      Delete
  18. உங்களுடைய மகிழ்ச்சியில் நாங்களும் கலந்துகொள்கிறோம். வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மிகவும் மகிழ்ச்சி. நன்றி ஐயா.

      Delete
  19. சிறப்பான அங்கீகாரங்கள் பற்றி இன்று தான் அறிந்து கொண்டேன். இன்னும் பல சிகரங்களைத் தொட வாழ்த்துகிறேன். சிங்கை அனைத்து நூலகங்களிலும் உன் நூல் இடம் பெற்றிருப்பதறிந்து வியப்படைந்தேன். கடைசிப் படம் மிகப் பிரமாதமாய் உள்ளது. வாழ்த்துடன் கூடிய பாராட்டுக்கள்!

    ReplyDelete
    Replies
    1. சிங்கை நூலகத்தில் என் நூல் இருப்பதை தற்செயலாகவே அறிந்தேன். எனக்கும் ஒரே வியப்பு. யார் இதற்கான முயற்சியை மேற்கொண்டார்கள் என்று தெரியவில்லை. அவர்களுக்கு என் நன்றி. பதிவோடு படத்தையும் பாராட்டியிருப்பதற்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி அக்கா.

      Delete
  20. வலைப்பக்கம் வரவில்லையாதலால் மகிழ்வான ஒரு செய்தி விட்டுப் போயிருக்கிறது. மனம் நிறைந்த பாராட்டுகள். இன்னும் பல வெற்றிகளும், பாராட்டுகளும் தங்களை வந்தடைய மனம் நிறைந்த வாழ்த்துகளும். உங்கள் எழுத்துகள் வசீகரமானவை. அவை நிச்சயமாக உலகம் முழுவதும் வெற்றி நடை போடும் என்பதில் ஐயமில்லை.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் பாராட்டுகளுக்கும் மனமார்ந்த நன்றி துளசி சார்.

      Delete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.