14 April 2014

சிறுகதை விமர்சனப் போட்டிகளில் ஹாட்ரிக் பரிசு.

வணக்கம் நண்பர்களே!
அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

பரிசுமழை  பரிசுமழை என்பார்களேஅந்த மழையில்தான் சொட்டச்சொட்ட நனைந்து மகிழ்ச்சியில் திளைத்துக்கொண்டிருக்கிறேன். மழையில் நனைந்த பின்னும் மடக்க மனமின்றி தோகை விரித்தாடிக்கொண்டிருக்கிறது மனமயில். திரு.வை.கோபாலகிருஷ்ணன் சார் அவர்களின் தளத்தில் நடத்தப்பெறும் சிறுகதை விமர்சனப் போட்டியை அனைவரும் அறிவீர்கள் அல்லவா? எழுத்துழவர்களான நம்மனைவருக்கும், தனக்கு உரித்தான சிறுகதைகளென்னும் பண்பட்ட நன்னிலத்தை பெருந்தன்மையுடன் வழங்கி, விமர்சனமென்னும் விதைகளை மட்டும் நம்மைத் தூவச்செய்து, ஊக்கமெனும் உரமளித்து, உற்சாகமெனும் நீர்பாய்ச்சி, அக்கறையுடன் வளர்த்து, தானே அறுகூலி தந்து, பரிசெனும் அறுவடைகளை நம்மை அனுபவிக்கச் செய்யும் பதிவுலக மிராசுதாரரான கோபு சார் அவர்களுக்கும் வாராவாரம் சிறந்த விமர்சனங்களை, முகம் காட்டாது தன் அகம் காட்டி செவ்வனே தேர்வுசெய்யும் நடுவர் அவர்களுக்கும் இவ்வேளையில் என் நன்றியையும் பாராட்டுகளையும் இனிதே தெரிவித்து மகிழ்கிறேன்.

இதுவரை நடத்தப்பெற்றுள்ள 10 போட்டிகளில் 8 போட்டிகளில் கலந்துகொண்டு மூன்று முதல் பரிசுகளும் மூன்று இரண்டாம் பரிசுகளுமாக மொத்தம் 6 பரிசுகள் பெற்றுள்ளேன் என்பதோடு கோபு சாரின் சிறப்புப் பரிசு அறிவிப்பான ஹாட்ரிக் பரிசையும் வென்றுள்ளேன் என்பதை நினைக்கையில் எனக்கே வியப்பாக உள்ளது

இந்த விமர்சனப் போட்டியானது எழுதுபவர்களின் எழுத்துத்திறமையோடு தன்னம்பிக்கையையும் வலுப்படுத்துகிறது என்பது உண்மை. இதுவரை விமர்சனப்பாதையில் அடியெடுத்து வைக்கத் தயங்கியிருந்த என்னை வழிநடத்துகின்றன நடுவர் அவர்களால் தேர்ந்தெடுக்கப்படும் விமர்சனங்களும் (முக்கியமாய் ரமணி சார் அவர்களின் விமர்சனங்கள்), விமர்சனங்களுக்கான விமர்சனங்களாய் வரும் பின்னூட்டங்களும் (முக்கியமாய் ஜீவி சார் அவர்களின் பின்னூட்டங்கள்).

திரு.வை.கோபாலகிருஷ்ணன் சார் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும், விமர்சனங்களுக்குரிய கதைகளின் சுட்டிகளையும் பரிசுகளுக்கு உரியவையாய்த் தேர்ந்தெடுக்கப்பட்ட என் விமர்சனங்களின் சுட்டிகளையும் எனது மீள்பார்வைக்கென ஒரு தொகுப்பாய்த் தொகுக்கவிரும்பியதன் விளைவாகவும் உருவாகியுள்ளது இப்பதிவு.


பல்வேறு அற்புதமான பதிவர்கள் கலந்துகொள்ளும் இப்போட்டியில் எனக்கும் ஒரு சிறப்பான இடம் கிடைத்திருப்பதில் அளவில்லாத மகிழ்ச்சி. பல்வேறு விமர்சனங்களையும், விமர்சனம் குறித்த கருத்துக்களையும் இன்னும் பல விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடிகிறது. சிந்திக்கவும் எழுதவும் ஆயாசமாயிருக்கும் சில தருணங்களில், இப்போட்டியை நடத்தும் கோபு சாரின் கடுமையான உழைப்பையும் கணக்கானத் திட்டமிடலையும், நேர்த்தியான நேரமேலாண்மையையும் நினைத்துக்கொள்வேன். அடுத்தநொடியே ஆயாசமெல்லாம் பறந்துபோய் உற்சாகமாய் உள்ளம் தயாராகிவிடும். 

பதிவுலகில் ஒரு சிறப்பான முன்னுதாரணமாய்த் திகழும் 
கோபு சார் அவர்களுக்கு 
அளவிலாத நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்வதில் மிகவும் மகிழ்கிறேன். 

நம் அனைவரின் சார்பிலும் அவருக்கு ஒரு அழகானப் பூங்கொத்து!வாருங்கள் நட்புக்களே… தொடர்ந்து களமிறங்குவோம்… 
நம் எழுத்துத்திறனை ஏற்றம் பெறச்செய்வோம்.  

**************************

(படங்கள்: நன்றி இணையம், நன்றி கோபு சார்)


தொடர்ந்து வாசிக்க...
இரண்டாவது சுற்று பரிசுகள்

36 comments:

 1. மிக்க மகிழ்ச்சி
  தொடர்ந்து பரிசுகள் பெற
  மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
  தங்களுக்குக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

  மனம் நிறைந்த இன்பு நல் வாழ்த்துக்ள்..

  பரிசு மழையில் மேலும் நனைய வாழ்த்துகள்..!

  ReplyDelete
 3. மனம் கனிந்த வாழ்த்துக்கள் கீத மஞ்சரி. கூடவே இனிய தமிழ்புத்தாண்டு நன் வாழ்த்துக்களும்.

  ReplyDelete
 4. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழி இன்று போல் என்றுமே
  வெற்றி வாகை சூடி வாருங்கள் .

  ReplyDelete
 5. மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
  தங்களுக்குக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் எனது
  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 6. வாழ்த்துக்கள் கீதமஞ்சரி. தங்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 7. தொடர் பரிசு மழையில் நனைத்து கொன்டிருக்கும் நீங்கள் மேன்மேலும் வாழ்த்துக்களையும் பரிசுகளையும் பெற்று அகமகிழ்ந்திட‌ மனம் நிறைந்த நல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ்ப்புத்தாண்டு இது போன்ற இனிய தருணங்களை வாரி வழங்குவதற்கான ஆரம்ப நாளாக இருக்கட்டும்!!

  ReplyDelete
 8. தங்களைப்போன்ற மிகச்சிலரிடம் மட்டுமே தனித்திறமைகளும், எழுத்தாற்றலும் ஒளிந்துள்ளன.

  அவற்றை வெளிப்படுத்தும் ஆர்வமும், ஈடுபாடும், நேரமும், பொறுமையும் தங்களுக்கு இப்போது தற்செயலாக சாதகமாக அமைந்துள்ளன.

  நானும், என் சிறுகதைகளும், என் வலைத்தளமும், என் ’சிறுகதை விமர்சனப் போட்டி’களும் தங்களைப்போன்ற தனித்திறமை வாய்ந்த எழுத்தாளர்களை வெளியுலகுக்கு அடையாளம் காட்ட, உபகரணங்களாக அமைந்துள்ளதில் எனக்கு மிக்க மகிழ்ச்சியே.

  விமர்சனங்கள் என்பவை எப்படியிருந்தால் அவை வெற்றிபெறக்கூடும் என நம் அனைவருக்குமே பாடம் நடத்திக்காட்டிய திரு. ரமணி அவர்களையும், நடைபெற்றுவரும் அனைத்து சம்பவங்களையும் மறைந்திருந்து பார்த்து மகிழ்ந்துவரும் உயர்திரு நடுவர் அவர்களையும், வரும் விமர்சனங்களையெல்லாம் விமர்சனம் செய்துவரும் திரு. ஜீவி ஐயா அவர்களையும் பற்றி தாங்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள் மிகவும் முக்கியமானவைகள் + சுவாரஸ்யமானவைகள் என்பதில் எந்தவிதமான மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை.

  இந்தப்பதிவினை தாங்கள் வெகு அழகாக வடிவமைத்துள்ளதுடன், மிகச்சிறப்பாக எழுதியும் உள்ளீர்கள். அதற்கு என் பாராட்டுக்கள்.

  தாங்கள் எனக்களித்துள்ள மஞ்சள் நிறப் பூங்கொத்து மிகவும் அழகாக உள்ளது. பார்க்கவே சந்தோஷமாக உள்ளது. மிக்க நன்றி. ;)

  இதை இன்று தாங்கள் தனிப்பதிவாக வெளியிட்டுள்ளது மிகவும் எனக்கு மகிழ்வளிக்கிறது.

  இப்போதெல்லாம் என்னால் பிறர் பதிவுகள் பக்கம் அதிகமாகச் செல்ல நேரம் இருப்பதே இல்லை. என் டேஷ்-போர்டு பக்கமும் நான் போவதே இல்லை, இதைப்பற்றி தாங்கள் மெயில் மூலம் தகவல் + லிங்க் அளித்திருந்தால் முன்பே வந்திருப்பேன். அகஸ்மாத்தாக இப்போது மட்டுமே என்னால் பார்க்க நேர்ந்தது.அதனால் தாமதமாக வருமாறு நேர்ந்துவிட்டது.

  எனினும் தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ளதற்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

  இதுவரை தாங்கள் பெற்றுள்ள வெற்றிகளுக்கு என் சார்பிலும், உயர்திரு நடுவர் அவர்கள் சார்பிலும் மனம் நிறைந்த பாராட்டுக்கள் + நல்வாழ்த்துகள்.

  மேலும் மேலும் உற்சாகத்துடன் இதே போட்டியில் கலந்துகொண்டு மேலும் பல சாதனைகள் படைக்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

  பிரியமுள்ள கோபு [ VGK ]

  ReplyDelete
 9. மிகவும் சந்தோசம் சகோதரி...

  இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 10. தொடர்ந்து பரிசுமழையில் நனையும் தாங்கள் மேலும் பல வெற்றிகளைப் பெற்று மகிழ உளமார்ந்த வாழ்த்துகள்! நன்றீ!

  ReplyDelete
 11. மழை இன்னும் நிற்காமல் பெய்யும், எங்கள் வாழ்த்து மழையிலும் நனைவீர்களாக!

  ReplyDelete
 12. தொடர்ந்து விமர்சனப் போட்டியில் பரிசு பெற்றுக் கலக்கிக் கொண்டிருக்கும் விமர்சன வித்தகி கீதா மதிவாணனைப் பாராட்டுகிறேன். தொடர்ந்து சாதனைகள் படைக்க வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 13. @Kalayarassy G

  Kalayarassy G said...
  தொடர்ந்து விமர்சனப் போட்டியில் பரிசு பெற்றுக் கலக்கிக் கொண்டிருக்கும் விமர்சன வித்தகி கீதா மதிவாணனைப் பாராட்டுகிறேன். தொடர்ந்து சாதனைகள் படைக்க வாழ்த்துக்கள்!//

  ’விமர்சன வித்தகி’

  பொருத்தமான + அருமையானதோர் பட்டம்.

  முன்மொழிந்துள்ள தங்களுக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

  இதையே நான் வரும் ஞாயிறு அன்று என் வலைத்தளத்தில் வழிமொழிந்தும் விடுகிறேன் ! ;)

  அன்புள்ள கோபு [VGK]

  ReplyDelete
 14. வாழ்த்துக்கள் சகோதரி.

  ReplyDelete
 15. வாழ்த்துக்கள் சகோதரி...

  ReplyDelete
 16. Anonymous17/4/14 17:24

  ''..இப்போட்டியை நடத்தும் கோபு சாரின் கடுமையான உழைப்பையும் கணக்கானத் திட்டமிடலையும், நேர்த்தியான நேரமேலாண்மையையும் நினைத்துக்கொள்வேன். ..''
  ''..வித்தகி கீதா மதிவாணனைப் பாராட்டுகிறேன். தொடர்ந்து சாதனைகள் படைக்க வாழ்த்துக்கள்!//...''
  உளமார்ந்த வாழ்த்துகள்
  Vetha.Elangathilakam.

  ReplyDelete
 17. மேலும் மேலும் வெல்ல வாழ்த்துக்கள் அக்கா!

  ReplyDelete
 18. ஹாட்ரிக் பரிசு...... வாழ்த்துகள் சகோ....

  மேலும் பல பரிசுகள் உங்களை வந்தடையட்டும்....

  ReplyDelete
 19. @Ramani S

  உடனடி வருகைக்கும் வாழ்த்துக்கும் தமிழ்மண வாக்குப்பதிவுக்கும் மிக்க நன்றி ரமணி சார். தங்கள் விமர்சனங்களே எங்களுக்கு ஒரு புதிய பாதையை அமைத்துக்கொடுத்தன என்றால் மிகையில்லை. மிக்க நன்றி தங்களுக்கு.

  ReplyDelete
 20. @இராஜராஜேஸ்வரி

  தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிமேடம். தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 21. @G.M Balasubramaniam

  தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஐயா. தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 22. @அம்பாளடியாள் வலைத்தளம்

  தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் அன்பான நன்றி தோழி.

  ReplyDelete
 23. @கவியாழி கண்ணதாசன்

  தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மனம் நிறைந்த நன்றி ஐயா.

  ReplyDelete
 24. @புவனேஸ்வரி ராமநாதன்

  தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் உளமார்ந்த நன்றி மேடம்.

  ReplyDelete
 25. @மனோ சாமிநாதன்

  தங்கள் அன்பான வாழ்த்துக்கு மனமார்ந்த நன்றி மேடம்.

  ReplyDelete
 26. @வை.கோபாலகிருஷ்ணன்

  தங்களுடைய விரிவானப் பின்னூட்டம் கண்டு அளவிலாத மகிழ்ச்சி கோபு சார். தங்கள் ஊக்கமிகு வார்த்தைகளுக்கும் வாழ்த்துக்களுக்கும் அன்பான நன்றி சார்.

  ReplyDelete
 27. @திண்டுக்கல் தனபாலன்

  தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி தனபாலன்.

  ReplyDelete
 28. @Seshadri e.s.

  தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி. தங்களுக்கும் என் இனிய வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்கிறேன்.

  ReplyDelete
 29. @கே. பி. ஜனா...

  தங்கள் அன்பான வாழ்த்துக்கு அகமார்ந்த நன்றி ஜனா சார்.

  ReplyDelete
 30. @Kalayarassy G

  தங்கள் அன்பான வாழ்த்து கண்டு மிக்க மகிழ்ச்சியும் நன்றியும். தங்களுக்கும் என் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

  ReplyDelete
 31. @வை.கோபாலகிருஷ்ணன்

  தங்கள் அன்புக்கு மனம் நிறைந்த நன்றி கோபு சார்.

  ReplyDelete
 32. @சிவகுமாரன்

  வருகைக்கும் வாழ்த்துக்கும் அன்பான நன்றி சிவகுமாரன்.

  ReplyDelete
 33. @சே. குமார்

  தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி குமார்.

  ReplyDelete
 34. @kovaikkavi

  தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மனம் நிறைந்த நன்றி தோழி.

  ReplyDelete
 35. @Mythily kasthuri rengan

  வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி மைதிலி.

  ReplyDelete
 36. @வெங்கட் நாகராஜ்

  வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி வெங்கட்.

  ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.