17 September 2013

அனுதாபம்உன் அனுதாபத்தால் எனக்காவதென்ன? 
நான் கலங்கிநிற்கும்போதெல்லாம்
கருணை காட்டுகிறாய் நீயும்.

ஒன்றுக்கொன்று சமன் செய்தாலும்
நன்றியால் நிறைகிறேன் நாளும்!

ஆனாலும் அந்நன்றிக்கடனானது
எனையழுத்தும் அதிபாரமானது.
உன் அனுதாபத்தால் எனக்காவதென்ன?

என்னுடைய ஒரு பெருமூச்சேனும்
உன்னுடையதாகுமோ ஒருநாளேனும்?

அவ்விழிகளில் வழியக்கூடுமோ
இவ்விழிகளின் கண்ணீர்த்தாரை?

சத்தியத்தை மூடிவைக்கலாம்,
சத்தத்தை எதுவரை முடியும்?
உன் அனுதாபத்தால் எனக்காவதென்ன?

அடுத்தவருக்கு தன் துயரை
அளிக்க இயல்பவர் யாரே?

அடுத்தவர் துயரை தனதாய்
ஏற்க இயல்பவர் யாரே?

ஏன் நமக்கிடையே இப்படியொரு
ஏமாற்றுப் பண்டமாற்று?
உன் அனுதாபத்தால் எனக்காவதென்ன?

இத்தகு பாதையில்தான் நம் பயணம்
ஏனோ ஏற்கமறுக்கிறோம் நாமும்.

ஒவ்வொரு பயணியும் ஒற்றையாய்
பரஸ்பரம் துக்கம் பகிரவியலாதவனாய்!

அடுத்தவர் படும் வேதனை கண்டு
தானும் வேதனை காட்டுவோரெல்லாம்
அவர்தம் துயர்நீக்கும் சூட்சுமம்
மகிழ்வுதானென்பதை மறைத்துவிடுகிறார்.

உனக்குத் துன்பமெனில் எனக்கு இன்பமது.
உலகை அழுத்தும் மாபெரும் சாபக்கேடிது!
உன் அனுதாபத்தால் எனக்காவதென்ன?

(மூலம் : ஹரிவம்ஷ்ராய் பச்சன் எழுதியஸம்வேதனாஎன்னும் இந்திக்கவிதை. வல்லமையில் வெளியானது. மூலக்கவிதை கீழே)


संवेदना

क्या करूँ संवेदना लेकर तुम्हारी ?
क्या करूँ ?

मैं दुःखी जब-जब हुआ
संवेदना तुमने दिखाई,
मैं कृतज्ञ हुआ हमेशा
रीति दोनों ने निभाई,
किंतु इस आभार का अब
हो उठा है बोझ भारी;
क्या करूँ संवेदना लेकर तुम्हारी ?
क्या करूँ ?

एक भी उच्छ्वास मेरा
हो सका किस दिन तुम्हारा ?
उस नयन से बह सकी कब
इस नयन की अश्रु-धारा ?
सत्य को मूँदे रहेगी
शब्द की कब तक पिटारी ?
क्या करूँ संवेदना लेकर तुम्हारी ?
क्या करूँ ?


कौन है जो दूसरे को
दुःख अपना दे सकेगा ?
कौन है जो दूसरे से
दुःख उसका ले सकेगा ?
क्यों हमारे बीच धोखे
का रहे व्यापार जारी ?
क्या करूँ संवेदना लेकर तुम्हारी ?
क्या करूँ ?

क्यों न हम लें मान, हम हैं
चल रहे ऐसी डगर पर,
हर पथिक जिस पर अकेला,
दुःख नहीं बँटते परस्पर,
दूसरों की वेदना में
वेदना जो है दिखाता,
वेदना से मुक्ति का निज
हर्ष केवल वह छिपाता,
तुम दुःखी हो तो सुखी मैं
विश्व का अभिशाप भारी !
क्या करूँ संवेदना लेकर तुम्हारी ?
क्या करूँ ?


34 comments:

 1. //அவ்விழிகளில் வழியக்கூடுமோ
  இவ்விழிகளின் கண்ணீர்த்தாரை?// உண்மைதானே...
  ஒவ்வொருவரும் தனி தனி தான்...நல்ல மொழிபெயர்ப்பு கீதமஞ்சரி

  ReplyDelete
 2. Anonymous17/9/13 18:28

  அனுதாபம் வெறும் உதட்டசைவில் மட்டும்
  இருந்து என்ன பயன் ? அதுவும் நெருங்கியவர்களானால்.
  மூன்றாம் மனிதர்கள் எனில் வெறும் பேச்சு மட்டும்
  போதும் ஆறுதலுக்கு. அவரவர் சோகத்தை அவரவர்
  மட்டுமே அனுபவித்து தீர்க்க முடியும் .
  நல்ல மொழிபெயர்ப்பு.

  ReplyDelete

 3. //உனக்குத் துன்பமெனில் எனக்கு இன்பமது.

  உலகை அழுத்தும் மாபெரும் சாபக்கேடிது!

  உன் அனுதாபத்தால் எனக்காவதென்ன?//

  தமிழாக்கம் அருமை. பாராட்டுக்கள்.

  ReplyDelete

 4. பல நேரங்களில் கவிதை எழுதுபவர் மன நிலை வாசிப்பவருக்குத் தெரிவதில்லை.எழுதியவரின் எண்ணத்தைப் வாசிப்பவர் புரிந்து கொள்வதில்தான் எழுத்தாளரின் வெற்றி இருக்கிறது.ஹிந்தி எனக்குத் தெரியாது. ஆகவே மொழிபெயர்ப்பு பற்றி ஏதும் கூற இயலவில்லை. அனுதாபத்தால் ஏதும் விளைவதில்லை. நன்றிக்கடன் சுமைதான் அதிகரிக்கிறது என்று பொருள் கொள்ளலாமா. ?வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 5. நல்ல மொழிபெயர்ப்பு... வாழ்த்துக்கள்....

  ReplyDelete
 6. Anonymous17/9/13 19:17

  வணக்கம்
  கவிதையின் வரிகள் மனதை அள்ளிச் சென்றது மேலும் பல கவிதைகள் மலர எனது வாழ்த்துக்கள்

  குறிப்பு-தீபாவளிச் சிறப்புக் கவிதைப் போட்டி ஒன்று நடைபெறுகிறது பங்குகொள்ளவும் போட்டி விதிமுறைகளை பார்வையிட இந்த வலைப்பூவுக்குச் செல்லவும் http://2008rupan.wordpress.com

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 7. உலகை அழுத்தும் மாபெரும் சாபக்கேடிது!

  தமிழாக்கம் அருமைங்க.

  ReplyDelete
 8. ஒன்றுக்கொன்று சமன் செய்தாலும் நன்றியால் நிறைகிறேன் நாளும்! ஆனாலும் அந்நன்றிக்கடனானது எனையழுத்தும் அதிபாரமானது. உன் அனுதாபத்தால் எனக்காவதென்ன?

  அருமையான கவிதை..!+

  ReplyDelete
 9. அடுத்தவர் படும் வேதனை கண்டு
  தானும் வேதனை காட்டுவோரெல்லாம்
  அவர்தம் துயர்நீக்கும் சூட்சுமம்
  மகிழ்வுதானென்பதை மறைத்துவிடுகிறார்.

  அடுத்தவர் படும் வேதனை கண்டு
  தானும் வேதனை காட்டுவோரெல்லாம்
  அவரோடு நெருங்கிய உறவோ, நட்போ கொண்டவராகத்தானே இருக்க முடியும் அது போது
  அவர்களும் வேதனைப் படுவது இயற்கைதானே!

  ReplyDelete
 10. மொழி பெயர்ப்பு கவிதை பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 11. அழகிய கவிதை... இவ்ளோ அழகாக மொழிபெயர்த்த உங்களுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 12. மொழி பெயர்ப்புக் கவிதையானாலும் அது சொல்லிச் சென்ற கருத்தில் மனம் லயித்தது தோழி!

  அருமையான, இப்படியான கவிதைகளைத் தேடி அதன் சுவையை அற்புதமாக எமக்கத்தரும் உங்கள் முயற்சி உன்னதமானது!...

  கவிதையின் வரிகள் சொல்லும் ’உணர்வும் பகிர்வும்’ அருமை!
  பாராட்டுக்கள்!

  த ம.3

  ReplyDelete
 13. என்னுடைய ஒரு பெருமூச்சேனும்
  உன்னுடையதாகுமோ ஒருநாளேனும்?

  அருமை அஐமை
  வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 14. //என்னுடைய ஒரு பெருமூச்சேனும்
  உன்னுடையதாகுமோ ஒருநாளேனும்?/
  சிறப்பான கவிதை! அருமையான மொழிபெயர்ப்பு!
  ReplyDelete
 15. ­அ­ழ­கா­ன, பொ­ருள் ­செ­றிந்­த ­க­வி­தை­யை ­சி­றப்­பு­ற ­மொ­ழி ­பெ­யர்த்­தி­ருக்­கீங்­க. மி­க ­ர­சித்­தேன். மூ­லக் ­க­வி­தைன்­னு ­நீங்­க ­தந்ந்­தி­ருக்­க­ற­து ­என் ­பி.சி.யி­ல ­கட்­டம் ­கட்­ட­மாத் ­தெ­ரி­­யு­து. ஏ‌ன்­னே ­பு­ரி­ய­ல...!

  ReplyDelete
 16. Anonymous24/9/13 17:05

  மொழிமாற்று ஆக்கம் மிக ரசித்தேன்.
  கவிதைப்பாணி அருமை.
  இனிய நன்றி பதிவிற்கு.
  மேலும் தொடரவும்.
  வருவேன்.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 17. /ஒவ்வொரு பயணியும் ஒற்றையாய்…/ அருமை. உண்மைதான். நல்ல கவிதை. நல்ல தமிழாக்கம்.

  ReplyDelete
 18. @கிரேஸ்

  உடனடி வருகைக்கும் ரசித்து இட்டப் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி கிரேஸ்.

  ReplyDelete
 19. @ஸ்ரவாணி

  வருகைக்கும் மிக ஆழமான கருத்துரைக்கும் அன்பான நன்றி ஸ்ரவாணி.

  ReplyDelete
 20. @வை.கோபாலகிருஷ்ணன்

  தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி வை.கோ.சார்.

  ReplyDelete
 21. @G.M Balasubramaniam

  தங்கள் வருகைக்கும் கருத்துப்பதிவுக்கும் மிக்க நன்றி ஐயா. கவிஞரின் மனநிலை புரிந்தால்தான் கவிதை ரசிக்கும் என்றாலும் கவிதையைக் கொண்டு கவிஞரின் மனநிலையையும் நாம் புரிந்துகொள்ள இயலும். தங்கள் புரிதலே அதைத்தெளிவாக்குகிறது. நன்றி ஐயா.

  ReplyDelete
 22. @திண்டுக்கல் தனபாலன்

  தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி தனபாலன்.

  ReplyDelete
 23. @2008rupan
  தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ரூபன்.

  கவிதைப்போட்டியில் கலந்துகொள்ள இயலுமா என்று தெரியவில்லை. முடியுமானால் நிச்சயம் கலந்துகொள்வேன். தங்கள் அழைப்புக்கு நன்றி.

  ReplyDelete
 24. @Sasi Kala

  வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி சசிகலா.

  ReplyDelete
 25. @இராஜராஜேஸ்வரி

  வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி மேடம்.

  ReplyDelete
 26. @புலவர் இராமாநுசம்

  துன்பம் அடைந்தோர் சில வேளைகளில் அவற்றை மறக்க நினைத்தாலும் சுற்றியுள்ள சிலர் மீண்டும் மீண்டும் அனுதாபம் காட்டி அவரை அத்துன்பத்திலிருந்து மீளவிடாமையையே இங்கு கவிஞர் குறிப்பிடுகிறாரென்று எண்ணுகிறேன் ஐயா.

  தங்கள் வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் மனமார்ந்த நன்றி தங்களுக்கு.

  ReplyDelete
 27. @கோமதி அரசு

  தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மேடம்.

  ReplyDelete
 28. @athira

  வாங்க அதிரா. இம்முறை கவிதை சிரமம் வைக்காமல் புரிந்துவிட்டதா? மகிழ்ச்சியுடனான நன்றி.

  ReplyDelete
 29. @இளமதி

  ஹரிவம்ஷ்ராய் பச்சன் அவர்களின் கவிதைகளில் பெரும்பாலானவை ஏதோவொரு விரக்தி வெளிப்பாட்டுடன் அமைந்தவையே. மனம் பாரமான சிலவேளைகளில் அவற்றைப் படிப்பது கூட பாரமிறக்கும் யுக்தியாகவே செயல்படுகிறது. கவிதையை ரசித்து மகிழ்ந்தமைக்கு மிக்க நன்றி இளமதி.

  ReplyDelete
 30. @சீராளன்
  தங்கள் வருகைக்கும் ரசித்துப் பாராட்டியமைக்கும் மிக்க நன்றி சீராளன்.

  ReplyDelete
 31. @கே. பி. ஜனா...

  தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மனமார்ந்த நன்றி ஜனா சார்.

  ReplyDelete
 32. @பால கணேஷ்

  வருகைக்கும் கவிதையை ரசித்தமைக்கும் மிக்க நன்றி கணேஷ். உங்க கணினியில் hindi font ஐ சப்போர்ட் செய்யும் மென்பொருள் இல்லாவிடில் அப்படித் தோன்றும் என்று நினைக்கிறேன். வேறு காரணம் எனக்குத் தெரியவில்லையே.

  ReplyDelete
 33. @kovaikkavi

  தங்கள் வருகைக்கும் கவிதையை ரசித்தமைக்கும் மிக்க நன்றி தோழி.

  ReplyDelete
 34. @ராமலக்ஷ்மி

  வருகைக்கும் கவிதையை ரசித்தமைக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

  ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.