12 April 2012

வெட்கமறியா வெக்கை



ஆசை மட்டுமல்ல,
வெக்கையும் வெட்கமறியாதுபோலும்.
அறிந்திருந்தால்….

மதிலுக்குள்ளும், மாடியிலும்
வழக்கமற்ற வழக்கமாய்
மேலாடை துறந்துலாத்தும் ஆடவரையும்,

தார்ச்சாலையோரத் தர்பூசணிச்சாறு வழியும்
முழங்கைதனை நாவால் வழித்திடும்
நாசூக்கு மறந்த நங்கையரையும்,

மனமுதிர்த்த மதியா வாயிலானாலும்
மரமுதிர்த்த நிழலில் நின்றிளைப்பாரும்
திரைமனங்களின் சில மறைமுகங்களையும்,

வரவேற்பறைக் காத்திருப்பின் புழுக்கத்தில் நெளிந்து
மின்விசிறிப் பொத்தான் தேடி
முன் அனுமதியின்றி சொடுக்கும் கரங்களையும்
காணவிட்டு வேடிக்கை காட்டுமா?

65 comments:

  1. Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்குறியீட்டுக்கும் நன்றி நண்பரே.

      Delete
  2. அங்கேயுமா எங்கள் அவஸ்தை ?
    அருமையான பதிவு
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. இங்கே இப்போது குளிர்காலத் துவக்கம். என்றாலும் கோடைக்காலத்தில் வெயிலின் கொடுமை நம் நாட்டுக்குக் குறைவில்லை. மின்சாரம் பற்றிய கவலையில்லாததால் கோடையின் கொடுமையை சமாளித்துவிடலாம். தங்கள் கருத்துக்கு நன்றி ரமணி சார்.

      Delete
  3. தமிழ் மணத்தில் இணைத்தும்விட்டேன்
    ஓட்டளித்தும் விட்டேன்
    tha.ma 1

    ReplyDelete
    Replies
    1. தமிழ் மணத்தில் இணைத்து வாக்கிட்டு ஊக்கமளிப்பதற்கு நன்றி ரமணி சார்.

      Delete
  4. இத் தருணங்களை
    சென்னையில் இருக்குப்ம்போது கண்டதுண்டு உணர்ததுண்டு

    ReplyDelete
    Replies
    1. ஆஸ்திரேலியாவிலும் கோடையின் தாக்கம் அதிகமாய் உண்டு. ஆனால் இப்போது சென்னை வெயிலைப் பற்றி நண்பர்கள் புலம்பக் கண்டு எழுதியதே இக்கவிதை. தங்கள் கருத்துக்கு நன்றி.

      Delete
  5. ஆசை மட்டுமல்ல,
    வெக்கையும் வெட்கமறியாதுபோலும்.
    நுணுக்கமான கவனிப்பே கவிதையாய்... பாராட்டுகள்..

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தும் பாராட்டும் கண்டு மகிழ்கிறேன். மிகவும் நன்றி மேடம்.

      Delete
  6. நல்ல உன்னிப்பான ரசனையுடன் கூடிய கவிதை! வெம்மையின் கொடுமையை அனுபவித்துக் கொண்டிருக்கும் வேளையில் குளிர் தென்றலாய் வருடியது கவிதை! (ரமணி ஸார்... சென்னை வந்தப்ப உணர்ந்ததுண்டுன்னிருக்கீங்களே... மதுரைல மட்டும் கோடை வெம்மை இல்லையா என்ன..?)

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி கணேஷ்.

      வெயிலின் கொடுமையை உங்கள் வரிகளிலும் காண்கிறேனே... நண்பர் செய்தாலியின் கருத்தை ரமணி சாரின் கருத்தெனக் காண்பதும் கோடையின் கொடைதானோ? ;)

      Delete
  7. //வரவேற்பறைக் காத்திருப்பின் புழுக்கத்தில் நெளிந்து
    மின்விசிறிப் பொத்தான் தேடி
    முன் அனுமதியின்றி சொடுக்கும் கரங்களையும்//

    வெக்கை வெட்கமறியாது போகும் தான்.
    பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மனமார்ந்த நன்றி வை.கோ. சார்.

      Delete
  8. வெக்கையால ரொம்பதான் நொந்திருக்கிங்க போல. ஆனால், வெக்கையின் சூடு கவிதையில் இல்லாமல் குளிர்ச்சியாய் இருந்ததற்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் அழகானக் கருத்துரைக்கும் நன்றி ராஜி.

      Delete
  9. ஆஹா! வெம்மையையே வெம்மைப்படுத்திவிட்டீர்கள் அட்டகாசமாய்!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பாராட்டுக்கும் தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி

      Delete
  10. வெம்மை படுத்துகிறது.....

    கவிதை நன்றாக இருக்கிறது!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பாராட்டும் கருத்துரைக்கும் நன்றி வெங்கட்.

      Delete
  11. Anonymous13/4/12 06:39

    ''..ஆசை மட்டுமல்ல,
    வெக்கையும் வெட்கமறியாதுபோலும்..''
    நிசம் தான் உணர்ந்து கூறப்பட்டுள்ளது.நல்ல வரிகள் வாழ்த்துகள் சகோதரி. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் அழகானக் கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றி தோழி.

      தங்களுக்கும் இனியப் புத்தாண்டு வாழ்த்தினை சற்றே தாமதமாய்த் தெரிவித்துக்கொள்கிறேன். தங்கள் அன்புக்கு நன்றி.

      Delete
  12. கீதா...இன்னும் இங்க வெயில் இல்ல.பனிபோய் ஒரே மழைக்குளிர் இப்ப.காலத்துக்கேற்ற கவிதை !

    ReplyDelete
    Replies
    1. இங்கேயும் வெயில் இல்ல. ஆனால் ஊருக்குப் பேசும்போது எல்லோரும் விடும் பெருமூச்சின் வெப்பம் இங்கே தகிக்கிறதே.அதன் தாக்கம்தான் இது. நன்றி ஹேமா.

      Delete
  13. வெம்மை படுத்தும் பாடு அதனால் வெட்கத்திற்கு விளையும் கேடு! அருமை! சா இராமாநுசம்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வரவும் கருத்தும் கண்டு அகமகிழ்கிறேன் ஐயா. மனமார்ந்த நன்றி தங்களுக்கு.

      Delete
  14. கீதா அக்கா இலங்கையிலும் றொம்ப புழுக்கம்
    வெம்வையின் வேதனையின் வெளிப்பாடு அழகாய் மிளிர்கிறது கவியில்

    ReplyDelete
    Replies
    1. வரவுக்கும் அழகானக் கருத்துக்கும் நன்றி எஸ்தர்.

      Delete
  15. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய
    தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.


    கருத்தில் வெயிலின் வேட்கை தெரிந்தாலும்
    கவியில் குளிர்ச்சி தெரிகிறது சகோதரி.

    ReplyDelete
    Replies
    1. வரவுக்கும் இனியக் கருத்துக்கும் நன்றி மகேந்திரன். தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் என் தாமதமான புத்தாண்டு வாழ்த்துக்கள். என்றும் நலமே விளையட்டும்.

      Delete
  16. Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சதீஷ்.

      Delete
  17. கீதமஞ்சரி அவர்களே...
    இங்கே பிரான்சுக்கும் கொஞ்சம் வெட்கை அனுப்புங்களேன்.
    இங்கே மரங்களைத் தவிர எல்லாமே மூடிக்கொண்டு
    தான் இருக்கிறது. வெட்கத்தால் அல்ல...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் அழகானக் கருத்துரைக்கும் நன்றி அருணா.

      Delete
  18. அருமையான வரிகள் சகோ இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் .

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி சசிகலா. தாமதமானாலும் தெரிவித்துக்கொள்கிறேன், இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தங்களுக்கும். நலமே விளையட்டும்.

      Delete
  19. இந்தப் பெட்டி கருத்துரை எடுக்கும். வெக்கையினால் மட்டுமல்ல ,இயற்கையிலேயே வெட்கமறியா மக்கள் பலரை கேரளத்தில் காணலாம். உங்கள் நுட்பமான கவனிப்புக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் அழகானக் கருத்துரையும் பாராட்டும் கண்டு மகிழ்கிறேன். மனமார்ந்த நன்றி ஐயா.

      Delete
  20. அப்பப்பா! வெக்கை படுத்தும் பாடு கொஞ்சமா நஞ்சமா? ஆசையைப் போல வெக்கையும் அல்லவா வெட்கத்தை உதிர்த்து விடுகிறது. காலத்துக்கேற்ற கவிதை. பாராட்டுக்கள் கீதா!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் அழகானக் கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி அக்கா.

      Delete
  21. வெக்கையின் வேடிக்கைகள் தொடரத்தான் செய்கின்றன எங்கும்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி துரைடேனியல்.

      Delete
  22. அருமை.
    வெக்கையில் கூட
    வெளிப்படுகிறது
    தங்கள்
    வேட்கை - கவியாய் .

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் அழகானக் கவியுரைக்கும் நன்றி சிவகுமாரன்.

      Delete
  23. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.
    http://kovaikkavi.wordpress.com

    ReplyDelete
    Replies
    1. தங்களுக்கு என் மனங்கனிந்த இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழி.

      Delete
  24. ஆதிமனிதனின் குணத்தொடர்ச்சி இன்னும்/ இனியும் நம்மைவிட்டு போய்விடுமா என்ன?

    நாகரிகம் என்னும் போர்வைக்குள் நாம் நடித்துத் திரிந்தாலும், நம் இயல்பான குணம் சில வேளைகளில் அனிச்சையாய் வெளிப்பட்டு விடுவதை தவிர்க்க முடிவதில்லை தான்.

    வெக்கையையும் கவனித்து பதிவு செய்யும் உங்களின் கவிவேட்கை வியப்பூட்டுகிறது, கீதா மேடம்.

    ReplyDelete
    Replies
    1. அழகான விரிவானக் கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி சத்ரியன்.

      Delete
  25. கோடை வெப்பம் கவிதையாய் தகிக்கின்றது.

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மாதேவி. தங்களுக்கும் என் தாமதமான புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்து மகிழ்கிறேன்.

      Delete
  26. கவிதை அருமை.
    புத்தாண்டு வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஆதி. தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

      Delete
  27. வெக்கை படுத்தும் பாடு.நல்ல் கவிதை,வாழ்த்துக்கள்/

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி விமலன்.

      Delete
  28. அடா அடா.. வெயில் கூட அருமைதான் உங்கள் கவிதையில். இனி மர நிழலில் நின்றால் அதன் அனுமதி கேட்கவேண்டும்!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் அழகானக் கருத்துரைக்கும் நன்றி மோசி.பாலன். தங்கள் வலைத்தளம் கண்டேன். இணையப் பிரச்சனையால் கருத்திட இயலவில்லை. விரைவில் வருவேன்.

      Delete
  29. சகோ தங்கள் நலன் அறிய ஆவல் . எந்தத் தகவலும் இல்லை எனவே தங்கள் வலைப்பக்கம் வந்தேன் .

    ReplyDelete
    Replies
    1. இணைய இணைப்பில் உண்டான பிரச்சனையால் வலைப்பக்கம் வர இயலவில்லை. இனி வருவேன். அன்பான விசாரிப்பால் உள்ளம் மகிழ்ந்தேன். மிகவும் நன்றி சசிகலா.

      Delete
  30. தங்களின் பதிவு தேடி
    பத்து முறை வந்து திரும்பி விட்டேன்
    அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து....
    அன்புடன்..

    ReplyDelete
    Replies
    1. தங்கள் அன்புக்கும் ஆர்வமிகு எதிர்பார்ப்புக்கும் மிகவும் நன்றி ரமணி சார். தாங்கள் எழுதியது போல் இது இருந்தா அது இல்லே, அது இருந்தா இது இல்லே என்பது போல் ஆகிவிட்டது என் நிலை. இனி இணையப்பிரச்சனை இருக்காது என்று நம்புகிறேன். தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

      Delete
  31. //வெட்கமறியா வெக்கை//
    தலைப்பே கலக்கலாக இருக்கு நூறு விடயங்களை சுட்டி நிற்கிறது

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் அழகானக் கருத்துரைக்கும் நன்றி.

      Delete
  32. கோடை வெயிலின் வெக்கையை
    இதமான வாடைக் குளிராக
    சிலிர்க்க வைக்கும் சுகமான கவிதை.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் அழகானக் கருத்துரையும் கண்டு மகிழ்ந்தேன். நன்றி டாக்டர்.

      Delete
  33. கோடையின் கொடுமையை வெளிப்படுத்திய கவிதை அருமை!

    காரஞ்சன்(சேஷ்)

    ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.