15 March 2016

ஆறுகாலிகளும் எட்டுக்காலிகளும்..


இப்பூவுலகில் பூச்சிகள் இல்லாத இடமே இல்லை. வெப்பம் தகிக்கும் பாலைநிலம் முதல் கடுங்குளிர்ப்பிரதேசமான அண்டார்ட்டிகா வரை அனைத்து இடத்திலும் நீக்கமற நிறைந்துள்ள உயிரினம் பூச்சியினம். உலகமுழுவதுமுள்ள பூச்சியினங்களில் இதுவரை அறியப்பட்டுள்ளவை சுமார் ஒரு மில்லியன்தானாம். இன்னும் பத்து மில்லியன் பூச்சியினங்கள் அறியப்படாமல் இருக்கக்கூடும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நம் வாழ்நாளில் அனைத்தையும் கண்டறிவது சாத்தியமில்லை எனினும் என் பார்வைக்குத் தென்பட்ட சில பூச்சிகளை இங்கு உங்கள் பார்வைக்கும் வழங்குவதில் சிறுமகிழ்ச்சி.  


தேனீ (honey bee)

fiery skimmer dragonfly female


குதிரை ஈ (horse fly)


நீலவால் ஊசித்தட்டான் (common bluetail damselfly)

பொன்வலை சிலந்தி - வயிற்றுப்பக்கம்  (golden orb weaver)

இலைப் பாச்சை (green bush cricket)

தோட்டச்சிலந்தி  (garden orb weaver)

நீள்கால் பூச்சி (long legged fly)

கொள்ளைக்கார ஈ (robber fly)

பொன்வலை சிலந்தி (golden orb weaver)

பச்சை ஈ (green bottle fly)

ஈ (house fly)

பூ ஈ (hoverfly)

பெல்லா அந்துப்பூச்சி (bella moth)

மற்றப் பூச்சிகளின் லார்வா மற்றும் கூட்டுப்புழுக்களின் உடலில்
முட்டையிட்டு இனம்பெருக்கும் ஒருவகைக் குளவி
(black-tipped orange ichneumon wasp)

24 comments:

  1. மிகத் தெளிவான படங்களுடன்
    பூச்சிகள் குறித்த பதிவு அருமை
    தலைப்பை மிகவும் இரசித்தேன்
    வாழ்த்துக்களுடன்...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பதிவினை ரசித்தமைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ரமணி சார்.

      Delete
  2. சும்மா பூச்சிகாட்டி பயமுறுத்தாமல் அருமையான பல படங்களுடன் தகவல்களும் கொடுத்து வியக்க வைத்துள்ளீர்கள். :)

    பகிர்வுக்கு நன்றிகள்.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. பூச்சிகளிடம் அவ்வளவாக பயமில்லை.. புழு என்றால்தான் பயம் + அருவறுப்பு.. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கோபு சார்.

      Delete
  3. // இதுவரை அறியப்பட்டுள்ளவை சுமார் ஒரு மில்லியன்தானாம். இன்னும் பத்து மில்லியன் பூச்சியினங்கள் அறியப்படாமல் இருக்கக்கூடும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.//

    அடேங்கப்பா !

    //நம் வாழ்நாளில் அனைத்தையும் கண்டறிவது சாத்தியமில்லை//

    உண்மைதான்.

    முதல் படம் - தேனீ (honey bee) - அழகோ அழகு :)

    ReplyDelete
    Replies
    1. தேனீக்கள் எப்போதுமே அழகுதான்.. அதுவும் மலரில் அமர்ந்திருக்கும்போது சொல்லவா வேண்டும். தொடர்பின்னூட்டத்துக்கு மிகவும் நன்றி கோபு சார்.

      Delete
  4. இதில் பல பூச்சிகளை அறிவோம் என்றாலும் சில பூச்சிகளின் பெயர் தெரியாமல் உங்கள் பதிவின் மூலம் அவற்றின் பெயர்கள் தெரிந்து கொண்டோம். அழகான மிகவும் தரமான படங்கள். புகைப்படக் கலையிலும் வல்லுநர் போலும் தாங்கள்!!!

    அருமையான பதிவு. மிக்க நன்றி.

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் பல பூச்சிகளின் பெயர்கள் தெரியவில்லை.. கூகுளில் தேடித்தான் பதிவிட்டுள்ளேன். புகைப்படக்கலையில் தற்போதுதான் தேறிவருகிறேன். விரைவில் வல்லுநராக முயற்சி செய்கிறேன். நன்றி துளசி சார் & கீதா

      Delete
  5. நீல வால் ஊசித்தட்டான் அழகு! படங்கள் அனைத்தும் அழகு! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. அந்த நீலவால் ஊசித்தட்டான் ஒரு இடத்தில் உட்காரமாட்டாமல் அலைந்துகொண்டே இருந்தது. படம் பிடிப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது. வருகைக்கும் படங்களை ரசித்தமைக்கும் நன்றி அக்கா.

      Delete
  6. பூச்சுகள் ஒவ்வொன்றும் அழகுதான்
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் படங்களை ரசித்தமைக்கும் நன்றி ஐயா.

      Delete
  7. அறியாத பல தகவல்கள்..... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தனபாலன்.

      Delete
  8. பூச்சிகளின் பதிவும் படங்களும் அருமை கீதா.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் படங்களை ரசித்தமைக்கும் நன்றி சாரதா மேடம்.

      Delete
  9. படங்க‌ளுடன் விளக்கம் தந்த‌மைக்கு நன்றிகள்

    ReplyDelete
    Replies
    1. இன்னும்கூட விளக்கமாய் சொல்லத்தான் நினைத்தேன். பதிவின் நீளம் கூடிவிடுமே என்பதால் பெயர்களோடு விட்டுவிட்டேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி புத்தன்.

      Delete
  10. படங்க‌ளுடன் விளக்கம் தந்த‌மைக்கு நன்றிகள்

    ReplyDelete
  11. படங்கள் மூலம் பூச்சிகளின் பெயர்களை அறியத்தந்ததற்கு மிக்க நன்றி!

    ReplyDelete
    Replies
    1. பல பூச்சிகளின் பெயர்களை இணையத்தின் மூலம்தான் கண்டறிய முடிந்தது. சிற்றுயிர்களால் ஆனதிவ்வுலகு என்ற உங்கள் கட்டுரைதான் முதலில் நினைவுக்கு வந்தது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி செந்தில்.

      Delete
  12. படங்கள் எல்லாம் மிக துல்லியம்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் படங்களை ரசித்தமைக்கும் மிகவும் நன்றி மேடம்.

      Delete
  13. வருகைக்கும் படங்களை ரசித்தமைக்கும் நன்றி ஸ்ரீராம்.

    ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.