Showing posts with label The Nature Conservancy. Show all posts
Showing posts with label The Nature Conservancy. Show all posts

17 July 2019

ஒளிரும் அங்கீகாரங்கள்


எழுத்துக்கான அங்கீகாரம் ஏதோ கொஞ்சம் கிடைத்திருக்கிறது. ஒளிப்படங்களுக்கான அங்கீகாரம் புதிதாய் ஒளிரத் துவங்கியிருக்கிறது. 





தேர்ந்த எழுத்தாளர், சிறந்த இலக்கியவாதி, இலங்கையின் சாகித்ய மண்டல விருது பெற்றவர், முற்போக்கு சிந்தனையாளர், அரசியல் விமர்சகர், நேர்மையான பத்திரிகையாளர், தமிழ்ப்பற்றாளர் என எழுத்தாளர் முருகபூபதி அவர்களுக்குப் பற்பல அடையாளங்கள் இருந்தாலும் பாசத்தையும் நட்பையும் கொண்டாடும் ஒரு அற்புதமான மனிதர் என்ற ஒற்றை அடையாளம் அத்தனையையும் வென்றுவிடும். அவருக்கு என்பால் உள்ள அன்பு மற்றும் நம்பிக்கை காரணமாக அவரது சமீபத்திய நூல்கள் சிலவற்றுக்கான அட்டைப்படங்கள் வடிவமைக்கும் பொறுப்பை என்னிடம் அளித்திருந்தார். அவற்றுள் ஒன்றுதான் சொல்லத்தவறிய கதைகள்’. சமீபத்தில் சிட்னியில் நிகழ்வுற்ற அந்நூல் வெளியீட்டு விழாவில் சிறப்புப் பிரதியை எனக்கு வழங்கி சிறப்பித்த அன்னாருக்கு என் பணிவு கலந்த அன்பும் நன்றியும்.



  

12 Aussie Christmas Crackers of Nature  என்ற தலைப்பில் The Nature Conservancy Australia இணையதளத்தில் வெளியான பன்னிரண்டு புகைப்படங்களுள் என்னுடைய ‘Australian brush turkey’-ம் ஒன்று என்பது இன்னொரு மகிழ்வான அங்கீகாரம். வெளியாகி மாதங்கள் பலவானாலும் ஆவணப்படுத்திக்கொள்ள இது ஒரு வாய்ப்பு. 




வல்லமை படக்கவிதைப் போட்டிகளில் சமீபத்தில் இடம்பெற்ற என் ஒளிப்படங்கள் சில மற்றுமொரு சிறப்பான அங்கீகாரம்.







அசுவாரசியமாய்க் கழியும் இவ்வாழ்வை அவ்வப்போது சுவாரசியமாக்கிவிடுகின்றன இதுபோன்ற சில எதிர்பாரா சந்தோஷங்கள். வறண்ட நிலம் எதிர்கொள்ளும் வான்மழைத் தூறலாய் சட்டென்று உள்ளம் நனைத்துக் குழைத்து உயிர்ப்பிக்கின்றன அன்பின் துளி அங்கீகாரங்கள். பாரில் எத்தனை முல்லைக்கொடிகளுக்குக் கிட்டக்கூடும் பாரியின் தேர்?

கொசுறு - வானளக்கும் அழகிய கொரெல்லா பறவைக் கூட்டத்தின் அதிஉற்சாக ஆரோகணம்.