3 January 2012

சூர்யா வரைந்தவை

  ஏழாம் வகுப்பில் காலடி வைக்கவிருக்கும் என் மகன் சூர்யா ஒன்றிரண்டு வருடங்களுக்கு முன் கையால் வரைந்த படங்கள் இவை.  தற்சமயம் கணினியில் வரைவதில்தான் முழு சிரத்தையும்.
















தொடர்புடைய இடுகை  சூர்யாவும் நானும்

35 comments:

  1. ஓவியங்கள் யாவும் அருமை! முக்கியமாய் அந்த விரல்களை பாருங்கள், அழகாக வரைந்திருக்கிறார்! இப்போதிலிருந்தே அவரை தட்டிக்கொடுத்து அவரின் ஆர்வத்தை வலர்த்தால் பின்னாளில் பெரிய ஓவியராய் வருவார்!!

    ReplyDelete
  2. அருமைங்க... உங்கள் பையனுக்கு மல்டிமீடியா துறை பிடித்தமானதாக எதிர்காலத்தில் தோன்றினால், "மாயா" போன்ற softwares இருக்கிறது அவனுள் இருக்கும் திறமையை cartoons or animated chars உலவ விடலாம். media உலகில் இதற்கு பெரிய வரவேற்பும் பெருகிக் கொண்டிருக்கிறது.

    ReplyDelete
  3. Anonymous3/1/12 16:40

    ஸ்கெட்ச் ,ஷேடிங் , கலரிங் அனைத்தும் மிக அருமை சூர்யா. வாழ்த்துக்கள்.
    பாராட்டுக்கள்.
    மற்றவர்கள் சொன்னது போல் அவருக்கு ஊக்கமும் , எச்போசுரும்
    கொடுங்க கீதா.

    ReplyDelete
  4. விளையும் பயிரை
    அவன் விரல் நுனியின்
    லாகவத்தில் காண முடிகிறது.

    ReplyDelete
  5. மிகவும் அருமையா இருக்குங்க .
    சூர்யாக்கு எனது வாழ்த்துக்களை கூறுங்கள்
    .மேலே எல்லாரும் குறிப்பிட்டுள்ளது போலே ,விரல்கள் அழகா வரைந்திருக்கிறார் .சிறந்த ஓவியர்கள் கூட கை விரல்கள் வரையும்போது
    கொஞ்சம் போலே குறை தெரியும் ஆனா சூர்யா அழகா வரைந்திருக்கார் .
    பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. சிறந்த ஒரு ஓவியர் உருவாகிக்கிண்டிருக்கிறார்.சூர்யாவுக்கு என் அன்பு வாழ்த்துகள் !

    ReplyDelete
  7. கற்பனையும் கலர் சென்ஸ்ஸும்
    தங்கள் புதல்வனுக்கு பிரமாதமாக உள்ளது
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. அழகிய படங்கள் ...
    மேலும் உற்சாக படுத்துங்கள் சகோ...
    எனது வாழ்த்துக்களையும் அவரிடம் சேர்த்து விடுங்கள்

    ReplyDelete
  9. கண்ணான
    கண்ணனின்
    கணனி ஆர்வம்
    கண்ணில் தெரிகிறது
    கண் படப் போகிறது, சுற்றிப் போடுங்கள்

    ReplyDelete
  10. ஆறாம் வகுப்பு முடிக்கும் சூர்யாவின் கைவண்ணம் சூப்பர். ஓவியம் எதுவும் கற்றுக் கொள்ளாமலே இவ்வளவு அழகாக வரைகிறான் என்றால்? வருங்காலத்தில் அருமையான ஓவியராக அவன் உருவாவதற்கான அறிகுறி இப்போதே பிரகாசமாகத் தெரிகிறது. என் பாராட்டையும் வாழ்த்தையும் சூர்யாவிடம் சேர்ப்பித்து விடவும்.

    ReplyDelete
  11. சூர்யாவுக்கு மனம் நிறைந்த நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  12. அன்பு சகோதரி,
    தம்பி சூர்யாவுக்கு நல்ல கற்பனா சக்திகள் இருக்கின்றன
    வரைந்த படங்கள் உரைக்கின்றன...
    மென்மேலும் திறமைகள் வளர்ந்து
    நற்குணங்களுடன் இவ்வுலகில்
    பெயரும் புகழும் பெற்று இனிதே வாழ்ந்திட
    வேண்டுகிறேன்.

    ReplyDelete
  13. மிகவும் அருமை...
    இன்னொரு நவீன ரவிவர்மாவை பார்க்கிறேன்...
    உங்களின் கலைஞனுக்கு எனது வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  14. செல்வன் சூர்யாவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். சிறுவர் கதைகளை நீங்கள் கருவாக்கி அதற்கேற்ப தொடர் ஓவியங்களை வரையச்சொல்லி சொற்கள் இல்லாமல் படத்தின்மூலம் கதைசொல்லும் ஒரு இடுகையை இடுங்கள் சூர்யாவின் ஓவியங்கள் வழி. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. அருமையான கைவண்ணத்திற்கும் பகிர்வுக்கும் பாராட்டுக்கள் வாழ்த்துகள்..

    ReplyDelete
  16. @ மனோ சாமிநாதன்
    தங்கள் வருகைக்கும் ஊக்குவிக்கும் வார்த்தைகளுக்கும் நன்றி மேடம். பிரமாதமான ஓவியத்திறமை கொண்டிருக்கும் தங்கள் பாராட்டு நிச்சயம் சூர்யாவுக்கு உதவும்.

    ReplyDelete
  17. @ Shakthiprabha,

    தங்கள் ஊக்கமிகு கருத்துரைக்கு நன்றி ஷக்திபிரபா. அவனுக்கு மல்டிமீடியாவில் நுழையவே விருப்பம். விரைவில் நீங்கள் குறிப்பிட்டபடி மென்பொருட்கள் வாங்கித் தருகிறோம்.

    ReplyDelete
  18. @ ஸ்ரவாணி

    தங்கள் வருகைக்கும் ஊக்கமளிக்கும் வார்த்தைகளுக்கும் மிக்க நன்றி ஸ்ரவாணி.

    ReplyDelete
  19. @ Muruganandan M.K.

    வாழ்த்துரைக்கு மிகவும் நன்றி டாக்டர். மூன்று வயதிலிருந்தே பார்ப்பதையெல்லாம் வரைந்துகொண்டிருக்கிறான். அவனுக்கு மேலும் ஊக்கமளிக்கவே இப்பதிவு.

    ReplyDelete
  20. @ angelin

    வாழ்த்துக்களை சூர்யாவிடம் சேர்த்துவிட்டேன். எங்கள் இருவரின் சார்பிலும் நன்றி ஏஞ்சலின். சூர்யா வரையும்போது என்னை வியப்பிலாழ்த்தும் ஒரு செயல், அவன் வரையும்போது அழிப்பானை உபயோகப்படுத்துவதே இல்லை. அழிப்பான் மட்டுமல்ல, கோடு போட, வட்டம் வரைய எதற்கும் எந்த உபகரணத்தையும் பயன்படுத்துவதில்லை. அவற்றை உரிய இடங்களில் பயன்படுத்தி வரைந்தால் ஓவியங்கள் மேலும் மெருகு பெறும் என்பது என் எண்ணம். அவனுக்கு என் கருத்தோடு உடன்பாடில்லை.

    ReplyDelete
  21. @ ஹேமா

    உங்கள் வாய்முகூர்த்தம் பலிக்கட்டும். வாழ்த்துக்கு மிகவும் நன்றி ஹேமா.

    ReplyDelete
  22. @ Ramani
    தங்கள் வாழ்த்துக்கும் ஊக்கமளிக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி ரமணி சார்.

    ReplyDelete
  23. @ அரசன்

    தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி அரசன். வாழ்த்தினை சூர்யாவிடம் வழங்கிவிட்டேன். மிகவும் நன்றி.

    ReplyDelete
  24. @ A.R.ராஜகோபாலன்

    தங்கள் வருகைக்கும் அன்பின் வெளிப்பாடாய் சுற்றிப் போடச் சொன்னதுக்கும் நன்றி ராஜகோபாலன் சார்.

    ReplyDelete
  25. @ கலையரசி

    தங்கள் வருகைக்கும் ஊக்கமளிக்கும் வார்த்தைகளுக்கும் மிகவும் நன்றி. தங்கள் வாழ்த்தையும் பாராட்டையும் சூர்யாவிடம் சேர்த்துவிட்டேன். மிகவும் நன்றி..

    ReplyDelete
  26. @ ரிஷபன்

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி ரிஷபன் சார்.

    ReplyDelete
  27. @ மகேந்திரன்

    தங்கள் மனம் நிறைந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் கண்டு மனம் கொள்ளா மகிழ்ச்சி. மிகவும் நன்றி மகேந்திரன்.

    ReplyDelete
  28. @ தமிழ் விரும்பி

    மிகைப் பாராட்டென்றாலும் ஊக்கம் பெருக்கும் உங்கள் பாராட்டுரைக்கும் வாழ்த்துக்கும் மனம் நிறைத்த நன்றி.

    ReplyDelete
  29. @ ஹ ர ணி

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி ஹரணி சார். தங்கள் யோசனைப்படி சிறுவர் கதைக்கான முயற்சியில் இறங்குகிறேன். சூர்யாவின் வரைதிறனைப் பெருக்க தங்களது ஆலாசனை மிகவும் உதவும். மனமார்ந்த நன்றி சார்.

    ReplyDelete
  30. @ இராஜராஜேஸ்வரி

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி.

    ReplyDelete
  31. என் முதல் வருகை..தளத்தில் இணைந்து கொண்டேன்..ஓவியம் வரைந்த கைகளுக்கு பாராட்டுகள்..நேரமிருந்தால் எனது தளம் வாருங்கள்..நன்றி..

    ReplyDelete
  32. நல்ல சேகரிப்பு! உங்கள் சூர்யா வளர்ந்த பின் தன் ஞாபகச்சுவட்டைத் தேடும்போது நன்றியோடு உங்களை நினைத்துக்கோள்வார். புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  33. நல்வரவு மதுமதி. தளத்தில் இணைந்ததற்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி.

    பலமுறை முயன்றும் தங்கள் தளத்தில் என்னால் நுழைய முடியவில்லை. ஏனென்று தெரியவில்லை. மீண்டும் முயற்சிக்கிறேன்.

    ReplyDelete
  34. வருகைக்கும் நல்வாழ்த்துக்கும் நன்றி கவிப்ரியன். தங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  35. அருமையா இருக்கு.வாழ்த்துகள் தங்கள் மகனுக்கு

    ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.