கண்ணிழந்தோர் கரமறிந்த
வாரணம் பற்றிய வர்ணனை போல
தாறுமாறாய் பொருள்பிறழ்ந்து
தடுமாறி நிற்கிறது, ஓர் வார்த்தை!
திரெளபதிகளின் சேலையுரியும்வேலையை
துச்சாதனர்கள் கையினின்று
துச்சலைகள் பெற்றுக்கொண்டதுபோல்
பெண்ணியவாதப் போர்வை போர்த்த
புல்லுருவிகளால் பெருகுகிறது,
பெண்ணினத்துக்குப் பேராபத்து!
பெண்ணியம் பேசும் படைப்புகள் பலவும்
வஞ்சனையற்றுப் பூசிநிற்கின்றன,
வார்த்தைகளுக்கு வக்கிரச்சாயம்!
வேண்டாமே இந்த விபரீதமென்றால்
வீசப்படுகிறது வன்மச்சாமரம்!
வாழைக்கும் தென்னைக்கும் வழக்குண்டானால்
வாதப்பிரதிவாதம் எப்படி சாத்தியம்?
வாழையின் பலனை தென்னை தருமோ?
தென்னையின் பயனை வாழை வழங்குமோ?
உயரப் பறந்தாலும்
ஊர்க்குருவி பருந்தாகாதாம்!
ஆகவேண்டாம்!
ஊர்க்குருவி ஊர்க்குருவியாகவே இருக்கட்டுமே,
உயரப்பறப்பதில் தவறென்ன?
வீம்பு மேலிட அதைப் பிடித்து
பருந்தென்றொரு பருத்த பெயர்ப்பலகையை
அதன் பட்டுக்கழுத்தில் மாட்டி
பறந்துசெல், பறந்துசெல்லென்று
பாடாய்ப்படுத்துவதேனோ,
புரட்சிப் பெண்ணியவாதிகள்?
முழுக்கவிதையுமே சூப்பர்!! அதிலே இந்த இரண்டுவரிகள்...
ReplyDelete//வாழையின் பலனை தென்னை தருமோ?
தென்னையின் பயனை வாழை வழங்குமோ?//
இது போதும்!!
பாராட்டுகள்!!
ஆரம்ப உவமையே படு அமர்க்களம்.
ReplyDeleteபெண்ணியம் என சொல்லி ஆபாசத் தலைப்பு வைத்து
வீண் விளம்பரம் செய்வோர் எல்லாம் களையப்படவேண்டிய
புல்லுருவிகளே . நன்றாக உறைக்கும்படி சொல்லி இருக்கிறீர்கள்.
நான் ஊர்க்குருவி என்பதில் பெருமை தான் . பருந்தென்ற பட்டப்பெயர்
வேண்டாம். மிக அருமை தோழி ! பாராட்ட வார்த்தைகள் இல்லை.
பெண்ணியம் பேசும் படைப்புகள் பலவும்
ReplyDeleteவஞ்சனையற்றுப் பூசிநிற்கின்றன,
வார்த்தைகளுக்கு வக்கிரச்சாயம்!
வேண்டாமே இந்த விபரீதமென்றால்
வீசப்படுகிறது வன்மச்சாமரம்!
இதற்குமேல் வேறெப்படித்தான் சொல்லமுடியும்.சிறப்பு..
அதிகம் பாதிக்கப் பட்டோர் அதிகமாக பீறிடல் இயல்பே
ReplyDeleteபுது வெள்ளம் கொஞ்சம் கலங்கி இருத்தல் இயல்பே
நிதானத்தில் நிச்சயம் சரியாகும்
சுதந்திரத்திற்கு இருவகையான போராட்டமும்
அவசியத் தேவையே
சொல்லவேண்டியதை மிகச் சரியாகச் சொல்லிப் போகுது
தங்கள் பதிவு
பகிர்வுக்கு நன்றி
Tha.ma 3
ReplyDeleteபெண்ணியம் பேசும் படைப்புகள் பலவும்
ReplyDeleteவஞ்சனையற்றுப் பூசிநிற்கின்றன
அருமையான வரிகள் நண்பரே!
பெண்ணுக்கு ஆண் எதிரி என்பதைவிட சில
ReplyDeleteபெண்ணே பெண்ணுக்கு எதிரியாக மாறுவது
வருத்தத் தக்க செயல்
இதைத்தான் சில புரட்சிப் பெண்ணீய வாதிகள்
பெண் விடுதலை என்கிறார்கள்
புலவர் சா இராமாநுசம்
அன்புநிறை சகோதரி...
ReplyDeleteநான் இங்கே நண்பர் ரமணி அவர்கள் சொன்னதையும்
புலவர் பெருந்தகை சொன்னதையும் ஆதரிக்கிறேன்...
நண்பர் ரமணி சொன்னதுபோல..
பாதிக்கப்பட்டவர்களில் பலவகை..
காற்றுகளில் சூறாவளியைப் போல அடிக்கத்தான் செய்வார்கள்.
ஆயினும் வன்மம் கலக்காது நின்று நிதானத்துடன் செயல்படுதல் ஆக்கம்.
ஐயா புலவர் சொன்னதைப்போல
இப்படி தேவையில்லாமல் பெயர் வாங்குவதற்கென்றே
சிலர் போராட்டத்தில் குதிப்பார்கள்.. அதுமட்டும் போதாதென்று
பக்கத்திலும் சில பக்க வாத்தியங்களை வைத்துக் கொள்வார்கள்.
அப்படிப்பட்ட பெண்களால் பெண் இனத்திற்கு பங்கம் விளையும்.
பெண் என்றும் பெண்ணினமே
அதற்கில்லை ஈடினமே!
மற்றதை தொலையில் போட்டு
உற்றதை மனதில் கொண்டு
உயர உயர பறந்திடுங்கள்
வானத்திற்கு எல்லை இல்லை...
நம் வாழ்விற்கும் எல்லை இல்லை........
அருமையான கவிதைக்கு என் மனத்தினின்று கைத்தட்டல்கள்
சகோதரி.
கீதா...இதுதான் நேற்றைய நிரூ(நாற்று)வின் பதிவிலும் விவாதம்.வார்த்தைகளில் மட்டுமா பெண்விடுதலை.பெண்விடுதலைக்கு எவ்வளவோ வேறு விஷயங்கள் இருக்க பெண்களே பெண்ணுறுப்புகளை ஆபாசமாய் எழுதிவிட்டு இதுதான் சுதந்திரம் என்கிறார்கள்.கொடுமையாயில்லையா !
ReplyDelete////வாழையின் பலனை தென்னை தருமோ?
ReplyDeleteதென்னையின் பயனை வாழை வழங்குமோ?//
கீதா,
பூங்கொத்து!
(பெண்ணியச் சுதந்திரத்திற்கும், உரிமைக்கும் இன்னொரு பெயர் ’படம் வரைந்து பாகங்களைக் குறித்தல்’ - என்று நினைத்துக் கொண்டு கூப்பாடு போடும் கூட்டத்தை என்ன செய்வதோ?)
@ ஹுஸைனம்மா,
ReplyDeleteஉடனடி வருகைக்கும் உளமார்ந்த பாராட்டுக்கும் மிகவும் நன்றி ஹுஸைனம்மா.
@ஸ்ரவாணி,
ReplyDeleteஉங்கள் ஆழமானக் கருத்துரைக்கும் அழகானப் பாராட்டுக்கும் மிகவும் நன்றி தோழி.
@ மதுமதி,
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிகவும் நன்றி நண்பரே.
@ Ramani
ReplyDeleteதங்கள் கருத்துரை ஏற்கத்தக்கதே என்றபோதும் பார்வையையும் கருத்தையும் உறுத்தும் சில ஆபாசம் நிறைந்தப் படைப்புகளை, அதுவும் பெண்ணியம் என்ற பெயரில் பெண்களே எழுதக் காண நேரும்போது மனம் படும் பாட்டை மறைக்க முடியவில்லை. அதன் வெளிப்பாடே இது போன்ற எண்ணங்கள். தங்கள் வருகைக்கும், ஊக்கமளிக்கும் அழகான விமர்சனத்துக்கும், வாக்குக்கும் மிகவும் நன்றி ரமணி சார்.
@ dhanasekaran .S
ReplyDeleteதங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மனமார்ந்த நன்றி தனசேகரன்.
@ புலவர் சா இராமாநுசம்
ReplyDeleteபெண்மையை இழிவுபடுத்துபவர் யாராக இருந்தாலும் கண்டிக்கத்தக்கவர்களே என்பது என் கருத்து. தங்கள் வரவுக்கும் சிறப்பானக் கருத்துரைக்கும் மிகவும் நன்றி ஐயா.
@ மகேந்திரன்,
ReplyDeleteதங்கள் மனத்தினின்று எழுந்த கைத்தட்டல்களை மகிழ்வுடன் ஏற்றுக்கொள்வதோடு, பெண்மை போற்றும் வரிகளுக்கு பெண்ணினத்தின் சார்பில் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன். தங்கள் வருகைக்கும் நல்லதொரு விமர்சனத்துக்கும் மிகவும் நன்றி மகேந்திரன்.
@ ஹேமா,
ReplyDeleteஅந்தக் கொடுமையின் காரணம் யோசித்தால் ரமணி சார் சொன்னது போல் ரணங்கொண்ட மனதின் பாதிப்பாயிருக்கலாம். அல்லது புலவர் ஐயா சொன்னது போல் பெருமைக்காகவும் இருக்கலாம். இலக்கு தெளிவான பின் செல்லும் பாதையில் சிக்கல் உண்டாக்கலாமா? சிக்கல் களையும் சிறு முயற்சியே இது. இரண்ட வருடங்களுக்கு முன் வேறொரு தளத்தில் எழுதியது. நிரூபனின் பதிவு கண்ட தாக்கம்தான் இப்போது இங்கு பதியத் தூண்டியது. புரிதல் அருமை ஹேமா.
@ சத்ரியன்,
ReplyDeleteவருகைக்கும் அருமையானக் கருத்துக்கும் அழகானப் பூங்கொத்துக்கும் மனமார்ந்த நன்றி சத்ரியன்.
Pathivulakilum ippadi Sila Pen pathivargal irukkathan seigirargal. Sila Aan pathivargalum aapaasamaaga eluthukiraargal. Avargalai Naam anaivarum Purakkanikka vendum Sago. Kavithai arumai. Ovvoru varigalum asaththal.
ReplyDeleteகீதா மேடம்... வார்த்தைகள் பற்றவில்லை எனக்கு நான் உணர்ந்ததைச் சொல்ல... அருமை. நண்பர் மகேந்திரன் சொன்ன கருத்துக்கள் ஏற்புடையவை எனக்குங்கறதால அதையே வழிமொழியறேன். உங்களுக்கு என் ராயல் சல்யூட்!
ReplyDelete"நச்" படைப்பு. உங்கள் கருத்து தான் எனது கருத்தும்... superb
ReplyDeleteவணக்கம்.... உங்களுக்கும் உறவினர் நண்பர்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாழையின் பலனை தென்னை தருமோ?
ReplyDeleteதென்னையின் பயனை வாழை வழங்குமோ?//
ஊர்க்குருவி ஊர்க்குருவியாகவே இருக்கட்டுமே,
உயரப்பறப்பதில் தவறென்ன?
இந்த வரிகள் எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது.
அன்புள்ள கீதா அவர்களுக்கு...
ReplyDeleteகவிதையின் கோபம் புரிகிறது. பெண்ணியம் என்பதன் பொருளைச் சரியாகப் பெண்களுக்கே புரியவைக்கவேண்டிய சூழலும் வருத்தத்திற்குரியதே.. தேவையற்றது தேவையானது என்பதுஇல்லாமல் எல்லா விளம்பரங்களிலும் பெண்களைக் காட்சிப்படுத்தும் போக்கினைப் பெண்கள் எந்தளவிற்கு எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். அந்தகுறிப்பிட்ட பொருள்களைத்தான் பெண்கள் ஈ மெர்ய்பபதுபோல உடன் வாங்குகிறார்கள். ஏற்கெனவே என்னுடைய வலைப்பதிவில் குறிப்பிட்டதுபோல..கூந்தலின் வலிமைக்கு லாரியைக் கட்டியிழுப்பதுபோன்ற மென்மையற்ற செயல் எத்தனை பெண்களால் வன்மையாகக் கண்டிக்கப்பட்டிருக்கிறது?...எத்தனையோ இதுபோல...உங்கள் கவிதையின் நியாயங்கள் செயல்வடிவம் பெறவேண்டும். பெண்களைத் தேவையின்றி விளம்பரப்பொருளாகப் பயன்படுத்தும் நிறுவனங்கள் தண்டிக்கப்படவேண்டும். அந்த விளை பொருள்கள் வீணடிக்கப்படவேண்டும்.. எனினும் உங்களின் கோபம் நியாயமானது. வாழ்த்துக்கள்.
அருமையான வீரியமுள்ள கவிதையில் மனதை தொட்ட சாட்டையடி வரிகள்
ReplyDelete@ துரைடேனியல்
ReplyDeleteதாங்கள் சொல்வது போல் மனத்திற்கொவ்வாப் பதிவுகளைப் புறக்கணிப்பதே அறிவுடைமை. தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி.
@ கணேஷ்
ReplyDeleteதங்கள் வருகைக்கும் அழகான மதிப்புரைக்கும் மிகவும் நன்றி கணேஷ் சார்.
@ Shakthiprabha
ReplyDeleteதங்கள் வருகைக்கும் அழகானக் கருத்துக்கும் மிகவும் நன்றி ஷக்திபிரபா.
@ சி.கருணாகரசு
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி. தங்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
@ கோமதி அரசு
ReplyDeleteதங்களுக்குப் பிடித்த வரிகளைக்குறிப்பிட்டுப் பாராட்டியதற்கு மிகவும் நன்றி.
@ ஹரணி
ReplyDeleteதங்கள் வருகைக்கும் அருமையானக் கருத்துரைக்கும் நன்றி ஹரணி சார். பெண்களைப் பெண்களே மதிக்கும் நிலை வரப் பாடுபடுவோம். மிகவும் நன்றி.
@ angelin
ReplyDeleteதங்கள் வருகைக்கும் அழகானக் கருத்துரைக்கும் மிகவும் நன்றி ஏஞ்சலின்.