சன்னலோர இருக்கை சாட்சியாக
கண்ணில் உறுத்தியதோர் காட்சி!
சிரிக்கும் குழந்தையை மடியிருத்தி,
பாலுட்டி, கொஞ்சி முத்தமிட்டு,
கண்ணேறு கழித்து, எல்லாம் முடித்து,
சட்டெனத் தொடை திருகி,
வீறிட்டழச்செய்த விந்தைமிகு தாயை,
வேதனையுடன் பார்த்திருந்தவேளை…
கந்தலை அள்ளிச்செருகி எழுந்து,
அழும் குழந்தையைக் கையிலேந்தி,
அய்யா, சாமி, அம்மா… என்று
அக்கம்பக்க மனிதர்களிடம்,
யாசகம் கேட்கத்தொடங்கியிருந்தாள்,
அவள்!
ம்ம்ம்.. மனதை உறுத்துது , உருக்குது கவிதை.
ReplyDeleteஇவளாவது திருகுவதுடன் நிறுத்திக் கொண்டாள்....
வறுமை மட்டுமல்ல உணர்ச்சிகளும் அவர்களை
அதிகமாக ஆட்டுவிக்கின்றன.
நல்ல கவிதை கீத்ஸ் !
இப்பிடியும் நாடகமாட வைக்குமா வறுமை !
ReplyDeleteவாழ்வின் வலி ம்மிகுந்த பக்கங்களை உண்ர்த்தும் கவிதை.நன்றாக இருக்கிறது.வாழ்த்துக்கள்.
ReplyDeleteதன் பசிக்கு யாசகம் கேட்குமுன், தன் குழந்தையின் பசி தீர்த்த அந்தத் தாயின் பாசமும், பசி தீர்ந்து உறங்கு முன் அதைக்கிள்ளி எழுப்பி யாசகம் செய்ய நேர்ந்து விட்ட அவளின் வறுமையும் மனதை நெகிழ்த்துகிறது.
ReplyDeleteசிறப்பான கவிதை!!
அழகிய கவிதை அருமையாக இருக்கிறது. (உலகை நன்கு கவனிக்கிறீர்கள்)
ReplyDeleteமனதை உறுத்துது... சிறப்பான கவிதை...வாழ்த்துகள்...
ReplyDeleteநடைமுறை உணர்த்தும் நல்ல கவிதை.
ReplyDeleteஎன்ன ஒரு குரூரம் ...
ReplyDeleteபெற்ற பிள்ளையை பணயமாக வைத்து
பிச்சை எடுக்கும் அவலத்தை மனம் உருகும் படி
சொல்லியிருப்பது கவிதைக்கு சிறப்பு.
யதார்த்தமான கவிதை அழகிய நடையில்!!
ReplyDelete//சட்டெனத் தொடை திருகி,
ReplyDeleteவீறிட்டழச்செய்த விந்தைமிகு தாயை//
வறுமை காரணம் என்றாலும், உழைக்காமல் பிள்ளையை வலிக்க வைத்துச் சம்பாத்யம் நியாயமாகுமா?
வீதியில் அந்த பிச்சைக்காரி என்றால், டிவிக்களில் ஆட, பாடச் சொல்லும் அம்மாக்கள்!! அவர்களுக்கு வறுமை காரணமில்லை, புகழ் போதை காரணம்!!
@ ஸ்ரவாணி,
ReplyDeleteபசி வந்தால் பத்தும் பறந்துபோகும் என்பார்கள். அதில் தாய்ப்பாசம்தான் முதலிடம் வகிக்கிறதோ என்னவோ? அழகானக் கருத்துக்கும் செல்ல அழைப்புக்கும் நன்றி ஸ்ரவாணி. ( என் மகள் எனக்கு அடிக்கடி இப்படி ஏதாவது பெயரில் செல்லப் பெயர் வைப்பாள்.சமீப காலமாய் என்னை பேப்ஸ் என்று அழைத்துக்கொண்டிருக்கிறாள். )
@ஹேமா,
ReplyDeleteகண்ணால் பார்த்தது ஹேமா. சிலர் மற்றவர் குழந்தையை வாடகைக்கு எடுத்துவந்து அழவைத்துப் பிச்சை எடுப்பார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். பெற்றவளே செய்வதை அன்று பார்த்தேன்.
@ விமலன்,
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிகவும் நன்றி விமலன்.
@ மனோ சாமிநாதன்,
ReplyDeleteதங்கள் பார்வையில் தாய்மையின் மறுபக்கம் தெரிகிறது. மனம் வலித்த நிகழ்வை மன்னிக்கவும் தோன்றுகிறது. தங்கள் வருகைக்கும் அழகானக் கருத்துரைக்கும் மிகவும் நன்றி மேடம்.
@ வியபதி,
ReplyDeleteதங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மனமார்ந்த நன்றி.
@ ரெவெரி
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி.
@ thirumathi bs sridhar
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிகவும் நன்றி ஆச்சி.
@ மகேந்திரன்
ReplyDeleteதங்கள் வருகைக்கும் மனம் நெகிழ்ந்த பின்னூட்டத்துக்கும் நன்றி மகேந்திரன்.
@ விச்சு,
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிகவும் நன்றி விச்சு.
@ ஹூஸைனம்மா,
ReplyDeleteசரியாத்தான் சொல்லியிருக்கீங்க.. பல குழந்தைகளின் குழந்தைப்பருவம் அவர்களது பெற்றோராலேயே பறிக்கப்படுவது மிகவும் கொடுமை. தங்கள் வரவுக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி ஹூஸைனம்மா.
:( valikkirathu.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஅருமையான வரிகள்.ஆழமான கருத்துக்கள்.......
ReplyDeleteபசிப்பேயை விரட்ட குழந்தை மூலதனமாகிறது
ReplyDeleteமனம் கவர்ந்த பதிவு
வாழ்த்துக்கள்
Tha.ma 1
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஷக்திபிரபா.
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி இடிமுழக்கம்.
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் வாக்குக்கும் மனமார்ந்த நன்றி ரமணி சார்.
ReplyDeleteவாழ்க்கை எப்படி எல்லாம் வாழக் கற்றுக் கொடுக்கிறது பாருங்கள் கீதா.வாழ்க்கையின் அப்பட்டமான நிதர்சனம்!!
ReplyDeleteசின்னக் கவிதைக்குள் கச்சிதமான படப்பிடிப்பு!!
தங்கள் வருகைக்கும் அழகான விமர்சனத்துக்கும் மிகவும் நன்றி மணிமேகலா.
Deleteவறுமைக்கு இக்கவிதை
ReplyDeleteஎடுத்துக் காட்டே-ஏழை
வாழ்வுக்கும் இக்கவிதை
எடுத்துக் காட்டே
குறுங்கவிதை என்றாலும்
கொம்புத் தேனே-மழை
குறையின்றி வழங்கிடும்
கொண்டல் வானே
புலவர் சா இராமாநுசம்
தங்கள் வருகையும் இனிய பாவும் கண்டு பேரானந்தம் அடைந்தேன் ஐயா. மனம் நிறைந்த நன்றி தங்களுக்கு.
Delete