நிகழ்காலத்தின் நிலைவாயிலில் நின்றுகொண்டு
என்றேனும் ஓர்நாள் உறுதியாய் வரவிருக்கும்
விமோச்சனத்துக்காக தவமிருக்கிறேன்..
சாபவிமோச்சனமோ பாபவிமோச்சனமோ அல்ல…..
கால விமோச்சனம்!
இறந்தகாலத்தின் பிடியினின்று
இருப்பை விடுவிக்கும் விமோச்சனம்!
நெஞ்சப்பாறையில் பாசியெனப் படர்ந்துவிட்ட
அவநம்பிக்கை காரணமாய் வழுக்கத்துவங்கும்
வாழ்வாதாரத்தின் ஒரே பிடிப்பு!.
வரும் வரும் என்று பார்த்திருந்த காலமெல்லாம்
ஒரு மலைப்பாம்பைப்போலவே
சலனமேதும் உண்டாக்காமல் மெல்ல ஊர்ந்து
நிகழ்காலமென உருக்கொண்டுவிடுகிறது.
காலத்தின் சதியை உணருமுன்னரே
அதுவும் மரணித்து இறந்தகாலமாகிவிடுகிறது.
இறந்தகாலத்தின் எச்சங்கள் எதையும்
எடுத்தெறிய இயலாமல்
மன எரவாணத்தில் செருகியே வைத்திருக்கிறேன்.
சுமை தாங்காது எரவாணம் இடிந்து
வீழும் நாளொன்று நெருங்குவதை உணர்கிறேன்.
இருந்தும் ஏதேனும் சப்பைக்கட்டும்
சமாதானமும் சொல்லிக்கொண்டு….
சேமித்துக்கொண்டே இருக்கிறேன்,
தூக்கியெறியவேண்டிய நினைவுகளை!
யாவற்றுக்குமொரு கால விமோச்சனம் வரும்!
உயிர்க்குடில் பற்றியெரியும் நாள் வரும்!
அன்று….
பழுப்பேறிய பழந்தாள்களைப்போல
பிறர் பார்வைக்கு மறைக்கப்பட்ட இரகசியங்களும்
இத்துப்போன நினைவுகளும் கருகிச் சாம்பலாகும்!
"நெஞ்சப்பாறையில் பாசியெனப் படர்ந்துவிட்ட"
ReplyDelete"காலமெல்லாம்
ஒரு மலைப்பாம்பைப்போலவே
சலனமேதும் உண்டாக்காமல்"
செம சூப்பரான வரிகள். ரசித்துப்படித்தேன். உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் இந்தாண்டு இனிமையாகவும் சந்தோஷமாகவும் அமைய வாழ்த்துக்கள்.
மனம் கவர்ந்த அருமையான பதிவு
ReplyDeleteபடிமங்களும் குறீயீடுகளும் மிக மிக அருமை
தொடர வாழ்த்துக்கள்
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
த.ம 1
மனம் கனிந்த புத்தாண்டு மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்கிறேன். வாழ்க வளத்துடன்.
ReplyDeleteரைட்டு...
ReplyDeleteஅழகிய தங்கள் கவிதைக்கு ஒரு சபாஷ்..
ReplyDeleteமற்றும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
ReplyDeleteஎல்லா நினைவுகளும் நம் லட்சியத் 'தீ 'க்களுக்கு
ReplyDeleteஎரிபொருள் மட்டுமே .
புத்தாண்டுவாழ்த்துக்கள் தோழி !
கீதா...எதை எரித்தாலும் மனம் எரியும்வரை நினைவுகள்.அது வரம்.வரத்தைக்கூட வரம் கேட்க வைப்போம்.இது வாழ்க்கை !
ReplyDeleteமிக வித்தியாசமான சொற் கட்டமைப்பாக உள்ளது. வாழ்த்துகள். இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
மனதை பிசையும் வரிகள்
ReplyDeleteவிடியல் வரும் என்று காத்திராமல்
விடியலை கொண்டு வருவோம்..
ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழரே
சேமித்துக்கொண்டே இருக்கிறேன்,
ReplyDeleteதூக்கியெறியவேண்டிய நினைவுகளை!
அருமை புத்தாண்டு வாழ்த்துக்கள் .
-மனதில் நின்றது கவிதை. நம்மை நாமே புதுப்பித்துக் கொள்ளத்தான் வேண்டும். என் மன எரவாணமும் பாரம் தாங்காமல் புலம்பிக் கொண்டு தானிருக்கிறது. நன்று. உங்களுக்கு என் இதயம் நிறைந்த ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
ReplyDelete//வரும் வரும் என்று பார்த்திருந்த காலமெல்லாம்
ReplyDeleteஒரு மலைப்பாம்பைப்போலவே
சலனமேதும் உண்டாக்காமல் மெல்ல ஊர்ந்து
நிகழ்காலமென உருக்கொண்டுவிடுகிறது.
காலத்தின் சதியை உணருமுன்னரே
அதுவும் மரணித்து இறந்தகாலமாகிவிடுகிறது.//
உயர்ந்த உள்ளத்தில் தோன்றிய சிந்தனைக்
கருத்துக்கள் பொதிந்த கவிதை சகோதரி!
என் இதயம் நிறைந்த ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
ஆழமான தேடல்...
ReplyDeleteஅழகான வார்த்தையாடல்.
ReplyDeleteஇறுதி வரிகள் எச்சம்.
புத்தாண்டு வாழ்த்துக்கள்.
Sorry
ReplyDeleteஎச்சம் அல்ல. உச்சம்.
"இறந்தகாலத்தின் பிடியினின்று
ReplyDeleteஇருப்பை விடுவிக்கும் விமோச்சனம்!
நெஞ்சப்பாறையில் பாசியெனப் படர்ந்துவிட்ட
அவநம்பிக்கை காரணமாய் வழுக்கத்துவங்கும்
வாழ்வாதாரத்தின் ஒரே பிடிப்பு!"
உருளும் கல்லில் பாசி படிவதில்லை கீதா! எனவே நெஞ்சப் பாறை எப்போதும் உருளும் கல்லாகவே இருக்கட்டும்! அவநம்பிக்கை நீக்கி இன்று புதிதாய்ப் பிறந்ததாய்ப் புத்துணர்ச்சி கொள்வோம்! நம்பிக்கை தானே வாழ்க்கை?
பழையன கழிதலும் புதியன புகுதலும் நம் முன்னோர் வகுத்த வாழ்க்கை நெறி! புத்தாண்டு வாழ்த்து கீதா!
விரக்தியின் விளிம்பில் நம்பிக்கை வரிகள். நிலப்பரப்பில் தூக்கிப் போட்ட மீனைப் போல துள்ளுகிறது மனம் வாழ்வாதாரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில்.
ReplyDeleteமனதைப் பிசைந்து விட்டுப் போகிறது கவிதை.
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
///பழுப்பேறிய பழந்தாள்களைப்போல
ReplyDeleteபிறர் பார்வைக்கு மறைக்கப்பட்ட இரகசியங்களும்
இத்துப்போன நினைவுகளும் கருகிச் சாம்பலாகும்!///
ஆழமான வரிகள்
மனத்தினின்று கைத்தட்டல்கள் சகோதரி.
என் அன்பிற்கினிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
சுய பச்சாதாபமும், சுய சமாதானமும் அருமையான கவிதையைத் தந்திருக்கிறது.
ReplyDelete///பழுப்பேறிய பழந்தாள்களைப்போல
ReplyDeleteபிறர் பார்வைக்கு மறைக்கப்பட்ட இரகசியங்களும்
இத்துப்போன நினைவுகளும் கருகிச் சாம்பலாகும்!///
அழகான ஆழமான வரிகள் உங்கள் அனுபவத்தின் கல்வெட்டுக்கள். என்னை போன்ற குழந்தை பதிவர்களுக்கு உங்கள் சொல்லாழம் வியக்கவைக்கிறது இதுபோல மாற ஆசை பிறக்கிறது.
ரொம்பவே பிடித்தது கீதா!
ReplyDelete//பழுப்பேறிய பழந்தாள்களைப்போல
பிறர் பார்வைக்கு மறைக்கப்பட்ட இரகசியங்களும்
இத்துப்போன நினைவுகளும் கருகிச் சாம்பலாகும்!
//
மனதை பிசைகிறது....
புத்தாண்டில் பசுமையாய் மகிழ்ச்சி தழைக்க வாழ்த்துக்கள்
அந்தப் படத்தைப் பார்த்த உணர்வும் கவிதையைப் படித்த உணர்வும் ஒன்றாக இருந்தது.வாழ்த்துகள்.
ReplyDelete@ விச்சு,
ReplyDeleteரசித்துப் படித்ததுடன் ரசித்த வரிகளைக் குறிப்பிட்டுப் பாராட்டியதற்கு மிகவும் நன்றி விச்சு. தங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
@ Ramani,
ReplyDeleteதங்கள் தொடர் வருகையும் தமிழ்மண வாக்குப்பதிவும் ஊக்கமளிப்பும் எனக்கு மிகுந்த உற்சாகம் அளிக்கின்றன. நன்றி ரமணி சார்.
@ஹரணி,
ReplyDeleteவருகைக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கும் நன்றி ஹரணி சார். தங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
@ கவிதை வீதி... // சௌந்தர் //
ReplyDeleteவருகைக்கும், பாராட்டுக்கும், புத்தாண்டு வாழ்த்துக்கும் நன்றி சௌந்தர். தங்களுக்கும் என் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.
@ஸ்ரவாணி,
ReplyDeleteதங்கள் பின்னூட்ட வரிகள் கண்டு பிரமிப்பும் மகிழ்வும். நன்றி ஸ்ரவாணி.
@ஹேமா,
ReplyDeleteஅழகான வரிகளால் ஒரு அற்புதப் பின்னூட்டம். நன்றி
ஹேமா.
@ kovaikkavi ,
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி தோழி.
suryajeeva,
ReplyDeleteஆதுரமான வரிகள் நிரம்பிய பின்னூட்டம் கண்டு மகிழ்ச்சி நண்பரே.
@ sasikala,
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சசிகலா.
@ கணேஷ்,
ReplyDeleteஅழகான ஒத்த ரசனையுள்ள வரிகள். வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி கணேஷ் சார்.
@ புலவர் சா இராமாநுசம்,
ReplyDeleteதங்கள் வருகையும் அழகானக் கருத்துரையும் கண்டு மனம் நிறைந்த மகிழ்ச்சி. நன்றி ஐயா. தங்களுக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
@ guna thamizh ,
ReplyDeleteவருகைக்கும் அழகானக் கருத்துரைக்கும் நன்றி முனைவரே.
@ Muruganandan M.K.
ReplyDeleteவருகைக்கும் கருத்துரைக்கும் மிகவும் நன்றி டாக்டர்.
@ கலையரசி,
ReplyDeleteவருகைக்கும், வாழ்த்துக்கும், அழகான, ஆழமான கருத்துரைக்கும் மிகவும் நன்றி.
@ சிவகுமாரன்,
ReplyDeleteவருகைக்கும், நெகிழ்த்தும் பின்னூட்டத்துக்கும் நன்றி சிவகுமாரன்.
@ மகேந்திரன்,
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும், மனக்கைத்தட்டல்களுக்கும் மிகவும் நன்றி மகேந்திரன்.
@ சத்ரியன்,
ReplyDeleteவருகைக்கும் கவிதை விமர்சனத்துக்கும் நன்றி சத்ரியன்.
@ இடி முழக்கம்,
ReplyDeleteமுதல் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி. குழந்தைப் பதிவர்களா? உங்கள் தன்னடக்கத்தைப் பாராட்டுகிறேன்.
@ Shakthiprabha,
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் அழகானப் பின்னூட்டத்துக்கும் நன்றி ஷக்திபிரபா.
@ thirumathi bs sridhar ,
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஆச்சி. அந்தப் படத்தில் இருக்கும் வண்ணக்கலவை என் எண்ணக்கலவையைப் பிரதிபலிப்பதால்தான் இப்படத்தைத் தேர்ந்தெடுத்தேன். குறிப்பிட்டதற்கு நன்றி ஆச்சி
பழுப்பேறிய பழந்தாள்களைப்போல
ReplyDeleteபிறர் பார்வைக்கு மறைக்கப்பட்ட இரகசியங்களும்
இத்துப்போன நினைவுகளும் கருகிச் சாம்பலாகும்!//
மிக அருமையான கருகொண்ட கவிதை..
வாழ்த்துகள்
"யாவற்றுக்குமொரு கால விமோச்சனம் வரும்!
ReplyDeleteஉயிர்க்குடில் பற்றியெரியும் நாள் வரும்!
அன்று….
பழுப்பேறிய பழந்தாள்களைப்போல
பிறர் பார்வைக்கு மறைக்கப்பட்ட இரகசியங்களும்
இத்துப்போன நினைவுகளும் கருகிச் சாம்பலாகும்!"
உண்மைதான் பாழாய்ப் போன மனம் தான் அதை விடுத்தொழிக்க மாட்டேங்கிதே!
அருமையானதொறுக் கவிதை..
செறிவான சிறந்த வார்த்தைகள்... பகிர்வுக்கு நன்றிகள் சகோதிரி..
@ அன்புடன் மலிக்கா,
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி மலிக்கா.
@ தமிழ் விரும்பி,
ReplyDeleteவருகைக்கும் அழகானக் கருத்துரைக்கும் நன்றி.
இருந்தும் ஏதேனும் சப்பைக்கட்டும்
ReplyDeleteசமாதானமும் சொல்லிக்கொண்டு….
சேமித்துக்கொண்டே இருக்கிறேன்,
தூக்கியெறியவேண்டிய நினைவுகளை!
பிடித்த இடம்..