ஊஞ்சலில் வைத்து ஆட்டப்படும் குழந்தையின்
உற்சாக உள்ளத்தோடு நான்...
என்றாவது ஒரு நாள் புத்தகத்தில் நன்றியுரையில் இடம்பெற்றிருக்கும் என் மதிப்புக்குரிய மற்றுமொரு தோழமையுறவு கலையரசி அக்கா. நான் எழுத ஆரம்பித்த காலத்திலிருந்து தொடர்ந்து அவர்கள் அளித்துவரும் ஊக்கமும் உந்துதலும்தான் இன்றென்னை இணையத்தில் ஓரளவுக்கு பரிச்சயப்பட்ட பதிவராய் எழுத்தாளராய் வலம் வரச் செய்திருக்கின்றன. அவர்களுக்கு இவ்வேளையில் என் அன்பான நன்றியைத் தெரிவித்து மகிழ்கிறேன்.
என்றாவது ஒரு நாள் நூல் விமர்சனத்தை தன்னுடைய ஊஞ்சல் தளத்தில் மிக அழகாகப் பதிவு செய்துள்ளார்கள். ஒவ்வொரு கதையையும் அவர்கள் சிலாகித்திருக்கும் விதமே கதையை அவர்கள் எந்த அளவு ஊன்றி வாசித்திருக்கிறார்கள் என்பதையும் மூலக்கதைகளின் கருவை எந்த அளவுக்கு உள்வாங்கியிருக்கிறார்கள் என்பதையும் மிக அழகாகக் காட்டுகின்றன.
வணக்கம்
ReplyDeleteநானும் பார்த்தேன் விமர்சனத்தை மிக அழகாக சொல்லியுள்ளார் வாழ்த்துக்கள் த.ம1
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வருகைக்கும் வாழ்த்துக்கும் தமிழ்மண வாக்குக்கும் நன்றி ரூபன்.
Deleteமணிமேகலாவின் அட்சயப்பாத்திரத்தில் 'என்றாவது ஒருநாள்' இரண்டுநாளைக்கு முன்புதான் படித்தேன். வாங்க வேண்டிய புத்தகங்களின் பட்டியலில் உங்களுடையதும் சேர்ந்து கொண்டது. கலையரசி அவர்களின் பக்கத்திற்கும் போகவேண்டும். த.ம.+
ReplyDeleteதங்களுடைய வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா. புத்தகத்தை வாங்கி வாசிப்பேன் என்ற வார்த்தையே மகிழ்வைத் தருகிறது. வாசித்தபின் தங்களுடைய கருத்தைப் பகிர்ந்துகொள்ளுங்கள். மிக்க நன்றி.
Deleteவாழ்த்துக்கள் சகோதரியாரே
ReplyDeleteதம +1
தங்களுடைய வருகைக்கும் வாழ்த்துக்கும் தமிழ்மண வாக்குக்கும் நன்றி ஐயா.
Deleteவாசித்தேன்... வாழ்த்துக்கள்...
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி தனபாலன்.
Deleteநானும் ஊஞ்சலில் அமர்ந்து சற்று நேரம் [ஏன் ...... நீண்ட நேரமே] ஜாலியாக ஆடி மகிழ்ந்து வந்தேன்.
ReplyDelete>>>>>
நானும் அதைப் பார்த்து ரசித்து மகிழ்ந்தேன் சார். தங்களுக்கு என் அன்பான நன்றி.
Delete//ஒவ்வொரு கதையையும் அவர்கள் சிலாகித்திருக்கும் விதமே கதையை அவர்கள் எந்த அளவு ஊன்றி வாசித்திருக்கிறார்கள் என்பதையும் மூலக்கதைகளின் கருவை எந்த அளவுக்கு உள்வாங்கியிருக்கிறார்கள் என்பதையும் மிக அழகாகக் காட்டுகின்றன. //
ReplyDeleteநீங்களும் இதனை மிகவும் அழகாகவே இங்கு சொல்லியுள்ளீர்கள். எழுத்துலகில் தாங்கள் இருவருமே நல்ல திறமைசாலிகள் தான். இருவருக்கும் என் பாராட்டுக்கள் + நல்வாழ்த்துகள்.
பிரியமுள்ள கோபு
ஆஹா... தங்களுடைய வாக்கும் வாழ்த்தும் கேட்டு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. மிகவும் நன்றி கோபு சார்.
Deleteஊஞ்சலாடியதைப் போல் ஓரு சுகானுபவம்! கீதா.
ReplyDeleteநன்றிப்பா. தரும் தகவல்களுக்கும் இணைப்புகளுக்கும்.
கூடவே, உங்கள் நண்பர்கள் தம1,தம+ என்கிறார்கள்.என்னவென்று ஒன்றும் புரிய மாட்டேங்குதுப்பா. எனக்கும் கொஞ்சம் சொல்லுங்களேன் :) இருந்தால் நானும் கொஞ்சம் தருவேனே! :)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மணிமேகலா. த.ம. பற்றி கேட்டிருக்கிறீர்கள். தமிழ்மணம் திரட்டியில் நம் பதிவுகளை இணைத்துவிட்டால் அதற்கு வாக்களிக்கும் வசதி உள்ளது. அன்பின் மிகுதியாலும் பதிவால் ஈர்க்கப்பட்டும் வாக்கினை அளிப்பவர்கள் நமக்கு அதைத் தெரியப்படுத்துகிறார்கள்.
Deletehttp://nallurhameed.blogspot.com.au/2013/04/vote-button.html இந்த இணைப்பில் திரட்டிகளை இணைப்பது குறித்த விவரம் உள்ளது. தேவையெனில் பயன்படுத்திக்கொள்ளுங்கள் மணிமேகலா.
Deleteஊஞ்சலின் ஆட்டத்தில் நானும் கலந்து கொண்டு ஆடி மகிழ்ந்து....வந்தேன் கீதா.
ReplyDeleteஅன்பான நன்றி உமையாள்.
Deleteநான் இன்னும் பார்க்கவில்லை. அதனால் புரிதலில் சற்று சிரமம். உங்கள் எழுத்துக்கள் உங்களுடையது. உங்கள் முயற்சி. ஊக்கம் கொடுத்தவரைப் பாராட்டலாம்தான் இப்போதுதான் பார்த்தேன் உங்கள் நூலின் விமரிசனம் எழுதி இருக்கிறார் என்று. வலைத் தளத்தில் படித்த கதைகளா?புத்தகம் கிடைத்தால் வாங்கிப் படிக்க வேண்டும். ஒரு இடத்தில் படித்தது நினைவுக்கு வருகிறது.எழுத்தாளன் தன் படைப்புகளைப்பிறர் படித்துக் கருத்து சொல்ல வேண்டும் என்று அடிமனதில் வேண்டுகிறான். எனக்குப் புரிந்தது. நானும் ஒரு புத்தகம் வெளியிட்டுள்ளேனே. வாழ்த்துக்கள் மேடம்
ReplyDelete[quote]எழுத்தாளன் தன் படைப்புகளைப்பிறர் படித்துக் கருத்து சொல்ல வேண்டும் என்று அடிமனதில் வேண்டுகிறான்[quote]
Deleteஆயிரத்தில் ஒர் வார்த்தை ஐயா, சும்மா கிறுக்கும் எனக்கே அப்படி தோன்றும்பொழுது எழுத்தாளர்களுக்கு தோன்றுவது வியப்பில்லை
ஒரு இடத்தில் படித்தது நினைவுக்கு வருகிறது.எழுத்தாளன் தன் \\படைப்புகளைப்பிறர் படித்துக் கருத்து சொல்ல வேண்டும் என்று அடிமனதில் வேண்டுகிறான். எனக்குப் புரிந்தது. நானும் ஒரு புத்தகம் வெளியிட்டுள்ளேனே. வாழ்த்துக்கள் மேடம்\\ தங்களுடைய வருகைக்கும் என் உற்சாக மனத்தைப் புரிந்துகொண்ட கருத்துக்கும் மிக்க நன்றி ஜிஎம்பி ஐயா.
Delete\\வலைத் தளத்தில் படித்த கதைகளா?புத்தகம் கிடைத்தால் வாங்கிப் படிக்க வேண்டும்.\\ புத்தகத்தில் மொத்தம் 22 கதைகள் உள்ளன. அவற்றுள் நான்கைந்து மட்டும் இந்த வலைப்பூவில் வெளியிட்டிருக்கிறேன்.
Deleteஅழகான விமர்சனம். வாங்கிய புத்தகத்தை இன்னும் வாசிக்கவில்லை. என்னவர் தில்லிக்கு எடுத்து சென்றுள்ளார். விரைவில் அவரிடமிருந்து வாசிப்பனுபவத்தை எதிர்பார்க்கலாம்....:)
ReplyDeleteவாங்கியிருக்கிறேன் என்பதே மகிழ்வைத் தருகிறது. வாசித்தபின் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள், குறை நிறைகள் எதுவாயினும். நன்றி ஆதி.
Deleteவிமர்சனத்திற்க்கு நன்றிகள்
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி புத்தன்.
Deleteவாழ்த்துகள் கீதமஞ்சரி..நான் இன்னும் உங்கள் நூலுக்காகக் காத்திருக்கிறேன். அப்பா வாங்கிவிட்டார்கள், இன்னும் அனுப்பவில்லை. :(
ReplyDelete