மயில்களை ஆஸ்திரேலியாவில் பார்ப்பேன் என்று நினைத்தே பார்க்கவில்லை. அதுவும் கூண்டுக்குள் அடைபடாது சுதந்திரமாய் சுற்றித்திரியும் அழகுத்தோகை ஆண்மயில்களும் அவற்றை விடவும் வெகு மெத்தனமாய்த் திரியும் பெண்மயில்களுமாய்.…ஒரு நாளை மிக அழகாக்கிவிட்டன.
பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி சார்ந்த பூங்கா அது. ஏராளமான பறவைகளின் சத்தத்தை மீறி ஒலித்த க்காவ்…. க்காவ்.. என்னும் அகவல் ஓசை இப்போதும் கூட காதில் ஒலிக்கும் அற்புதம்.
புதுப்புடவையின் ஓரம் அழுக்காகாதவண்ணம் மெலிதாய் கொசுவத்தைத் தூக்கிப்பிடித்து நடக்கும் பெண்கள் போல ஒரு சமயம் அவ்வளவு நீளத் தோகையை வெகு லாவகமாகத் தூக்கிக்கொண்டு நடக்கும் ஒய்யாரம்… அப்படியே அழுக்கானால்தான் என்ன என்று அலட்சியமாய் தழையத்தழைய நடக்கும் பெண்டிரைப் போல தோகையைத் தரையில் தழையவிட்டு நளினமாய் சிலநேரம்…
ஆடு மயிலே ஆடு மயிலே என்று கெஞ்சும் அறியாமையை ரசித்தபடி அவை பாட்டுக்குப் போகின்றன வருகின்றன. அங்கே க்ளிக்கியதில் கொஞ்சம் நீங்களும் ரசிக்க…
பெண் மயில்களை ஏங்க வைக்கும் தோகையழகு சொக்க வைக்க,சொக்கிப் போனேன் தங்கள் சொற்களிலும்.
ReplyDelete//புதுப்புடவையின் ஓரம் அழுக்காகாதவண்ணம் மெலிதாய் கொசுவத்தைத் தூக்கிப்பிடித்து நடக்கும் பெண்கள் போல ஒரு சமயம் அவ்வளவு நீளத் தோகையை வெகு லாவகமாகத் தூக்கிக்கொண்டு நடக்கும் ஒய்யாரம்… அப்படியே அழுக்கானால்தான் என்ன என்று அலட்சியமாய் தழையத்தழைய நடக்கும் பெண்டிரைப் போல தோகையைத் தரையில் தழையவிட்டு நளினமாய் சிலநேரம்… //
பதிவையும் படங்களையும் ரசித்தமைக்கு நன்றி நிலாமகள்.
Deleteகொசுவத்தைத் தூக்கி நடக்கும் மயில்கள் அழகு! அழகான படங்கள்! ரசித்தேன்.
ReplyDeleteரசித்தமைக்கு மிக்க நன்றி அக்கா.
Deleteஎன்ன ஒரு அழகிய ஒப்பீடு!! மிக அருமை கீதா.
ReplyDeleteஅந்த அழகு தரும் கம்பீரம், சுதந்திரம் கொடுத்த ஒய்யாரம், பெருமையும் மிடுக்குமாய் ஒரு நடை!!
ஒரு எதிர்கால இளவரசி போல......
அழகாக சொன்னீங்க மணிமேகலா. உங்க பதிவையும் இப்போதுதான் கவனிக்க நேர்ந்தது. வந்து வாசித்து கருத்திடுகிறேன். நன்றிப்பா.
Deleteமிக அழகான மயில் படங்களுடன் தங்களின் வர்ணனைகளும் அபாரமாகத்தான் உள்ளது.
ReplyDeleteமயில் கழுத்து மல்டி கலர் புடவையுடன் ஓர் அழகிய பெண்ணைக் கண் எதிரே கண்டது போன்ற மகிழ்ச்சி, தங்களின் இந்த எழுத்துக்களிலேயே .... :)
அழகான பகிர்வுக்கு நன்றிகள்.
அந்த அழகையும் ஒயிலையும் கண்டால் அப்படிதான் எண்ணத் தோன்றுகிறது. தங்கள் ரசனை வெகு அழகு. நன்றி கோபு சார்.
Deleteமயில்களை ஏராளம் ரசித்ததுண்டு. ஆனால் அவற்றின் நடையை உங்கள் பதிவில் அதிகம் ரசித்தேன் ஃபெப்ருவரி பதிவு இப்போது டாஷ் போர்டில்.....
ReplyDeleteமயில்களை மிக அருகில் பார்த்து பரவசப்பட்டது அதுதான் முதல்முறை. அந்தப் பரவசம் எழுத்தில் வெளிப்பட்டுவிட்டது. தாங்களும் அவற்றை ரசித்தமைக்கு நன்றி ஐயா.
Deleteஅழகான மயில்கள். அவற்றை உவமைப்படுத்தியது மிக அழ்கு.
ReplyDeleteரசித்தமைக்கு நன்றி வெங்கட்.
Delete