நெஞ்சுக்குழிக்கும்
தொண்டைக்குழிக்குமாய்
ஊசலாடும் அந்திம சுவாசத்தின்
மர்மத்திறவுகோல் பற்றி
அங்கு எவருக்கும்
தெரிந்திருக்கவில்லை.
குற்றவுணர்வில்லாமல்
கொலை செய்வதெப்படியென
கற்றுத்தேர்ந்தவர்களையழைத்து
கலந்தாலோசித்தார்கள்…
அறுபட விரும்பாது அலையும்
அவ்வான்மாவின்
அறுதி இழையின்
ரகசியப்பற்று குறித்து
ரகசியமாய்க் கூடி
விவாதித்தார்கள்.
பதினேழு பெற்று
பத்தைப் பறிகொடுத்து
மிச்சத்தின் மூலம்
வம்சத்தின் எச்சம் வளர்த்தவளுக்கு
மற்றென்ன ஆசையிருக்கமுடியுமென்று
மாய்ந்து மாய்ந்தொரு
முடிவுக்கு வந்தார்கள்.
பொன்னைக் கரைத்தூற்றியும்
போகாத உயிரை வியந்து
மண்ணைக் கரைத்தூற்றி
மரணம் தருவித்தார்கள்.
நா நுனியில் காத்திருந்த
ஒப்பாரியோடு
நடுநிசியில் மாரடித்து அழுகிறார்கள்.
அடியம்மா… மண்ணுக்குப்
போகும் வயதில்
மண்ணாசையோடீ உன்னைப்
பிடித்து நிறுத்தியது என்று
மூக்கைச்சிந்தி முந்தானையில் துடைக்கிறார்கள்.
&&&&
(படம் : நன்றி இணையம்)
குற்றவுணர்வில்லாமல் கொலை செய்வதெப்படியென
ReplyDeleteகற்றுத்தேர்ந்தவர்களையழைத்து கலந்தாலோசித்தார்கள்…//
அம்மாடி! நடந்துகொண்டு இருக்கும் உணமையை சொல்லும் கவிதை.
படிக்கும் போது மனதுக்கு வேதனை அளிக்கிறது.
அந்த உயிர் என்ன சொல்ல ஆசைப்பட்டு இருக்கும்?
இப்படியொரு கொடுமைக்கு அறியாத வயதில் நானுமொரு சாட்சியாய் இருந்திருக்கிறேன் என்பதை நினைக்கையில் மனம் பதறுகிறது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மேடம்.
Deleteவணக்கம்
ReplyDeleteசகோதரி
உண்மையான வரிகள் இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி ரூபன்.
Deleteஅக்கா,
ReplyDeleteஇன்றும் கிராமங்களில் நடக்கும் இதுபோலும் கொடுமைகளை பார்க்கநேர்ந்தால் விதிர்விதிர்த்து போகும். தூங்கும் போதே செத்துடனும் என ஆசை வரும். எத்தனை வலிமிகுந்த வரிகள்:((
கருத்துக்கு நன்றிம்மா மைதிலி.
Deleteஅடப்பாவமே...
ReplyDeleteஇன்றும் இதுபோன்ற கொடுமைகள் தொடர்கின்றனவே. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தனபாலன்.
Deleteநா நுனியில் காத்திருந்த ஒப்பாரியோடு
ReplyDeleteநடுநிசியில் மாரடித்துக்கொண்டு அழுகிறார்கள்.//
இப்படித்தான் இருக்கிறார்கள் மனிதர்கள்.
வலிமையின் தாகம் மிக்க வரிகள்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி உமையாள்.
Delete/பொன்னைக் கரைத்தூற்றியும் / என்றால் நிறையச்செலவு செய்தார்கள் என்று கொள்ளவா?மனித மனத்தின் சில போக்குகள் புரிவதில்லை. கொலை என்று வந்துவிட்டால் குற்ற உணர்வு இருந்தே ஆகவேண்டும். அவர்களைப் பொறுத்தவரை அது கொலையல்ல. கடைசி ஆசையை நிறைவேற்றும் ஒரு நிம்மதி. ஆனால் அதுதான் கடைசி ஆசை என்று நினைப்பது அறியாமையின் உச்சம்.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா. பொன்னைக் கரைத்து ஊற்றுவது என்பது ஒரு கண்துடைப்புதான். நீரில் பொன் சங்கிலியைக் கரைப்பதாகச் சொல்லி அந்த நீரை வாயில் வார்ப்பார்கள். பொன்னாசை இருந்தால் போய்விடுமாம் உயிர்.
Deleteசிறந்த பதிவு
ReplyDeleteசிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்
மதுரையில் யாழ்பாவாணனைச் சந்திக்க விரும்புவோருக்காக
http://eluththugal.blogspot.com/2015/01/blog-post_31.html
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா.
Delete//இப்படியொரு கொடுமைக்கு அறியாத வயதில் நானுமொரு சாட்சியாய் இருந்திருக்கிறேன் என்பதை நினைக்கையில் மனம் பதறுகிறது.//
ReplyDelete:( இதைப்படித்ததும் எங்கள் மனமும் பதறுகிறது :(
//மூக்கைச்சிந்தியபடி புலம்பித்தீர்க்கிறார்கள்…//
யதார்த்தத்தைச் சொல்லி சிந்திக்க வைக்கும் மிகச்சிறப்பானதோர் ஆக்கம்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கோபு சார்.
Delete///மண்ணுக்குப் போகும் வயதில்
ReplyDeleteமண்ணாசையோடீ///
ஆசை யாரை விட்டது
அருமை
தம 2
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா.
Deleteமனம் பதைத்து விட்டது சகோதரி....
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கில்லர்ஜி.
Deleteதமிழ் மணம் 3
ReplyDeleteதமிழ்மண வாக்குக்கு மிக்க நன்றி.
Delete.மனதை பாதிக்கும் படைப்பு..........
ReplyDeleteநன்றி அனுராதா ப்ரேம்.
Deleteபழைய நினைவுகள் அசைத்துப் பார்த்திருக்கிறது கவிதை மனசை...
ReplyDeleteநன்றி நிலாமகள்.
Deleteபதிவுக்கான படம் கவிதைப் பொருளை கனமேற்றியது.
ReplyDeleteஊசலாடும் உயிருக்கு ஊசலாடும் சருகு பொருத்தமென்று தோன்றியது. பகிர்ந்தேன். நன்றி நிலாமகள்.
Deleteபதிவு மனதைத் தொட்டது... பதிவுக்கான படத் தேர்வும் அருமை.
ReplyDeleteத.ம. +1
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வெங்கட்.
Deleteஇன்றுங்கூட இப்படிப்பட்ட கொலைகள் நடந்து கொண்டுதானிருக்கின்றன. மனதைப் பாதித்த ஒரு பதிவு.
ReplyDeleteதென்மாவட்டங்களில் இதுபோல் இழுத்துக்கொண்டிருக்கும் உயிரைப் போக்க தலைக்கூற்றுதல் என்றொரு வழக்கம் உண்டென்று அறிந்தபோது எழுதத் தோன்றியது. கருத்துக்கு நன்றி அக்கா.
Deleteமனசு கனத்துப் போயிற்று கீதா! மானுடத்தின் இருட்டுப் பக்கம் இப்படிப்பட்ட புதைகுழிகள் நிறைந்தது தான்... அவலம்.. அவலம்...
ReplyDeleteநீண்ட இடைவெளிக்குப் பின்னரான தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மோகன்ஜி.
Deleteஅன்புடையீர்! வணக்கம்!
ReplyDeleteஅன்பின் அய்யா திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (05/07/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை அவரது வலைத் தளத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.
இணைப்பு: http://gopu1949.blogspot.in/
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
தகவலுக்கும் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.
Deleteதிரு வை கோபாலகிருஷ்ணன் அவர்கள் தங்களின் தளத்தை அவரது தளத்தில் அறிமுகப்படுத்தியுள்ளதறிந்து மகிழ்ச்சி. தங்கள் பதிவுகளைப் படித்தேன். பாராட்டுக்கள்.
ReplyDeletehttp://www.drbjambulingam.blogspot.com/
http://www.ponnibuddha.blogspot.com/
தகவலுக்கும் பதிவுகளை வாசித்தமைக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி.
Delete